» » சென்னைக்கு பக்கத்துல நீங்க பாக்க வேண்டிய 7 இடங்கள் எவை தெரியுமா?

சென்னைக்கு பக்கத்துல நீங்க பாக்க வேண்டிய 7 இடங்கள் எவை தெரியுமா?

By: Balakarthik Balasubramanian

இமயமலை போன்ற இடங்களுக்கு நாம் பயணம் செய்ய நினைத்தாலும் ஒருபோதும் நம்மால் உடனடியாக செல்ல முடிவதில்லை. காரணம், தூரத்தின் தாக்கம் நம்மை யோசிக்க வைக்க கூடும். அதனால், பயணத்தின் மீது ஆர்வமானது குறைந்து ஊக்கமும் மனதில் ஊசலாடுகிறது. இருப்பினும், அதிர்ஷ்டவசமாக தென்னிந்தியாவில் அழகிய நிலப்பரப்பானது அளவற்ற ஆர்வமூட்டும் இடங்களையும் சாகசங்களையும் கொண்டு நம்மை ஆசிர்வதிக்கிறது.

சாகசமானது தூரத்தின் காரணமாக ஒருவர் மனதில் சலிப்பை உண்டாக்குமெனில் ஆர்வத்தின் அளவை குறைத்துவிடாமல் மேலும் மெருகூட்ட ஏதுவாக, சென்னைக்கு மிக அருகாமையில் காணும் இடங்களை பற்றியும் தெரிந்துக்கொண்டு பயணத்தின் போக்கை மாற்றி தான் நாம் மனம் மகிழலாமே. வார விடுமுறையின் ஓய்வுக்கு ஏற்ற வசதி நிறைந்த இடமாக இவை இருக்க, புதியதோர் வாரத்தின் புத்துணர்ச்சிக்கும் அவை உங்களுக்கு துணை புரிய தயாராகிறது.

பயணத்துக்கு ஏதுவான சிறந்த காலங்கள்:

நவம்பர் முதல் பிப்ரவரி மாதங்களின் நடுங்கும் குளிரானது (குளிர்காலமானது) சென்னைக்கு அருகில் நாம் பயணிக்க சிறந்த மாதமாக அமைகிறது. தமிழ் நாட்டில் கால நிலைகளில் இம்மாதங்கள் சிறந்து விளங்க, கோடைக்காலத்தின் தாக்கத்தால் தாங்கமுடியாமல், 'ஏன் வந்தோம்?' என்ற ஏமாற்றத்தையும் நம் மனதில் விதைப்பதால், பருவமழைக்காலங்களின் போது பயணம் வருவதை நாம் தவிர்த்தாக வேண்டும். குறிப்பாக மலை பகுதிகளில் இந்த மாதங்களில் நாம் பயணித்தால் மண்டை பிளக்கும் வெயில் மனதையும் பிளக்கவே செய்யும்.

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் சிறந்த இடமாக நம் பயணத்தின் பட்டியலில் இடம்பெறும் இடங்களை பற்றி நாம் இப்பொழுது பார்க்கலாம்.

 நாகலாபுரம்:

நாகலாபுரம்:


காடுகள் சூழ்ந்த நாகலாபுரம் ஆந்திரபிரதேசத்தில் காணப்பட, தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேச எல்லையை இது தழுவி காணப்படுகிறது. சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவில் இவ்விடம் காணப்பட, வாரத்தின் விடுமுறையை இங்கே செலவிட்டு நம் மனதினை வருட ஆசைக்கொள்ளலாம்.

அழகிய காடுகள் கொண்ட நாகலாபுரத்தில் நாம் ஓர் அல்லது இரண்டு நாட்கள் பயணித்து மனதில் பரவசத்தை நிரம்ப செய்ய, ஒரு நாளில் இந்த பயணமானது முடிவுக்கு வரும் காட்சியே நம் கண்களில் தோன்றி மனதில் எதிர்ப்பார்ப்பை உண்டாக்குகிறது. நாம் இந்த மலைப்பகுதியில் கூடாரம் அமைத்து, தங்கி ஓய்வின் மூலம் நேரத்தை செலவிட்டு மறு நாள் காலையிலும் புறப்பட்டு செல்லலாம்.

இங்கே அணைக்கு அருகில் கூடாரமிடும் நாம், பயணத்தின் அடித்தளத்தையும் இங்கே பார்க்கிறோம்.

Shmilyshy

 உப்பலமடகு நீர்வீழ்ச்சி:

உப்பலமடகு நீர்வீழ்ச்சி:

ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு எல்லைகளில் காணப்படும் தடா நீர்வீழ்ச்சியானது, ‘உப்பலமடகு நீர்வீழ்ச்சி' எனவும் அழைக்கப்படுகிறது. சென்னையிலிருந்து 92 கிலோமீட்டர் தொலைவில் இந்த நீர்வீழ்ச்சியானது காணப்பட, ஒட்டுமொத்தமாக 10 கிலோமீட்டர் பயணத்தின் மூலம் இவ்விடத்தை நாம் அடைந்து அதன்பிறகு நாம் திரும்ப, ஒரு நாள் நமக்கு ஆகிறது.

இந்த பயணமானது ஒரு நாள் கை நீட்டி நம்மை வரவேற்க, வார விடுமுறையில் நாம் புத்துணர்ச்சியுடன் நாட்களை செலவிட்டு அடுத்த வாரத்துக்கு நம்மை தயார்படுத்திக்கொள்ள சாகச இடமாக இது அமைகிறது. இந்த பயணத்தில் நம் கண்களை குளிர்விக்கும் காட்சிகளானது தடாவின் மூலம் நம் மனதினை அமைதிக்கொள்ள செய்து தூய்மையான நீரின் நிறமும் நம் மனதை நெருடுகிறது. மேலும் இந்த பாறை நிலப்பரப்புகள் நம் மனதில் அழகிய காட்சிகளின் பதிவையும் உணர்த்துகிறது.

Shmilyshy

 ஏலகிரி:

ஏலகிரி:

3,600 அடி உயரத்தில் காணப்படும் ஏலகிரி, அற்புதமான மலைப்பகுதியாகும். சமீபத்தில், சுற்றுலா பயணிகளின் வருகையை பெருமளவில் இந்த இடம் ஈர்த்திட, ஒதுக்குபுறத்தில் ஒரு குக்கிராமமானது பள்ளத்தாக்குகள், மலைகள், மற்றும் அழகிய காட்சிகள் என கண்களை கவர்வதோடு, அன்றாட வாழ்க்கையின் அற்புதமான இடமாகவும் நம் அசதிக்கு அமைகிறது.

மலை ஏறுவதற்கு இடங்கள் பல காணப்பட்டாலும், பீருமேடு நீர்வீழ்ச்சி அல்லது சுவாமி மலை மிகவும் பிரசித்திபெற்ற மலை ஏறும் இடமாகும். இந்த இரண்டு., மலை ஏறும் இடங்களும், எளிதாகவும் இருக்க...குறுகியதாகவும் அமைந்து பயணத்தின் பாதையாக 3 முதல் 5 கிலோமீட்டர் வரை காணப்படுகிறது.

அதனால், மலை ஏறும் கத்துக்குட்டிகளுக்கு ஏலகிரியானது சிறந்த இடமாக அமைய, சென்னையிலிருந்து 230 கிலோமீட்டர் தொலைவில் இவ்விடம் காணப்படுவதோடு 4 மணி நேர அவகாசமும் நமக்கு இப்பயணத்திற்கு தேவைப்படுகிறது.

solarisgirl

 தலக்கோணம் நீர்வீழ்ச்சி:

தலக்கோணம் நீர்வீழ்ச்சி:

சென்னையிலிருந்து 190 கிலோமீட்டர் தொலைவில் இந்த தலக்கோணம் பகுதி காணப்பட, ஆந்திர பிரதேசத்தின் உயரிய நீர்வீழ்ச்சியாக இந்த தலக்கோணம் காணப்படுகிறது. இந்த பயணத்தின் மூலமாக பசுமையான காடுகளின் வழியாக நாம் அழகிய தலக்கோண நீர்வீழ்ச்சியை அடைகிறோம். 270அடி உயரத்தில் விழும் இந்நீர்வீழ்ச்சியானது, சுற்றுலா பயணிகளின் எண்ணற்ற வருகையை சுண்டி இழுக்கும் என்பதில் எத்தகைய சந்தேகமும் வேண்டாம்.

சந்தன மரங்கள் நிறைந்த காடுகளின் வழியே நாம் ஏறிச்செல்ல, இறுதியில் மதிமயக்கும் அழகால் மனதினை கட்டி ஈர்க்கும் நீர்வீழ்ச்சியின் முன்னே கவலைகளை மறை(ற)க்கிறோம். இந்த காடுகளில் மூலிகை பண்புகள் நிறைந்த செடிகளானது நிறையக் காணப்பட, தலகோணத்தின் நீரிலும் அதன் பண்புகள் சேர்ந்து நம்மை ஆச்சரியமடைய வைக்கிறது.

நிலத்திலிருந்து 40 அடி உயரத்தில் காணும் கயிற்றின் மூலம் நாம் நடக்க, ஓடைகள் மற்றும் தட்டுக்களின் மேலே நாம் நடந்து செல்ல, அது மனதில் புதுவித உணர்வினை உண்டாக்குகிறது.

Vinoth Chandar

 வெங்கடேஷ்வரா மலைகள்:

வெங்கடேஷ்வரா மலைகள்:

மற்ற பயணங்களை காட்டிலும்...இந்த பயணத்தின் வாயிலாக 48 கிலோமீட்டர்கள் நாம் செல்ல, சுமார் 3 நாட்கள் நீண்ட நெடிய பயணமாக இந்த பயணம் அமைந்து முழுமையடைய காத்துக்கொண்டிருக்கிறது. இந்த மலையானது அழகிய காடான ஸ்ரீ வெங்கடேஷ்வரா தேசிய பூங்காவில் அமைந்திருக்க, ஓடைகளில் நிரம்பி ஓடும் நீரும், சிறிய நீர்வீழ்ச்சியும் மாறுபட்ட க்ரீச்சொலியுடன் காணப்படுகிறது. உங்களுக்கு அதிர்ஷ்டம் இருக்குமெனில், இந்த பூங்காவில் காணும் விலங்குகளையும் கண்டு மனமகிழலாம் என்றும் சொல்லப்படுகிறது.

குமரதரா அணை பகுதியில் தொடங்கும் இப்பயணம், கோதப்பள்ளி கிராமத்தின் அருகாமையில் காணப்படும் தேசிய நெடுஞ்சாலையில் முடிவடைகிறது. இந்த நவீன உலகத்தில் நைபட்ட உங்கள் மனதிற்கு ஓய்வாக இந்த இடமானது அமைவதோடு, இயற்கை அன்னையின் மடியில் தாலாட்டு பாடி தூக்க வைத்து சாகசங்களால் துள்ளி குதிக்கவும் செய்கிறது.

pranav

 கொல்லி மலை:

கொல்லி மலை:

4,000 அடி உயரத்தில் காணப்படும் இம்மலை, உங்கள் வாட்டத்தை விடுமுறையில் போக்கும் சிறந்த மலைப்பகுதியாகும். சென்னையிலிருந்து 368 கிலோமீட்டர் தூரத்தில் காணப்படும் இந்த மலைப்பகுதியின் மேலே ஏற நமக்கு இரண்டு நாட்களுக்கு குறைவாக தேவைப்படுவதில்லை. இங்கே மலை ஏறும் நாம், நம்முடைய இரண்டாம் நாளில் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியையும் கண்டு மனமகிழலாம்.

இந்த பயணத்தின் தன்மையானது மிதமாக காணப்பட, நமக்கு கொஞ்சம் முன் அனுபவமானது இருந்தாலே போதுமெனவும் தோன்றுகிறது. இந்த பயணமானது எளிதாகவும், இன்பமூட்டக்கூடியதாகவும் இருக்க...அழகிய காட்சிப் பின்புலங்களை கொண்டு, மலைகளின் நிலப்பரப்புகளும் நம் மனதில் நெகிழ்ச்சியை விதைக்கிறது.

siddharth sarangan

 ஏற்காடு:

ஏற்காடு:

மற்றுமோர் அழகிய இடமாக ஏற்காடு காணப்பட, பயண ஆர்வலர்களின் பார்வையில் படும் குறைந்தபேர் வந்து செல்லும் ஒரு இடமாகவும் விளங்குகிறது. இதன் பின்புலங்களில் கிழக்கு தொடர்ச்சி மலைகள் காணப்பட, செவ்ராய் மலை தொடர்ச்சிதான் ஏற்காடு பயணத்திற்கு ஏற்ற இடமாக விளங்குகிறது. சென்னையிலிருந்து 267 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் இப்பகுதியை ‘கிழக்கின் பொக்கிஷம்' என்றும் அழைக்கப்படுகிறது.

செவ்ராய் மலைகளில் பயணம் மேற்கொள்வதென்பது தவிர்க்க கூடாத ஒன்றாக அமைய, அது நம் பயணத்தின்போது புதியதோர் அனுபவத்தையும் தருகிறது. இந்த காடுகளின் வழியாகவும், கிழக்கு தொடர்ச்சியில் காணப்படும் மலைகளின் வழியாகவும் நாம் செல்ல, வர்ணிக்க வார்த்தைகள் அற்று தவிக்கிறோம் என்பதே உண்மை.

Thangaraj Kumaravel

Read more about: travel, trek