» »காடுகளில் வாழும் அனுபவத்தைப் பெறவிரும்புகிறீர்களா? அப்போ நீங்க போகவேண்டியது இங்கதான்!

காடுகளில் வாழும் அனுபவத்தைப் பெறவிரும்புகிறீர்களா? அப்போ நீங்க போகவேண்டியது இங்கதான்!

Written By: Udhaya

காட்டுயிர் வாழ்க்கை வாழ்வதற்கு பெரும்பாலான இளைஞர்கள் விரும்புகின்றனர். அதை முன்னிறுத்தி, பல ரிசாட்களும் காடுகளுக்கு மிக அருகில் அமைக்கப்படுகின்றன. இளைஞர்களை கவர்வதற்காகவே பல பல அம்சங்களோடு ரிசாட்களும், மற்ற விடுதிகளும் மலிவு விலையில் அட்டகாசமான சலுகைகளையும் அறிவிக்கின்றன. காடுகளில் வாழும் அனுபவத்தைப் பெற உடனடியாக கிளம்புங்கள்.

தடோபா, மகராஷ்ட்ரா

தடோபா, மகராஷ்ட்ரா


தடோபா அந்தாரி தேசியப் பூங்கா மகராஷ்ட்டிரா மாநிலத்தின் மிகப் பழமையான மற்றும் மிகப் பெரிய தேசிய பூங்காவாகும். இங்கு புலிகள் பாதுகாக்கப்பட்ட இனமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரபிக்கடலோரத்தில் அட்டகாசமான ஒரு வாழ்க்கை. சூரிய உதயம் காணுதல், கடற்கரையோரத்தில் ஓடியாடி விளையாடுதல் போன்றே காடுகளில் சொகுசு ரிசாட்களில் வாழ்தலும் சிறப்பாக இருக்கும் அல்லவா?

இங்குள்ள சில ரிசாட்களில் ஒரு நாளைக்கு 5100ரூ வரை வசூலிக்கின்றனர். காடுகளில் வாழ்க்கை வாழ விரும்புபவர்கள் முயற்சி செய்து பாருங்களேன்.

எப்படி செல்லலாம்?

நாக்பூரிலிருந்து 3 மணி நேரத்தொலைவில் இருக்கும் இந்த இடத்துக்கு, சொந்த வாகனத்தில் செல்வது சிறந்தது. ஹைதராபாத்திலிருந்து நாக்பூர் செல்லும் வழியில் சற்று தொலைவில் அமைந்துள்ளது இந்த தடோபா அந்தாரி தேசிய பூங்கா.

Sushilghugul

கோத்வார் , உத்தரகண்ட்

கோத்வார் , உத்தரகண்ட்


உத்தர்கண்ட் மாநிலம், பௌரி கார்வல் மாவட்டத்தில் அமைந்துள்ளது கோத்வார். கோஹ் ஆற்றின் ஆரம்பமாக இருக்கும் இந்த காடுகளில் நீங்கள் குறைந்த செலவில் தங்கி, இயற்கையை அனுபவிக்கமுடியும்.

பெரும்பாலும் குளிர் நிறைந்தும், எப்போவாவது சாதாரண நிலையிலும் இருக்கும் இந்த இடம், காட்டுயிர் வாழ்க்கைக்கு மிகச் சிறந்தது.

எப்படி செல்லலாம்?

தலைநகர் டெல்லியிலிருந்து 298கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம். மலைப்பாதை என்பதால் செல்வதற்கு சற்று தாமதமாகும். கிட்டத்தட்ட 8 மணி நேரத்தில் சென்றடையலாம்.

wiki

ராம்நகர், உத்தர்கண்ட்

ராம்நகர், உத்தர்கண்ட்

நைனிட்டால் மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த இடம். சுற்றிலும் காட்டுயிர் வாழ்க்கைக்கு ஏதுவான சூழல் கொண்ட இந்த இடம் மிகவும் அருமையாக காணப்படுகிறது.

எப்படி செல்லலாம்


நைனிட்டாலிலிருந்து 65கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம். இங்குதான் கார்பெட் தேசிய பூங்கா அமைந்துள்ளது. இது இந்தியாவின் மிகப் பிரபலமான சுற்றுலாப் பிரதேசமாகும்.

wiki

 பிரா, உத்தரபிரதேசம்

பிரா, உத்தரபிரதேசம்


உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் லக்னோவில் அமைந்துள்ள பிரா இயற்கை வளம்மிக்க பகுதியாகும். இந்திய நேபாள எல்லையில் அமைந்துள்ள இந்த இடம் மிகவும் அழகான இயற்கை வாழிடமாகும்.

இங்குள்ள ரிசாட்கள் நாளொன்றிற்கு 3500ரூ முதல் வசதிக்கேற்ப கட்டணங்கள் வசூலிக்கின்றன. சிறப்பான காட்டுயிர் வாழ்வு அனுபவத்துக்கு முந்துங்கள்.

எப்படி செல்லலாம்?

டெல்லியிலிருந்து 383கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த ஊர். இங்கு செல்வதற்கு பரேலி, சித்தாப்பூரிலிருந்து நிறைய பேருந்துகள் உள்ளன.

Arjun Singh Kulkarni

வயநாடு

வயநாடு

வயநாடு கேரள மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும். இதன் மொத்தமாவட்டமே சுற்றுலாவுக்கு சிறந்த பிரதேசமாகும். இங்கு சென்று வந்தவர்கள் மீண்டும் மீண்டும் செல்லத்தூண்டும் அற்புதங்களைத் தன்னுள் கொண்டது வயநாடு.

எப்படி செல்லலாம்

கோயம்புத்தூரிலிருந்து 195கிமீ தூரத்தில் அமைந்துள்ளது வயநாடு. மேட்டுப்பாளையம், ஊட்டி வழியாக இந்த பகுதியை அடையமுடியும்.

Dirtyworks

மனாஸ்

மனாஸ்

மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியிலிருந்து 273கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம். மனாஸ் தேசியப் பூங்கா, யுனெஸ்கோவால் புராதான சின்னமாக அறிவிக்கப்பட்டதாகும். இதுவும் புலிகள் பாதுகாப்பு காடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்லுயிர் வாழ்க்கைக்கு ஏதுவான இந்த காடுகளில் பல்வேறு மிருகங்கள் வாழ்ந்துவருகின்றன.

Sougata Sinha Roy

மண்ட்லா, மத்தியபிரதேசம்

மண்ட்லா, மத்தியபிரதேசம்


மத்தியப் பிரதேசமாநிலத்தில் அமைந்துள்ள மண்ட்லா சிறந்த சுற்றுலாத் தளமாகும். இதன் அருகினில் அமைந்துள்ள காடுகளில் நிறைய வகை விலங்கு இனங்கள் வாழ்ந்து வருகின்றன.

எப்படி செல்லலாம்

நாக்பூரிலிருந்து 244 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது இந்த இடம். கிட்டத்தட்ட 6மணி நேர பயணத்தில் இந்த இடத்தை அடையலாம்.

G.W. Lawrie

சரங்க்பூர், மத்தியபிரதேசம்

சரங்க்பூர், மத்தியபிரதேசம்


மத்தியபிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த இடம். இது காளி சிந்து நதியோரத்தில் அமைந்துள்ளது.

மிகவும் அழகான இடமான இது ரிசாட் வாழ்க்கைக்கு பொருந்தகூடியதாக அமைந்துள்ளது. இங்கு காணப்படும் ரிசாட்களில் கட்டணங்கள் 4100ரூ லிருந்து தொடங்குகிறது.

ஹாப்லாங்

ஹாப்லாங்

அஸ்ஸாம் மாநிலத்தில் அமைந்துள்ள இந்த இடம் காட்டுயிர் வாழ்க்கைக்கு சிறந்த இடமாக உள்ளது. இங்கு செல்வதற்கு சற்று சிரமமாக இருந்தாலும், காடுகளின் நடுவே இயற்கையை ரசித்துக்கொண்டே சென்றால் சிறப்பானதாக இருக்கும்.

எப்படி செல்லலாம்

ஷில்லாங்கிலிருந்து 238கிமீ தூரத்தில் அமைந்துள்ளது இந்த இடம்.

 ராமக்கல்மேடு

ராமக்கல்மேடு

தேனியிலிருந்து 57கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த ராமக்கல்மேடு. குச்சனூர்,சின்னமனூர்,கம்பம் வழியாக 1.30மணி நேரத்தில் சென்றடையலாம்.

Editzz by me

Read more about: travel, forest, wildlife