» »9 மூலைகளையும் ஒன்றாக பார்த்தால் கிடைக்கும் அற்புத ஆற்றல் - நௌகுசியாடல் மர்மங்கள்

9 மூலைகளையும் ஒன்றாக பார்த்தால் கிடைக்கும் அற்புத ஆற்றல் - நௌகுசியாடல் மர்மங்கள்

Written By: Udhaya

நௌகுசியாடல் என்ற சிறிய ஏரி கிராமம் உத்தரகண்டிலுள்ள நைனிடால் மாநகராட்சியில், கடல் மட்டத்திலிருந்து 1219 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள ஏரியின் அழகும், பல தீர விளையாட்டுக்களும் ஒரு நிறைவான சுற்றுலா அனுபவத்தை தரும். இந்த இடத்தில் பல வகைகளான பறவைகளையும் பட்டாம்பூச்சிகளையும் காணலாம். இங்குள்ள ஒரு இடத்தில் இருந்து பார்க்கும்போது உங்களுக்கு ஒரு 9 மூலைகள் தெரியும். இதை நீங்கள் கண்டால் உங்கள் மனதுக்குள் அற்புத ஆற்றல் ஒன்று குடிபுகுவதாக கூறப்படுகிறது. சரி அந்த கிராமத்தைப் பற்றி பார்க்கலாம் வாருங்கள்.

 எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

இந்த ஏரி கிராமம் நைனிட்டாலிலிருந்து 25கிமீ தொலைவில் அமைந்துள்ளது. அதாவது கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தில் இந்த இடத்தை நாம் எளிதில் அடையலாம்.

படகு சவாரி

படகு சவாரி

இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இங்குள்ள ஏரியில் படகு சவாரி, நீச்சல் மற்றும் மீன் பிடித்தல் போன்றவற்றிலும் ஈடுபட்டு மகிழலாம். மேலும் மலை மீது பைக் ஓட்டுவதும் இங்கு புகழ் பெற்றதாகும்.

Dr Satendra

 ஒன்பது மூலைகள்

ஒன்பது மூலைகள்

மலை மீது பைக் ஓட்டிச் செல்வதால், யாரும் கால் பதிக்காத பல இடங்களுக்கு சென்று வரலாம். நௌகுசியாடல் ஏரியை ஒன்பது மூலைகள் கொண்ட ஏரி என்றும் அழைப்பர். இந்த ஒன்பது மூலைகளையும் ஒரே நேரத்தில் ஒன்றாக பார்ப்பவர்கள் நிர்வாணா என்ற மன அமைதியை பெறுவார்கள் என்ற நம்பிக்கை நிலவுவது உண்டு.

Manoj Khurana
https://commons.wikimedia.org/wiki/Category:Naukuchiatal#/media/File:Naukuchiatal-Shikara.JPG

பீம்தால்

பீம்தால்

இந்த ஏரியின் அடியில் ஊற்று இருப்பதால், ஏரியில் வருடம் முழுவதும் தண்ணீர் இருக்கும். மேலும் இந்த ஏரியில் படகு சவாரியும், ஏரியை சுற்றியுள்ள இடங்களில் பாராகிளைடிங் போன்ற விளையாட்டுக்களிலும் ஈடுபடலாம். இந்த இடத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் ஏரிகளுக்கு பெயர் போன பீம்தால் என்ற இடம் உள்ளது.

Anonymous

சாட்டல்

சாட்டல்


இதே போல் இந்த இடத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள சாட்டல் என்ற இடமும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வண்ணம் இருக்கும். இந்த இடத்தில் ஏழு இணைந்த ஏரிகளைக் காணலாம். பயணிகள் நௌகுசியாடல் பகுதியை விமானம், ரயில் மற்றும் தரை வழி மார்க்கமாக சுலபமாக வந்தடையலாம்.

Manoj Khurana

 விமான நிலையம்

விமான நிலையம்

நௌகுசியாடலுக்கு மிக அருகில் இருக்கும் விமான நிலையம் பண்ட்நகர் விமான நிலையம். நௌகுசியாடலுக்கு மிக அருகில் இருக்கும் இரயில் நிலையம் கத்கோடம் இரயில் நிலையம் ஆகும். மேலும் நைனிடாலிலிருந்து பேருந்துகள் மூலமாகவும் நௌகுசியாடலுக்கு வரலாம். இந்த ஏரியை காண வரும் சுற்றுலாப் பயணிகள் கோடைக்காலம் மற்றும் பருவக்காலம் முடிவில் வருவதே சிறந்த நேரமாக இருக்கும்.

Pratima m

 நௌகுசியாடல் ஏரி

நௌகுசியாடல் ஏரி

அழகிய நீர் நிலையான நௌகுசியாடல் ஏரி கடல் மட்டத்திலிருந்து 3996 அடி உயரத்தில் உள்ளது. நௌகுசியாடல் என்பதற்கு ஒன்பது மூளைகள் உள்ள ஏரி என்று அர்த்தமாகும். இந்த ஏரியின் ஒன்பது மூளைகளையும் ஒரே நேரத்தில் பார்ப்பவருக்கு நிர்வாணம் கிட்டும் என்ற நம்பிக்கையுண்டு. இந்த ஏரிக்கு அடியில் ஊற்று இருப்பதால், இந்த ஏரியில் வருடம் முழுவதும் தண்ணீர் இருக்கும். இந்த இடத்தில் பல வகையான பறவைகள் இனம் இருப்பதால் இங்கு வருபவர்கள் அதனை கண்டு ரசிக்கலாம். மேலும் ஏரியில் படகு சவாரி, நீச்சல் மற்றும் மீன் பிடித்தல் போன்றவைகளில் ஈடுபடலாம். இது போக மலை ஏறுதல் மற்றும் பாராகிளைடிங் போன்ற தீர விளையாட்டுக்களிலும் ஈடுபட்டு பொழுதை இன்பமயமாக கழிக்கலாம். இயற்கை அழகு கொட்டி கிடக்கும் இந்த ஏரியை சுற்றி நடை பயணம் மேற்கொண்டால் சுற்றுலாப் பயணிகளுக்கு மன நிம்மதியை அளிக்கும்.

Manoj Khurana

 பாராகிளைடிங்

பாராகிளைடிங்


நௌகுசியாடலில் பெரும்பாலான பயணிகள் ஈடுபடும் தீர விளையாட்டுக்களில் ஒன்று பாராகிளைடிங். எனவே நௌகுசியாடல் பாராகிளைடிங் செய்வதன் மூலம் ஒரு பறவையின் பார்வையில் இருந்து, இந்த இடத்தில் உள்ள பசுமை நிறைந்த காடுகளையும் ஏரியையும் கண்டுக்களிக்கலாம். இந்த விளையாட்டில் ஈடுபட மார்ச் முதல் ஜூன் வரை மற்றும் அக்டோபர் முதல் டிசம்பர் வரையே சிறந்த பருவங்களாக கருதப்படுகின்றன.

Claudio.stanco

Read more about: travel, lake