» »இந்தியாவில் பொக்கிஷமாய் பாதுகாக்க வேண்டிய 10 வரலாற்றுத் தளங்கள்

இந்தியாவில் பொக்கிஷமாய் பாதுகாக்க வேண்டிய 10 வரலாற்றுத் தளங்கள்

By: Balakarthik Balasubramanian

நம் நாட்டின் பாரம்பரியத்தை உணர்த்தும் கட்டிட கலைகளும், ஓவியங்களும், இடங்களும் இங்கே நிறையவே காணப்படுகின்றன. எவ்வளவு தான் உலகம் முன்னோக்கி வேகமாக சென்றாலும், காலங்களை கடந்து செல்லும் போது, வரலாற்றின் சிறப்பினை எண்ணி கண் வியர்த்து தான் நிற்கிறோம். இங்கே காணும் வரலாற்று நினைவிடங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தி மனதை காட்சிகளை கொண்டு வருடி இனிமையான ஒரு உணர்வை தருகிறது.

அப்படி என்ன தான் இந்தியாவில் நம்மால் பார்க்க முடிகிறது என்னும் கேள்விக்கணையை யாரும் அவ்வளவு எளிதில் அடுத்தவர் மீது தொடுத்து விட முடியாது. ஆம், இங்கே புகழ் பெற்ற இடங்களை கண்களால் நாம் காணவில்லையென்றாலும், காதுகளால் கேட்டு மனதை வார்த்தைகளின் முன்பு நாம் பறிகொடுத்து காதல் கொள்வது உறுதி.

இருப்பினும், இப்பொழுது இந்தியாவின் புகழ் பெற்ற மறைந்த சில வரலாற்று தளங்களை பற்றி கீழ்க்காணும் பத்தியின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.
இந்த வரலாற்றை பற்றி மாணவர்கள் மட்டும் தான் ஆர்வத்துடன் கேட்க வேண்டும் என்பது கிடையாது. அனைவரும் இந்த வரலாற்று சிறப்பு நீங்கா இடங்களுக்கு சென்று மனதை தொலைத்து மகிழ வேண்டுமென்றே ஆசை கொள்கின்றனர். இந்த இடங்களை காணும் நம் கண்கள்...காலத்தை கடந்து சென்று கற்களில் பொறிக்கப்பட்ட பெயர்களின் வரலாற்றை தெரிந்து கொண்டு அன்னாந்து பார்த்தபடியே வியப்புடன் நிற்கிறது.

ஆயிரமாயிரம் வருடங்களுக்கு முன்னால் கட்டப்பட்ட பல கட்டிடங்களும் ஆலயங்களும் இன்றும் வரலாற்றின் பெருமையை தாங்கி கொண்டு திறம்பட நின்று, நம் மனதில் நினைவுகளை தேக்க துடிக்கிறது.

அற்புதமான அரண்மனைகள், பழங்காலத்து கோட்டைகள், கம்பீரமான கட்டமைப்புகள் என இந்தியாவின் மூலை முடுக்குகளில் ஒளிந்திருக்கும் அற்புதங்கள் நம்மை வரவேற்று வரலாற்றின் மடியின் தவழ செய்கிறது. அதேபோல் பழமையான கட்டமைப்புகளும், பல வரலாற்று நினைவு சின்னங்களும் என நமக்கு தெரிந்த மற்றும் தெரியாத பல உண்மைகள் மற்றும் இரகசியங்களை உள்ளடக்கிய ஒரு இடமாகவும் அமைந்து, 'ஆராய்ச்சி' என்னும் சொல்லால் மனதினை ஆட்சி செய்கிறது.

போரில் மாண்ட வீரர்களின் பெருமையையும், வெற்றியை சுவைத்து முடிசூடிய மன்னர்களின் வாழ்க்கையையும், அவர்களின் ஆட்சியையும் என பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை நமக்கு தர துடிக்கும் இந்த வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், இன்னும் பல கதைகளை நம்மிடம் கூற இதழ்களை (நுழைவாயில்களை) விரித்து நம்மை அருகில் வரவழைத்து ஆயிரம் கதைகள் பேசுகிறது.

இந்தியாவின் வரலாறு சிந்து சமவெளி நாகரிகத்துடன் கி.மு 5ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. அதன் பின்னர், பல அரசர்களும் ராஜ்ஜியங்களும் நாட்டை ஆள்வதும் பின் வீழ்வதும் என இருந்து வந்தது.

இந்த காலக்கட்டத்தில் ராஜாக்கள் மற்றும் பேரரசர்களால் கட்டப்பட்ட எண்ணற்ற கட்டிடங்கள் இன்றும் அவர்களின் புகழை தாங்கிக்கொண்டு கம்பீரமாக நிற்கிறது. மேலும் அந்த இடங்கள், முன்னோர்களின் வாழ்க்கையையும் அவர்களின் சிறப்பையும் நம் அனைவருக்கும் தெரியபடுத்தவும் பெரிதும் உதவுகிறது. சில சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு பல நினைவு சின்னங்களும் அழிக்கப்பட்டுள்ளது என்பதனை நாம் தெரிந்து கொள்ளும்போது அவை எவை? என்னும் ஏக்கம் நம் மனதில் நீங்கா இடத்தை பிடித்து கேள்விக்கனையை நம் மேல் தொடுக்கிறது.

அதனால், நாங்கள் ஒரு முடிவுக்கு வந்தோம். ஆம், இந்த உலகத்தில் நம் கண்களுக்கு தென்படாமல் மறைக்கப்பட்ட 10 இடங்களின் வரலாற்றினை பற்றி தெரிந்துகொண்டு மற்றவர்களுக்கும் தெரியபடுத்த வேண்டுமென நாங்கள் ஒரு மனதாக முடிவெடுத்து ஆராய்ச்சி வேட்டையில் ஈடுபட்டோம். ஆம், அதனை பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம்...

 பீம்பெட்காவில் உள்ள பாறைகளால் ஆன தங்கும் முகாம்:

பீம்பெட்காவில் உள்ள பாறைகளால் ஆன தங்கும் முகாம்:

இந்தியாவில் பாறைகளில் வரைந்த பிரசித்திப்பெற்ற இடங்களாக இருந்தவற்றுள் இதுவும் ஒன்றாகும். இங்கு காணப்படும் விலைமதிப்பில்லா ஓவியங்கள் பல, வரலாற்றின் பெருமையை உணர்த்தி பல கதைகளை நம்மிடம் பேசுகிறது. அத்துடன் பீம்பெட்காவில் அமைந்துள்ள இந்த பாறை, வந்து செல்வோருக்கு தங்கும் இடமாகவும் அமைந்து அவர்கள் உறைவிட வேட்கையை தீர்க்கிறது.

இந்த பாறைகளில் காணப்படும் ஓவியங்கள் மிகவும் பழமை வாய்ந்தவையாகும். முந்தைய வரலாற்றினை நினைவுபடுத்தும் இத்தகைய ஓவியங்கள் நம் மனதை வருடங்களால் வருடி, காட்சிகளை கண்களுக்கு சமர்ப்பிக்கிறது. ஆம், ‘இங்குள்ள ஓவியங்கள் எவ்வளவு காலங்களுக்கு முன்னால் வரையப்பட்டது?' என்னும் கேள்வி நம் மனதில் எழ, குறைந்தபட்சம் 15,000 ஆண்டுகளுக்கு முன்னால் வரையப்பட்டது என்பதனை காற்று வாக்கில் நாம் தெரிந்துக்கொள்ள இந்த பாறைகளின் முன்னால் நாம் அதிசயித்து தான் நிற்கிறோம்.

Bernard Gagnon

 இராணி கி வாவ்:

இராணி கி வாவ்:

ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்புகளின் உலக பாரம்பரிய தளமான இந்த இடம் 11ஆம் நூற்றாண்டில் குஜராத்தில் நிறுவப்பட்டதாகும். தனித்தன்மையுடன் விளங்கும் இந்த இடத்தின் அற்புதமாக, கோவில் தலைகீழாக காணப்படுவது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தி அன்னாந்து பார்க்க வைக்கிறது. ‘ஒருவேளை நாம் அன்னாந்து பார்ப்பதற்கு காரணம்....கோவில் அப்பொழுதாவது நம் கண்களுக்கு நேராக தெரியும் என்பதற்காகவா?' அது நம் மனதிற்கே வெளிச்சம்... உதயமதி என்னும் இராணியால் கட்டப்பட்ட இந்த இடம், அவளுடைய கணவனான சோலாங்கி வம்சத்தின் பீம்தேவ் அரசனின் நினைவாக கட்டப்பட்டதாகவும் வரலாற்றில் ஒரு கதை உண்டு. ஏழு அடுக்கு மாடிகளை கொண்டு கட்டப்பட்ட இந்த இடம் சுமார் 800 சிற்பங்களை தாங்கிகொண்டு பெருமையுடன் விளங்குகிறது.

Stefan Krasowski

 சத்ரபதி சிவாஜி நிலையம்:

சத்ரபதி சிவாஜி நிலையம்:

யுனெஸ்கோவின் பாரம்பரிய தளமாக விளங்கும் இதுவும் 18ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒன்றாகும். இந்த இடம் உயர் விக்டோரியா கோதிக் வடிவமைப்பு பற்றிய விளக்கத்தை தாங்கிகொண்டு இருப்பதுடன் இந்திய கட்டிடக்கலையின் பெருமையையும் போற்றி பாதுகாத்து சிறப்புடன் விளங்குகிறது. அழகான கல் குவிமாடங்களையும், பெரிய அமைப்புகளையும் கொண்டுள்ள இந்த இடம், தெளிவான பலகையில் தசாப்தங்களாக மறைத்து வைக்கப்பட்ட ஒரு தளமாக நம் கண்களுக்கு புலப்படாமல் இருக்கிறது.

Shaileshsonare

 கோல் கும்பஸ்:

கோல் கும்பஸ்:

கர்நாடக மாநிலத்தின் சிறிய நகரமான பிஜப்பூரில் காணப்படும் ஒன்று தான் இந்த கோல் கும்பஸ். ‘தென்னிந்தியாவின் தாஜ்மகால்' என்றழைக்கப்படும் இந்த இடம் அடில் ஷாஹி கிங் முகம்மது அடில் ஷா என்பவரால் கட்டப்பட்டதாகும். இந்த இடத்தின் அமைப்பை சுற்றி நாம் நடக்க, பல சிக்கல்களையும், அழகிய சிற்பங்களையும் நம்மால் இங்கே காணமுடிகிறது. தபூலின் கட்டிடக்கலைஞரான யாகுட், கல்லறைக்கு ஆதரவளிப்பதற்காக எட்டு வளைகளை கட்டியெழுப்பினார் என்றும் வரலாறு கூறுகிறது.

Ashwin Kumar

 பட்டதாகல்:

பட்டதாகல்:

யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக விளங்கும் இந்த பகுதி, பல சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு எட்டாத ஒரு அதிசயமாக இன்றும் இருக்கிறது. இந்த தளங்களில் காணப்படும் ஆலயங்கள் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டதாகவும் நம்பப்படுகிறது. மேலும் இந்த ஆலயங்களுடன் ஜெயின் ஆலயங்களும் ஒன்றாக இணைந்தே காணப்படுவது நமக்கு பல்வேறு ஆச்சரியங்களை மனதில் ஏற்படுத்துகிறது. அத்துடன் மேலும் இந்த ஆலயங்கள் 7 மற்றும் 8ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை என்றும் வரலாற்றின் மூலம் நமக்கு தெரிய வருகிறது. இங்கே உள்ள ஒரு சிறிய குக்கிராமம், மாலபிரபா நதியில் அமைந்து நம் மனதை வருடுகிறது. அத்துடன் சாளுக்கிய கட்டிடக்கலையை முன்னிலைப்படுத்தும் 10 ஆலயங்களும் இங்கே அமைந்து நம் மனதை அமைதி கொண்டு நிரப்புகிறது.

Mrnayak1992

 அனந்தபுர ஏரி ஆலயம்:

அனந்தபுர ஏரி ஆலயம்:


இந்தியாவின் வரலாற்று பதிவிலிருந்து மறைக்கப்பட்ட தளங்களுள் அனந்தபுர ஏரி ஆலயமும் ஒன்று. காசர்கோடு என்னும் இடத்தில் நீருக்கு நடுவில் காணப்படும் இந்த இடம், வரலாற்றையும் மாயவாதம் சந்திப்புகளையும் கொண்டு மிதக்கிறது. இந்த ஆலயம் பாபியா என்னும் சைவ முதலையால் பாதுகாக்கபட்டதாகவும் வரலாறு கூறுகிறது. இன்று வரை இந்த இடம் பல சைவ முதலைகளால் மாறி மாறி பாதுகாக்கபட்டு வருகிறது. மேலும் இந்த ஆலயம், திருவனந்தபுரத்தில் எழுந்தருளும் அனந்தபத்மனாப சுவாமியின் சுயரூபமாகவும் பார்க்கப்படுகிறது.

Noeljoe85

 ஷெட்டிஹள்ளி தேவாலயம்:

ஷெட்டிஹள்ளி தேவாலயம்:


கர்நாடக மாநிலத்தின் ஷெட்டிஹள்ளியில் உள்ள இந்த ரோஸரி சர்ச், வரலாற்று புதைந்த ஒரு இடமாகவும் ஆன்மீக அடையாளங்களை பிரதிபலிக்கும் ஒரு இடமாக அமைந்து நம்மை ஆவலுடன் வரவேற்கிறது. காட்சிகளால் கண்களை குளிர்விக்க சாதாரண நாட்களிலும் நமக்காக காத்திருக்கும் இந்த இடம், பிர்ன்ச் சமயப் பரப்பாளர்களால் 1860இல் கட்டப்பட்டதாகும். மழைக்காலத்தின் போது ஓரளவு தண்ணீரில் மூழ்கிவிடும் இந்த இடம், ஹேமாவதி நீர்த்தேக்கையின் பின்புறத்தில் உயரம் நீங்கா தன்மையுடன் காணப்படுகிறது.

Bikashrd

 கும்பல்கர்ஹ் கோட்டை:

கும்பல்கர்ஹ் கோட்டை:


இந்த இடம் சீன பெருஞ்சுவருக்கு சவால்விட்டு, இந்தியாவால் பதில் தரக்கூடிய அழகிய அதிசய இடமாகும். இந்த பரந்து விரிந்த மதியை மயக்கும் கும்பல்கர்ஹ் கோட்டை, ராஜஸ்தான் மாநிலத்தில் 36கிலோமீட்டர்கள் பரப்பளவில் அமைந்து காட்சிகளை கண்களுக்கு தந்து மனதை இதமாக்குகிறது. 15ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த இடம், உலகிலேயே இரண்டாவது நீண்ட சுவராகும் என்பதனை ‘நாம் இவ்வளவு நாட்கள் அறியாதது ஏனோ?' என்னும் ஏக்கம் நம் மனதின் ஒரு ஓரத்தில் படிகிறது. ஆரவல்லி தொடர்ச்சிக்கு குறுக்கே செல்லும் இந்த சுவர், தூரத்தை எதிர்ப்பார்ப்பின்றி வழங்கி அழகிய காட்சிகளை பரிசாக நமக்கு தர காத்திருக்கிறது.

Sujay25

 ஜஹாஸ் மஹால்:

ஜஹாஸ் மஹால்:


11ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு செம்மையுடன் காணப்படும் இந்த இடம், தரங்கா ராஜ்ஜியத்தின் ஒரு அங்கமாகவும் விளங்குகிறது. மத்திய பிரதேசத்தில் காணப்படும் இந்த இடத்தை ‘மந்தாவ்' என்றும் அழைப்பர். இந்த மறக்கமுடியாத நகரத்தின் வழியாக உலாவும் நம் கண்களுக்கு இங்குள்ள அற்புத நினைவுச்சின்னங்களும், அரண்மனைகளும் காட்சியளித்து மனதை மயில் இறகு அற்று வருடுகிறது. இந்த நினைவு சின்னங்களுள் பல ஜஹாஸ் மஹாலில் அமைந்து இதயத்தை ஈர்க்கிறது. 15ஆம் நூற்றாண்டின் பெருமைக்கு பெயர் போன இந்த இடம், ஜியாஸ் உத் தின் கில்ஜி என்பவரால் கட்டப்பட்டதாகும்.

Arian Zwegers

 கரேங்க் கர்ரின் ராயல் அரண்மனை:

கரேங்க் கர்ரின் ராயல் அரண்மனை:

தை அஹோம் வம்சத்தை அஹோம் இராஜ்ஜியம் ஆட்சி செய்தது. ஆம் இன்று நாம் அசாம் என்றழைக்கப்படும் இந்த இடம், 600 ஆண்டுகளுக்கு முன்பு தோற்றுவிக்கப்பட்டதாகும். கரேங்க் கர் பெரிய இராஜ்ஜியத்தின் தலை நகரமாகவும் அரண்மனைகளுக்கெல்லாம் சான்றாகவும் விளங்கி நம்மை வியப்பை நோக்கி இழுத்து செல்கிறது. இந்த அரண்மனை மரங்களால் கட்டப்பட்டதுடன்... நான்கடுக்கு மாடிகளை கொண்டும் விளங்குகிறது. இந்த மாடிகள், ஊழியர்களுக்கான வீடுகளாகவும், கண்காணிப்பு கோபுரம் கொண்டதாகவும் அமைந்து நம்மை அன்னாந்து பார்க்க வைத்து வரலாற்றின் பெருமையை தாங்கிகொண்டு நிற்கிறது. இங்குள்ள சுரங்க பாதைகள் போர்காலத்தில் தாக்குதலின் போது தப்பிப்பதற்கு பெரிதும் உதவுகிறது.

HSarma

Read more about: travel, history