» »ஒடிசா மாநிலத்தில் நாம் பார்க்க வேண்டிய 8 முக்கிய இடங்கள்!!

ஒடிசா மாநிலத்தில் நாம் பார்க்க வேண்டிய 8 முக்கிய இடங்கள்!!

Written By: Bala Karthik

ஒத்ரா பழங்குடியினரின் வீடாக இவ்விடம் இருக்க, இவர்கள் சூரிய தேவனை வணங்குகின்றனர். பழமையான கட்டிடக்கலை கைவண்ணங்களுக்கு இந்த ஒடிசா இன்று புகழ்பெற்று விளங்குகிறது. 62 பழங்குடியினர் கிராமங்களுக்கு புகழ்பெற்ற இந்த மாநிலம், மைக்ரோ கலாச்சார மையங்களை கொண்டிருப்பதோடு, புவனேஷ்வரை தலை நகரமாக கொண்டு 600 ஆலயங்களுடனும் காணப்படுகிறது. உங்கள் எதிர்ப்பார்ப்புகளை நூறு சதவிகிதம் பூர்த்தி செய்யும் ஒரு இடமாக ஒடிசா கண்டிப்பாக இருக்குமென்பதில் எத்தகைய சந்தேகமும் வேண்டாம்.

ஒடிசா மாநிலத்தின் கதவுகள் சுற்றுலா பயணிகளுக்காக திறந்து வைக்கப்பட்டிருக்க, பயணத்தின் மாறுதல்களையும் நாம் உணர்கிறோம். இந்திய சர்ப் விழாவானது ராம்சண்டி கடற்கரையில் கொண்டாடப்பட, கடந்த சில வருடங்களாக இவ்விழா சுற்றுலா பயணிகளின் மனதினை வெகுவாக கவர்ந்து வரவேற்கிறது. மேலும், இந்த ஒடிசா மாநிலத்தில் நாம் செய்ய வேண்டிய விசயங்கள் என்பதனை தெரிந்துக்கொள்வதோடு, காட்சிகளால் அவை நம் மனதில் எவ்வாறு ஒளியூட்டுகிறது என்பதை பற்றியும் நாம் பார்க்கலாம்.

 சிலிகா ஏரியில் டால்பின்களை காணலாம்:

சிலிகா ஏரியில் டால்பின்களை காணலாம்:


பூரியில் 48 கிலோமீட்டர் தொலைவில் கடற்கரை காணப்பட, சடப்படா நகரத்தில் சைலண்டாக அமைந்திருக்கிறது இந்த சிலிகா ஏரி. இந்த ஏரியானது சுற்றுலா பயணிகளின் ஈர்ப்பை இறுக்கி பிடித்திருக்க, ஏரிகளிலிருந்து கடல் வழியாக பாய்கிறது. இங்கே டால்பின்களை பார்ப்பதற்கான வாய்ப்பு பெரிதாக இருக்க, பல்வேறு இடங்களிலிருந்து வரும் பறவைகளான காட்வால், வடக்கு முள் வால் பறவை என பல பறவைகளை நம்மால் இங்கே பார்க்க முடிகிறது.

Rajanikant Mishra(rkmbpt)

 குறைவாக வந்து செல்லும் அழகிய சந்திரபாகா கடற்கரை:

குறைவாக வந்து செல்லும் அழகிய சந்திரபாகா கடற்கரை:

பூரியிலிருந்து 37 கிலோமீட்டர் தொலைவில் சந்திரபாகா கடற்கரை காணப்பட, கோனார்க்கில் காணப்படும் பிரசித்திபெற்ற ஆலயத்தின் மிக அருகில் இது காணப்படுகிறது. எண்ணற்ற மக்கள் இந்த கடற்கரைக்கு மகாவின் ஏழாம் நாள், இந்து காலண்டர் படி வந்து செல்கின்றனர். இங்கே வந்து சூரிய தேவனை வணங்கியும் அவர்கள் செல்கின்றனர். இந்த கடற்கரை புகைப்பட ஆர்வலர்களின் மனதினை எண்ணற்ற காட்சிகளால் பரவசத்தில் ஆழ்த்தும் என்பதே உண்மை.

Tanbatra

 ராம்சண்டி கடற்கரையின் இந்திய சர்ப் திருவிழா:

ராம்சண்டி கடற்கரையின் இந்திய சர்ப் திருவிழா:

2012ஆம் ஆண்டு இந்த திருவிழா ஆரம்பிக்கப்பட, உலாவல் ஆர்வலர்களால் குழுவாக இது தொடங்கப்பட்டதும் தெரியவருகிறது. அமைதியான கிழக்கு கடற்கரையை ஆரவாரமிக்கதாக மையங்களின் மூலம் மாற்றப்பட, கோனார்க்கின் அருகில் காணும் ராம்சண்டி கடற்கரையில் ஒவ்வொரு வருடமும் இவ்விழா கொண்டாடப்படுகிறது.

mik_c

 ரிஷிக்குலியாவிற்கு வருவதன் மூலம் ஆலிவ் ரிட்லி ஆமைகளை காணுங்கள்:

ரிஷிக்குலியாவிற்கு வருவதன் மூலம் ஆலிவ் ரிட்லி ஆமைகளை காணுங்கள்:


ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகளை கொண்ட இந்த தரைத்தளமானது ரிஷிக்குலியா நதி வாயினை வீடாக கொண்டிருக்கிறது. இந்த அமைதியான இடத்திற்கு வரும் பயணிகளும், புகைப்பட ஆர்வலர்களும், காட்சிகளால் இதமான மனதினை கொண்டிட கூடும் பருவத்தின்போது, இவை மீண்டும் கடலை நோக்கி சென்று விடுகிறது.

Pinku Halder

 பிடர்கனிகாவிற்கு ஒரு படகு பயணம் வாங்க செல்லலாம்:

பிடர்கனிகாவிற்கு ஒரு படகு பயணம் வாங்க செல்லலாம்:

ஒடிசாவை தலைமையாக கொண்ட இந்த பிடர்கனிகா தேசிய பூங்கா, வனவிலங்கு ஆர்வலர்களுக்கு சிறந்த இடமாக விளங்குகிறது. இந்த பூங்காவின் பரப்பளவானது 672 சதுர கிலோமீட்டர் பிடர்கனிகா சதுப்பு நிலத்தை சூழ்ந்து காணப்பட, இங்கே படகு பயணத்தின் மூலம் வருபவர்கள், உப்பு நீர் முதலைகள், நீர் கண்காணிப்பு பல்லி, ராஜ நாகமென பல உயிரினங்களையும் பார்க்கின்றனர்.

Puru150

 சந்திப்பூர் கடற்கரையின் ஒளிவு மறைவு இடம்:

சந்திப்பூர் கடற்கரையின் ஒளிவு மறைவு இடம்:

ஒடிசாவில் காணப்படும் குறைவாக வந்து செல்லும் ஒரு கடற்கரையாக சந்திப்பூர் கடற்கரை காணப்படுகிறது, குறைவான அலைகளை கொண்டிருக்கும் இதன் கடல் அலைகள் தோராயமாக 5 கிலோமீட்டர் பின்வாங்குவது முதல். கடற்கரையை தினமும் உயர் அலைகள் சூழும் காட்சிகள் வரை நமக்களிக்கிறது. சந்திப்பூர் கடற்கரையானது தனித்துவமிக்கதாக காணப்படுவதோடு, அழகிய காட்சிகளையும் நம் கருவிழிகளுக்கு பரிசாய் தருகிறது. மேலும், இந்த கடற்கரை ஆர்வமிக்க அருகில் காணும் ரெமுனா, பஞ்சலிங்கேஸ்வரர் ஆரடி மற்றும் சந்தனேஷ்வரையும் கொண்டிருக்கிறது.

Surjapolleywiki

ரகுராஜப்பூர் கிராமத்தை காணலாம் வாருங்கள்;

ரகுராஜப்பூர் கிராமத்தை காணலாம் வாருங்கள்;

வசிப்பிடத்து கைவினைஞர்களையும் கொண்டிருக்கும் இந்த புகழ்பெற்ற ரகுராஜப்பூர் கிராமம், பட்டசித்ரா கலைத்தன்மையுடன் காணப்படுகிறது. இங்கே ஆடைகளால் மற்றும் பனை இலைகளால் வரையப்பட்ட நுண் வடிவமைப்பு கொண்ட ஓவியங்கள் காணப்படுகிறது. இந்த சிறு கிராமத்தில் உள்ள குடும்பங்களால் பழமையான கைவினை அர்ப்பணிக்கப்பட்டிருக்க, அழகிய ஓவியங்கள் மட்டுமல்லாமல், பேப்பர் வெய்ட், பக்க அட்டவணைகள், காகித மயிர் என பலவற்றையும் இவர்கள் வடிவமைக்கின்றனர்.Ben30ghosh

 கந்தகிரி குகைகள் உள்ளே ஆராயலாம் வாருங்கள்:

கந்தகிரி குகைகள் உள்ளே ஆராயலாம் வாருங்கள்:

இந்தியாவின் பழம்பெரும் பாறை வெட்டு கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளுள் ஒன்றாக கந்தகிரி குகை விளங்குகிறது. இந்த குகைகள், காரவேலா அரசர் ஆட்சியின் ஜெய்ன் துறவிகளின் வீடாக செதுக்கப்பட்டிருக்கிறது. புவனேஷ்வரில் காணப்படும் ஜெய்ன் ஆலயங்களிலிருந்து ஒரு மணி நேரம் இவ்விடத்திற்கு ஆகிறது. இந்த அமைப்பானது நாட்டின் பழங்காலத்து கட்டிடக்கலைக்கு அருமையான எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது.

Palak.maheshwari

Read more about: travel