» »தென்னிந்தியாவில் புகழ்பெற்ற மிகவும் பழமை வாய்ந்த கோவில்கள்!!

தென்னிந்தியாவில் புகழ்பெற்ற மிகவும் பழமை வாய்ந்த கோவில்கள்!!

Written By: Bala Karthik

தென்னிந்தியாவை சொர்க்கத்தின் வீடாக நினைக்க, பல்வேறு நினைவு சின்னங்களையும் தாங்கிக்கொண்டு பெருமையுடன் காலம் கடந்து நிற்கிறது. தென்னிந்தியாவின் நினைவு சின்னங்கள் அழகாக இருக்க, வார்த்தைகளால் வருணிக்க இயலாத காட்சியையும் நம் கருவிழிகளுக்கு அது தர, அழகிய திராவிடன் கட்டிடக்கலையிலிருந்து பெரும் விஜய நகர கட்டிடக்கலை பாணி வரை என பல சிறந்த எடுத்துக்காட்டுகளும் விளங்குகிறது.

இங்கே காணப்படும் ஆலயங்கள் அழகாக மட்டுமல்லாமல், கட்டிடக்கலையின் ஈர்ப்பையும் கொண்டிருக்க, அத்துடன் அமைதியையும், குறிப்பிட்ட அழகையும் நிரப்பியவாறும் காணப்படுகிறது. தென்னிந்திய ஆலயங்கள் இந்த பல்வேறு புராணங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளுள் ஒன்றாக விளங்குகிறது. இவ்விடத்தின் அழகை காண அனுபவங்களுள் ஒன்றாக நேரடியாக சென்று பார்ப்பது நமக்கு பரவசம் தந்திட, இன்டெர்நெட்டில் தேடி புகைப்படத்தை கண்டு செல்வதனை தவிர்க்கவும் வேண்டப்படுகிறது.

 குருவாயூர், கேரளா

குருவாயூர், கேரளா


திருச்சூர் மாவட்டத்தின் குருவாயூரை வைகுண்டமாக கருத கிருஷ்ண பெருமானின் பக்தர்கள் பூமியாகவும், தென்னிந்தியாவில் நாம் பார்க்க வேண்டிய ஆலயமாகவும் விளங்குகிறது.

இங்கே காணப்படும் பிரதான தெய்வமாக கிருஷ்ண பெருமான் இருக்க, இதனை குருவாயூரப்பர் எனவும் அழைக்கப்பட, இதனை கடந்து கணேஷன், தேவி, சாஸ்தாவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆலயமும் காணப்படுகிறது.

கேரள மாநிலத்தில் செல்வம் கொழிக்கும் ஆலயங்களுள் ஒன்றாக குருவாயூர் ஆலயம் காணப்பட, இதனை குருவாயூர் தேவாசன வாரியம் நிர்வகித்து வருகிறது. இந்த ஆலயம் உச்சியில் காணப்பட, எண்ணற்ற பக்தர்களையும் கொண்டு ஒவ்வொரு நாளும் காட்சியளிக்கிறது.

PC: Vinayaraj

 திருமலா, ஆந்திர பிரதேசம்:

திருமலா, ஆந்திர பிரதேசம்:

ஷேசாச்சலம் தொடர்ச்சியின் உச்சியில் அமைந்து வெங்கடேஷ்வரருக்கு அர்ப்பணிக்கப்பட்டு இருக்கும் நாட்டிலேயே செல்வம் கொழிக்கும் ஆலயங்களுள் ஒன்றாக விளங்குகிறது இந்த ஆலயம். இந்த ஆலயத்தை பலரும் வந்து பார்த்து செல்ல, நாடு முழுவதுமுள்ள சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இங்கே வந்தும் செல்கின்றனர்.

இந்த ஆலயத்திற்கு வரும் பக்தர்களுள் பெரும்பாலானோர் எண்ணற்ற வழிபாடை கடவுளுக்கு காணிக்கையாக்க, அவற்றை கடவுள் நிறைவேற்றுகிறார் எனவும் சொல்லப்படுகிறது.

இந்த ஆலயத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) நிர்வகிக்கிறது. இந்த திருமலாவின் வெங்கடேஷ்வர ஆலயத்தை கடந்து, TTD நாடு முழுவதுமுள்ள பல ஆலயங்களை நிர்வகிக்க, அவற்றுள் வரலாற்று ஆலயமான திருச்சானூரின் பத்மாவதி ஆலயமும் அத்துடன் இணைந்து காணப்பட, எண்ணற்ற ஆலயங்கள் TTDஆல் கட்டப்பட்டும் காணப்படுகிறது.

PC: Chandrashekhar Basumatary

சபரிமலை, கேரளா:

சபரிமலை, கேரளா:


பெரியார் புலிகள் சரணாலயம் உள்ளே கேரளாவின் சஹயாத்ரி தொடர்ச்சியில் காணப்படுகிறது சபரிமலை. தர்மசாஸ்தா அல்லது அய்யப்பாவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஆலயம், உலகம் முழுவதுமுள்ள மிகப்பெரிய வருடாந்திர யாத்ரீக தளங்களுள் ஒன்றாக காணப்பட, ஒவ்வொரு வருடமும் 50 மில்லியன் பக்தர்களும் இங்கே வந்து செல்கின்றனர்.

மற்ற ஆலயத்தை காட்டிலும், ஒவ்வொரு நாளும் இவ்விடத்திற்கு ஒரு சிலர் வர; இந்த ஆலயமானது வருடத்தில் தோராயமாக 51 நாட்களே வழிபாட்டுக்காக திறக்கப்பட, ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் 5 நாட்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஆலயத்தினுள் நுழைய 10 முதல் 50 வயது பெண்களுக்கு தடைவிதிக்கப்பட, மற்ற ஆலயத்தில் இது போன்ற எந்த தடைகளும் பெண்களுக்கு காணப்படுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

PC: Abhilash Pattathil

மதுரை மீனாட்சி, தமிழ்நாடு:

மதுரை மீனாட்சி, தமிழ்நாடு:


வைகை நதிக்கரையின் தெற்குப்பக்கம் காணப்படும் பழங்காலத்து ஆலயம் தான் மீனாட்சி மற்றும் சுந்தரேஷ்வரருக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் ஆலயமாகும். இந்த ஆலயத்தை மதுரையின் வாழ்க்கை இணைக்கோடாகவும் கருதப்படுகிறது.

இந்த ஆலயமானது உலகம் முழுவதும் பெயர் பெற்று விளங்க, இதன் மாபெரும் கோபுரங்கள் நூற்றுக்கணக்கான சிற்பத்தை கொண்டிருக்க பல்வேறு கடவுளுக்கும் தேவிக்கும் அவை அர்ப்பணிக்கப்பட்டு காணப்படுகிறது என்பதும் தெரியவருகிறது.

இந்த ஆலயமானது திராவிடக்கட்டிடக்கலை ஆலயங்களுள் ஒன்றுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இங்கே வரும் நம்மால் 1000 கால் மண்டபத்தை பார்க்க முடிய அதனை மீனாட்சி நாயக்கர் மண்டபம் எனவும் அழைக்கப்படுகிறது.

இந்த அற்புதமான கட்டிடக்கலையை தவிர்த்து, இங்கே விட்டு செல்லப்பட்ட எண்ணற்ற கம்பீரமான காட்சிகளையும், வண்ணத்தின் துடிப்பையும் நம்மால் இங்கே பார்க்க முடிகிறது.

PC: Unknown

தஞ்சாவூர், தமிழ்நாடு:

தஞ்சாவூர், தமிழ்நாடு:

தமிழ்நாடு மாநிலத்தில் காணப்படும் சாதாரண நகரத்தில் கூட, பழங்காலத்து சோழ வம்சத்தின் அற்புதமான கட்டிடக்கலைகளால் தஞ்சாவூரே அலங்கரிக்கப்பட்டிருக்கிறது என்பதே உண்மை.

தென்னிந்தியாவில் காணப்படும் இவ்விடம் பலராலும் பார்த்து செல்லும் இலக்காக அமைய, மாபெரும் பிரகதீஷ்வரா ஆலயத்துக்கும் பெயர் பெற்ற இந்த ஆலயம், சிவ பெருமானுக்காகவும் அர்ப்பணிக்கப்பட்டு காணப்படுகிறது.

இந்த ஆலயமானது மத சார்புடன் கூடிய மதிப்பை மட்டும் கொள்ளாமல், அத்துடன் இணையான பண்டைக்காலத்தவரின் வாழ்க்கை வரலாற்றையும் நமக்கு படம்பிடித்து காட்டுகிறது.

இந்த அமைப்பானது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக அங்கீகரிக்கப்பட, அதன் மத்தியில் மிக சிறந்த சோழர் ஆலயத்தையும் கொண்டிருக்கிறது. தஞ்சாவூர் பல்வேறு ஆலயங்களுக்கு வீடாக விளங்க அவை கங்கைக்கொண்ட சோழப்புரம், கீளப்பெரும்பள்ள ஆலயம், என பலவும் என்பது குறிப்பிடத்தக்கது.

PC: Veera

ஹம்பி கர்நாடகா:

ஹம்பி கர்நாடகா:


துங்கபத்ரா நதிக்கரையில் அமைந்திருக்கும் ஹம்பி, மற்றுமோர் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக விளங்குகிறது. இவ்விடமானது பெருமைமிக்க விஜய நகர பேரரசின் இடிபாடுகளுக்கு புக(லி)ழிடமாக விளங்குகிறது.

இந்த இடிபாடுகளின் மத்தியில் காணப்படும் விருபக்ஷா ஆலயம், சிவபெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்டு காணப்படுகிறது. இந்த ஆலயமானது உயரமான நுழைவு கோபுரத்திற்கும், சிக்கலான சிற்பத்திற்கும், மாபெரும் கட்டிடக்கலைக்கும் பெயர் பெற்று விளங்குகிறது.

7ஆம் நூற்றாண்டில் இது கட்டப்பட, இந்த ஆலயத்தில் எண்ணற்ற சேர்ப்புகளும் சேர்க்கப்பட, அவை யாரெல்லாம் இவ்விடத்தை ஆட்சி செய்தனர் என்பதையும் எடுத்துரைக்கிறது. இந்த பலவற்றிற்கும் மத்தியில், இரங்கா மண்டபம் அல்லது மத்திய தூண் மண்டபம் காணப்பட, அவை பலராலும் பார்க்கப்பட்டதாகவும் காணப்பட, அவற்றின் புகழ் கிருஷ்ண தேவராயரை சென்றும் சேர்கிறது.

PC: Hakri's

சிதம்பரம், தமிழ்நாடு:

சிதம்பரம், தமிழ்நாடு:

இங்கே காணப்படும் அரிதான ஆலயம், சிவப்பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்க, இங்கே கடவுள் நடராஜர் நடனமாடுவது போலும் தரிசனம் தருகிறார். சிவன் இங்கே தில்லை கூத்தனாக வணங்கப்பட, பஞ்ச பூத ஸ்தலங்களுள் ஒன்றாகவும் இருக்க, தமிழ்நாடு முழுவதும் பரந்து விரிந்து காணப்படுகிறார்.

இங்கே காணப்படும் தெய்வமது வானத்தை குறிப்பிட, சில தனித்துவமிக்க வணங்கும் வடிவத்தையும் கொண்ட கட்டிடக்கலையுடனென, பல்வேறு கலை வடிவத்தின் ஆதிக்கத்தையும் நம்மால் இங்கே காண முடிகிறது.

PC: Karthik Easvur

ஸ்ரீபுரம் தங்க ஆலயம், தமிழ்நாடு:

ஸ்ரீபுரம் தங்க ஆலயம், தமிழ்நாடு:

லக்ஷ்மி தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஆலயம், செல்வத்தை தரக்கூடிய தேவியெனப்பட, ஆன்மீக பூங்காவில் இந்த ஆலயம் அமைந்திருப்பதோடு, பொதுமக்களுக்காக 2007ஆம் ஆண்டு இது திறக்கப்பட்டது. அந்த ஆலயமானது 100 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்பட, இந்த ஆலயத்தை ஸ்ரீ நாராயணி பீடம் கொண்டு கட்டமைக்கப்பட்டிருக்க, இதன் சிறப்பம்சங்கள் சிக்கலான பணியை கொண்டிருக்க, சுத்த தங்கத்தாலும் அது கவரப்பட்டிருக்கிறது.

இந்த ஆலயமானது நட்சத்திர வடிவம் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்க, அதன் மத்தியில் நட்சத்திர வடிவ பாதையும் காணப்பட, அது ஸ்ரீ சக்ராவை ஒத்திருக்கிறது. இங்கே தேவியை வணங்க வரும் ஒருவர், இந்த பாதை வழியாக நடந்து செல்ல பல்வேறு தலைவர்களின் ஆன்மீக வாசகங்களும் இங்கே பொறிக்கப்பட்டிருக்கிறது.

PC: Dsudhakar555

சாமுண்டி மலை, கர்நாடகா:

சாமுண்டி மலை, கர்நாடகா:

சாமுண்டி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட இவ்விடம், சிறுகுன்றின் மேல் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட புகலிடமாக அமைய, ஹொய்சலா வம்சத்தால் கட்டப்பட்ட இந்த ஆலயத்தை சாமுண்டீஸ்வரி ஆலயமெனவும் அழைக்கப்படுகிறது. இதனை தேவியவர் மஹிசாசூரனை கொன்ற இடமாகவும் நம்பப்படுகிறது.

இந்த தெய்வத்தை பாதுகாவலர் தெய்வமென நகரத்தில் கருதப்பட, வுடையார் வம்சத்தினுடையது என்பதும் தெரியவருகிறது. இந்த ஆலயத்தை நாம் அடைய, பெருமளவிலான படிக்கட்டுகளில் ஏற வேண்டியிருக்கிறது. இந்த வழியில் காணப்படும் பெரிய அளவிலான ஒற்றை கல் நந்தியை மிகுந்த ஈடுபாடுடன் வணங்குகின்றனர்.

PC: Spiros Vathis

பூரி, ஒடிஸா:

பூரி, ஒடிஸா:


நாட்டில் பெரிதும் வணக்கப்படும் ஆலயங்களுள் ஒன்றாக இது இருக்கிறது. கிருஷ்ண பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஜகன்னாத் ஆலயம், உலகத்தையே வணங்குவதாகவும், இங்கே அத்துடன் இணைந்த சகோதரர் பலராமன் மற்றும் சகோதரி சுபத்ராவையும் வணங்கவும் முடிகிறது.

இந்த ஆலயத்தில் ஜகன்னாத், பலராமர், சுபத்ரா மர சிலைகள் காணப்பட, குறிப்பிட்ட வருடத்திற்கு பிறகு அது மாற்றவும் படுகிறது. இந்த ஆலயத்தை பன்னிரெண்டாம் நூற்றாண்டில் ஆனந்தவர்மன் சோடாகங்கை தேவாவினால் கட்டப்பட, இவர் தான் கங்கை வம்சத்தினை நிறுவியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

PC: RJ Rituraj