Search
  • Follow NativePlanet
Share
» »கர்நாடகா காவிரியைத் தான் தராது.. ஆனா இதையெல்லாம் நல்லாவே தரும்!

கர்நாடகா காவிரியைத் தான் தராது.. ஆனா இதையெல்லாம் நல்லாவே தரும்!

By Super Admin

கர்நாடக மாநிலம் அதன் நில அமைப்பு சார்ந்து மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன் கடற்கரை சார்ந்த பகுதிகள் கரவலி என்றும், மேற்கு தொடர்ச்சி மலைகளை சூழ்ந்து அமைந்திருக்கும் பகுதிகள் மலெநாடு என்றும், சமவெளிகள் பயலுசீமே என்றும் அழைக்கப்படுகின்றன.

இந்த மூன்று பிரிவுகளிலும் சேர்த்து மொத்தமுள்ள 30 மாவட்டங்களில் ஏராளமான சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றன. அதிலும் பயணத்தில் தீராத தாகம் கொண்ட சாகசப் பிரியர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும், இயற்கையின் அற்புதங்கள் மீது அமரக் காதல் கொண்டவர்களுக்கும் பிரத்யேகமாக எண்ணற்ற சுற்றுலா மையங்கள் கர்நாடகாவை சுற்றி அமைந்துள்ளன.

இப்படியாக பயணிகளின் சொர்க்க பூமியாக திகழும் கர்நாடகாவின் மிஸ் பண்ணக்கூடாத 25 இடங்கள் என்னென்னவென்று பார்ப்போம் வாருங்கள்.

மரவந்தே கடற்கரை

மரவந்தே கடற்கரை

கர்நாடகாவின் மிக அழகான கடற்கரைகளில் முக்கியமானதாக கருதப்படும் மரவந்தே கடற்கரை உடுப்பியிலிருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. இந்த வெள்ளை மணற்பரப்பை கொண்ட கடற்கரை ஸ்கூபா டைவிங், ஸ்நோர்கெல்லிங் போன்ற நீர் விளையாட்டுகளுக்காக மிகவும் பிரசித்தி பெற்றது. இது தவிர மரவந்தேவின் அமைதியான, ஆபத்தில்லாத கடலில் நீங்கள் நீந்தவும் செய்யலாம். அதோடு இங்கு வரும் பயணிகள் மரவந்தேவுக்கு அருகில் உள்ள சௌபர்ணிகா நதியின் கரையோரத்தில் அமைந்திருக்கும் கோயிலுக்கும் சென்று கடவுளை தரிசிக்கலாம்.

மரவந்தே ஹோட்டல் டீல்கள்

படம் : Riju K

தொட்ட ஆலத மர

தொட்ட ஆலத மர

கன்னட மொழியில் 'தொட்ட ஆலத மர' என்று அழைக்கப்படும் இந்த இராட்சஸ ஆலமரம் 400 ஆண்டுகள் பழமையானது. இந்த ஆலமரம் பெங்களூரின் கெட்டோஹள்ளி என்ற கிராமப்பகுதியில் 3 ஏக்ரா இடத்தை அடைத்துக்கொண்டு பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. இது 2000-ல் நோயினால் பாதிக்கப்பட்டு தற்போது பல்வேறு மரங்கள் போல் தோற்றமளிக்கிறது. பெங்களூர்வாசிகளுக்கு மிகச் சிறந்த பிக்னிக் ஸ்தலமாக திகழ்ந்து வரும் இந்த ஆலமரம் இருக்கும் இடத்திற்கு பெங்களூர் மெஜெஸ்டிக் பேருந்து நிலையத்திலிருந்தும், கே.ஆர். மார்க்கெட் பேருந்து நிலையத்திலிருந்தும் நிறைய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் சுற்றுலாத் துறை இந்த இடத்தில் பயணிகளின் வசதிக்காக ஒரு உணவகமும் ஏற்படுத்தியுள்ளது.

தடியாண்டமோல்

தடியாண்டமோல்

கூர்கிலிருந்து 37 கி.மீ தொலைவில் அமைந்துள்ள தடியாண்டமோல், கர்நாடக மாநிலத்தின் 3-வது உயரமான மலைச்சிகரமாகும். தடியாண்டமோல் எனும் இந்தப் பெயர் மலையாள மொழியிலிருந்து பிறந்துள்ள ஒரு சொல்லாகும். இதற்கு பெரிய மலை என்ற அர்த்தத்தை கொள்ளலாம். கடினமான மலையேற்றத்துக்கு தயக்கம் காட்டும் பயணிகள் பாதி தூரம் வரை வாகனத்தில் பயணிக்கலாம். இருப்பினும் மீத தூரத்தை மலையேற்றம் மூலமாக கடக்க வேண்டியிருக்கும். உச்சியில் ஏறிய பின் காணக்கிடைக்கும் காட்சி எல்லா சிரமங்களையும் மறக்க வைத்து விடும் என்பது உண்மை.

மேலும்...

படம் : Prashant Ram

யானைகள் பயிற்சி முகாம், துபாரே

யானைகள் பயிற்சி முகாம், துபாரே

கூர்கிலிருந்து 24 கி.மீ தொலைவில் துபாரே பகுதியில் அமைந்துள்ள யானைகள் பயிற்சி முகாமை நீங்கள் கூர்க் வரும் போது தவற விட்டுவிடக் கூடாது. இங்கு யானைகளை கொண்டு நடத்தப்படும் முகாம்கள் பயணிகளுக்கு நல்ல பொழுதுபோக்காக இருப்பதோடு, அவர்களுக்கு இந்த விலங்குகளை பற்றி தெரிந்து கொள்ளவும் ஒரு வாய்ப்பாக அமைகிறது. இதன் மூலம் யானைகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு எவ்வளவு அவசியம் என்பதை முகாம்களில் கலந்துகொள்ளும் மக்கள் நன்கு அறிந்து கொள்வார்கள். அதோடு யானைகளை எவ்வாறு பயிற்றுவிக்கிறார்கள் என்பதை கண்கூடாக பார்ப்பதுடன், பயணிகளே தங்கள் கைகளாலே யானைகளுக்கு உணவும் கொடுக்கலாம். அத்துடன் வனத்துறையினர் ஏற்பாடு செய்யும் யானைச் சவாரியிலும், பரிசல் பயணத்திலும் பயணிகள் மகிழ்ச்சியுடன் பொழுதை களிக்கலாம்.

மேலும்...

படம் :Potato Potato

பைலாகுப்பே

பைலாகுப்பே

பைலாகுப்பே என்பது இந்தியாவிலேயே தர்மஷாலாவிற்கு அடுத்தபடியாக 2-வது பெரிய திபெத்திய குடியேற்ற ஸ்தலமாகும். இது கூர்க் நகரிலிருந்து 52 கி.மீ தொலைவில் உள்ளது. பைலாகுப்பேயின் சிறப்பம்சம் இங்குள்ள தங்கக்கோயில் அல்லது ‘நம்ட்ரோலிங்' என்று அழைக்கப்படும் திபெத்திய மடாலயமாகும். இந்த திபெத்திய மடாலயத்தின் உள்ளே தங்க நிறத்தில் ஜொலிக்கும் பத்மசாம்பவா, புத்தா, அமிதாயுஸ் போன்ற சிலைகள் நுட்பமான அலங்கார வேலைப்பாடுகளுடன் பார்வையாளர்களை பிரமிப்பில் சொக்க வைக்கின்றன. அதோடு பூஜை முரசு, பூஜை சக்கரம் மற்றும் கதவுகள் யாவுமே நுட்பமான நேர்த்தியான கைவினைக்கலை வேலைப்பாடுகளை கொண்டுள்ளன.

படம் : Lingeswaran Marimuthukum

ஜோக் நீர்வீழ்ச்சி

ஜோக் நீர்வீழ்ச்சி

ஜோக் நீர்வீழ்ச்சி தங்கு தடையின்றி பாறைகளிலும், குன்றுகளிலும் வழிந்து ஓடி 830 அடி உயரத்திலிருந்து கீழே கொட்டும் அந்த கவின் மிகு காட்சியை காண உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பயணிகள் ஆண்டுதோறும் இங்கு வந்து செல்கிறார்கள். ஷராவதி நதியிலிருந்து உற்பத்தி ஆகும் ஜோக் நீர்வீழ்ச்சி ராஜா, ராணி, ராக்கெட், ரோவர் என்று நான்கு வேறுபட்ட பகுதிகளை கொண்டது. இந்த அருவி கர்நாடக தலைநகர் பெங்களூரிலிருந்து 401 கி.மீ தொலைவில் உள்ளது.

ஜோக் நீர்வீழ்ச்சி ஹோட்டல் டீல்கள்

படம் : Sarvagnya

செயிண்ட் மேரி தீவு

செயிண்ட் மேரி தீவு

கர்நாடகாவின் மங்களூர் நகரிலிருந்து 58 கி.மீ தொலைவில் உள்ள செயிண்ட் மேரி தீவு, தேங்காய் தீவு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. இது உடுப்பி மாவட்டத்தின் மால்பே கடற்கரைப் பகுதிகளில் அமைந்திருக்கும் நான்கு தீவுகளின் தொகுப்பாகும். இங்கு உள்ள தூண் போன்ற வடிவத்தில் காட்சி தரும் எரிமலை பாறைகள் பயணிகளிடையே மிகவும் பிரபலம். எனவே ஒரு புதுமையான கடற்கரையை கண்டு ரசிக்கும் ஆர்வமுள்ள பயணிகள் இந்த தீவுப்பகுதிக்கு தாராளமாக வரலாம்.

படம் : Man On Mission

சாசிவேகாலு கணேசா கோயில்

சாசிவேகாலு கணேசா கோயில்

கர்நாடகாவின் சரித்திர புகழ் வாய்ந்த ஹம்பி நகரத்தில் ஹேமகூட மலையடிவாரத்தில் சாசிவேகாலு கணேசா கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள விநாயகர் சிலை கடுகுகளினால் பூசப்பட்டது போல் தோன்றுவதால் கடுகு கணேசா (சாசிவேகாலு கணேசா) என்று அழைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. மேலும் அதிகம் உணவை உண்டு விட்ட விநாயகர் தன் வயிறு வெடித்துவிடாமல் இருக்க ஒரு பாம்பை எடுத்து தன் வயிற்றில் கட்டிக்கொண்டதாக ஐதீகக் கதைகள் கூறப்படுகின்றன. அதன் காரணமாக இந்த விநாயகர் சிலையின் வயிற்றில் ஒரு பாம்பை சுற்றியிருப்பது போன்று சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. 8 அடி உயரமுள்ள இந்த விநாயகர் சிலை ஒரே கல்லினால் உருவாக்கப்பட்டுள்ளது.

படம் : Jean-Pierre Dalbéra

நாகர்ஹொளே தேசியப் பூங்கா

நாகர்ஹொளே தேசியப் பூங்கா

கர்நாடகாவின் நாகர்ஹொளே பகுதியில் உள்ள நாகர்ஹொளே தேசியப் பூங்கா முன்னால் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவாக ராஜீவ் காந்தி தேசியப் பூங்கா என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு வரும் பயணிகள் தேனுண்ணுங் கரடி, கருஞ்சிறுத்தை, நான்கு கொம்புகள் உடைய இரலை மான்கள், காட்டுப் பன்றி, எறும்புத்திண்ணி, காட்டெருமை, புலிகள் உள்ளிட்ட விலங்குகளை கண்டு ரசிக்கலாம். அதோடு இங்கு மலைப்பாம்பு, முதலை, விரியன் பாம்புகள் போன்ற ஊர்வன வகைகளும் வசித்து வருகின்றன. இவைத்தவிர எண்ணற்ற பறவை இனங்களும் இங்கே காணப்படுகின்றன.

படம் : Dhruvaraj S

ஓம் பீச்

ஓம் பீச்

கர்நாடக மாநிலம் கோகர்ணாவில் ஓம் பீச் அமைந்துள்ளது. ஓம் என்ற எழுத்து வடிவில் இந்த கடற்கரை அமைந்துள்ளதால் இது ஓம் பீச் என்று அழைக்கப்படுகிறது. இங்கு பயணிகள் நீர்ச்சறுக்கு, படகுப்பயணம் போன்ற நீர் விளையாட்டுகளில் ஈடுபட வசதி உண்டு. அதுமட்டுமல்லாமல் அனுபவம் மிக்க பயிற்சியாளர்கள் துணையோடு பயணிகள் இவற்றில் ஈடுபடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

படம் : Rrevanuri

ஷிவனசமுத்ரா அருவி

ஷிவனசமுத்ரா அருவி

ஷிவனசமுத்ரா அருவி , பரச்சுக்கி மற்றும் ககனச்சுக்கி நீர்வீழ்ச்சி என்று இரண்டாக பிரிந்து காணப்படுகிறது. 200 அடி உயரத்திலிருந்து விழும் இந்த இரண்டு நீர்வீழ்ச்சிகளும் காவிரி ஆற்றில் கலக்கின்றன. இந்த இரட்டை நீர்வீழ்ச்சி இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய நீர்வீழ்ச்சியாகவும் உலகின் 100 முக்கிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகவும் விளங்கி வருகிறது. இது கர்நாடக தலைநகர் பெங்களூரிலிருந்து 135 கி.மீ தொலைவில் உள்ளது.

மைசூர் அரண்மனை

மைசூர் அரண்மனை

இந்தோ சராசனிக், திராவிடம், ரோமன் மற்றும் ஓரியண்டல் போன்ற எல்லா கட்டிடக்கலை அம்சங்களும் கலந்து மைசூர் அரண்மனை உருவாக்கப்பட்டுள்ளது. மூன்று அடுக்குகளை கொண்டு சாம்பல் நிற சலவைக் கற்களால் கட்டப்பட்டுள்ள இந்த அரண்மனையில் மூன்று இளம் சிவப்பு நிற குமிழ் கோபுரங்கள் காணப்படுகின்றன. இந்த அரண்மனையின் சுவர்களை பிரபல இந்திய ஓவியர்களான சித்தலிங்க சுவாமி, ராஜா ரவி வர்மா மற்றும் கே. வெங்கடப்பா போன்றோரின் ஓவியங்கள் அலங்கரிக்கின்றன. அதோடு இங்கு மரத்தால் ஆன ஒரு யானை சிலை 81 கிலோ தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு காணப்படுகிறது. இப்படி கலைப்பொக்கிஷமாக திகழும் மைசூர் அரண்மனையில் பொதுவாக எல்லா நாட்களிலும் வெளிநாட்டவர் கூட்டம் காணப்பட்டாலும், தசரா திருவிழாவின்போது வெளிநாட்டவர் இங்கு அதிக அளவில் வந்து செல்கின்றனர்.

அகும்பே

அகும்பே

கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள அகும்பே, தலைநகர் பெங்களூரிலிருந்து 357 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. அழகும், அமைதியும் ஒருங்கே சூழப்பெற்ற அகும்பேதான் தென் இந்தியாவிலேயே அதிகமாக மழை பெய்யும் இடமாகும். அதோடு அகும்பேவின் காடுகள் ராஜநாகத்துக்கும், பல்வேறு கொடிய பாம்புகளுக்கும் வாழ்விடமாக இருந்து வருகிறது.

நந்தி ஹில்ஸ்

நந்தி ஹில்ஸ்

பெங்களூரிலிருந்து 61 கி.மீ தொலைவில், சிக்கபள்ளாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள நந்தி ஹில்ஸ், பெங்களூர்வாசிகளின் விருப்பமான பிக்னிக் ஸ்தலமாக திகழ்ந்து வருகிறது.

படம் : pulikken

தாண்டேலி வனவிலங்கு சரணாலயம்

தாண்டேலி வனவிலங்கு சரணாலயம்

கர்நாடகாவின் 2-வது மிகப்பெரிய வனவிலங்கு சரணாலயமாக அறியப்படும் தாண்டேலி வனவிலங்கு சரணாலயம், தலைநகர் பெங்களூரிலிருந்து 462 கி.மீ தொலைவில் உத்தர கன்னடா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த சரணாலயம் கருஞ்சிறுத்தை போன்ற சில அரிய வகை விலங்குகள் வசிக்கும் வனப்பகுதியாக திகழ்கிறது. அதோடு குரைக்கும் மான், சாம்பார் மான், புள்ளி மான் போன்ற விலங்கினங்களும், 200 வகையான பறவை இனங்களும் இங்கு வசிக்கின்றன.

படம் : Cburnett

சிக்மகளூர்

சிக்மகளூர்

கர்நாடக மாநிலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளின் அழகிய தோற்றங்களுக்கு சொந்தமான மலேநாடு பகுதியில் அமைந்துள்ள சிக்மகளூர் நகரம், இயற்கை எழிற்காட்சிகள் நிரம்பிய அட்டகாசமான சுற்றுலாத் தலமாகும்.

சிக்மகளூர் ஹோட்டல் டீல்கள்


படம் : Premnath Thirumalaisamy
https://www.flickr.com/photos/premnath/6191866876

முருதேஸ்வர் ஆலயம்

முருதேஸ்வர் ஆலயம்

உலகத்திலேயே 2-வது பெரிய சிவன் சிலையை தன்னகத்தே கொண்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த முருதேஸ்வர் ஆலயம், கர்நாடகாவின் மேற்கு கடற்கரையோரம் முருதேஸ்வர் நகரில் அமைந்துள்ளது.

படம் : Lucky vivs

அப்பே நீர்வீழ்ச்சி

அப்பே நீர்வீழ்ச்சி

கூர்க் நகரிலிருந்து 23 கி.மீ தொலைவில் உள்ள அப்பே நீர்வீழ்ச்சி அடர்த்தியான காபி மற்றும் ஏலக்காய் தோட்டங்களின் வழி செல்லும் ஒரு குறுகிய பாதையின் முடிவில் திடீரென்று தோன்றி நம்மை திடுக்கிட வைக்கின்றது. இந்த நீர்வீழ்ச்சியை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்க வசதியாக ஒரு தொங்கு பாலம் ஒன்று அருவிக்கு திரில் அமைக்கப்பட்டுள்ளது. அதோடு பாலத்தின் மறுபுறத்தில் அமைந்துள்ள காளி மாதா கோயிலும் பயணிகள் தவறாமல் பார்க்க வேண்டிய இடமாகும்.

படம் : Gopal Vijayaraghavan

தலைக்காவேரி

தலைக்காவேரி

தலைக்காவேரி இந்துக்களின் முக்கியமான புனித யாத்ரீக ஸ்தலமாக விளங்குகிறது. பிரம்மகிரி மலையின் மீது கடல் மட்டத்திலிருந்து 1276 மீ உயரத்தில் உள்ள இந்த ஸ்தலம் காவேரி ஆறு உற்பத்தி ஆகும் இடமாக கருதப்படுகிறது. காவேரி பிறந்த இடமாக கருதப்படும் இடத்தில் தற்போது ஒரு குளம் (தீர்த்தவாரி) அமைந்துள்ளது. இந்த குளத்திற்கான நீரை கொண்டு வரும் சிறு பொய்கையாக காவேரி பிறக்கின்றது. பின்னர் அது தரைக்கடியில் கீழிறங்கி வெகு தூரத்திற்கப்பால் காவேரி எனும் ஆறாக வெளிப்படுகிறது. புனிதமான இந்த காவேரி தீர்த்தவாரியில் சுப தினங்களில் மூழ்கி எழுந்தால் எல்லா துன்பங்களும் பறந்தோடும் என்பது ஐதீகமாகும்.

மால்பே கடற்கரை, மால்பே

மால்பே கடற்கரை, மால்பே

உடுப்பியிலிருந்து 6 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள மால்பே கடற்கரை ஒரு மீன்பிடி துறைமுகமாகவும் விளங்குகிறது. எனவே இந்தக் கடற்கரையிலிருந்து பார்த்தால் மால்பே கப்பல் கட்டும் தளமும் காட்சிக்கு தெரிகின்றது. இந்த கடற்கரைப் பகுதியில் படகுச்சவாரி, தூண்டில் மீன் பிடித்தல், அலைச்சறுக்கு விளையாட்டு, போன்ற பல வகையான பொழுதுபோக்கு அம்சங்கள் சுற்றுலாப் பயணிகளுக்காக காத்திருக்கின்றன.

மால்பே ஹோட்டல் டீல்கள்

படம் : Neinsun

ஹாசனாம்பா கோயில்

ஹாசனாம்பா கோயில்

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் நகரத்தில் அமைந்திருக்கும் ஹாசனாம்பா கோயில் ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் மட்டுமே பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்காக திறந்துவிடப்படுகிறது. புராணக் கூற்றின் படி சப்த (ஏழு) கன்னியர்களான பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி ஆகியோர் காசியிலிருந்து ஹாசன் நகரத்துக்கு வந்துள்ளனர். அதன் பின்னர் 3 கன்னியர் புத்து வடிவிலும், கெஞ்சம்மா என்ற பெயரில் கோட்டையாக ஒருவரும், தேவகரே என்ற குளத்தினடியில் மூன்று கிணறுகளாக 3 கன்னியர்களும் கோயில் மற்றும் அதைச் சுற்றிலும் தங்கி ஹாசன் நகர மக்களுக்கு அருள் பாலித்து வருவதாக நம்பப்படுகிறது.

குதுரேமுக்

குதுரேமுக்

கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டத்தைச் சேர்ந்த குதுரேமுக் மலைவாசஸ்தலம், மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் அமையப்பெற்றுள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாகும். இந்த மலைவாசஸ்தலம் அடர்ந்த காடுகள், அருவிகள், ஆறுகள் என அற்புதமான சுற்றுலா அனுபவத்தை பயணிகளுக்கு வழங்கி வருகிறது. ஊட்டி, கொடைக்கானல் என்று பார்த்த இடங்களையே பார்த்து பார்த்து அலுத்துப்போனவர்களுக்கு குதுரேமுக் முற்றிலும் வித்தியாசமான அனுபவத்தைத் தரும்.

படம் : solarisgirl

சோம்நாத்பூர் கோயில்

சோம்நாத்பூர் கோயில்

சோம்நாத்பூர் கோயில் கர்நாடக மாநிலத்தின் மைசூர் நகருக்கு அருகில் உள்ள சோம்நாத்பூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் மூலவராக விஷ்ணு பகவான் 'பிரசன்ன சென்ன கேசவப் பெருமாள்' என்ற பெயரில் வீற்றிருக்கிறார். 'சென்ன' என்றால் கன்னடத்தில் அழகு என்று பொருள். இது ஹொய்சாள மன்னன் மூன்றாம் நரசிம்ம மன்னனின் தளபதியான சோமநாதன் என்பவரால் கி.பி. 1268 இல் கட்டப்பட்டது. அதன் காரணமாகவே இக்கோயில் உள்ள ஊர் அவர் பெயரால் சோம்நாத்பூர் என்று அழைக்கப்படலாயிற்று.

பந்திப்பூர் தேசிய பூங்கா

பந்திப்பூர் தேசிய பூங்கா

கர்நாடக மாநிலத்தின் மிகப்பெரிய தேசிய பூங்காக்களில் ஒன்றான பந்திப்பூர் தேசிய பூங்கா 800 ச.கி.மீ பரப்பளவு கொண்டது. இங்கு புலிகள், நான்கு கொம்பு மான், ராட்சத அணில், யானை, அரிவாள் மூக்கன், காட்டுப்பன்றி, சிறுத்தை, கரடி மற்றும் காட்டெருமை போன்ற விலங்குகள் வசித்து வருகின்றன. இவைத்தவிர ஒரு சில புகலிடப்பறவைகள் மற்றும் காட்டுப்பறவைகளையும் இங்கு கண்டு ரசிக்க முடியும்.

படம் : Yathin S Krishnappa

சென்னக்கேசவா கோயில்

சென்னக்கேசவா கோயில்

ஹொய்சளப் பேரரசின் தலைநகரமாக விளங்கிய பேலூரில் சென்னக்கேசவா கோயில் அமைந்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் முக்கிய விஷ்ணு ஆலயங்களில் ஒன்றாக, 'விஜயநாராயணர் கோயில்' என்று முன்னர் அழைக்கப்பட்ட சென்னக்கேசவா கோயில் திகழ்கிறது. 'சென்னக்கேசவா' என்பதற்கு கன்னடத்தில் 'அழகிய கேசவா' என்று பொருள்படும். இந்தக் கோயில் பெங்களூரிலிருந்து 220 கீமீ தொலைவில் அமைந்துள்ளது.

படம் : Dineshkannambadi

More News

Read more about: கர்நாடகா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+