» »ஹம்பியில் நீங்கள் கட்டாயம் மறக்கக்கூடாத ஏழு விசயங்கள்!

ஹம்பியில் நீங்கள் கட்டாயம் மறக்கக்கூடாத ஏழு விசயங்கள்!

Written By: Udhaya

ஒவ்வொரு முறை சுற்றுலா செல்லும்போதும் புதியதாக ஏதாவதொரு இடத்துக்கு போகவே மனம் விரும்பும். அதே நேரத்தில் புதிய இடங்களில் என்ன செய்யவேண்டும் என்பது தெரியாமலே இருக்கும். அதைத் தெரிந்துகொள்ளும் வகையில் தமிழில் சுற்றுலா இணையதளங்கள் மிகமிக குறைவாகும்.

ஒருவேளை ஹம்பி உங்கள் பயணத் திட்டத்தில் இடம்பிடித்திருந்தால், ஹம்பியில் நீங்கள் கட்டாயம் மறக்கக்கூடாத ஏழு விசயங்கள் இவைதான்!

டாக்ஸி போட் எனும் படகு சவாரி

டாக்ஸி போட் எனும் படகு சவாரி

பரிசல் பயணம் என்பதைத் தான் அப்படி சொன்னோம். ஹம்பி ஆற்றில் பரிசல் பயணம் செல்வதே அலாதியானது.

இயற்கையின் அழகை நீரில் சென்றுகொண்டே ரசிப்பது இன்னும் அழகானது. இது உங்களுக்கு மகிழ்ச்சியையும், புத்துணர்வையும் அளிக்கும்.

வேளாண் குடில்களில் தங்கும் அனுபவம்

வேளாண் குடில்களில் தங்கும் அனுபவம்

விருந்தினர்மாளிகைகள் எனப்படும் குடில்கள் வேளாண் பகுதிகளில் இருக்கும். அங்கு தங்கி வேளாண் பெருமையை அறிவதும் சிறப்பானதாகும்.

ஹம்பியை சுற்றியுள்ள கிராமங்களில் சில வீடுகள் இந்த மாதிரி இருக்கிறது. மூன்று இரவுகளுக்கு 12 ஆயிரம் ரூபாய் என்ற அளவில்.

காலை சிற்றுண்டியுடன், துவைத்தல் உள்பட பல வசதிகள் செய்துதரப்படும்.

La Priz

வாடகை பைக்குகளில் உல்லாச பயணம்

வாடகை பைக்குகளில் உல்லாச பயணம்


பைக்கில் பயணம் செய்வது நம் அனைவருக்கும் பிடித்தமான விசயம். ஹம்பியில் பைக் வாடகைக்கு எடுத்து ஒரு ரவுண்ட் போய் பாருங்க.. ஒரு நாள் பூரா போகணும்னு கேப்பீங்க..

editor CrazyYatra

கிளிஃப் ஜம்பிங்

கிளிஃப் ஜம்பிங்

உயரமான இடத்திலிருந்து ஓடி வந்து நீரில் குதிப்பது இங்கு மிகவும் பிரபலமான அதே சமயத்தில் ரிஸ்க்கான சாகசமாகும்.

உங்களுக்கு தில் இருந்தா பண்ணிப்பாருங்க..

editor CrazyYatra

 மாதங்கா குன்றில் மகிழ் நிமிடங்கள்

மாதங்கா குன்றில் மகிழ் நிமிடங்கள்

மாதாங்கா மலைமீது ஏறி செல்ஃபி எடுப்பதற்கென்றே ஒரு குழு அங்கு திரிந்துகொண்டிருக்கும். நீங்களும் அவர்களில் ஒருவரா உடனே ஹம்பி செல்லுங்கள்.

pupilinblow

லோட்டஸ் மஹால் எனப்படும் தாமரை மஹால்

லோட்டஸ் மஹால் எனப்படும் தாமரை மஹால்

இளநீர் வாங்கி அருந்திக்கொண்டே ஹம்பியின் தாமரை மஹாலை ரசியுங்கள்.

Nicolas Vollmer

 நீச்சல் அனுபவம்

நீச்சல் அனுபவம்

இங்குள்ள ஏரியில் குதித்து குளித்து கும்மாளமிட்டு நீந்தி மகிழுங்கள். அது மிகவும் இன்பமான நிகழ்வாகும்.

Nico Crisafulli