» »இங்கெல்லாம் சும்மா ஒரு லாங்க் டிரைவ் போனா நீங்க லக்கி தாங்க!

இங்கெல்லாம் சும்மா ஒரு லாங்க் டிரைவ் போனா நீங்க லக்கி தாங்க!

Posted By: Udhaya

உங்கள் கண்களை இயற்கை அழகுகளால் நிரப்பி, கவின் கொஞ்சும் பசுமைகள் இமை வழியே வழிந்தோட ஒரு அருமையான சுற்றுலா செல்வோமா?

உங்களுக்கு லாங் டிரைவ் என்றால் மிகவும் பிடிக்கும்தானே. அப்படின்னா இந்தியாவில் எந்த மூலைக்கு சென்றாலும், வீசும் காற்றில் முகம் எதிர்த்து, காரின் முகப்பு விளக்கை எரிய விட்டு, மழை பெய்தும் பெய்யாமலும் சாரல் தூவும் நேரம் அல்லது மங்கிய வெயிலோன் மேற்கில் முகம் பதிக்கும் சாயங்காலம் இந்த லாங்க் டிரைவ் போனா நீங்களும் லக்கி தான்....

மனாலி - காஸா- ரெகாங் பியோ - சித்குல் - ஷிம்லா

மனாலி - காஸா- ரெகாங் பியோ - சித்குல் - ஷிம்லா

'கோடை காலப் புகலிடம்' மற்றும் 'மலைகளின் ராணி' என்று அறியப்படும் சிம்லா இமாச்சலப்பிரதேசத்தின் தலை நகரமாகும். இந்த நகரம் கடல் மட்டத்திலிருந்து 2202 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. தற்போதைய சிம்லா மாவட்டம் 1972 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. காளி தேவியின் மற்றொரு பெயரான 'சியாமளா' என்ற பெயரில் இருந்து சிம்லா என்ற பெயர் உருவானது.

கொல்கத்தா - டார்ஜிலிங் - காங்க்டோக் - ஸுலுக் - அலிபுர்டார் - தவாங்

கொல்கத்தா - டார்ஜிலிங் - காங்க்டோக் - ஸுலுக் - அலிபுர்டார் - தவாங்

மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரமாக விளங்கும் கொல்கத்தா நகரம் இந்தியாவின் கலாச்சார பாரம்பரியம் நிரம்பி வழியும் நகரங்களில் ஒன்று. பழமையான இந்நகரம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தலைநகரமாக இயங்கிய பெருமையை பெற்றுள்ளது. வெகு சமீப காலம் வரை கல்கத்தா என்று அறியப்பட்ட இந்நகரம் காலத்தில் உறைந்து போன பழமையின் கம்பீரமாக வீற்றிருக்கிறது.

ஸ்ரீநகர் - கார்கில் - லே - கார்துங் லா - நுப்ரா - லே - பங்காங் சோ - லே - தங்லாங் லா - மணாலி

ஸ்ரீநகர் - கார்கில் - லே - கார்துங் லா - நுப்ரா - லே - பங்காங் சோ - லே - தங்லாங் லா - மணாலி

'பூலோக சொர்க்கம்' மற்றும் 'கிழக்கின் வெனிஸ்' என்ற பெயர்களால் அழைக்கப்படும் ஸ்ரீநகர், காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள அழகிய நகரமாகும். ஜீலம் நதிக்கரையில் அமைந்துள்ள இந்நகரம் அழகிய ஏரிகள், படகு வீடுகள் மற்றும் கண்கவரும் வகையில் அமைந்துள்ள எண்ணற்ற முகலாய தோட்டங்கள் ஆகியவைகளுக்காக மிகவும் புகழ் பெற்ற நகரமாகும். ஸ்ரீ நகர் என்ற பெயர் வளத்தைக் குறிக்கும் 'ஸ்ரீ' மற்றும் இடத்தைக் குறிக்கும் 'நகர்' என்ற இரு சமஸ்கிருத வார்த்தைகளிலிருந்து வந்ததாகும். எனவே, இந்நகரத்தின் பெயருக்கு 'வளமான நகரம்' என்று பொருள் கொள்ளலாம்.

சென்னை - கல்பாக்கம் - சிதம்பரம் - ராமநாதபுரம் - தூத்துக்குடி

சென்னை - கல்பாக்கம் - சிதம்பரம் - ராமநாதபுரம் - தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் தமிழ்நாடு மாநிலத்தின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு பிரபலமான துறைமுக நகரம் ஆகும். இந்நகரம் முத்து குளித்தலுக்கு பிரபலமானதினால் 'முத்து நகரம்' என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது.

டெல்லி - அஜ்மீர் - புஷ்கர் - ஜெய்ப்பூர் - டெல்லி

டெல்லி - அஜ்மீர் - புஷ்கர் - ஜெய்ப்பூர் - டெல்லி

இந்தியாவின் பழமையான அழகு நகரமான ஜெய்ப்பூர் நகரம் ‘இளஞ்சிவப்பு நகரம்' என்று பிரியத்துடன் அழைக்கப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரமாகவும் விளங்கும் இது மிதமான பாலைவனப்பிரதேசத்தில் எழுந்துள்ளது.

மும்பை - பரோடா - டையூ - சோம்நாத் - கிர் - கிரேட்டர் ரண் ஆப் குட்ச்

மும்பை - பரோடா - டையூ - சோம்நாத் - கிர் - கிரேட்டர் ரண் ஆப் குட்ச்

மும்பை கனவுகளின் நகரமாகவும், நாகரிகத்தின் சின்னமாகவும், அதிர்வலைகளை ஏற்படுத்தும் வாழ்வியல் முறைகளுக்காகவும், பாலிவுட்டின் இல்லமாகவும் பிரபலமாக அறியப்படுகிறது. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் உலக மக்கள் அமெரிக்காவை கண்டு கனவு காண்பதை போல, இந்திய மக்கள் மும்பைக்காக கனவு காண்கிறார்கள்.

பெங்களூரு - மைசூரு - ஆலப்புழா - மூணாறு - தேக்கடி

பெங்களூரு - மைசூரு - ஆலப்புழா - மூணாறு - தேக்கடி

இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள ‘தேக்கடி' கேரளாவில் மிகவும் விரும்பி விஜயம் செய்யப்படும் ஒரு விசேஷமான இயற்கைச் சுற்றுலாத்தலமாகும். பெரியார் காட்டுயிர் சரணாலயம் என்ற பெயராலும்அறியப்படும் கீர்த்தி பெற்ற இந்த சுற்றுலா மையமானது நடைபயணிகள், இயற்கை ரசிகர்கள், காட்டுயிர் ஆர்வலர்கள், சாகச விரும்பிகள், யாத்ரீகர்கள் மற்றும் குடும்பச்சுற்றுலா செல்வோர் என்று பலவகைப்பட்ட பயணிகளை ஈர்க்கிறது.

அவுரங்காபாத் - இந்தூர் - போபால் - சாகர் - கஜுராஹோ

அவுரங்காபாத் - இந்தூர் - போபால் - சாகர் - கஜுராஹோ

மத்தியப்பிரதேசத்தின் புந்தேல்கண்ட் மண்டலத்தில் வீற்றிருக்கும் கஜுராஹோ வரலாற்றுத்தலம் விந்திய மலைத்தொடர்களை பின்னணியில் கொண்ட ஒரு புராதன கிராமியப்பகுதியாகும். உலக பாரம்பரிய ஸ்தலங்களின் வரைபடத்தில் தனக்கென ஒரு பிரத்யேக இடத்தை இந்த கஜுராஹோ வரலாற்றுத்தலம் பெற்றிருக்கிறது.

சோனாமார்க் - சோஜிலா பாஸ் - டிராஸ் - புலி மலை - கார்கில்

சோனாமார்க் - சோஜிலா பாஸ் - டிராஸ் - புலி மலை - கார்கில்

`அகாக்களின் பூமி' என அழைக்கப்டும் `கார்கில்', ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் `லடாக்' பகுதியில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும். `ஷியா' பிரிவு முஸ்லிம்கள் இப்பகுதியை கைப்பற்றி வாழ்ந்து வந்ததால் இது `கார்கில்' என பெயர் பெற்றது.

கவுகாத்தி - நமேரி - ஜிரோ - மஜூலி - சிவசாகர் - காசிரங்கா - சில்லாங் - சிரபுஞ்சி

கவுகாத்தி - நமேரி - ஜிரோ - மஜூலி - சிவசாகர் - காசிரங்கா - சில்லாங் - சிரபுஞ்சி

ஸோஹ்ரா என்று உள்ளூர்வாசிகளால் அறியப்படும் சிரபுஞ்சி, மேகாலயா உலகம் முழுவதும் புகழ் பெற்றிருப்பதற்கான முக்கிய காரணங்களுள் ஒன்றாகும். பூமியின் ஈரப்பதமான பகுதியாக ஒரு காலத்தில் விளங்கிய சிரபுஞ்சி, மனம் மயக்கும் ஆற்றல் படைத்ததாகும்.

Read more about: travel tour

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்