» »மும்பையில் வித்தியாசமான இடங்களுக்கு போகனும்னா இந்த 5 இடங்களையும் பார்த்துடுங்க!!

மும்பையில் வித்தியாசமான இடங்களுக்கு போகனும்னா இந்த 5 இடங்களையும் பார்த்துடுங்க!!

Written By: Bala Karthik

தூங்கா நகரமென அழைக்கப்படும் மும்பை, பல்வகை கலவை கொண்டு ஒரு சில களிப்பூட்டும் இடங்களையும் காண நம்மை அழைத்திட, வியக்கத்தக்க அதிர்வை அது நம் மனதில் ஏற்படுத்துகிறது. மும்பையை 'கனவு நகரம்' என அழைக்க, விடுமுறை இலக்காகவும் இது நமக்கு அமைந்திடுகிறது. இவ்விடமானது நகரத்தின் அனைவருக்கும் கனவு நகரமாக விளங்க, இங்கே நாம் ஆராய வேண்டிய விஷயங்களானது ஒவ்வொரு மூலை முடுக்கிலும் காணப்படுகிறது.

இந்த மும்பை மாநகரம் காதலை நமக்கு தந்திட, அரபிக்கடலின் வரலாற்று சாரல் வீசலானது, சில வகை சுவையூட்டும் உணவையும் நமக்கு தந்திடுகிறது. இந்த நகரத்தில் நாம் காண வேண்டிய இடப்பட்டியல் முடிவற்று காணப்பட; பாலிவுட்டுக்கான கடற்கரையும் என தொடங்கி எண்ணற்ற இடங்களையும் இந்த நகரம் கொண்டிருக்கிறது. இந்த கனவு நகரத்தில் நாம் காண வேண்டிய ஒரு சில இடங்களையும் ஆம்பி மும்பையில் நாம் இப்போது காணலாம்.

இந்தியாவின் நுழைவாயில்:

இந்தியாவின் நுழைவாயில்:

குறிப்பிடத்தக்க இடங்களுள் ஒன்றாக இந்தியா நுழைவாயிலானது காணப்படுகிறது. இந்த அமைப்பானது 1924ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கட்டப்பட, ஐந்தாம் ஜார்ஜ் அரசர் மற்றும் மேரி இராணியின் வருகையை நினைவுப்படுத்தும் வகையிலும் பம்பாயில் அமைந்தது.

இந்த நினைவு சின்னமானது இந்தியாவின் முக்கிய அங்கமாக விளங்க, ஆங்கிலேயர்களின் ஆடம்பரத்தையும் இவ்விடம் கொண்டிருக்கிறது. நீர் முன்னிலை பகுதியான அப்பல்லோ பந்தரில் காணப்படும் இவ்விடம், தற்போது சுற்றுலா ஆர்வலர்களையும் ஈர்க்கும் அமைப்புடன் நகரத்தில் காணப்பட, உலகம் முழுவதுமிலிருந்து பலரும் வந்து செல்கின்றனர்.

PC: Vijay Sharma

பங்கங்கா தொட்டி:

பங்கங்கா தொட்டி:

புனித நீர்த்தொட்டியான பங்கங்கா தொட்டி, கண்கொள்ளா காட்சியை நமக்கு தருகிறது. இந்த பழமையான தொட்டியானது 12ஆம் நூற்றாண்டின் பிற்காலத்தில் அமைக்கப்பட, மலபார் மலையின் வல்கேஷ்வர் ஆலயத்தையும் இவ்விடம் கொண்டிருக்கிறது.

இத்தொட்டியானது அமைச்சரின் பார்வைக்கு கீழ் வர, சில்ஹாரா வம்சத்தின் நீதிமன்றத்தை சார்ந்தது எனவும் தெரியவர, மும்பையை 9ஆம் நூற்றாண்டிலிருந்து 13 ஆம் நூற்றாண்டு வரை இவர் ஆண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நீரானது அதிர்ச்சியூட்டும் விதமாக இனிப்புடன் சமுத்திரத்தை பொருட்படுத்தாமல், விதிவிலக்காக இப்பகுதிக்கு அருகாமையில் காணப்படுகிறது. தற்போது இந்த தொட்டியானது பல்வேறு யாத்ரீகர்களை ஈர்த்திட, இந்த புனித நீரில் அவர்கள் மூழ்கி எழுந்து, மலரை காணிக்கையாக்கியும் செல்கின்றனர்.

PC: Ekabhishek

மஹாகாளி குகைகள்:

மஹாகாளி குகைகள்:

‘கொண்டிவிட்ட குகைகள்' எனவும் அழைக்கப்படும் மஹாகாளி குகைகள், அந்தேரி நகரத்தின் மேற்கு பகுதியில் காணப்படுகிறது. இங்கே வருபவர்களால் 19 பாறை வெட்டு குகைகள் பார்த்திட, இந்த குகைகள் யாவும் முதலாம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரையிலான தொடக்கத்தில் செதுக்கப்பட்டது எனவும் தெரியவருகிறது.

இதன் மத்திய குகையானது புத்தர் மற்றும் ஸ்தூபர் படத்தை கொண்டிருக்கிறது. இதனை தவிர்த்து, இங்கே எண்ணற்ற புத்த சிலைகளையும் கற்களால் வெட்டப்பட்டிருப்பதை பார்க்க முடிகிறது.

PC: Sainath Parkar

மஹாலக்ஷ்மி தோபி தொடர்ச்சி:

மஹாலக்ஷ்மி தோபி தொடர்ச்சி:


மும்பையின் மஹாலக்ஷ்மி பகுதியில் காணப்படும் இடங்களுள் ஒன்றாக இது இருக்க, இந்த ஒட்டுமொத்த நகரமும் அழுக்கான ஆடைகள் தோபிகளால் சலவை செய்யவும்பட, அவர்களை சலவைக்காரர் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த தோபி தொடர்ச்சியானது 1890ஆம் ஆண்டு கட்டப்பட, பெருமளவிலான ஆங்கிலயரின் பூர்த்தியும், பார்ஸி மக்களையும் இந்த நகரத்தில் நம்மால் காண முடிகிறது.

இவ்விடமானது உலகிலேயே மிகப்பெரிய திறந்தவெளி வளி மண்டல சலவை இடமாக கருதப்பட, அழுக்கான அடைகள் சலவைக்காரரின் பார்வைக்கு கீழ் இங்கே பரந்து விரிந்து காணப்பட, அதனை சுத்தம் செய்து, மிக மலிவான விலைக்கு திரும்ப தரப்படுவதாகவும் தெரியவருகிறது.

PC: Marina & Enrique

தாராவி சேரி:

தாராவி சேரி:

ஆசியாவின் மாபெரும் சேரியாக இதனை கருத, தாராவி ஆங்கிலேயர்களால் 1882ஆம் ஆண்டில் நிறுவப்பட, ஏழை மக்கள் நகர்ப்புறத்திற்கு மீண்டும் சென்றனர். இருப்பினும், இப்பகுதியானது அனைத்து வித ஒரே மாதிரியான சேரியாக முடிவுக்கு வர, தொலைவில் காணப்பட்ட இவ்விடம் வறுமையில் வாடும் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரமாக அமைந்தது.

இப்பகுதியின் வெளிச்சமான பக்கமானது, பல தொழிற்சாலைகளுக்கும், ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளுக்கும், ஈர்க்கப்படும் மக்களுக்கும் வீடாக விளங்குகிறது. தேயிலை முதல் காய்கறி கடை, இனிப்பு கடைகள், ஆடை மாவட்டங்கள், பள்ளிகள், என பல சமுதாயமும் தாராவியை வீடாக கொண்டிருக்க, ஏழ்மை வாழும் எண்ணற்ற வீடுகள் அடங்கிய இடமும் இதுவே.

PC: Mark Hillary

Read more about: travel, mumbai