Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவில் ஜனவரி மாதத்திற்கு ஏற்றவாறு ஜோராக சுத்திப் பார்க்க சூப்பரான 15 இடங்கள் !!

இந்தியாவில் ஜனவரி மாதத்திற்கு ஏற்றவாறு ஜோராக சுத்திப் பார்க்க சூப்பரான 15 இடங்கள் !!

By Bala Karthik

புது வருடத்தில் பொதுவாகவே எல்லாருடைய நாட்குறிப்புகளிலும் பயணத்திற்கான இடப்பட்டியல்கள் நிரம்பி வழிவது வழக்கமாகும். இந்தியாவில் காணப்படும் ஒரு சில இடங்களானது அழகிய சுற்றுலா இலக்காக குளிர்க்காலமதில் அமைய, சிகரத்தையும் அவை தொட காணப்படுகிறது. பசுமையான வளி மண்டலமும், காற்றின் குளிர்ச்சியுமென, இந்த இலக்கானது ஆராய்ந்து காதல் கொள்ள ஏதுவாக அமைந்து காணப்படுகிறது. ஜனவரி மாதம் நம்மை கட்டித்தழுவ தொடங்க, உங்களுடைய மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு, வியக்கத்தகு சுற்றுலா இலக்கை நோக்கியும் நாம் பயணித்திடலாம்.

கொச்சி:

கொச்சி:


கேரளாவில் காணப்படும் முக்கியமான கடற்கரை நகரங்களுள் ஒன்று தான் கொச்சி. இங்கே காணப்படும் தனித்தன்மைமிக்க கலை வேலைப்பாடுகளும், பொன்னும் பிரசித்திப்பெற்று சுற்றுலா மற்றும் பயண ஆர்வலர்களை வெகுவாக கவர்கிறது. இங்கே காணப்படும், பழமையான யூத நகரத்தை நாம் ஆராய்ந்திட, அதனால் கொச்சியின் அதீத வரலாற்றை நம்மால் தோண்டி எடுத்து பார்க்க முடிகிறது. முஜிரிஸ் பியென்னல் 2012 இல் தொடங்கப்பட, நெகிழவைக்கும் பார்வையாளர்களை கொண்டு தொடர்வதோடு, இன்றுவரை மதிமயக்கும் அழகால் மனதையும் கவர்கிறது.

அஹமதாபாத்:

அஹமதாபாத்:


இந்த அஹமதாபாத் ஜனவரி மாதத்தில் மட்டும் சுற்றுலா மற்றும் பயண ஆர்வலர்களின் பட்டியலில் காணப்படாமல், வியக்கத்தகு பட்டம் பறக்கும் விழாவானதை ஒவ்வொரு வருடமும் மகா சக்ராந்தியின்போது கொண்டிருக்க, கண்கொள்ளா காட்சியை தரும் நவீன இலக்கையும் கொண்டு கூட்டம் நிரம்ப இவ்விடம் காணப்படுகிறது.

இந்த விழாவானது குளிர்க்கால முடிவை உணர்த்த, இந்த நகர வான்வளியானது பல்வேறு வண்ணத்தையும், வடிவத்தையும், அளவையும் கொண்ட பட்டத்தால் அலங்கரிக்கப்பட்டு காணப்படுகிறது. பல சிறந்த பாலிவுட் பிரபலமான, சல்மான் கான் போன்றவர்களும் இந்த துடிப்பான விழாவில் ஒரு அங்கமாக கலந்து கொள்கின்றனர்.

கோவா:

கோவா:

அழகிய கடற்கரை இலக்கான கோவா, அமைதியான காற்றையும், குளுகுளுவென காணப்படும் கால நிலையையும் கொண்டிருக்க, கற்பனையை படம்பிடித்துக்காட்டும் இடமாக இந்தியாவின் பலரையும் கவர, வெளிநாட்டவரும் இங்கே வந்து செல்வது வழக்கமாகும்.

கோவாவை காண சிறந்த நேரமாக ஜனவரி மாதம். கடுமையான வெப்பத்தின் இறுகிய அணைப்பிலிருந்து தப்பிவர சிறந்த இடமாகவும் இவ்விடம் விளங்குகிறது. நீங்கள் தேவையான முன் ஏற்பாடுகளை ஏற்கனவே செய்திருந்தால், சிறந்த சலுகையையும், சிறந்த பேக்கேஜ் ஒப்பந்தங்களையும் பெற்றிடலாம். ஒரு பைக்கை வாடகைக்கு எடுத்து, கோவாவின் பல இடங்களை சுற்றி பார்த்து ஆராய்ந்திடலாம்.

ஜெய்ப்பூர்:

ஜெய்ப்பூர்:

மீண்டும் கைப்பற்றப்பட்ட இந்த இளஞ்சிவப்பு நகரம், பழமையான நகரத்திலிருந்து நெகிழவைக்கும் சுற்றுலா தளமாக மாற காணப்படுகிறது. ஜெய்ப்பூர் இலக்கிய திருவிழாவானது ஜனவரி 21 முதல் ஜனவரி 25வரை நடந்திட, இந்த பழமையான நகரத்தை நாம் காண அதுவும் ஒரு காரணமாக அமையக்கூடும். வரலாற்று நினைவு சின்னங்களையும், அமைப்புகளையும், கொண்டு காணப்படும் இவ்விடமான ஜெய்ப்பூர், அதீத கலாச்சார வரலாற்றை கொண்டு நம் கண்களை அங்கும் இங்கும் அசைய விடாமல் ஈர்க்கிறது.

கோவளம்:

கோவளம்:

கடவுள் வாழும் நாட்டின் தலைநகரமான புறநகரில் காணப்படும் கோவளம், வரிசைக்கட்டி ஐந்து நட்சத்திர ஹோட்டல்களை கொண்டிருக்க, உலாவல் மற்றும் சில சாகச விளையாட்டுக்களுக்கு சிறந்த காலநிலை கொண்ட ஒரு இடமாகவும் விளங்குகிறது.

இக்கோவளம், கிராம நிகழ்ச்சியில் கொடிக்கட்டி பறக்க, வருடாந்திர விழாவானது ஜனவரி மத்தியில் தொடங்கி காணப்பட, கேரளாவின் கலாச்சார பாரம்பரியத்தையும் பிரதிபலித்து காணப்படுகிறது. இங்கே கேரளாவின் சுவைமிக்க உணவை நாம் சாப்பிட்டு மகிழ, இன மக்களின் உள்ளூர் உணவுகளும் நம் நாக்கை சுழற்ற வைக்கிறது.

சிர்ப்பூர்:

சிர்ப்பூர்:


இயற்கையின் மடியில் தவழும் பழமையான நகரமான சிர்ப்பூர், இயற்கை அழகு மற்றும் பழமையான நினைவு சின்னங்களை கொண்ட நகரமும் கூட. இந்த சிர்ப்பூர் நகரில் தேசிய நடனமும், இசை திருவிழாவும் வருடந்தோரும் கொடிக்கட்டி பறக்க; இந்த விழாவானது மதிமயக்கும் அழகை மனதில் தருவதோடு, வரலாற்று நகரமென்னும் வியப்பு ஒருசேர சேர்ந்து விளங்குகிறது. இங்கே தங்குவதன் மூலம் இஸ்கோன் ஆலயத்தையும், மஹாந்த் காஷிதாஸ் நினைவிடத்தையும், உர்ஜா பூங்காவையும், நந்தவன தோட்டத்தையும், மத்கு த்வீப்பையும் நம்மால் காண முடிகிறது.

மதுரை:

மதுரை:

தென்னிந்தியாவின் மதம் சார்ந்த நகரங்களுள் ஒன்றான மதுரை, அழகுடன் நளினம் சேர்ந்த ஒரு நகரமும் கூட. ஈர்க்கப்படும் மீனாட்சி அம்மன் ஆலயம் நகரத்தின் இதயப்பகுதியில் காணப்பட, இன்று வரை எண்ணிலடங்கா சுற்றுலா ஆர்வலர்களை கொண்டு களைக்கட்ட காணப்படுகிறது. மேலும், பல்வேறு ஆலயங்களும், பழமையான நினைவு சின்னங்களும் நிலப்பரப்பை அலங்கரித்து காணப்பட, அவை 4000 வருடத்திற்கும் பழமை வாய்ந்து இந்த நகரத்தில் காணப்படுவது என்பதும் நமக்கு தெரியவருகிறது. இந்த நகரத்தை சுற்றி நாம் வலம் வர, கடந்த காலத்தை நோக்கி சென்ற ஒரு சந்தோசத்தையும், நெகிழ்ச்சியையும் சேர்த்து நம் மனதில் தருகிறது.

அந்தமான் & நிகோபர் தீவு:

அந்தமான் & நிகோபர் தீவு:

ஜோடியாக தேன் சுவை கொண்ட தேனிலவை ரசிக்க பிடித்தமான இடமாக அந்தமான் & நிகோபர் அமைய, கற்பனையை கண்ட காட்சிகளில் சிதறவிட்டு நம் மனதையும் நெகிழ செய்ய, கடற்கரையும், இரத்தின நீரும், பட்டுப்போன்ற மணல்பரப்புகளும் அமைகிறது. ஹேவ்லாக் தீவானது நம்மை பெரிதும் ஈர்க்கும் ஓர் இலக்காக அமைய, அமைதி மற்றும் நிசப்தத்தை நாட ஆக சிறந்த இடமாகவும் அமைகிறது.

மேலும், பிடித்தமான இடங்களாக யானை மற்றும் கலப்பதார் கடற்கரை உள்ளடங்கி காணப்பட, ஒளி மற்றும் ஒலி நிறைந்த செல்லுலார் சிறையும், இராதா நகரும், வெனோம் பார், சுவைமிக்க உணவுகள் கொண்ட முழு நிலவு கஃபே என, நீர்விளையாட்டுக்களான ஸ்னோர்கெல்லிங்க் மற்றும் ஸ்கூபா டைவிங்கையும் இவ்விடமானது கொண்டிருக்கிறது.

புவனேஷ்வர்:

புவனேஷ்வர்:

இந்தியாவில் காணப்படும் சில திட்டமிட்ட நகரங்களுள் ஒன்றான இவ்விடம், நாட்டின் ஒதுக்குப்புறமான சுற்றுலா இலக்குகளுள் ஒன்றாக விளங்குகிறது. பழமையான ஆலயங்களும், நெகிழவைக்கும் கட்டிடக்கலையுமென, புவனேஷ்வரானது பொன் முக்கோண அங்கமாக விளங்க, புனித நகரமான பூரி மற்றும் கொனார்கின் சிறப்பம்சத்தையும் கொண்டு ஜகன்னாத் ஆலயத்திற்கும், சூரிய கோவிலுக்கும் வீடாகவும் விளங்குகிறது.

இங்கே நடத்தப்படும் முக்தேஷ்வர் நடனமானதை வருடந்தோரும் ஜனவரி மாத இரண்டாம் வாரம் நாம் கண்டு களித்திடலாம்.

PC: G41rn8

 பட்னிடாப்:

பட்னிடாப்:

பனி மையங்கள் கொண்ட இவ்விடம், பார்த்த இடங்கள் மீது காதல் கொள்ளும் மாயக்காரியாக, கண்கொள்ளா காட்சியை தரும் பீர் பாஞ்சல் தொடர்ச்சியையும், பல்வேறு சாகச செயல்களும் மூழ்கி காணப்படும் ஓர் இடமாகவும் விளங்க, மலை ஏறுதல், கூடாரமிடல், பாறை ஏறுதல், பயணம் செய்தல், பாராகிளைடிங்க் போன்ற பல சிறப்பம்சங்களையும் கொண்டு பார்க்க வேண்டிய சுற்றுலா இலக்காகவும் சிறந்து விளங்குகிறது.

உலா செல்வதன் மூலம், ஷான்ஷ்கார் ஏரியின் அழகை நாம் ரசிக்க, சுற்றுலா மற்றும் பார்வையாளர்களை ஈர்க்கும் இடங்களுள் ஒன்றாகவும் சிறந்து விளங்குகிறது. படோட்டி மற்றும் குட் என்னும் சிறு கிராமங்கள் இதனை தழுவி காணப்பட, மத்தியில் கேதுரு மற்றும் பைன் மரங்களையும் கொண்டு காஷ்மீரின் கண்கொள்ளா காட்சிகள் நிறைந்த கலாச்சாரத்தின் பிரதிப்பலிப்பாகவும் சிறந்து விளங்குகிறது.

PC: Sunny Arora

முருதேஷ்வர்:

முருதேஷ்வர்:


மதரீதியான தளமாக விளங்கும் சாகச பிரியர்களுக்கான இடம் தான் இவ்விடம். மாபெரும் சிவன் சிலையை சிவபெருமானுக்காக கொண்டிருக்க, உலகிலேயே இரண்டாவது பெரிய சிலை அமைப்பாகவும் இது விளங்குகிறது. அரபிக்கடல் மூன்று பக்கம் சூழ்ந்திருக்க, அற்புதமான மேற்கு தொடர்ச்சியானது கிழக்கின் பக்கத்தில் நிலப்பரப்பை அலங்கரித்து காணப்பட, தலை சிறந்த சுற்றுலா இலக்காகவும் கர்நாடகாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளை வரவேற்கிறது.

அருகாமையில் நேத்ரனி தீவு அல்லது புறா தீவு காணப்பட, அவை ஸ்கூபா டைவிங்க் மற்றும் ஸ்னோர்கெல்லிங்கிற்கு அற்புதமான வசதியையும் சேர்த்து கொண்டிருக்கிறது. இங்கே வருவதன் மூலம் முருதேஷ்வர் கடற்கரை, நீர் விளையாட்டுக்கள், டைவிங்க் வசதிகள் மற்றும் முருதேஷ்வர் ஆலயத்தையும் நாம் காணலாம்.

அவுலி:

அவுலி:


இந்தியாவின் பனிச்சறுக்கு இடங்களை கொண்ட பிரசித்தி பெற்ற இடங்களுள் ஒன்றாக விளங்கும் அவுலி, இயற்கையின் அனைத்து சாயலையும் கொண்டிருக்க, ஜனவரி மாத சுற்றுலா இலக்காகவும் அமைந்து காணப்படுகிறது. இந்த மலைப்பகுதியானது பனியால் அலங்கரிக்கப்பட்டிருக்க, சாகச செயல்கள் நிறைந்தும் காணப்படுகிறது. இங்கே வருவதன் மூலம் நெகிழவைக்கும் நந்தாதேவி தொடர்ச்சியையும், பல்வேறு கண்கொள்ளா காட்சி தரும் கட்டிடக்கலையின் இயற்கையையும் என அழகிய நதியையும், பசுமையான காடுகளையும் சேர்த்து கொண்டிருக்கிறது இவ்விடம்.

இங்கே வருவதன் மூலமாக, திரிசூல் சிகரம், ருத்ரபிரயாஹ், சினாப் ஏரி, க்வானி புக்யால் மற்றும் ஜோஷிமாத்தையும் நாம் சேர்த்து காணலாம். நேரம் ஒத்துழைத்தால், நீங்கள் இங்கே வருவதன் மூலம், தேசிய பனிச்சறுக்கு போட்டி விழாவிலும் பார்வையாளராக கலந்துக்கொண்டு களிப்படையலாம்.

டியூ:

டியூ:


ஒரு காலத்தில் போர்த்துக்கீசியர்களின் ஓய்வு இடமாக விளங்கிய டியூ, பார்வையாளர்களை ஊக்கப்படுத்தும் விதம் கொண்ட மென்மையான வாசஸ்தல வளிமண்டலமாகவும் நகரத்தின் நெரிசல் வாழ்க்கையை விட்டு விலகி மனதை மகிழ்விக்க அமைந்து காணப்பட்டு வருகிறது. இங்கே காணப்படும் அமைதியான சூழலும், அமைதியான கடற்கரையும், இனிமையான கால நிலையுமென ஜனவரி மாதத்தில் நாம் ஆராய ஏதுவாக அமைந்து காணப்படுகிறது.

பழமையான அமைப்புகளும், மகிழ்விக்கும் உணவு முறைகளும், துடிப்பான கலாச்சாரமும் என போர்த்துக்கீசிய ஆதிக்கம் அதிகமாக காணப்பட, அற்புதமான விடுமுறை பேக்கேஜ்களும் (Package) இங்கே சிறந்து விளங்குகிறது.

இங்கே வருவதன் மூலம் டீ டியூவில் ஒரு அங்கமாக விளங்கிட மறந்துவிடாதீர்கள் என சொல்லப்பட, மிகவும் விரிவுப்படுத்தப்பட்ட ஆசியாவின் கடற்கரை திருவிழா இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

கோஹிமா:

கோஹிமா:

அழகு நிறைந்த எல்லையில்லா இயற்கை அழகைக்கொண்ட, வியக்கத்தகு கலாச்சார பாரம்பரியத்தை கொண்டு காணப்படும் கோஹிமா, மென்மையான சுற்றுப்புற சூழலை தந்திட, பழங்குடியினரின் கலாச்சாரத்தையும் சேர்த்து கொண்டு அவர்கள் தேவையை உணர்த்துகிறது.

ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டு, குல்கீஸ் மற்றும் நாகா பழங்குடியினருக்கு வீடாக விளங்கும் இவ்விடமான கோஹிமா, துடிப்பான கலாச்சாரத்தை கொண்டு மகிழ்வான மன நிலையையும் சேர்த்து தருகிறது. கோஹிமாவில் நாம் ஆராய்ந்திட வேண்டிய தலைசிறந்த விஷயங்களாக, கோஹிமா விலங்கியல் பூங்கா, ஷில்லோய் ஏரி, ஷூகோ பள்ளத்தாக்கு, ஜப்பூ சிகரம், டௌபமா கிராமம், கோஹிமா அருங்காட்சியகம், மற்றும் கோனோமா பசுமை கிராமமும் சேர்ந்து காணப்படுகிறது.

மங்களூரு:

மங்களூரு:

கர்நாடக மாநிலத்தின் முக்கிய துறைமுக நகரமான மங்களூரு, சிறந்த சுற்றுலா இலக்காக விளங்குவதோடு, அனைத்து விதமான மன நிலையை மாற்றி ஒளி தர வல்ல அழகிய இடமும் கூட. அழகிய கடற்கரையும், வெப்ப மண்டல கால நிலையையும், கண்கொள்ளா காட்சிகள் நிறைந்த கட்டிடக்கலையையும் ஒரு சேர கொண்டு காணப்படுகிறது மங்களூரு. ஒரு சில பிடித்தமான இடங்களை இங்கே நாம் ஆராய, அவை சைன்ட் அலோசியஸ் தேவாலயம், மங்கலா தேவி ஆலயம், கத்ரி ஆலயமென பல இடங்களாகவும் அமைந்து காணப்படுகிறது.

PC: Nithin Bolar k

Read more about: travel temple pongal

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more