Search
  • Follow NativePlanet
Share
» »மக்கள் கூட்டம் இல்லாத இடத்திற்கு டூர் போகணுமா? உங்களுக்கு ஏற்ற 10 இடங்கள்

மக்கள் கூட்டம் இல்லாத இடத்திற்கு டூர் போகணுமா? உங்களுக்கு ஏற்ற 10 இடங்கள்

சுற்றுலா தலங்கள் என்றாலே மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பது தான் வழக்கம். ஆனால் அதிகமானவர்களுக்கு கூட்டமான இடங்களுக்க செல்வதே பிடிக்காது. கூட்டமே இல்லாமல் ரிலாக்சாக சென்று சுற்றிப் பார்க்க வேண்டும். நிம்மதியான, அமைதியான சூழலில் என்ஜாய் பண்ணி விட்டு வர வேண்டும் என நினைப்பார்கள். அப்படி நினைப்பவர்களில் நீங்களும் ஒருவர் என்றால், இதோ உங்களுக்காக மக்கள் கூட்டம் குறைவாக இருக்கும் இந்தியாவின் முக்கியமான 10 சுற்றுலா தலங்கள் பற்றிய விபரங்கள்...

Less Crowded cities

கபுர்தலா

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கபுர்தலா அழகிய பிரெஞ்சு கட்டிடக்கலை, அமைதியான தோட்டங்கள், கனிவான கலாச்சாரத்துடன் இங்கு வரும் மக்களை அசர வைக்கிறது. வளமான பாரம்பரியத்துடன் அமைதியாக காட்சி அளிக்கும் இந்த நகரின் மொத்த மக்கள்தொகையே ஒரு லட்சம் தான். பஞ்சாப்பின் புகழ்பெற்ற நதிகளான பியாஸ், சட்லஜ் ஆகியவை இங்கு தான் பாய்கின்றன. சைனிக் பள்ளி, மூரிஷ் மசூதி, சாலிமார் பாக் ஜக்ஜித் கிளப், குருநானக் விளையாட்டு அரங்கம் என இங்கு பார்ப்பதற்கு பல இடங்கள் உள்ளன.

பன்ஸ்வாரா

ராஜஸ்தான் மாநிலத்தின் சிரபுஞ்சி என வர்ணிக்கப்படும் பன்ஸ்வாரா, நூறு தீவுகளின் நகரம் என்ற பெருமையை கொண்டது. இங்கு பாயும் மஹி நதியின் காரணமாக இங்கு நூறு தீவுகள் உருவாகி உள்ளன. பசுமையான நிலப்பரப்புகள், அமைதியான ஏரிகள், பழங்குடியின கலாச்சாரத்தின் செழுமையான கலவையான நகரமாக காட்சி அளிக்கிறது. இந்த நகரின் மொத்த மக்கள் தொகை 1.10 லட்சம் மட்டும் தான். ராஜஸ்தான் மாநிலத்தில் அதிக மழை பெறக் கூடிய இது தான்.

நாக்டா

மத்திய பிரதேசத்தில் கோவில்கள் மற்றும் அமைதியான வாழ்க்கைக்கு பெயர் பெற்ற இடம் நாக்டா. உஜ்ஜைனி மாவட்டத்தில் அமைந்துள்ள இது தொழில் நகரம் என்றாலும் இங்கு ஆன்மீக தலங்கள் தான் அதிகம். இந்த ஆன்மிக தலங்கள் அதிக அளவிலான சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது. இந்த நகரில் மக்கள் தொகை ஒரு லட்சம் தான்.

டாடியா

மத்திய பிரதேசத்தில் அரச அரண்மனைகள், பழமையான கோவில்கள் ஆகியவற்றிற்கு புகழ்பெற்ற நகரம், டாடியா. இந்த அமைதியான நகரத்தில் வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் ஏராளமாக உள்ளன. மக்கள் கூட்டம் அதிகம் இல்லாத இந்த இடத்தில் இந்தியாவின் பண்டைய அரசர்களின் கடந்த காலங்களின் சுவடுகளை பார்க்க முடியும். இந்த நகரின் மக்கள் தொகை 1.10 லட்சம் தான். இது மிக பழைமயான நகரம் என்றும், மகாபாரதத்துடன் தொடர்புடைய நகரம் என்றும் சொல்லப்படுகிறது.

Gangtok

கேங்டாக்

சுத்தமான காற்று, தெய்வீக அதிர்வலைகள், ஆழ்ந்த அமைதி ஆகியவற்றை பெற வேண்டும் என்றால் நீங்கள் செல்ல வேண்டிய நகரம் சிக்கிம் மாநிலம் கேங்டாக் தான். இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இமயமலையின் மனதை கொள்ளை கொள்ளும் அழகிய காட்சிகளுக்கு நடுவே ஓய்வெடுக்க ஏற்ற இடம். இங்கு ஒரு லட்சம் மக்கள் வசிக்கிறார்கள்.

கல்யாணி

பரந்து விரிந்த சாலைகள், பசுமையான பூங்காக்கள் ஆகியவற்றைக் கொண்டு நன்கு திட்டமிடப்பட்டு, மிக நேரத்தியாக அமைக்கப்பட்ட நகரம் மேற்கு வங்கத்தில் உள்ள கல்யாணி நகரம். மன அழுத்தம் இல்லாத சுகமான, அமைதியான பயணம் மேற்கொள்ள ஏற்ற சூழல் கொண்ட நகரம். இங்கு ஒரு லட்சம் பேர் மட்டுமே வசிக்கிறார்கள்.

கஸ்கஞ்ச்

அமைதியான நகரம், நட்பான மக்கள், எளிமையான வாழ்க்கை முறை, அழகான நதிக்கரை ஆகியவற்றிற்கு பெயர் பெற்ற இடம் தான் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள கஸ்கஞ்ச். காளி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. சோமேஷ்வர் மகாதேவ், மானஸ் மந்திர் போன்ற கோவில்கள் இங்கு பிரபலமானவை. இங்கு ஒரு லட்சத்து ஐந்தாயிரம் மக்கள் மட்டுமே வசிக்கிறார்கள்.

சிலுகலூரிப்பேட்டை

ஆந்திர மாநிலத்தில் குண்டூர் மாவட்டத்தில் உள்ள சிலுகலூரிப்பேட்டை விவசாய நிலங்களுக்கு பெயர் பெற்ற ஊர். நகர்ப்புற கூட்ட நெரிசல்களில் இருந்து வெகு தொலைவில் விலகி இருக்கும் அமைதியான இடம். கிருஷ்ணா நதியின் கருணையால் செழுமையாக இருக்கும் இந்த ஊர், கிராமிய அழகை அனுபவித்து மகிழ ஏற்ற இடம் இது. இங்கு 1.10 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள்.

பத்ரேஸ்வர்

அழகான ஆற்றங்கரை, காலனித்துவ கால கட்டிடக்கலை ஆகியவற்றிற்கு புகழ்பெற்ற நகரமான பத்ரேஸ்வர், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளது. ஹூக்ளி ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஊர். இங்குள்ளவர்களின் எளிமையான வாழ்க்கை முறையே இந்த ஊரின் அமைதியான சூழலை எடுத்துக் காட்டும். இங்கு பத்ரேஸ்வர் நாத் கோவில், சர்சிகடலா போன்ற இடங்கள் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களாக விளங்குகின்றன. இங்கு ஒரு லட்சம் மக்கள் வசிக்கிறார்கள்.

சுஜன்கர்

ராஜஸ்தானில் உள்ள ஒரு அமைதியான பாலைவன நகரம் தான் சுஜன்கர். பிரமிக்க வைக்கும் ஹவேலிகள், பழங்கால கோட்டைகள் மற்றும் அமைதியான சூழலில், ராஜஸ்தானி கலாச்சாரத்தின் வசீகரத்தை நிறைத்து வைத்திருக்கும் இடம். இந்த நகரில் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் மக்கள் மட்டுமே வசிக்கிறார்கள்.

More News

    Read more about: india
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+