Search
  • Follow NativePlanet
Share
» »சிவராத்ரி! இந்த சிவன் கோவிலுக்கு போனா கிடைக்கும் கோடி அற்புதங்கள்!

சிவராத்ரி! இந்த சிவன் கோவிலுக்கு போனா கிடைக்கும் கோடி அற்புதங்கள்!

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற 28 சிவன் கோயில்கள்!

By

இந்தியாவில் இருக்கும் சிவன் கோயில்களில் பாதிக்கு மேற்பட்ட கோயில்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளன. அதாவது தமிழ்நாட்டில் மட்டும் 2500-க்கும் அதிகமான சிவாலயங்கள் கட்டப்பட்டுள்ளன.

இவற்றில் பெரும்பாலான வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில்கள் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டவையாகும். அதேபோல மற்ற பேரரசுகளின் காலத்திலும் கணிசமான அளவு சிவன் கோயில்கள் தமிழ்நாட்டில் எழுப்பப்பட்டுள்ளன.

இப்படியாக கட்டப்பட்ட சிவன் கோயில்களில் சில சிவன் கோயில்கள் வரலாற்று மற்றும் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்தவை.

அதாவது சைவ சமயத்தில் கூறப்படும் 28 ஆகமங்களின் அடிப்படையில் முக்கியமான 28 சிவன் கோயில்களைப் பற்றி இங்கே காண்போம்.

சனி பிரதோஷத்தை ஒட்டி இந்த 28 கோவில்களுக்கும் சென்றால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். கோடி புண்ணியங்கள் வந்து சேரும். உங்கள் வீட்டுக்கு அருகாமையில் இருக்கும் கோவிலுக்கு தவறாமல் செல்லுங்கள்.

திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில்

திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில்

கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டியிலிருந்து 2 கிமீ தொலைவில் திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் தமிழ்நாட்டில் உள்ள எட்டு வீர சைவக் கோவில்களுள் ஒன்றாகும். இத்திருக்கோயிலின் கர்ப்பகிரக விமானத்தை பார்த்து இராஜ இராஜ சோழன் பிற்காலத்தில் தஞ்சையில் பெரிய கோயிலைக் கட்டியதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். அதேபோல பெரிய கோயில் விமான நிழல் கீழே விழாது என்ற நம்பிக்கை இருப்பது போல், திருவதிகை கோயிலின் நிழலும் தரையில் விழாதபடி கணித சாஸ்திர முறையுடன் பல்லவர்களால் இதை கட்டியதாக சொல்லப்படுகிறது.

படம் : Logic riches

நெல்லையப்பர் ஆலயம், திருநெல்வேலி

நெல்லையப்பர் ஆலயம், திருநெல்வேலி

திருநெல்வேலியிலுள்ள நெல்லையப்பர் ஆலயமானது, தமிழகத்திலேயே மிகப்பெரிய சிவாலயமாகும். இது பாண்டிய மன்னர்களால் கி.பி. 700 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் தனித்தனியே கட்டப்பட்ட இரண்டு கோயில்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான கோயில் இது. இரண்டு கோயில்களும், 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சங்கிலி மண்டபம் என்னும் மண்டபத்தால் இணைக்கப்பட்டுள்ளன. இக்கோவிலின் கோபுரங்களும் 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவையாகும்.

படம்

தியாகராஜர் கோயில், திருவொற்றியூர்

தியாகராஜர் கோயில், திருவொற்றியூர்

சென்னையிலிருந்து 16 கி.மீ தொலைவில் உள்ள திருவொற்றியூரில் தியாகராஜர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் பல்லவ மன்னர்களால் 7-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. எனினும் அதற்கு பிறகு 11-ஆம் நூற்றாண்டில் சோழர்களால் பெரிதாக புதுப்பித்து கட்டப்பட்டுள்ளது. இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிவபெருமானின் விக்கிரகமும், திருவாரூர் தியாகராஜசுவாமி திருகோயிலில் உள்ள சிவன் சிலையும் ஓரே மாதிரியான தோற்றத்தை கொண்டவை.

படம் : Mohan Krishnan

ஸ்ரீ மாயூரநாதசுவாமி கோவில், மயிலாடுதுறை

ஸ்ரீ மாயூரநாதசுவாமி கோவில், மயிலாடுதுறை

மயிலாடுதுறையின் மிகபெரிய கோயிலாக ஸ்ரீ மாயூரநாத சுவாமி கோவில் திகழ்கிறது. இந்தக் கோயில் சுவர்களிலுள்ள மிகப் பழமையான பதிவுகளாக குலோத்துங்க சோழரின் பதிவுகள் உள்ளன. அதன் ஆரம்ப கட்டுமானத்திற்கு பிறகு, சற்றே புனரமைக்கப்பட்ட இந்த கோயில் சோழர்களின் கட்டிடக்கலைக்கு சான்றாக இன்னமும் விளங்குகிறது. இக்கோயிலின் நடராஜ பெருமானுக்காக ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் மாயூரா நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி எண்ணற்றவர்களை இக்கோவிலை நோக்கி ஈர்த்துவிடும். இந்த திருவிழாவை, சிதம்பரம் நாட்டியாஞ்சலி திருவிழா நடக்கும் வேளைகளில் மகா சிவராத்திரியையொட்டி சப்தஸ்வரங்கள் டிரஸ்ட் என்ற அமைப்பு நடத்தி வருகிறது.

படம் : Krishna Kumar Subramanian

ஜம்புகேசுவரர் கோயில், திருவானைக்காவல்

ஜம்புகேசுவரர் கோயில், திருவானைக்காவல்

திருவானைக்காவல் கோயிலின் மூலவரான ஜம்புகேஸ்வரர் 5-ஆம் உள் பிரகாரத்தில் சுயம்புவான அப்புலிங்கமாக எழுந்தருளியுள்ளார். அதாவது வடமொழியில் 'அப்பு' என்பதன் பொருள் நீர் என்பதாகும். இந்த லிங்கம் இருக்குமிடம் தரைமட்டத்திற்க்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும். முற்றிய கோடையில், காவேரி வறண்டிருக்கும் நேரங்களிலும், இந்நீர்க்கசிவு வற்றுவதில்லை என்று சொல்லப்படுகிறது. 18 ஏக்கர் பரப்பளவை கொண்ட இந்த கோயில் ஆரம்ப கால சோழ மன்னர்களில் ஒருவரான கோச்செங்க சோழநாள் கட்டப்பட்டதாகும். இங்கு அம்மன் அகிலாண்டேஸ்வரியின் தனி சன்னதி நான்காம் பிரகாரத்தில் உள்ளது.

பிரகதீஸ்வரர் கோயில், தஞ்சாவூர்

பிரகதீஸ்வரர் கோயில், தஞ்சாவூர்

தமிழ்நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு கட்டப்பட்ட கோயில்கள் எத்தனை இருந்தாலும் தஞ்சை பெரிய கோயிலுக்கு ஈடு இணை ஏதுமில்லை. வட நாடெங்கும் பயணித்து பல வெற்றிகளை சுமந்து வந்த ராஜராஜ சோழன் தான் வழியில் கண்ட பல்வேறு சிற்பக்கலை மரபுகளைச் சேர்ந்த கோயில்களின் தோற்றத்தில் கவரப்பட்டு அவற்றினும் சிறந்த ஒரு உன்னத கலைப்படைப்பை தனது ராஜ்ஜியத்தில் நிர்மாணிக்க விரும்பி மிகுந்த முனைப்புடன் இந்தக் கோயிலை உருவாக்கியிருக்க வேண்டும் என்பது சில வரலாற்று ஆசிரியர்களின் கருத்து. வார்த்தைகளில் விவரிக்க முடியாத நுண்ணிய வடிவமைப்பு, கற்பனா சக்தி, மேலாண்மை துல்லியம், பொறியியல் நுணுக்கங்கள், அப்பழுக்கற்ற ஒழுங்கு, துளியும் பிசகாத கணக்கீடுகள் போன்ற அறிவியல் பூர்வமான நுட்பங்கள் இந்த ஒட்டுமொத்த கோயிலின் உருவாக்கத்தில் நிரம்பியுள்ளன என்றால் அது மிகையில்லை.

தில்லை நடராஜர் கோயில், சிதம்பரம்

தில்லை நடராஜர் கோயில், சிதம்பரம்

மனிதனின் உடம்பும் கோயில் என்பதனை விளக்கும் வகையில் சிதம்பரம் நடராஜர் கோயில் அமைந்துள்ளது. மனித உடலானது அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் என்னும் ஐந்து சுற்றுகளை கொண்டது. அதன் அடிப்படையில் நடராஜர் கோயிலில் ஐந்து திருச்சுற்றுகள் என்னும் பிரகாரங்கள் உள்ளன. அதேவேளை மனிதனுக்கு இதயம் (ஆகாயம்) இடப்புறம் அமைந்திருப்பது போல் மூலவர் இருக்கும் கருவறை கோயிலின் இடதுபுறமாக சற்று நகர்ந்து இருக்கிறது. அதோடு சராசரியாக ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 21,600 முறை இதயத்தின் உதவியால் மூச்சுவிடுகிறான் என்பதை குறிக்கும் விதமாக கருவறையின் மீதுள்ள கூரை 21600 ஓடுகளால் வேயப்பட்டு இருக்கிறது.

மருந்தீஸ்வரர் கோயில், சென்னை

மருந்தீஸ்வரர் கோயில், சென்னை

சோழ நாட்டை பல்லவம் ஆந்திரம் போன்ற ராஜ்ஜியங்களுடன் இணைத்த வடப்பெருவழி எனும் முக்கிய சாலையில் இந்த கோயில் இருந்ததை வரலாற்றுச்சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன. அந்த பாதைதான் இன்றைய ஈ.சி.ஆர் எனும் கிழக்குக்கடற்கரைச்சாலையாக உருமாறியுள்ளது. பரபரப்பான சென்னையின் நடுவே திருவான்மியூரில் அமைதி தவழும் ஆன்மீகச்சுழலை கொண்டுள்ள மருந்தீஸ்வரர் கோயில் சென்னைக்கு வரும் பயணிகள் அவசியம் விஜயம் செய்ய வேண்டிய புராதன ஆன்மீகத்தலமாகும்.

படம் : Mohan Krishnan

ஸ்ரீ இராமநாதசுவாமி கோவில், தமிழ்நாடு

ஸ்ரீ இராமநாதசுவாமி கோவில், தமிழ்நாடு

12 ஜோதிர்லிங்க கோயில்களில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒரே ஜோதிர்லிங்க ஆலயமாக இராமேஸ்வரத்தில் உள்ள ஸ்ரீ இராமநாதசுவாமி கோவில் புகழ்பெற்றுள்ளது. மேலும் இராமேஸ்வரம் என்ற பெயர் வரக்காரணமாக ஸ்ரீ இராமநாதசுவாமி கோவிலை குறிப்பிடலாம். அதாவது இராவணனை கொன்ற பாவத்தினை நீங்க இராமன் மணல்களால் ஆன லிங்கத்தை இங்கு பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்று நம்பப்படுகிறது. இதன் காரணமாக இராமன் ஈஸ்வரனை வணங்கிய இடம் என்ற பொருளில் 'இராம+ஈஸ்வரம்' இராமேஸ்வரம் ஆனது.

படம் : Vinayaraj

அண்ணாமலையார் கோயில், திருவண்ணாமலை

அண்ணாமலையார் கோயில், திருவண்ணாமலை

எட்டு திக்கிலும் அஷ்டலிங்கங்களை கொண்ட எண்கோண அமைப்பில் அமைந்திருக்கும் திருவண்ணாமலை நகரில் பஞ்சபூத ஸ்தலங்களின் நெருப்புக்கான ஸ்தலமாக அண்ணாமலையார் கோயில் அறியப்படுகிறது. இக்கோவில் அக்னியை வெளிப்படுத்துவதாகவும், சிவபெருமான் இங்கு அக்னி லிங்கமாகவும் வணங்கப்படுகிறார். அதோடு உண்ணாமலையம்மனாக சிவபெருமானின் துணைவியாரான பார்வதி தேவியும் இங்கு வழிபடப்படுகின்றார்.

கபாலீசுவரர் கோயில், சென்னை

கபாலீசுவரர் கோயில், சென்னை

சென்னையின் பழமையான மைலாப்பூர் பகுதியில் இந்த கபாலீசுவரர் கோயில் வீற்றுள்ளது. இந்த கோயில் சிவபெருமான் மற்றும் அவரது துணைவியார் பார்வதி தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இன்று சாந்தோம் சர்ச் உள்ள இடத்தில் வீற்றிருந்த கபாலீசுவரர் கோயிலின் ஆதி அமைப்பு போர்த்துகீசியர்களால் சிதைக்கப்பட்ட பிறகு தற்போது நாம் காணும் கோயில் விஜயநகர மன்னர்களால் 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

படம் : Mohan Krishnan

ஏகாம்பரநாதர் கோயில், காஞ்சிபுரம்

ஏகாம்பரநாதர் கோயில், காஞ்சிபுரம்

600 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கோயில், காஞ்சிபுரத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோயில் சிவபெருமானுக்கான பஞ்சபூத கோயில்களுள், நிலத்தை குறிக்கும் பஞ்ச பூத ஸ்தலமாகும். இக்கோயிலின் வட்டக் கோபுரம் 59 அடி உயரத்தில் அமைந்திருப்பதோடு இந்தியாவின் உயரமான கட்டுமானங்களுள் ஒன்றாக விளங்குகிறது.

வேதகிரீஸ்வரர் கோயில், திருக்கழுக்குன்றம்

வேதகிரீஸ்வரர் கோயில், திருக்கழுக்குன்றம்

சென்னையிலிருந்து 67 கி.மீ தொலைவில் உள்ள திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள வேதகிரீஸ்வரர் கோயில் 1400 ஆண்டுகள் பழமையானது. இங்கு காணப்படும் ஒரு கல் மண்டபம் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் (கி.பி. 610-640) காலத்தில் கட்டப்பட்ட சிவனுக்குரிய குடைக்கூளி என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். அதுமட்டுமல்லாமல் 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர், சோழர், பாண்டியர், ராஷ்டிரகூடர் காலத்திய கல்வெட்டுக்களும் இங்கே கிடைத்துள்ளன.

தியாகராஜஸ்வாமி திருக்கோயில், திருவாரூர்

தியாகராஜஸ்வாமி திருக்கோயில், திருவாரூர்

சோழ மன்னர்களால் கட்டப்பட்டு தமிழ்நாட்டின் மிகப் பழமையான கோயில்களுள் ஒன்றாக திகழ்ந்து வரும் தியாகராஜஸ்வாமி திருக்கோயில் 1-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.இக்கோயிலின் மூலஸ்தானத்தை இரண்டாகப் பிரித்து, ஒரு பகுதியை "வன்மிகிநாதர்" என்ற பெயரில் வழங்கப்படும் சிவபெருமானுக்கும், மற்றொரு பகுதியை தியாகராஜருக்கும்

அர்ப்பணித்துள்ளனர். வன்மிகிநாதருக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள பகுதியானது, தியாகராஜருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள பகுதியைக் காட்டிலும் பழமை வாய்ந்ததாகும். வன்மிகிநாதரின்

சந்நிதியில், வழக்கமான லிங்கத்துக்கு பதிலாக, ஒரு புற்று நிறுவப்பட்டுள்ளது.

படம் : Kasiarunachalam

ஸ்ரீ கும்பேஸ்வரர் ஆலயம், கும்பகோணம்

ஸ்ரீ கும்பேஸ்வரர் ஆலயம், கும்பகோணம்

கும்பகோணத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கும்பேஸ்வரர் ஆலயம் ஒரு சிவாலயமாகும். இக்கோவிலில் தான் ஆண்டுதோறும் மாசிமக விழாவும், 12 ஆண்டுகளுக்கொருமுறை மகாமகப் பெருவிழாவும் கொண்டாடப்படுகின்றன. இக்கோவில் 1300 ஆண்டுகள் பழமையானதென நம்பப்படுகிறது. இடைக்காலச் சோழர்கள் இந்நகரத்தை ஆண்டபொழுதிலிருந்து இக்கோவில் உள்ளது. இக்கோவிலில் சிவபெருமான் ஆதி கும்பேஸ்வரர் என்னும் பெயருடன் வழிபடப்படுகிறார்.

படம் : Ssriram mt

ஸ்வேதாரண்யேஸ்வரர் கோயில், திருவெண்காடு

ஸ்வேதாரண்யேஸ்வரர் கோயில், திருவெண்காடு

தமிழ்நாட்டிலுள்ள ஒன்பது நவக்கிரக ஸ்தலங்களுள், இது நான்காவது ஸ்தலமாகும். இந்தக் கோயில் 1000 முதல் 2000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இக்கோயிலில், நவக்கிரகங்களுள் ஒருவரும், பக்தர்களுக்கு அறிவும், செல்வமும் வழங்கக்கூடியவருமான புதன் பகவானுக்கு தனி சந்நிதி அமைத்து வணங்கி வருகின்றனர். இங்கு சிவபெருமான், "ஸ்வேதாரண்யேஸ்வரர்" என்ற திருப்பெயருடன், மூலவராக இருந்து அருள் பாலிக்கிறார். பார்வதி தேவி, "பிரம்மவித்யாநாயகி" என்ற பெயரில் வழிபடப்படுகிறார்.

ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் ஆலயம், கும்பகோணம்

ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் ஆலயம், கும்பகோணம்

கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருபுவனம் என்னும் கிராமத்தில் ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. 13-ஆம் நூற்றாண்டில் ஆட்சிசெய்த மன்னன் குலோத்துங்கனால் இக்கோவிலின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. அவருக்குப் பிறகு வந்த சேர, சோழ, பாண்டிய வம்சத்தைச் சேர்ந்த மன்னர்கள் அப்பணியைத்தொடர்ந்து கட்டி முடித்தனர். சோழர்களால் புதுப்பிக்கப்பட்ட கடைசிக்கோவில் இதுவென வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.

படம் : Rsmn

பழமலைநாதர் கோயில், விருத்தாச்சலம்

பழமலைநாதர் கோயில், விருத்தாச்சலம்

கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலத்தில் அமைந்துள்ள பழமலைநாதர் கோயில் சைவத் திருத்தலங்களில் முக்கியமானதாகும். இந்தக் கோயிலில் 5 கோபுரம், 5 நந்தி, 5 தேர், 5 கொடிமரம் என எல்லாமே ஐந்து ஐந்தாக அமைந்துள்ளது. இத்தலம் காசியை விட வீசம் (தமிழ் அளவு : 1/16) புண்ணியம் அதிகம் கொண்டதென நம்பப்படுகிறது. இதனால் விருத்தகாசி என்கிற சிறப்புப்பெயரும் இவ்வூருக்கு உண்டு

படம் : கி. கார்த்திகேயன்

சோமேஸ்வரர் ஆலயம், கும்பகோணம்

சோமேஸ்வரர் ஆலயம், கும்பகோணம்

சோமேஸ்வரர் ஆலயம் கும்பகோணத்தில் அமைந்துள்ள ஒரு சிவாலயமாகும். இந்தக் கோயிலின் கட்டிட வடிவமைப்பை பார்க்கும் பொழுது 13-ஆம் நூற்றாண்டு திராவிடக் கட்டிடக் கலை உடனடியாக நினைவுக்கு வருகிறது. இக்காலத்தில்தான் பிற்காலச் சோழர்கள் கும்பகோணத்தை ஆண்டு வந்தனர். உண்மையில் இக்கோவில் சிவபெருமானையும் பார்வதிதேவியையும் வழிபட்டுவந்த சோழர்களால் அடிப்படையில் கட்டப்பட்டது. பிறகு வந்த மன்னர்கள் இக்கோவிலின் கட்டுமானத்தில் வெவ்வேறு வடிவமைப்பை சேர்த்துக் கொண்டனர். ஆயினும் அடிப்படை வடிவமைப்பு சோழர் கட்டிடக் கலையே ஆகும்.

படம் : Krishna Kumar

திருவாலீஸ்வரர் கோயில்

திருவாலீஸ்வரர் கோயில்

சென்னையிலிருந்து 13 கி.மீ தூரத்தில் உள்ள பாடி என்ற பகுதியில் திருவாலீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் சிவபெருமான் திருவாலீஸ்வரர் வடிவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இங்கு சிவன் சன்னதியை தவிர விநாயகர், பாலசுப்பிரமணியர், சூரிய பகவான் சன்னதிகளும் உள்ளன. அதோடு இங்குள்ள விநாயகர் சன்னதியில் விநாயகர் தொந்தி இல்லாமல் காட்சியளிக்கிறார்.

படம் : Jai Sankar R

ஐராவதீஸ்வரர் கோயில்

ஐராவதீஸ்வரர் கோயில்

கும்பகோணத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தாராசுரத்தில் ஐராவதீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் பிரகதீஸ்வரர் கோவில்களில் இருப்பதை விட சிறியதாக இருந்தாலும், மிகவும் நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்டதாக திகழ்கிறது ஐராவதம் கோவில் சிற்பங்கள். ஒரு தேரை, குதிரைகள் இழுத்துச் செல்வது போல அமைந்திருக்கும் ஐராவதீஸ்வரர் கோயில், நிச்சயமாக நாம் அனைவரும் பார்க்க வேண்டிய அருமையான திருக்கோவில் ஆகும். துர்வாச முனிவரின் சாபத்தினால் தன்னுடைய நிறத்தை இழந்த இந்திரனின் யானை ஐராவதம், இங்கு வந்து சிவனை வழிபட்டு, சாப விமோச்சனம் பெற்றதாம். அதனால், இந்த கோவிலுக்கு ஐராவதீஸ்வரர் கோயில் என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

படம் : Eurekaitskk

காசி விஸ்வநாதர் கோயில்

காசி விஸ்வநாதர் கோயில்

கும்பகோணம் மகாமகம் குளத்துக்கு அருகிலேயே சிவாலயமான காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் சிவன் சன்னதியை தவிர நவகன்னியர்களான கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, ,காவேரி, கிருஷ்ணா, கோதாவரி, துங்கபத்ரா, சரயு ஆகிய புனித நதிகளுக்கும் சன்னதிகள் உள்ளன. இக்கோயில் குறித்து தேவாரத்தில் பாடல் இடம்பெற்றிருப்பதுடன், இராமாயண காலத்திலேயே இராமரும், லக்ஷ்மணனும் இங்கு சிவனை வழிபட்டதாக நம்பப்படுகிறது.

படம் : Ssriram mt

கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், கரூர்

கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், கரூர்

சோழர்கள் ஆட்சிசெய்த காலத்தில் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் கட்டப்பட்டது. ஐந்து அடி உயரம் உடைய பசுபதீஸ்வரர் லிங்கத்திற்கு இக்கோவில் பெயர்பெற்றது. மேலும் இங்கே ஐந்து சிலைகளின் கூடுகை இருக்கிறது. ஒரு பசுவின் காம்பில் இருந்து வடியும் பாலில் குளிப்பதைப் போன்று லிங்கம் கர்ப்பக்கிரகத்தில் காட்சியளிக்கிறது.

படம் : Balaji

கைலாசநாதர் கோயில், காஞ்சிபுரம்

கைலாசநாதர் கோயில், காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் 8-ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் இராஜசிம்மனால் கட்டத் தொடங்கப்பட்டதெனினும், அவனுடைய மகனான 3-ஆம் மகேந்திரவர்மனே கட்டிடப் பணிகளை முடித்ததாக வரலாறு கூறுகிறது. அதன் பின்னர் 14-ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் காலத்தில் சில பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

படம் : Sai Subramanian

பாடலீஸ்வரர் கோவில், திருப்பாதிரிப்புலியூர்

பாடலீஸ்வரர் கோவில், திருப்பாதிரிப்புலியூர்

கடலூர் நகரின் ஒரு பகுதியாக உள்ள திருப்பாதிரிப்புலியூரில் பாடலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக தோன்றியதாக நம்பப்படுகிறது. இந்தக் கோயில் சோழர்களால் கட்டப்பட்டதோடு, பல்லவ மன்னர்கள் மற்றும் பாண்டியர்கள் காலத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. சிவபெருமானுக்காக கட்டப்பட்டிருக்கும் பாடலீஸ்வரர் கோவில் மிகவும் புனிதமான சைவத் தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

படம் : Mohan Krishnan

காசிவிஸ்வ நாதர் கோவில், தென்காசி

காசிவிஸ்வ நாதர் கோவில், தென்காசி

காசிவிஸ்வ நாதர் கோவில் குற்றாலத்திலிருந்து 8 கி. மீ தொலைவில் தென் காசியில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் கி.பி 1455-ஆம் ஆண்டு பராக்கிரம பாண்டியனால் கட்டப்பட்டது. புராணங்களின் படி இந்த மனனன் காசிக்கு செல்ல விரும்பியதாகவும், ஆனால் அந்நகரம் முஸ்லீம்களின் கட்டுப்பாட்டின் இருந்ததால் காசியில் உள்ள அதே அசல் கோவிலின் மாதிரியாக இந்தக் கோயிலை உருவாக்கியதாக சொல்லப்படுகிறது.

படம் : pandiaeee

திருவாப்பனூர் ஆப்புடையார் கோயில், மதுரை

திருவாப்பனூர் ஆப்புடையார் கோயில், மதுரை

மதுரை நகரின் ஒரு பகுதியான செல்லூர் என்ற இடத்தில் திருவாப்பனூர் ஆப்புடையார் கோயில் அமைந்துள்ளது. சோழாந்தகன் என்ற பாண்டிய மன்னன் வேட்டையாடச் சென்றபோது திருவாப்புடையாரை (சுயம்புலிங்கத்தைக்) கண்டு முதன்முதலில் தரிசனம் செய்துள்ளான். அப்பாண்டியனது மகன் சுகுணன், திருவாப்புடையாருக்குக் கோயில் எடுப்பித்தான் என்று சொல்லப்படுகிறது.

படம் : Mohan Krishnan

மாசில்லாமணீஸ்வரர் கோயில், திருமுல்லைவாயில்

மாசில்லாமணீஸ்வரர் கோயில், திருமுல்லைவாயில்

சென்னையின் அம்பத்தூர் பகுதியிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள திருமுல்லைவாயிலில் மாசில்லாமணீஸ்வரர் கோயில் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் உள்ள நந்தி சிலை வழக்கத்துக்கு மாறாக சிவபெருமானை நேராக நோக்காமல், கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது.

படம் : பரிதிமதி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X