» »ஹோட்டல் அறைகளில் நீ்ங்க இது கூட செய்யலாமா? அந்த 9 ரகசியங்கள்

ஹோட்டல் அறைகளில் நீ்ங்க இது கூட செய்யலாமா? அந்த 9 ரகசியங்கள்

Posted By: Udhaya

சுற்றுலா என்பதன் முக்கிய அம்சமே ஓய்வுடன் கூடிய மனமகிழ்வுதான். அப்படி தூரத்து இடங்களுக்கு சுற்றுலா செல்பவர்கள் ஓய்வு எடுத்துக்கொண்டு அடுத்தடுத்த இடங்களுக்கு செல்ல தங்கும் விடுதிகள் நல்ல தரமான தகுதிக்கேற்ற விலையில் கிடைக்கும்.

ஆனால் நம்மவர்களுக்கு இந்த மாதிரியான ஹோட்டல்களில் என்ன கிடைக்கும் என்ன செய்யலாம் எது செய்யக்கூடாது என்பது பற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை.

அப்படி பொதுவாக ஹோட்டல்களில் இவற்றை நீங்கள் செய்யமுடியும் என்று கேள்விப்பட்டாலே உங்களால் ஆச்சர்யப்படாமல் இருக்கமுடியாது. ஆம் இந்த 9 ரகசியங்களும் நீங்கள் தங்கும் பெரும்பான்மையான ஹோட்டல்களில் செய்ய அனுமதிக்கப்படுபவை ஆகும்,.

ஹோட்டல் செல்வதற்கு முன்

ஹோட்டல் செல்வதற்கு முன்

பொதுவாக சுற்றுலாவுக்கு தகுந்த இடத்தைப் பார்த்துவிட்டு, குறைந்த விலையில் வசதியே இல்லாத தரமற்ற விடுதிகளை புக் செய்துவிட்டு அங்கே சென்றபின் அது நொட்டை அது நொள்ளை என்று பிதற்றுவதே நம்மவர்களின் வேலையாயிற்று.

PC: Native Planet

ஒப்பிடுதல்

ஒப்பிடுதல்

இப்போது ஹோட்டல் புக் செய்வதற்கென்றே பலப்பல தனியார் இணையதளங்கள் இயங்கி வருகின்றன. நமது நேட்டிவ் பிளானட் தளத்திலேயே ஹோட்டல் ஒப்பிடுவதற்கான அணுகுமுறைகளும் உள்ளன. ஒப்பீட்டு கட்டணத்தில் எது குறைந்த அதே நேரத்தில் தரமான இடத்தை தேர்வு செய்து செல்லுங்கள்.

PC: Native Planet

தரவரிசை

தரவரிசை

ரேட்டிங்க் என்ற அடிப்படையில் சில விடுதிகள் தரவரிசையை வெளியிட்டிருப்பார்கள். அல்லது அந்த விடுதி குறித்து வாடிக்கையாளர்களின் கருத்துக்களை படித்துவிட்டு பின்பு புக் செய்வது சிறந்தது.

PC: Native Planet

உங்கள் பணிகளைப் பொறுத்து முன்கூட்டியே புக் செய்தல்

உங்கள் பணிகளைப் பொறுத்து முன்கூட்டியே புக் செய்தல்


எப்படியும் நீங்கள் ஹோட்டலில் தங்கியாகவேண்டிய சூழ்நிலை வரும் என்று ஓரளவு சற்று முன்னர் தெரிந்திருந்தால் ஹோட்டலுக்கு அழைத்து முன்கூட்டியே புக் செய்யலாம்.

அது சாலச்சிறந்தது என்கின்றனர் பெரும்பான்மையான விடுதி மேலாளர்கள்.

PC: Native Planet

சுத்தம் அவசியமல்லவா

சுத்தம் அவசியமல்லவா


நீங்கள் முன்கூட்டியே அழைத்து புக் செய்துவிட்டால் விடுதி காப்பாளர்கள் முன்கூட்டியே விடுதியை நன்கு சுத்தப்படுத்திவிட வாய்ப்பு கிட்டும். இது உங்களின் நேர மேலாண்மைக்கு கைக்கொடுக்கும்.

PC: Native Planet

 வசதிகளை கேட்டு வாங்குங்கள்

வசதிகளை கேட்டு வாங்குங்கள்

நீங்கள் குறிப்பிட்ட விடுதியில் தங்குவதாய் இருந்தால் உங்களுக்கு என்னென்ன வசதிகள் கிடைக்கும் என்பதை முன்கூட்டியே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ஒருவேளை முன்கூட்டியே கூறினால் விடுதி காப்பாளர்கள் நிச்சயமாக செய்துதருவார்கள் என்கிறார்கள் சில விடுதி மேலாளர்கள்.

PC: Native Planet

ஆளுமை

ஆளுமை


ஹோட்டல் ஊழியர்களிடம் அதிகம் சீன் போடாமல், அதே நேரத்தில் ஆளுமைத் தன்மையுடன் மிடுக்காக நடந்து கொண்டால் உங்களுக்கு தேவையான வசதிகள் மனம் கனிந்து செய்யப்படும்.

PC: Native Planet

உண்மை நீதி நியாயம்

உண்மை நீதி நியாயம்

உண்மையாகவும், தொழிலாளிகளுக்கு நட்பு பாராட்டும் விதத்திலும் நீங்கள் பழகினால் ஹோட்டலில் மேலாளருக்கு இல்லாத மரியாதைக் கூட உங்களுக்கு கிடைக்கும் என்கிறார்கள் சிலர்.

PC: Native Planet

குறை கூறாதிருங்கள்

குறை கூறாதிருங்கள்

ஹோட்டல் அறையை புக் செய்துவிட்டு உடனே விடுதி ஊழியரை கடுப்பேத்தி அது சரியில்லை இது சரியில்லை என்று எரிந்து விழாதீர்கள். ஒருவேளை சரியில்லாமல் இருந்தாலும் தன்மையாக எடுத்துக் கூறுங்கள். உங்களுக்கு இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்கிறார் விடுதி மேலாளர் ஒருவர்.

PC: Native Planet

ஆடைகள் அணிகலன்கள்

ஆடைகள் அணிகலன்கள்


சில ஹோட்டல்களில் ஆடைகள் அணிகலன்கள் கூட தரப்படுகிறது. உங்களுக்கு ஆடை தேவைப்படுகிறதென்றால் விடுதி ஊழியரிடம் தெரிவிக்கலாம்.

PC: BoldSky

மது பாட்டில்கள்

மது பாட்டில்கள்

சில ஹோட்டல்களில் மது தடைசெய்யப்பட்டிருக்கலாம். அதுபோக மற்ற விடுதிகளில் நீங்கள் விரும்பிய வகை மதுக்களை பெற்று உங்கள் அறைக்கே வந்து தருகின்றனர் ஊழியர்கள்.

PC: Boldsky

நடன மங்கைகள்

நடன மங்கைகள்


சில ஹோட்டல்களில் விருந்துகள் நடைபெற்றால் அங்கு நடமாடும் மங்கைகளும் இருக்கலாம். அனுமதி பெற்று நடத்தப்படும் பல பார்களில் இந்த பெண்களுடன் நடன நிகழ்ச்சி அட்டகாசமாக நடத்தப்படுகிறது.

Boldsky

நீங்களே சமைத்து உண்ணுங்கள்

நீங்களே சமைத்து உண்ணுங்கள்

உங்களுக்கு சமைப்பதில் ஆர்வம் அதிகமா. உங்கள் கைப்பக்குவத்திற்கு யாரும் ஈடாக முடியாது என்றால் நீங்களே களத்தில் இறங்கி விடுங்களேன். சில ஹோட்டல்கள் அதற்கான வசதிகளை தருகின்றன.

PC: BoldSky

Read more about: travel

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்