Search
  • Follow NativePlanet
Share
» »கேரளாவின் 26 சுற்றுலாத் தலங்கள்! - ஒரு ஃபுல் ரவுண்ட் அப்

கேரளாவின் 26 சுற்றுலாத் தலங்கள்! - ஒரு ஃபுல் ரவுண்ட் அப்

லேட்டஸ்ட்: ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயிலின் கருவறை மர்மங்கள் பற்றி தெரியுமா?

நேஷனல் ஜாக்ரஃபிக்கின் 'டிராவலர்' பத்திரிக்கையில் 'உலகின் பத்து அற்புதங்கள்' , 'வாழ்நாளில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 50 சுற்றுலாத் தலங்கள்' மற்றும் '21-ஆம் நூற்றாண்டின் 100 சிறந்த பயணங்கள்' ஆகிய தலைப்புகளில் கேரளா குறிப்பிடப்பட்டு போற்றப்பட்டுள்ளது.

இந்த கோடையில் டாப் 7 சிறந்த பட்ஜெட் சுற்றுலா செல்வோமா?

கேரள கடற்கரைகளில் வரிசையாக அமைந்திருக்கும் தென்னை மற்றும் பனைமரங்களையும், அழகும் அமைதியும் நிரம்பிய உப்பங்கழிகளில் மிதக்கும் படகு இல்லங்களையும், எண்ணற்ற கோயில்களையும், ஆயுர்வேதத்தின் அற்புதத்தையும், வளமை குன்றா ஏரிகள் மற்றும் குளங்களையும், கவின் கொஞ்சும் தீவுகளையும் நீங்கள் கேரளாவை தவிர உலகில் வேறெங்கும் பார்த்திட முடியாது.

வயநாடு

வயநாடு

எங்கு திரும்பி நோக்கினாலும் கண்களுக்கு அலுக்காத காட்சிகளை சுற்றுலாப்பயணிகள் வயநாட்டில் தரிசிக்கலாம். மேற்குத்தொடர்ச்சி மலையின் பசுமையான மலைகளுக்கிடையே அமைந்துள்ள இந்த வயநாடு பகுதிக்கு வெகு தொலைவிலிருந்து கூட சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர்.

வயநாட்டின் சுற்றுலாத் தலங்கள்

வயநாடு ஹோட்டல் டீல்கள்

படம் : Sarath Kuchi

கல்பெட்டா

கல்பெட்டா

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் பிராமண்டமும், பேரழகும் வாய்ந்த மலைகள் சூழ, காப்பித் தோட்டங்களிலிருந்து காற்றில் மிதந்து வரும் நறுமணம் எங்கும் நிறைந்திருக்க மனதை மயக்கும் சுற்றுலாத் தலமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது கல்பெட்டா நகரம்.

கல்பெட்டாவின் சுற்றுலாத் தலங்கள்

கல்பெட்டா ஹோட்டல் டீல்கள்

படம் : Sankara Subramanian

திருவனந்தபுரம்

திருவனந்தபுரம்

தேசப்பிதா மஹாத்மா காந்தி அவர்கள் இந்நகரத்தை ‘என்றும் பசுமை மாறா நகரம் ‘ என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியாவிலுள்ள 10 பசுமையான நகரங்களில் ஒன்றாக திருவனந்தபுரம் குறிப்பிடப்படுகிறது.

திருவனந்தபுரத்தின் சுற்றுலாத் தலங்கள்

திருவனந்தபுரம் ஹோட்டல் டீல்கள்

படம் : Thejas Panarkandy

கண்ணூர்

கண்ணூர்

மேற்குத்தொடர்ச்சி மலைகளுக்கும், அரபிக்கடலுக்கும் இடையில் பொதிந்துள்ள கண்ணூர் பிரதேசமானது நிரம்பி வழியும் இயற்கை எழிலையும், தனித்தன்மையான பாரம்பரிய கலாச்சார இயல்பையும் கொண்டு விளங்குகிறது.

கண்ணூரின் சுற்றுலாத் தலங்கள்

கண்ணூர் ஹோட்டல் டீல்கள்

படம் : AnnaKika

சபரிமலை

சபரிமலை

மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்த்தியான காடுகள் நிரம்பிய பகுதியில் வீற்றிருக்கும் சபரிமலை பசுமையான இயற்கை, சலசலவென்றோடும் ஓடைகள் மற்றும் வளைந்து நெளிந்து ஓடும் பம்பா நதி ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.

சபரிமலையில் பார்க்க வேண்டியவை

படம் : Natesh Ramasamy

கோவளம்

கோவளம்

கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்துக்கு அருகில் 16 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள பிரபலமான கடற்கரை சுற்றுலாத்தலம் இந்த ‘கோவளம்' ஆகும். கோவளம் எனும் பெயருக்கு மலையாள மொழியில் ‘தென்னந்தோப்பு பகுதி' என்பது பொருளாகும். பெயருக்கேற்றப்படியே இக்கடற்கரைப்பகுதியில் ஏராளமான தென்னந்தோப்புகள் காணப்படுகின்றன.

கோவளத்தின் சுற்றுலாத் தலங்கள்

கோவளம் ஹோட்டல் டீல்கள்

படம் : Mehul Antani

திரிசூர்

திரிசூர்

வெறும் பொழுதுபோக்கு சுற்றுலா எனும் தேடலுக்கு அப்பாற்பட்டு உயிரோட்டம் நிரம்பிய ஒரு பாரம்பரிய ஸ்தலத்துக்கு விஜயம் செய்ய விரும்பினால் நீங்கள் தயங்காமல் திரிசூர் நகரத்தை தேர்வு செய்யலாம்.

திரிசூரின் சுற்றுலாத் தலங்கள்

திரிசூர் ஹோட்டல் டீல்கள்

படம் : Ramesh NG

குமரகம்

குமரகம்

உப்பங்கழி கால்வாய்கள் மற்றும் நீர்த்தேக்கத்தில் இயங்கும் பாரம்பரிய படகுச்சுற்றுலா அம்சங்களுக்காக சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ள குமரகம், இயற்கைக்காட்சிகள் நிரம்பி வழியும் ஒரு தீவுக்கூட்டமாகும்.

குமரகத்தின் சுற்றுலாத் தலங்கள்

குமரகம் ஹோட்டல் டீல்கள்

படம் : Sarath Kuchi

குருவாயூர்

குருவாயூர்

மஹாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீகிருஷ்ண பஹவானின் உறைவிடமாக இந்த குருவாயூர் நகரம் புகழ்பெற்று விளங்குகிறது.

குருவாயூரின் சுற்றுலாத் தலங்கள்

குருவாயூர் ஹோட்டல் டீல்கள்

படம் : Pyngodan

வர்கலா

வர்கலா

கேரளாவில் கடலுக்கு வெகு அருகிலேயே மலைகள் காட்சியளிக்கும் ஒரே இடமாக அறியப்படும் வர்கலா, திருவனந்தபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

வர்கலாவின் சுற்றுலாத் தலங்கள்

வர்கலா ஹோட்டல் டீல்கள்

படம் : Thejas Panarkandy

மூணார்

மூணார்

கேரளாவின் முதன்மையான ஹனிமூன் ஸ்தலமாகவும், இந்தியாவின் மிகவும் பிரபலமான ஹனிமூன் ஸ்தலங்களில் ஒன்றாகவும் மூணார் மலைப்பிரதேசம் திகழ்ந்து வருகிறது. இதன் ஆர்பரிக்கும் அருவிகள், பசுமையான மலைகள், பச்சை தேயிலை தோட்டங்கள் என்று அனைத்துமே காதலர்களுக்காக படைக்கப்பட்டது போலவே அவ்வளவு ரம்மியமாக இருக்கும்.

மூணாரின் சுற்றுலாத் தலங்கள்

மூணார் ஹோட்டல் டீல்கள்

படம் : Bimal K C

சோட்டாணிக்கரா

சோட்டாணிக்கரா

கேரளாவின் முக்கிய புண்ணிய ஷேத்திரங்களில் ஒன்றான சோட்டாணிகராவில் வருடந்தோறும் ஏராளமான யாத்ரீகர்கள் குவிகின்றனர். சாந்தமும் தெய்வீகமும் தவழும் சோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோயில் ஸ்தலமானது ஆன்மீக நிம்மதியை தேடிவரும் பக்தர்களை புத்துணர்வு பெறவைத்து திரும்ப வைக்கிறது.

சோட்டாணிக்கராவின் சுற்றுலாத் தலங்கள்

படம் : RoninMax

பத்தனம்திட்டா

பத்தனம்திட்டா

பத்தனம்திட்டா மாவட்டம் அதன் படகுப் போட்டிகள், ஆலயங்கள் மற்றும் கலாச்சார பயிற்சி மையத்துக்காக புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகிறது. அதோடு இந்தியா முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆண்டு தோறும் கூட்டம் கூட்டமாக வந்து செல்லும் சபரிமலை, பத்தனம்திட்டா மாவட்டத்தில்தான் அமைந்திருக்கிறது.

பத்தனம்திட்டாவின் சுற்றுலாத் தலங்கள்

படம் : Naveen Thomas Prasad

பேக்கல்

பேக்கல்

கேரளாவின் காசர்கோட் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சிறிய நகரமான பேக்கல், அமைதியின் இருப்பிடமாய் பள்ளிக்கரா பகுதியில், அரபிக் கடலின் கரையோரத்தில் காட்சியளித்துக்கொண்டிருக்கிறது.

பேக்கலின் சுற்றுலாத் தலங்கள்

பேக்கல் ஹோட்டல் டீல்கள்

படம் : Renjith Sasidharan

தேவிகுளம்

தேவிகுளம்

கேரளாவின் பிரசித்திபெற்ற மலைவாசஸ்தலமான தேவிகுளம், களகளவென்று ஓசையெழுப்பி குன்றுகளின் உச்சியிலிருந்து ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகளும், அவற்றை சூழ்ந்து பச்சை கம்பளம் விரித்தது போல காட்சியளிக்கும் பசும்புல் நிலங்களும் புடைசூழ சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமியாக திகழ்ந்து வருகிறது.

தேவிகுளத்தின் சுற்றுலாத் தலங்கள்

படம் : Manoj CB

ஆலப்புழா

ஆலப்புழா

'கடவுளின் சொந்த தேசம்' என்று கேரளாவை ஏன் அழைக்கிறார்கள் என்று ஆலப்புழா வந்தால் புரிந்துகொள்ளலாம். ஏனெனில் மனம் மயக்கும் உப்பங்கழியில் உங்கள் மனம் விரும்பும் ஒருவருடன் படகு இல்லங்களில் செல்வதும், ஓடைகளுக்கு நடுவே வீற்றிருக்கும் ரம்மியமான பசுமை போர்த்திய சோலைகளும் என இனிமையான அனுபவங்கள் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கின்றன.

ஆலப்புழாவின் சுற்றுலாத் தலங்கள்

ஆலப்புழா ஹோட்டல் டீல்கள்

படம் : Ajith

கொட்டாரக்கரா

கொட்டாரக்கரா

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சிறிய நகரமான கொட்டாரக்கரா, அரண்மனைகள் மற்றும் கோயில்களுக்காக மிகவும் புகழ்பெற்றது. அதோடு கதக்களி நடனம் உருவான இடமாக அறியப்படும் கொட்டாரக்கரா நகரம், கேரளாவின் நவீன கலாச்சார வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கிறது.

கொட்டாரக்கராவின் சுற்றுலாத் தலங்கள்

படம் : ഭൂമിക

தேன்மலா

தேன்மலா

திருவனந்தபுரத்திலிருந்து 70 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள தேன்மலா, இந்தியாவிலேயே முதன்முதலாக ‘சூழலியல் சுற்றுலாத்திட்டம்' (Eco Tourism) நிறைவேற்றப்பட்டுள்ள இடமாக அறியப்படுகிறது. தேன்மலா நகரம் பலவிதமான அற்புத மூலிகைத்தாவரங்களுக்கும், தேனுக்கும் புகழ் பெற்று விளங்குகிறது.

தேன்மலாவின் சுற்றுலாத் தலங்கள்

படம் : Akhil S Unnithan

கொச்சி

கொச்சி

மக்களின் தேவைக்கேற்ப, நவீனம் மற்றும் பாரம்பரியம் இரண்டுமே கலந்து கொச்சி நகரம் காட்சியளிக்கிறது. ரசனையில் வேறுபட்ட ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒன்று கொச்சியில் இருக்கிறது.

கொச்சியின் சுற்றுலாத் தலங்கள்

கொச்சி ஹோட்டல் டீல்கள்

படம் : Jorge Royan

இடுக்கி

இடுக்கி

உலகிலேயே 2-வது பெரிய வில்லணை (வில் போன்ற வளைவுத் தடுப்பை கொண்ட அணை) இடுக்கி மாவட்டத்தில்தான் அமைந்துள்ளது. அதோடு குளமாவு மற்றும் செருதோணி ஆகிய அணைகளும் இடுக்கியின் அழகை மெருகேற்றுகின்றன. சொக்க வைக்கும் இயற்கைக்காட்சிகளை பின்னணியாக கொண்டு வீற்றிருக்கும் இந்த அணைப்பகுதிகள் அவசியம் கண்டு மகிழ வேண்டிய அம்சங்களாகும்.

இடுக்கியின் சுற்றுலாத் தலங்கள்

இடுக்கி ஹோட்டல் டீல்கள்

தேக்கடி

தேக்கடி

கேரளா-தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களின் எல்லைப்பகுதியில் அமைந்திருப்பதால் கதம்பமான பாரம்பரியம் மற்றும் கலாச்சார அடையாளத்துடன் தேக்கடி காட்சியளிக்கிறது.இங்குள்ள தேக்கடி காட்டுயிர் சரணாலயம் இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலாப்பயணிகள் தேடி வரும் அளவுக்கு பிரசித்தி பெற்றிருப்பது பெருமைக்குரிய விஷயமாகும்.

தேக்கடியின் சுற்றுலாத் தலங்கள்

தேக்கடி ஹோட்டல் டீல்கள்

படம் : Liji Jinaraj

கொல்லம்

கொல்லம்

‘கொல்லம் கண்டவர் இல்லம் திரும்பார்' என்று அந்நாளில் ஒரு மலையாளப்பழமொழி உண்டு. அதாவது கொல்லம் நகருக்கு விஜயம் செய்யும் ஒருவர் அந்த அளவுக்கு அதன் கலாச்சாரம் மற்றும் செழிப்பில் மயங்கி விடுவார் என்பது அதன் பொருள்.

கொல்லத்தின் சுற்றுலாத் தலங்கள்

கொல்லம் ஹோட்டல் டீல்கள்

படம் : Thangaraj Kumaravel

கோட்டயம்

கோட்டயம்

கேரள அச்சு ஊடகத்துறை மற்றும் இலக்கிய செயல்பாடுகளின் பிரதான கேந்திரமாக விளங்குவதால் ‘அக்ஷர நகரி' (எழுத்துக்களின் நகரம்) எனும் சிறப்புப்பெயரை ‘கோட்டயம்' நகரம் பெற்றுள்ளது.

கோட்டயத்தின் சுற்றுலாத் தலங்கள்

கோட்டயம் ஹோட்டல் டீல்கள்

படம் : Prasad Pillai

தலச்சேரி

தலச்சேரி

இந்தியாவில் சர்க்கஸ், கிரிக்கெட் மற்றும் கேக் தயாரிப்பு போன்றவை தோன்றிய பிரதேசமாக தலச்சேரி நகரம் வரலாற்றில் இடம் பெற்றுள்ளது.

தலச்சேரியின் சுற்றுலாத் தலங்கள்

தலச்சேரி ஹோட்டல் டீல்கள்

கோழிக்கோடு

கோழிக்கோடு

கோழிக்கோடு நகரத்திலிருந்து 18 கி.மீ தூரத்தில் உள்ள கப்பட் கடற்கரையில்தான் வாஸ்கோடகாமா முதன் முதலாக 1498-ஆம் ஆண்டு இந்திய மண்ணில் கால் பதித்ததாக சொல்லப்படுகிறது. அந்த இடத்தில் ஒரு ஞாபகச்சின்னம் அமைக்கப்பட்டு சுற்றுலாப்பயணிகள் அதிகம் விஜயம் செய்யும் ஒரு ஸ்தமாகவும் அது பிரசித்தி பெற்றுள்ளது.

கோழிக்கோடு சுற்றுலாத் தலங்கள்

கோழிக்கோடு ஹோட்டல் டீல்கள்

படம் : Shabeer MP

அதிரப்பள்ளி

அதிரப்பள்ளி

திருச்சூரிலிருந்து 60 கி.மீ தொலைவிலும், கொச்சியிலிருந்து 70 கி.மீ தூரத்திலும் அதிரப்பள்ளி கிராமம் அமைந்துள்ளது. புகழ்பெற்ற அதிரப்பள்ளி அருவியோடு வழச்சல் மற்றும் சர்ப்பா என்ற துணை அருவிகளும் சேர்ந்து மொத்தம் மூன்று அருவிகள் அதிரப்பள்ளி கிராமத்தின் எழில்களாக வீற்றிருக்கின்றன.

அதிரப்பள்ளியின் சுற்றுலாத் தலங்கள்

படம் : Iriyas

Read more about: கேரளா
இந்தியாவின் மாபெரும் அரசியல் கருத்துக் கணிப்பு.. நீங்கள் பங்கேற்றீர்களா?

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more