» »இந்தியாவின் சிறந்த 5 சாலைப் பயணங்கள் எவை தெரியுமா?

இந்தியாவின் சிறந்த 5 சாலைப் பயணங்கள் எவை தெரியுமா?

Written By: Bala Karthik

பேருந்தின் மூலமாகவோ, கார் அல்லது பைக் மூலமாகவோ நாம் பயணத்தை தொடர, விதவிதமான சாலையில் செல்வதும் அழகு தான் அல்லவா? நீங்கள் மாறுபடும் காட்சிகளை கண்டும், கால நிலையை கண்டும், உள்ளூர் உணவுகளை வாங்கி சாப்பிடுவதற்காக சில இடங்களில் நிறுத்தியும் செல்வது வழக்கமாக, சில சமயங்களில் விமானத்தில் பறப்பதனால் சில இடங்களை இடையில் நாம் பார்க்காமல் பறக்கவும் நேரிடும். அவசரமற்ற சாலை பயணத்தில் இத்தகைய விளையாட்டுக்கள் நிறைந்து காணப்பட, பல இடங்களில் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து சில மணி நேரங்களை நாம் அங்கே செலவிடுவது புதியதோர் அனுபவத்தை மனதில் தரக்கூடும்.

இந்தியாவானது அனைத்து விதமான நிலப்பரப்புகளையும் கொண்டிருப்பதோடு, சாலை பயணமானது நகரத்தின் ஆரவாரம் கொண்ட கூட்ட நெரிசலிலும் காணப்பட, படிப்படியாக மலைகளையும், கடற்கரைகளையும், சம வெளி நிலங்களையும் என பலவற்றையும் நம்மால் காண முடிகிறது. இப்பொழுது, இந்தியாவின் சிறந்த 5 சாலை வழிகள் எவை? என்பதை பார்ப்பதோடு, அவற்றில் பேருந்து, கார் அல்லது பைக் மூலம் செல்வதனால் எத்தகைய அனுபவத்தை நாம் பெறுகிறோம்? என்றும் பார்க்கலாம்.

 பெங்களூரு – ஊட்டி:

பெங்களூரு – ஊட்டி:

பிஸியான வாழ்க்கை வாழும் பெங்களூரு வாசிகள், வேகமாக, அதனை விட்டு வெளிவரக்கூடிய சாலை பயணமும் செல்லலாம். பெங்களூரு முதல் ஊட்டி வரையிலான புத்திசாலித்தனமான பயணம் மூலமாக கூட்டம் காணப்படும் பெங்களூரு சாலையில் செல்வதனால் மாறக்கூடிய சூழ் நிலையை நீங்கள் உணர்வதோடு, ஊட்டியின் இயற்கை அழகின் ஆழத்தையும் கண்டு ஒரு அழகிய அனுபவத்தை மனதில் உண்டாக்கிக்கொள்ளக்கூடும்.

குறுகிய பெங்களூரு சாலையிலிருந்து பரந்த நெடுஞ்சாலை நோக்கி பயணம் மாறிட, அதன்பிறகு அடர்ந்த காடுகள் அமைந்திருக்கும் சாலை வழியாகவும் தொடரக்கூடும். மைசூரு, நஞ்சங்குட், பந்திப்பூர், முதுமலை என செல்லும் வழியில் பல அழகிய இடங்களையும் நாம் பார்த்து செல்கிறோம்.

இந்த 280 கிலோமீட்டர் பயணத்தை நாம் கடக்க, ஆறு மணி நேரங்கள் ஆகிறது.

PC: Dibesh Thakuri

சென்னை - புதுச்சேரி:

சென்னை - புதுச்சேரி:

கிழக்கு கடற்கரை சாலையில் உங்கள் பயணம் தொடர, சென்னை முதல் புதுச்சேரி வரையில் சாலை இணைக்கப்பட்டும் உள்ளதோடு, சிறிய சாலைப்பயணத்தின் மூலம் திருப்தியான அனுபவமாகவும் அது அமையக்கூடும். இந்த 155 கிலோமீட்டர் பயணத்தில் மூன்று முதல் நான்கு மணி நேரம் வரை முழுமையடைய தேவைப்படுகிறது. அதோடு, ஒரு பக்கத்தில் வங்காள விரிகுடாவின் பெருமூச்செறிந்து பார்க்க வைக்கும் அழகிய காட்சியும் நம் கண்களில் படுகிறது.

இந்த விரிவான பயணத்தில் ஆலிவ் தீவு, முட்டுக்காடு, மஹாபலிப்புரம், என பல இடங்களில் நிறுத்தியும் செல்கிறோம். பாண்டிச்சேரியில், பாராடைஸ் கடற்கரை, ப்ரோமினாட் கடற்கரை, ப்ரெஞ்ச் காலனி, என பல இடங்களும் பார்ப்பதற்கு ஏதுவாக அமைந்து இருக்கிறது.

PC: C/N N/G

மும்பை – கோவா:

மும்பை – கோவா:

ஹிந்தியில் ப்ளாக்பஸ்டர் ஹிட்டடித்த திரைப்படமான ‘தில் சாத்தா ஹை' மூலம் ஈர்க்கப்பட்ட இந்த கோவா முதல் மும்பை வரையிலான சாலைப்பயணம், மிகவும் பிரசித்திப்பெற்ற சாலை வழியாக அமைகிறது. இந்த பயணமானது நிச்சயமாக, மற்ற பயணத்தை காட்டிலும் சிறப்பானதோர் பயணமாக அமையக்கூடும்.

மேற்கு தொடர்ச்சி மலையில் மாறும் கால நிலை முதல் அமைதியான கடற்கரை வரையிலான இந்த பயணம் கண்கொள்ளாக் காட்சியாக அமைகிறது. இந்த பயணத்தை சூழ 590 கிலோமீட்டர்கள் தேவைப்பட, இந்த சாலை பயணம் நீண்டு காணப்பட்டாலும், மிகவும் மதிக்கத்தக்க பயணமாக அமைவதோடு, இந்த பயணத்தின் ஒரு அங்கமாக மும்பை - பூனே விரைவு சாலையும் மென்மையான முறையில் அமைகிறது.

PC: Praveen Gurav

தில்லி – ஆக்ரா:

தில்லி – ஆக்ரா:

பிரசித்திபெற்று விடுமுறை பயணத்திற்கு ஏற்ற இடங்களுள் ஒன்றான தில்லி, ஆக்ரா சாலைப்பயணம் சிறப்பான ஒன்றாக அமைகிறது. நீங்கள் அழகிய விரிவடைந்த சமவெளியான உத்தர பிரதேசத்தை ரசித்திட, எண்ணற்ற பஞ்சாபி தாபாக்களும் காணப்படுவதோடு, உன்னதமான உணவையும் கொண்டு இந்த பஞ்சாபி உணவகங்கள் அமைந்து ஆக்ரா வரையிலும் காணப்படுகிறது.

அயல் நாட்டவர் அதோடு மட்டுமல்லாமல் இந்திய தேசத்தவர் என பலரும் இந்த சாலை பயணத்தை கண்டு ஆச்சரியத்துடன் பார்க்க, அவற்றுள் ஒன்றாக தாஜ் மஹாலும் காணக்கூடும். இந்த நினைவு சின்னத்தை முழு நிலவு நாளில் ரசிக்க திட்டமிடுவதோடு, கண்டு ரசித்திட வேறு கோணத்து காட்சியை அது நமக்கு தருகிறது.

இந்த தில்லி முதல் ஆக்ரா வரையிலான 235 கிலோமீட்டர் பயணத்திற்கு 4 மணி நேரங்கள் தேவைப்படுகிறது.

PC: Dennis Jarvis

கொல்கத்தா – டார்ஜிலீங்க்:

கொல்கத்தா – டார்ஜிலீங்க்:

தேசிய நெடுஞ்சாலை 34 வழியாக இந்த கொல்கத்தா முதல் டார்ஜிலீங்க் பயணமானது காணப்படுகிறது. கொல்கத்தா வாசிகள் அனைவரும் டார்ஜிலீங்கிற்கு விரைவாக செல்வதோடு அழகிய இயற்கையையும் ரசிப்பதோடு, குறிப்பாக நாள் பயணமாகவும் இது அமையக்கூடும்.

நீங்கள் பர்த்வான், பராக்கா, சிலிக்குரி ஆகிய இடங்களில் நிறுத்திட, செல்லும் வழியில் மேற்கு வங்காளத்தின் சுவையூட்டும் ஜல்மூரியும் கிடைக்கிறது. இந்த பயணமானது பரந்து விரிந்து நீண்டு செல்ல, இந்த பயணத்தை இரண்டாக பிரித்து, சிலிகுரியையும் நீங்கள் அடையலாம்.


PC: Jakub Michankow

Read more about: travel