Search
  • Follow NativePlanet
Share
» »தமிழ்நாடு சுற்றுலா - பத்து நாளில் பத்து இடங்களைப் பார்ப்பது எப்படி?

தமிழ்நாடு சுற்றுலா - பத்து நாளில் பத்து இடங்களைப் பார்ப்பது எப்படி?

தமிழ்நாடு சுற்றுலா - பத்து நாளில் பத்து இடங்களைப் பார்ப்பது எப்படி?

By Udhaya

வாருங்கள் தமிழகத்தைச் சுற்றி பார்க்கலாம். என்ன ஏற்கனவே தமிழகத்தை சுற்றிவிட்டீர்களா? அடடே... அப்போ சொல்லுங்கள் இந்த இடங்கள்ல எத்தனை இடங்கள பத்தி உங்களுக்கு தெரியும்? இதுல எத்தன இடத்துக்கு நீங்க போயிருக்கீங்க? கன்னிமாரா பொது நூலகம், பாபநாசம், ஈச்சநாரிவிநாயகர் கோவில், காஞ்சி குடில், ஊட்டி தேயிலைத் தோட்டம், வேலூர் தங்க கோவில் , குறிஞ்சி ஆண்டவர் கோவில், திருமலை நாயக்கர் மஹால், திருவள்ளுவர் சிலை, கடற்கரை கோவில் மஹாபலிபுரம். என்ன எல்லா இடத்துக்கும் போயிருக்கீங்களா? தமிழ்நாட்டுல நாம பாக்கவேண்டிய இடம் இன்னும் நிறைய இருக்கு பாஸ். கவல படாதீங்க பத்தே நாள்ல அத்தனை இடத்தையும் சுத்திட்டு வந்துடலாம்.

பத்து நாள்கள் பத்து இடங்கள்... கொஞ்சம் பெரிய பட்ஜெட் மாதிரி தெரிஞ்சாலும் அப்படிஎல்லாம் இல்ல.. ஒருவேள நீங்க அப்படி கருதினால், உங்களுக்காக இந்த சுற்றுலாவை மூன்று நாள்களாகவும் திட்டமிடுவோம். முதன்மை பகுதிகளுக்கு மட்டும் சென்றுவிட்டு அருகிலுள்ள இடங்களுக்கு செல்லாமல் இருந்தால், அது சாத்தியமே..

 முதல் நாள் | செல்லவேண்டிய இடங்கள் | செய்யவேண்டியவை

முதல் நாள் | செல்லவேண்டிய இடங்கள் | செய்யவேண்டியவை

உங்கள் பயணத்தை இரவில் தொடர திட்டமிடுங்கள். ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு நாள் என்றாலும், தங்கும் செலவை குறைத்து அதை பயணச் செலவுடன் சரி செய்துவிடுவோம். நீங்கள் எந்த ஊரிலும் தங்க வேண்டிய நிலைமை வராது. அப்படியே அவசியப்பட்டால் அது உங்கள் மனநிலையைப் பொறுத்தது.

முதல் நாள் நாம் சென்னையிலிருந்து கிளம்புகிறோம். நீங்கள் சென்னை வாசியாக இருந்தால் உங்களுக்கு சென்னை சுற்றி சுற்றி அலுத்திருக்கும். ஆனால் சென்னைக்கு வந்திராதவர்களுக்கு சென்னையில் சுற்றி பார்க்க ஒரு நாள் என்பது மிக குறைவு.

செல்லவேண்டிய இடங்கள் 𝕮𝖍𝖊𝖓𝖓𝖆𝖎

மெரினா பீச்

செம்மொழி பூங்கா

தி ஹட்ல்ஸ்டோன் கார்டன்ஸ்

அறிஞர் அண்ணா விலங்கியல்பூங்கா

பழவேற்காடு ஏரி

கபாலீசுவரர் கோவில்

பிரிஸ்ஸி பீச்

தேசிய கலை பூங்கா

கன்னிமரா பொது நூலகம்

பரங்கிமலை

இன்னும் சில இடங்கள் இருக்கின்றன. அவற்றுக்கெல்லாம் எப்படி செல்வது, என்னென்ன செய்வது என்பன பற்றி தெரிந்துகொண்டு பயணிப்போம்.

 இரண்டாம் நாள் | செல்லவேண்டிய இடங்கள் | செய்யவேண்டியவை

இரண்டாம் நாள் | செல்லவேண்டிய இடங்கள் | செய்யவேண்டியவை


மஹாபலிபுரம் சென்னைக்கு அருகில் இருக்கும் பகுதி ஆகும். இங்கு செல்வது என்பது மிகவும் சுலபம். முதல் நாள் இரவு சென்னையிலேயே தங்கிவிட்டு மறுநாள் காலையில் பயணிப்பதே சிறந்தது.

சென்னை - மஹாபலிபுரம் தூரம் = 57 கிமீ

பயண நேரம் - ஒன்றரை மணி நேரம் ஆகும்.

செல்லவேண்டிய சாலை - சென்னை கிழக்கு கடற்கரை சாலை

செல்லவேண்டிய இடங்கள்

அர்ஜூனா பந்து

திருக்கடல்மலை

குகைக் கோவில்

கடற்கரை கோவில்

பஞ்ச தலங்கள்

இன்னும் சில இடங்கள் இருக்கின்றன அவற்றை தெரிந்துகொண்டு தெளிவான திட்டத்துடன் பயணிக்க வேண்டும்.

 மூன்றாம் நாள் | செல்லவேண்டிய இடங்கள் | செய்யவேண்டியவை

மூன்றாம் நாள் | செல்லவேண்டிய இடங்கள் | செய்யவேண்டியவை

மதுரை சென்னையிலிருந்து 476 கிமீ தூரத்திலும், மஹாபலிபுரத்திலிருந்து 419 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது. மூன்றாவது நாள் நாம் பயணிக்கவிருக்கும் இந்த இடத்தைப் பற்றி நாம் ஏற்கனவே பல விசயங்கள் பகிர்ந்துகொண்டுள்ளோம். இங்கு காணவேண்டிய முக்கிய இடமாக இருப்பது மதுரை மீனாட்சியம்மன் கோவில். அதைத் தவிர்த்து இன்னும் இடங்கள் இருக்கின்றன.


செல்லவேண்டிய இடங்கள்

திருப்பரங்குன்றம் முருகன் கோவில்

காந்தி அருங்காட்சியகம்

சமணர் மலை

கூடல் அழகர் கோவில்

பழமுதிர் சோலை

திருமலை நாயக்கர் மஹால்

இன்னும் நிறைய இடங்கள் இருக்கின்றன. தெளிவாக திட்டமிட்டு பயணிக்கவேண்டும்.

 நான்காம் நாள் | செல்லவேண்டிய இடங்கள் | செய்யவேண்டியவை

நான்காம் நாள் | செல்லவேண்டிய இடங்கள் | செய்யவேண்டியவை

திருநெல்வேலி மதுரையிலிருந்து 162 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இது சென்னையிலிருந்து 625 கிமீ தொலைவு ஆகும். நான்காம் நாள் பயணத்தில் நாம் பார்க்கவிருப்பது திருநெல்வேலி. இங்கு காண்பதற்கு நிறைய இடங்கள் இருக்கின்றன. அவற்றில் சில முக்கியமான இடங்கள் இவை.


செல்லவேண்டிய இடங்கள்

நெல்லையப்பர் கோவில்

சங்கரநாராயணர் கோவில்

பாபநாசம்

குற்றாலம்

முண்டந்துரை புலிகள் சரணாலயம்

வெங்கடாச்சலபதி கோவில்

இன்னும் நிறைய இடங்களுக்கு தெளிவான திட்டத்துடன் சென்று மகிழலாம்.

Jaseem Hamza

 ஐந்தாம் நாள் | செல்லவேண்டிய இடங்கள் | செய்யவேண்டியவை

ஐந்தாம் நாள் | செல்லவேண்டிய இடங்கள் | செய்யவேண்டியவை

கன்னியாகுமரி திருநெல்வேலியிலிருந்து 85கிமீ தொலைவிலும் 706 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. கன்னியாகுமரியில் காண வேண்டிய இடங்கள் நிறைய இருக்கின்றன. அவற்றில் முக்கியமானவை


செல்லவேண்டிய இடங்கள்


பகவதி அம்மன் கோவில்

விவேகானந்த பாறை

பத்மநாபபுரம் அரண்மனை

வட்டகோட்டை

கன்னியாகுமரி சுற்றுலா பற்றி முழுவதும் தெரிந்து கொள்ளுங்கள்கன்னியாகுமரி சுற்றுலா பற்றி முழுவதும் தெரிந்து கொள்ளுங்கள்

ஆறாம் நாள் | செல்லவேண்டிய இடங்கள் | செய்யவேண்டியவை

ஆறாம் நாள் | செல்லவேண்டிய இடங்கள் | செய்யவேண்டியவை

கன்னியாகுமரியிலிருந்து கொடைக்கானல் மலை 345 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இதன் பயண தூரம் கிட்டத்தட்ட 7 மணி நேரம் ஆகும்.

செல்லவேண்டிய இடங்கள்

பெரிஜம் ஏரி

கோக்கர்ஸ் வாக்

கோடை ஏரி

குறிஞ்சி ஆண்டவர் கோவில்

டால்பின் நோஸ்

பிரயாண்ட் பூங்கா

கோடைக்கானல் சோலார் நுண்ணோக்கு மையம்

பசுமை பள்ளத்தாக்கு

 ஏழாம் நாள் | செல்லவேண்டிய இடங்கள் | செய்யவேண்டியவை

ஏழாம் நாள் | செல்லவேண்டிய இடங்கள் | செய்யவேண்டியவை

ஊட்டி - கொடைக்கானலிலிருந்து 251 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இதன் பயண தூரம் 6.30 முதல் 7 மணி நேரம் ஆகும். ஊட்டியில் ஒரு நாள் முழுவதும் தங்கி இருந்து அதன் அழகை ரசியுங்கள். குளுமையை அனுபவியுங்கள்.

செல்லவேண்டிய இடங்கள்

தாவரவியல் பூங்கா

தேயிலை ஆலை

தொட்டபெட்டா சிகரம்

பனிச்சரிவு ஏரி

அரசு ரோஜாத்தோட்டம்

பைக்காரா நீர்வீழ்ச்சி

ஊட்டி ஏரி

முதுமலை காடுகள்

எமரால்ட் ஏரி

இன்னும் நிறைய இடங்கள் இருக்கின்றன. அவற்றுக்கும் தெளிவான திட்டமிடலுடன் பயணிக்கலாம்.

 எட்டாம் நாள் | செல்லவேண்டிய இடங்கள் | செய்யவேண்டியவை

எட்டாம் நாள் | செல்லவேண்டிய இடங்கள் | செய்யவேண்டியவை

எட்டாவது நாளில் நாம் பயணிக்க இருப்பது கோயம்புத்தூர். ஊட்டிக்கு மிக அருகிலேயே இருக்கும் நகரம் இது.


செல்லவேண்டிய இடங்கள்

மருதமலை கோவில்

ஈச்சநாரி விநாயகர் கோவில்

பேரூர் பட்டீஸ்வரர் கோவில்

பரம்பிக்குளம் சரணாலயம்

சிறுவானி நீர்வீழ்ச்சி

அனுபவி முருகன் கோவில்

என ஏகப்பட்ட இடங்கள் இருந்தாலும் திட்டமிட்டு கவனத்துடன் பயணித்தால் சிறப்பான சுற்றுலாவை அனுபவித்து திரும்பலாம்.

ஒன்பதாவது நாள் | செல்லவேண்டிய இடங்கள் | செய்யவேண்டியவை

ஒன்பதாவது நாள் | செல்லவேண்டிய இடங்கள் | செய்யவேண்டியவை

வேலூர் - கோயம்புத்தூரிலிருந்து வேலூர் 393 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. இதன் பயண நேரம் 6.30 முதல் 7 மணி நேரம் ஆகும்.

செல்லவேண்டிய இடங்கள்

வேலூர் கோட்டை

ஜலகண்டேஸ்வரர் கோவில்

தங்க கோவில்

ஏலகிரி

தில்லி கேட்

Priasai

இறுதி நாள் | செல்லவேண்டிய இடங்கள் | செய்யவேண்டியவை

இறுதி நாள் | செல்லவேண்டிய இடங்கள் | செய்யவேண்டியவை


காஞ்சிபுரத்தில் நாம் இறுதி நாளை கழிக்கப்போகிறோம். கோவில்களுக்கும் வரலாற்று சின்னங்களுக்கும் பெயர் போன நகரம் காஞ்சிபுரம் ஆகும். இங்கு காண்பதற்கு நிறைய இடங்கள் இருக்கின்றன.

செல்லவேண்டிய இடங்கள்

ஏகாம்பரேஸ்வரர் கோவில்

காமாட்சியம்மன் கோவில்

கைலாசநாதர் கோவில்

காஞ்சி குடில்

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

இப்பிடி நிறைய இடங்கள் காணப்படுகின்றன. இவை எல்லாம் பத்து நாள்களில் காணவேண்டிய இடங்கள் அல்ல.. ஆனால் ஒரு பயணத்தில் இதற்கு மேல் வாய்ப்பில்லை. பத்து நாட்களே அதிகம் என்று தோன்றும். ஆனால் நினைத்து பாருங்கள் ஒரு இடத்தைச் சுற்ற குறைந்த பட்சம் இரண்டு நாட்களாவது தேவை இல்லையா? உங்க அருகில் இருக்குற பகுதி எல்லாத்தையும் சேர்த்து ஒரு சுற்றுலா செல்லணும். உங்க கிட்ட திட்டம் இருக்கா? இருந்த எங்களுக்கு எழுதுங்க.. இல்ல கீழ கமண்ட் பண்ணுங்க..

Hiroki Ogawa

Read more about: travel temple tamilnadu
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X