» »இதைமட்டும் திறந்தால் ஒரே இரவில் உலக கோடிஸ்வரன் நீங்கள்தான் தெரியுமா?

இதைமட்டும் திறந்தால் ஒரே இரவில் உலக கோடிஸ்வரன் நீங்கள்தான் தெரியுமா?

Posted By: Staff

அதிகம் படித்தவை: ஹொகேனக்கல் அருவிக்கு ஒரு த்ரில் சுற்றுலா!!

அள்ள அள்ள பணம். நகைகள், விலையுயர்ந்த பொருள்கள்.... அரசர்களின் விலைமதிப்பற்ற சொப்பனங்களை கொண்ட ஒரு கோயில்.. மதிப்பில் பல லட்சம் கோடி ரூபாய் பெரும் என கணக்கிடப்பட்ட அந்த கோயில் எது தெரியுமா?

கேரளத் தலைநகர் திருவனந்தபுரம் நகரின் மையத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பத்மநாபசாமி கோயில், திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் நிர்வாகத்தின் கீழ் இன்றும் இருந்து வரும் இந்த கோயில் தோண்ட தோண்ட மர்ம முடிச்சுகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.. 

இங்கு பள்ளிகொண்டிருக்கும் விஷ்ணு பகவான் அனந்த சயன நிலையில் தோற்றமளிப்பதால் 'ஸ்ரீ அனந்த பத்மனாபசுவாமி கோயில்' என்ற பெயரிலும் இது அழைக்கப்படுகிறது. சரி அந்த மர்மங்களை ஒவ்வொன்றாக பார்க்கலாமா?

தீயில் கருகிய கோயில் அடித்தது அதிர்ஷ்டம்

தீயில் கருகிய கோயில் அடித்தது அதிர்ஷ்டம்

தீயில் கருகிய கோயில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு திருவிதாங்கூர் மன்னர்களின் வம்சத்திற்கு அடித்தது அதிர்ஷ்டம் என்றே கூறலாம்..

100000000000 இது எவ்வளவு மதிப்பென்று கணக்கிடுங்கள்....

படம் : Manu Jha

ஒன்றல்ல இரண்டல்ல 10000000000

ஒன்றல்ல இரண்டல்ல 10000000000

ஒன்றல்ல இரண்டல்ல பத்துக்கும் மேற்பட்ட லட்ச கோடிகளில் மதிப்புள்ள பொருள்கள். இத்தனைக்கும் திருவிதாங்கூர் சமஸ்தானம் ஒன்றும் அவ்வளவு பெரியதல்ல..

படம் : Ashcoounter

வலம்புரி சங்கு முத்திரை

வலம்புரி சங்கு முத்திரை

இறைவனின் முத்திரையாக விளங்கிய வலம்புரி சங்கு திருவிதாங்கூர் அரசின் முத்திரையாகவும், பிறகு கேரள அரசின் முத்திரையாகவும் வெகு நாட்களுக்கு புழக்கத்தில் இருந்து வந்தது.

இந்த சங்கிலும் சில மர்மங்கள் இருப்பதாகவும், இத்தனை வருடங்கள் எப்படி பாதுகாக்கப்பட்டது என்று புரியவில்லை என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்

படம் : Deepuleander

எல்லாமே தங்கம்தான்!

எல்லாமே தங்கம்தான்!

ஸ்ரீ பத்மனாபரின் விக்ரகம், முகம் மற்றும் மார்பைத் தவிர்த்து அனைத்து பாகங்களும் தங்கத்தால் ஆனவையாகும்.

படம் : Aravind Sivaraj

அடி 100 ?

அடி 100 ?

ஸ்ரீ பத்மநாபசாமி கோயிலின் கோபுரம் 100 அடி உயரத்துடன், ஏழு வரிசைகளைக் கொண்டுள்ளது. இந்த கோபுரம் வழமையான சிவாலயங்களில் இருக்கும் கூர்வடிவக் கோபுரம் போலல்லாது, பாதி நறுக்கப்பட்ட தோற்றத்தில் அகலப்படுத்தப்பட்ட கூம்பு வடிவில் காட்சியளித்துக்கொண்டிருக்கிறது.

படம் : Manveechauhan

நீண்ட தாழ்வாரம்

நீண்ட தாழ்வாரம்

இந்தக் கோயில் வளாகத்தில் காணப்படும் தாழ்வாரம், கருங்கல்லில் செதுக்கிய தூண்கள் கொண்டதாகும். இங்கே காணப்பெறும் '௩௬௫' மற்றும் ஒரு கால் கருங்கல் தூண்கள் அனைத்தும் அழகிய மற்றும் நேர்த்தியான சிற்பங்களால் மனம் கவரும் வகையில் அலங்காரத்துடன் அமைக்கப்பெற்றதாகும். இத்தாழ்வாரம் கிழக்குப்புறத்தில் அமைந்துள்ள கோயில் வாசலில் துவங்கி கோயிலின் கர்பக்கிரகம் வரைக்கும் நீண்டதாக காணப்படுகிறது.

படம் : Rainer Haessner

மலையாள மாதங்களில் அப்படி ஒரு விசேசம்

மலையாள மாதங்களில் அப்படி ஒரு விசேசம்

கோயில் கோபுரத்தின் கீழ்த்தளம், நாடக சாலை என அறியப்படுகிறது. இங்கே ஆண்டுதோறும் மலையாள மாதங்களான மீனம் மற்றும் துலாம் மாதங்களில் பத்து நாட்களுக்கு விமரிசையாக நடைபெறும் திருவிழாக் காலங்களில் கதகளி போன்ற நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

படம் : Joseph Lazer

கொடிக்கம்பம்

கொடிக்கம்பம்

தாழ்வாரத்தின் முதன்மை வாசலில் இருந்து 'பிரகாரத்தின்' முன் 80 அடி உயரமான கொடிக்கம்பம் காணப்படுகிறது.

படம் : Aravind Sivaraj

அனந்த சயனம்

அனந்த சயனம்

கோயிலின் கர்பக்கிரகத்தில் மகாவிஷ்ணு, அனந்தன் அல்லது ஆதிசேஷன் எனும் நாகப்பாம்பின் மீது சயனித்திருக்கும் நிலையில் பள்ளி கொண்டுள்ளார். மேலும் மகா விஷ்ணுவின் இரு தேவிகளான ஸ்ரீ தேவி மற்றும் பூதேவி, அவருடைய இரு பாகங்களிலும் வீற்றிருக்க, பிரம்மதேவன் மகா விஷ்ணுவின் நாபியில் இருந்து வரும் தாமரை மலரில் வீற்றிருப்பதை நாம் காணலாம்.

படம் : Aravind Sivaraj

12008 சாலிக்கிராமங்கள்

12008 சாலிக்கிராமங்கள்

சயன ரூபத்தில் காணப்படும் மகா விஷ்ணுவின் விக்ரகம் 12008 சாலிக்கிராமங்களினால் வடிவமைத்ததாகும். நேபாளத்தில் உள்ள புனித நதியான கண்டகி நதியின் கரைகளில் இருந்து மிகவும் கவனமாக இந்த சாலிக்கிராமங்களை பக்தியுடன் தேர்வு செய்து, பின்னர் பூஜை மற்றும் வழிபாடுகளுடன் யானையின் மீது வைத்து அலங்கரித்து திவ்ய ஆராதனையுடன் கொண்டு வரப்பட்டதாகும்.

படம்

ஒற்றைக்கல் மண்டபம்

ஒற்றைக்கல் மண்டபம்

கோயிலின் கர்பக்கிரகம் ஒரே கருங்கல்லால் செதுக்கப்பட்டிருப்பதால் "ஒற்றைக்கல் மண்டபம்" என்று அழைக்கப்படுகிறது. இறைவரின் தரிசனம் கிடைப்பதற்கும் மற்றும் இறைவனை பூஜை செய்து வழிபடுவதற்கும், நாம் ஒற்றைக்கல் மண்டபத்தின் மீது ஏறவேண்டும்.

படம் : Ks.mini

பலவகை பிரசாதங்கள்

பலவகை பிரசாதங்கள்

இரத்தினக் கற்கள் இழைத்த தங்கப் பாத்திரத்தில் படைக்கப்படும் நைவேத்யமான இரத்தின பாயாசம். மேனி துலா பாயாசம் எனப்படும் அரிசி மற்றும் வெல்லத்தால் செய்த சர்க்கரைப் பொங்கல், ஒற்றை துலா பாயாசம், பந்தரனு கலப் பாயாசம், பால் பாயாசம் ஆகிய பாயாச வகைகள் பத்மநாபசாமி கோயிலில் பிரசாதங்களாக படைக்கப்படுகின்றன. ஆனால் இந்தக் கோயிலின் சிறப்பான நைவேத்யமாக அறியப்படும் உப்பு மாங்காய், ஒரு தங்கத்தால் பூசப்பட்ட சிரட்டை அல்லது தேங்காய் ஓடில் வழங்கப்படுகிறது. இந்தத் தேங்காய் சிரட்டை 1200 வருடங்களுக்கும் மேல் பழமையானதாகும்.

படம் : P.K.Niyogi

தரிசனம் செய்வதற்கான நேரம்

தரிசனம் செய்வதற்கான நேரம்

காலை : 3.30-4.45, 6.30-7.00, 8.30-10.00, 10.30-11.10, 11.45-12.00.

மாலை: 5.00-6.15 மற்றும் 6.45-7.20. ஆனால் இந்துக்களுக்கு மட்டுமே கோயிலில் நுழைய அனுமதியுள்ளது.

படம் : Ilya Mauter

விதிமுறைகள்

விதிமுறைகள்

இரு கால்களையும் தனித்தனியாகக் காட்டும் எந்த ஆடையையும் யாரும் அணியக்கூடாது. இதன் பொருளானது ஆண்கள் கால்சட்டைகளும், பெண்கள் சுடிதாரையும் அணிந்து கோயிலுக்குள் செல்லக்கூடாது. கோயிலில் உள்ள பாதுகாப்பான லாக்கர் அறையில் இருந்து வேஷ்டிகளை 15 ரூபாய் கட்டணத்துக்கு வாடகைக்குப் பெறலாம். மேலும் கோயிலுக்கு உள்ளே தொலைபேசிகள் (கைபேசிகள்) மற்றும் கேமராக்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லை. அவற்றை கோயில் லாக்கரில் வைத்துவிட்டு உள்ளே செல்ல வேண்டும். அதற்கான கட்டணமாக ஒரு தொலைபேசிக்கு ரூபாய் 15 வசூலிக்கப்படுகிறது.

படம் : Pcbekal

பாதாள அறைகளும், பொக்கிஷங்களும்!

பாதாள அறைகளும், பொக்கிஷங்களும்!

ஸ்ரீ பத்மநாபசாமி கோயிலில் உள்ள 6 பாதாள ரகசிய அறைகளும் பல ஆண்டுகளாக திறக்கப்படாமலேயே இருந்து வந்தன. கடந்த 2011-ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த அறைகளிலிருந்து தங்கத்தாலான விஷ்ணு சிலை, விலை மதிக்கவே முடியாத அரிய வகை வைரங்கள், வைடூரியங்கள், தூய தங்கத்தால் ஆன ஒரு கிலோ எடை கொண்ட 18 அடி நீளமுடைய நகை, பைகள் நிறைய தங்க நாணயங்கள், அரிய வகை கற்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றின் மதிப்பு 1 லட்சம் கோடிக்கும் மேல் இருக்கும் என கருதப்படுகிறது.

பிற தெய்வங்கள்

பிற தெய்வங்கள்

ஸ்ரீ நரசிம்மர், ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீ ஐயப்பர் , ஸ்ரீ கணேஷர் மற்றும் ஸ்ரீ ஹனுமான் ஆகிய பிற தெய்வங்களுக்கும் பத்மநாபசாமி கோயிலில் தனித்தனி சன்னதிகள் உள்ளன.

படம் : Haros

 உருகா வெண்ணை!!!

உருகா வெண்ணை!!!

ஸ்ரீ ஹனுமான் சன்னதியில் உள்ள ஹனுமார் மீது சாத்தப்படும் வெண்ணெய் எவ்வளவு நாளானாலும் எந்த வெயில் காலத்திலும் உருகுவதுமில்லை, கெட்டுப் போவதுமில்லை என்று சொல்லப்படுகிறது.

படம் : Aravind Sivaraj

ஊர்வலம்

ஊர்வலம்

ஆராட்டு திருவிழாவின்போது சங்குமுகம் கடற்கரைக்கு பவனி சென்று திரும்பும் நரசிம்மசுவாமி மற்றும் பத்மநாபசுவாமி.

படம் : Raji.srinivas

பத்மதீர்த்த குளம்

பத்மதீர்த்த குளம்

ஸ்ரீ பத்மநாபசாமி கோயிலின் தெப்பக்குளமான பத்மதீர்த்த குளம்.

படம் : Aravind Sivaraj

ஓணவில்லு

ஓணவில்லு

ஓணவில்லு என்று அழைக்கப்படும் இசைக்கருவி. திருவோணம் திருவிழாவின் போது ஓணவில்லு இசைத்து இறைவனுக்கு இசையர்ப்பணம் செய்வது வழக்கம்.

படம் : Sugeesh

பிரார்த்தனை நேரங்கள்

பிரார்த்தனை நேரங்கள்

ஸ்ரீ பத்மநாபசாமி கோயிலின் பிரார்த்தனை நேரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

படம் : Pranchiyettan

நுழைவாயில்

நுழைவாயில்

ஸ்ரீ பத்மநாபசாமி கோயிலின் நுழைவாயில்.

படம் : P.K.Niyogi

பங்குனித் திருவிழா

பங்குனித் திருவிழா

ஸ்ரீ பத்மநாபசாமி கோயிலில் கொண்டாடப்படும் பங்குனித் திருவிழாவின்போது.

படம் : Raji.srinivas

கிழக்கு நடை

கிழக்கு நடை

ஸ்ரீ பத்மநாபசாமி கோயிலின் கிழக்குப் புற வாயில்.

படம் : Aravind Sivaraj

மேற்கு நடை

மேற்கு நடை

ஸ்ரீ பத்மநாபசாமி கோயிலின் மேற்குப் புற வாயில்.

படம் : Aravind Sivaraj

வடக்கு நடை

வடக்கு நடை

ஸ்ரீ பத்மநாபசாமி கோயிலின் வடக்குப் புற வாயில்.

படம் : Aravind Sivaraj

தெற்கு நடை

தெற்கு நடை

ஸ்ரீ பத்மநாபசாமி கோயிலின் தெற்குப் புற வாயில்

படம் : Aravind Sivaraj

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்