Search
  • Follow NativePlanet
Share
» »தமிழக - கர்நாடக எல்லையில் இப்படி ஒரு அசத்தல் நீர்வீழ்ச்சி இருக்கு தெரியுமா?

தமிழக - கர்நாடக எல்லையில் இப்படி ஒரு அசத்தல் நீர்வீழ்ச்சி இருக்கு தெரியுமா?

By Staff

கர்நாடகம் மற்றும் தமிழக எல்லைப்பகுதியில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வரும் ஹொகேனக்கல் அருவி, பெங்களூரிலிருந்து 150 கி.மீ தூரத்திலும், சென்னை மற்றும் சேலத்திலிருந்து முறையே 343 கி.மீ, 90 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது இந்த இந்தியாவின் நயகரா நீர்வீழ்ச்சி.

ஹொகேனக்கல் அருவிக்கு ஒரு த்ரில் சுற்றுலா!!!ஹொகேனக்கல் அருவிக்கு ஒரு த்ரில் சுற்றுலா!!!

இங்கு காணப்படும் மிரளவைக்கும் மலைப்பாறைகளும், அவற்றின் மீது ஆக்ரோஷமாக விழுந்து சிதறி ஓடும் அசுரத்தனமான நீர் பிரவாகமும் என்றென்றும் பயணிகளுக்கு மறக்க முடியாத த்ரில் அனுபவமாக அமைந்துவிடுகிறது.

வேலூர் - கோட்டை நகருக்கு ஒரு சுற்றுலா!!!வேலூர் - கோட்டை நகருக்கு ஒரு சுற்றுலா!!!

இப்படியாக பிரமிப்பையும், பயத்தையும் ஏற்படுத்தி, தன்னழகில் நம்மைக் கிறங்கடிக்க காத்திருக்கும் ஹொகேனக்கல் அருவியை சுற்றிப் பார்க்கச் செல்வோமா?!!

பெயர்க்காரணம்

பெயர்க்காரணம்

கன்னட மொழியில் 'ஹொகே' என்பது புகையையும், 'கல்' என்பது பாறையையும் குறிக்கும். எனவே மலைப்பாறைகள் வழி விழுந்து சிதறும் அருவி நீர் புகை மண்டலமாக இப்பகுதி முழுவதும் வியாபித்திருப்பதால் ‘ஹொகேனக்கல் அருவி' என்று இது அழைக்கப்படுகிறது.

படம் : Ezhuttukari

இந்தியாவின் நயாகரா!

இந்தியாவின் நயாகரா!

ஒற்றை அருவியாக இல்லாமல் அருவிகளின் தொகுப்பாக காட்சியளிப்பது ஹொகேனக்கல் அருவியின் சிறப்பு. இதன் காரணமாக இந்த அருவி இந்தியாவின் நயாகரா என்று அழைக்கப்படுகிறது.

படம் : Mithun Kundu

மருத்துவ குணம்

மருத்துவ குணம்

தலைக்காவேரியில் உற்பத்தியாகும் காவிரி ஆறு மூலிகைச் செடிகள் நிறைந்த மலைப்பிரதேசங்கள் வழியாக பாய்ந்தோடி வருவதால், ஹொகேனக்கல் அருவியின் நீர் மருத்துவ குணம் நிறைந்தது என்று கூறப்படுகிறது.

படம் : Ashwin Kumar

ஆயில் மசாஜ்

ஆயில் மசாஜ்

ஹொகேனக்கல் அருவியில் ஆயில் மசாஜ் செய்து கொண்டு அருவியில் குளிப்பது ஆனந்த அனுபவமாக இருக்கும். விசேஷ மூலிகைகளை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட எண்ணெய்கள் மற்றும் தலைமுறையாக தலைமுறையாக தொடர்ந்து வரும் பாரம்பரிய அனுபவம் போன்ற அம்சங்களை கொண்ட எண்ணெய் மசாஜ் குளியலை ஹொகேனக்கல் அருவியில் நீங்கள் மேற்கொள்ளலாம். இதற்காகவே அரசு அங்கீகாரம் பெற்ற மசாஜ் நிபுணர்கள் அருவிப் பகுதியில் உள்ளனர். எனவே கண்டவர்களிடம் மசாஜ் செய்துகொண்டு அவதிப்படாதீர்கள்.

படம் : Rishabh Mathur

ஷூட்டிங் ஸ்பாட்

ஷூட்டிங் ஸ்பாட்

ஹொகேனக்கல் அருவி இந்தியாவின் புகழ்பெற்ற சினிமா ஷூட்டிங் ஸ்பாட்களில் ஒன்று. 'மூங்கில் காடுகளே' (சாமுராய்), 'மழையே மழையே' (ரிதம்) உள்ளிட்ட எண்ணற்ற பாடல்கள் ஹொகேனக்கல் அருவியில் படமாக்கப்பட்டுள்ளன.

படம் : Ashwin Kumar

பரிசல் சவாரி

பரிசல் சவாரி

ஹொகேனக்கல் பகுதியில் காவிரி ஆற்றில் பரிசல் சவாரி செய்வது திகில் கலந்த உற்சாக அனுபவமாகும். வட்டக்கூடை போன்ற இந்த பரிசல்களில் அமர்ந்தபடி சுற்றிலும் வானுயர்ந்து நிற்கும் மலைகள் மத்தியில் நீர்த்தேக்கத்தை சுற்றி வருவது மெய்சிலிர்க்க வைக்கும் ஒன்று. பார்ப்பதற்கு அளவில் சிறியதாக தோன்றினாலும் இந்த பரிசல்களில் எட்டு பேர் வரை பயணிக்கலாம்.

படம் : Saneem Perinkadakkat

டைவிங் சிறுவர்கள்

டைவிங் சிறுவர்கள்

ஹொகேனக்கல் பகுதியில் உள்ளூர் சிறுவர்கள் கரடு முரடான மலைமுகடுகளிலிருந்து நீர் சுழித்துக்கொண்டு ஓடும் ஆழமான ஆற்றில் குதித்து சுற்றுலாப் பயணிகளை பிரமிப்பில் ஆழ்த்துவர். நீங்களும் கூட அவர்களிடம் கொஞ்சம் பணம் கொடுத்து குதிக்கச் சொன்னால் குதித்து காண்பிப்பார்கள்.

படம் : Mohanraj

மீன் பிடித்து சாப்பிடலாம்!

மீன் பிடித்து சாப்பிடலாம்!

ஹொகேனக்கல் பகுதியில் காவிரி ஆற்றில் நீங்கள் மீன் பிடித்து பொழுதை கழிக்கலாம். அதுமட்டுமல்லாமல் பிடித்த மீன்களை அருவிக்கு அருகே உள்ள ஸ்டால்களில் கொடுத்து அப்போதே சுவையாக சமைத்து சாப்பிடலாம். பொறித்து சாப்பிட எண்ணெய், மீன், மசாலா தூள்கள் ஆகியவற்றை அவர்களிடம் கொடுத்துவிட்டால் அவர்களே உங்களுக்கு பொறித்து கொடுப்பார்கள்.

படம் : Thiagupillai

டிரெக்கிங்

டிரெக்கிங்

ஹொகேனக்கல் அருவி அமையப்பெற்றிருக்கும் மேலகிரி மலையில் ஒரு சில சுற்றுலாப் பயணிகள் டிரெக்கிங்கில் ஈடுபடுகின்றனர். எனவே நீங்களும் நேரமும், முக்கியமாக உடம்பில் வலுவும் இருந்தால் டிரெக்கிங் சென்று வரலாம். ஆனால் அதற்கு தகுந்தாற்போல் உங்கள் பயண திட்டத்தை அமைத்துக்கொள்வது நல்லது.

படம் : Lijo Jose

உலகின் பழமையான கார்பானைட் பாறைகள்!

உலகின் பழமையான கார்பானைட் பாறைகள்!

ஹொகேனக்கல் அருவிப் பகுதியில் காணப்படும் கார்பானைட் பாறைகள் தெற்காசியாவில் மட்டுமல்லாமல் உலகிலேயே மிக பழமையானவையாகவும் கருதப்படுகின்றன.

படம் : Ashwin Kumar

நீச்சல்

நீச்சல்

கோடைக்காலத்தில் ஆற்றின் வேகம் குறையும் போது காவிரி ஆற்றில் நீந்த அனுமதி உண்டு. ஆனால் மிகுந்த எச்சரிக்கையும் கவனமும் தேவை.

படம் : Rodney Jose

நொறுக்குத் தீனி!

நொறுக்குத் தீனி!

நீங்கள் பரிசலில் பயணம் செய்துகொண்டிருக்கும்போதே நொறுக்குத் தீனி சாப்பிடலாம். நொறுக்குத் தீனி விற்கும் பரிசல்களை இங்கு அதிகமாக பார்க்க முடியும்.

படம் : Chris Conway, Hilleary Osh

கவனம் தேவை!

கவனம் தேவை!

அருவியின் உச்சிப் பகுதியில் இருக்கும்போது பாறைகள் வழுக்கும் என்பதால் கவனமாக இருப்பது மிகவும் அவசியம்.

படம் : Sankara Subramanian

சாகச சிறுவன்!

சாகச சிறுவன்!

மலைமுகடுகளிலிருந்து காவிரி ஆற்றில் குதித்து பயணிகளை மிரளவைக்கும் சாகச சிறுவன்!

படம் : GoDakshin

பரிசல் துறை

பரிசல் துறை

பரிசல்கள் நிற்கும் இடத்துக்கு இறங்கி செல்லும் பயணிகள்.

படம் : Thamizhpparithi Maari

மீன்கள்

மீன்கள்

ஹொகேனக்கல் பகுதியில் நீங்கள் இதுபோன்ற மீன்களை அதிகம் படித்தால் உங்களுக்கு ஒரு சபாஷ் போட்டுக்கொள்ளுங்கள்!

படம் : Thamizhpparithi Maari

அருவிக்கு அருகில்!

அருவிக்கு அருகில்!

கொட்டும் அருவிக்கு அருகில் பரிசலில் செல்லும்போது திகிலாக இருப்பதுடன், சத்தமும் காதை பிளக்கும்.

படம் : Thamizhpparithi Maari

சமையல் செய்து கொடுப்பவர்கள்!

சமையல் செய்து கொடுப்பவர்கள்!

மீன்களை பிடித்து நீங்கள் இவர்களிடம் கொடுத்துவிட்டால் அவர்களே சுத்தம் செய்து சமைத்து கொடுத்துவிடுவார்கள். அதற்காக ஒரு குறிப்பிட்ட தொகை கட்டணமாக நீங்கள் இவர்களிடம் கொடுக்க வேண்டும்.

படம் : Arun Keerthi K. Barboza

வரிசையாக செல்லும் பரிசல்கள்

வரிசையாக செல்லும் பரிசல்கள்

காவிரி ஆற்றில் வரிசையாக செல்லும் பரிசல்கள்.

படம் : Soham Banerjee

சமையல் அடுப்புகள்

சமையல் அடுப்புகள்

சுற்றுலாப் பயணிகள் பிடித்துக்கொடுக்கும் மீன்களை பெரும்பாலும் இதுபோன்ற அடுப்புகளில்தான் சமைப்பார்கள்.

படம் : Thamizhpparithi Maari

வேலைக்கு செல்லும் பரிசல்காரர்

வேலைக்கு செல்லும் பரிசல்காரர்

பரிசலை தூக்கிக்கொண்டு ஆற்றுக்கு செல்லும் பரிசல்காரர்.

படம் : Ashwin Kumar

ஹொகேனக்கல் அருவியை எப்போது மற்றும் எப்படி அடையலாம்?

ஹொகேனக்கல் அருவியை எப்போது மற்றும் எப்படி அடையலாம்?

எப்படி அடைவது?

எப்போது பயணிக்கலாம்?

படம் : M.arunprasad

செல்லும் வழி

செல்லும் வழி

பெங்களூரிலிருந்து ஹொகேனக்கல் அருவி செல்லும் வழி.

படம் : Praveen

கவிழ்க்கப்பட்ட பரிசல்கள்

கவிழ்க்கப்பட்ட பரிசல்கள்

சவாரி இல்லாத சமயத்தில் கவிழ்க்கப்பட்ட கிடக்கும் பரிசல்கள்.

படம் : Sreejith K

எங்கு தங்கலாம்?

எங்கு தங்கலாம்?

ஹொகேனக்கல் பகுதியில் தமிழக அரசுக்கு சொந்தமான ஹோட்டல் தமிழ்நாடும், நிறைய தனியார் ஹோட்டல்களும் உள்ளன. இவற்றுக்கான கட்டணம் நாள் ஒன்றுக்கு 200 ரூபாயில் இருந்து தொடங்குகிறது.

படம் : ThePiston

Read more about: அருவிகள்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X