» »சோம்பேறிகளுக்கென்றே அட்டகாசமான டாப் 10 சுற்றுலா பகுதிகள் அப்படி என்ன இருக்கு?

சோம்பேறிகளுக்கென்றே அட்டகாசமான டாப் 10 சுற்றுலா பகுதிகள் அப்படி என்ன இருக்கு?

Posted By: Udhaya

சோம்பேறிகள் என்பதை தவறாக கொள்ளவேண்டாம். சிலருக்கு சுற்றுலா என்பது தேவையில்லாத ஒன்றாகவும், பண விரயம் கால விரயம் என்றும் தோன்றும். ஆனால் இந்த இடங்களுக்கெல்லாம் வந்து பார்த்தால் தான் தெரியும் உங்களுக்கு சுற்றுலா என்பது எவ்வளவு அழகானது என்று.

நம்மில் பலருக்கு மலையேற்றம், வெளியில் சமைத்து சாப்பிடுவது, மீன் பிடித்தல் முதலியன பிடிக்கும். ஆனால் அது கால நிலையைப் பொறுத்து மாறுபடும். குளிர்காலங்களில் பிடிக்கும் சில செயல்கள் வெயில் காலத்தில் தேவையற்றதாக கருதப்பட வாய்ப்பிருக்கிறது.

பாராகிளைடிங் போவது, பட்டம் விடுவது, படகு சவாரி செல்வது போன்றவைகளும் சுற்றுலாவின் ஒரு அங்கம்தான். சரி தற்போது சோம்பேறிகளுக்கான டாப் 10 சுற்றுலாத் தளங்கள் பற்றி பார்க்கலாம்.

சோம்பேறிகள் அறையை விட்டே வெளிவர மறுப்பார்களே... சுற்றுலா எப்படினு யோசிக்கிறீங்களா.. அவங்களையும் வெளிய கொண்டு வர இதோ ஒரு யோசனை.

செர்னாபேட்டிம்

செர்னாபேட்டிம்


கோவாவில் அமைந்துள்ள இந்த கடற்கரை பகுதியில் மக்கள் நெரிசல் பெரும்பான்மையான நேரங்களில் இருக்கவே இருக்காது.

அருமையான உணவு, நீல முனை, அமைதியான கடற்கரை, காமில்சன் கடற்கரை வீடு முதலிய அருமையான இடங்களில் உங்கள் சோம்பலை முறித்து அழகிய சுற்றுலாவை கொண்டாடுகள்.

Eustaquio Santimano

காங்க்டாக்

காங்க்டாக்


சிக்கிமில் அமைந்துள்ள இந்த பகுதி சுற்றுலா சோம்பேறிகளுக்கு உகந்த இடமாகும்.

இங்கு நீங்கள் உங்கள் நண்பர்களுடன் சென்றால் அதிகம் அனுபவிக்கலாம். இன்னும் நிறைய பகுதிகள் இளைஞர்கள் கட்டாயம் காணவேண்டிய பட்டியலில் உள்ளது.

ஒரு மலைப் பிரதேசத்தில் சோம்பேறி பயணம் புதுசா இருக்குல..

Kalyan Neelamraju

 கொடைக்கானல்

கொடைக்கானல்

கொடைக்கானலுக்கு போனாலே அங்கயும் இங்கயும் நடக்கணுமே எப்படி சுற்றுலாலாம் என்று சில சோம்பல் விரும்பிகள் கருதலாம்.

வெயில் காலத்தில் கொடைக்கானல் மலைக்கு சென்று பாருங்கள், அப்படி ஒரு அருமையான தருணங்களை சந்தித்துவிட்டு வரலாம்.

நிறைய காவிக்கண்டு (chocolate) களை சுவைக்கலாம், திண்பண்டங்களை கொறிக்கலாம், அருகிலுள்ள வெதுப்பகத்தில் (bakery) கிடைக்கும் இனியப்பம் (cake) உண்ணலாம்.

Raj

வர்க்கலா

வர்க்கலா

கேரள மாநிலத்தில் அமைந்துள்ள வர்க்கலா உங்களுக்கு கண்டிப்பாக பரிந்துரைக்கும் அளவுக்கு தகுதியான கடற்கரையாகும்.

கடற்கரையும், பசுமையான சூழலும் உங்களை அங்கிருந்து நகர விடாது. உங்கள் விடுமுறை நாள்களை வெகு அலட்டல் இல்லாமல் கழிக்க சிறந்த இடமாகும்.

Paul Varuni

கலிம்போக்

கலிம்போக்

மக்கள் கூட்டம் அப்படின்னா என்ன என்று கேட்கும் அளவுக்கு உங்களுக்கு ஆச்சர்யம் அளிக்கும் வகையில் அமைந்துள்ள இந்த இடம் டார்ஜிலிங் அருகே அமைந்துள்ளது.

இங்கு கிடைக்கும் பாலாடைக்கட்டி (cheese) மிகவும் சுவையாக இருக்கும். அதை நீங்கள் கட்டாயம் சுவைத்தே ஆகவேண்டும்.

விரைவில் நூறு வயதை எட்டும் ஒரு பழைய விடுதி அங்கு சராசரி வசதிகள் நிறைந்து காணப்படுகிறது. அங்கு நீங்கள் தங்கலாம்.

Sek Keung Lo

பாண்டிச்சேரி

பாண்டிச்சேரி


இங்குள்ள கடற்கரைகள் மிகவும் அழகானவை. அவற்றைவிட இங்கு கிடைக்கும் உணவு வகைகள் மிகவும் ருசியாகவும், அனைவரும் விரும்பும் விதத்திலும் இருக்கும்.

இங்குள்ள தனியார் விடுதிகள் மிகவும் உயர்ந்த தரத்தில் இருக்கும் சோம்பேறித்தனத்தின் உச்சமாக இங்கு வந்து நான்கைந்து நாள்கள் தங்குவதற்கு ஏற்றவகையில் இருக்கும்.

sarath_kuchi

மெக்லியோட்கஞ்ச்

மெக்லியோட்கஞ்ச்


தரம்சாலா மிகவும் அழகான, அதிக சுற்றுலா வாய்ப்புகள் நிறைந்த இடமாகும் ஆனாலும் இங்கு சோம்பேறிகள் செல்ல சற்று சிரமப்படுவார்கள். அதற்காக அப்படியே விட்டுவிடுவதா?

அருகிலேயே மெக்லியோட்கஞ்ச் இருக்கே.. வாங்க ஒரு ரவுன்ட் போகலாம்.

இங்குள்ள ஏரிகள், குளங்கள் பார்த்து மகிழ மிகவும் அருமையான இடமாகும். யோகா மற்றும் தியானம் ஆகியவை இங்கு செய்யலாம். அவ்வளவு அமைதியான இடமாகும்.

Andrzej Wrotek

பழைய மணாலி

பழைய மணாலி


மலைப்பகுதியில் வாழ்பவர்கள் நிச்சயமாக சோம்பேறிகளாக இருக்கமுடியாது. அவர்களின் ரத்தத்திலேயே சுறுசுறுப்பு என்பது ஊறியிருக்கும்.

சரி பழைய மணாலியில் சோம்பேறிகளுக்கு என்னவேலை என்கிறீர்களா?

இங்குள்ள விருந்தினர் மாளிகைகளும், உணவு விடுதியும் உங்களுக்கு சிறந்த வரப்பிரசாதமாக அமையும்.

Daniel N. Reid

ஆலப்புழா படகு இல்லம்

ஆலப்புழா படகு இல்லம்

சுற்றுலா என்றாலே கேரளா இல்லாமல் இருக்குமா.. அதுவும் கடற்கரைகளும், நதிகளும், மலைக்காடுகளும் நிறைந்துள்ள கேரளம் நல்ல வளமை வாய்ந்த பகுதியாகும்.

கேரளத்தின் ஆலப்புழா பகுதியில் படகு வீடெடுத்து இரண்டு மூன்று நாள்கள் தங்கி வந்தால் உங்களுக்கு கிடைக்கும் அனுபவத்தை அதை நீங்கள் அனுபவத்தினால்தான் உணரவேண்டும். வேறு வார்த்தைகளே இல்லை.

augustgregg

கஜ்ஜார்

கஜ்ஜார்

நீங்க சோம்பேறியா இருக்கீங்களா அப்படியே சுவிஸ் போய்டலாம்.

இது நிஜமான சுவிஸ் இல்லைங்க இந்தியாவின் சுவிஸ் என்று அழைக்கப்படும் கஜ்ஜார் நகரம்தான் அது.

கஜ்ஜாரில் ஏரி, அடர்ந்த காடுகள் மலைகள் என அனுபவிக்க ஏராளமான இடங்கள் உள்ளன.


Srinivasan G

Read more about: travel, tour