» »உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பங்கார்க் கோட்டையின் 9 சுவாரசியமான விசயங்கள்!

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பங்கார்க் கோட்டையின் 9 சுவாரசியமான விசயங்கள்!

Written By: Udhaya

நாம் பிறந்ததிலிருந்தே பாட்டியிடம் கதை கேட்டு வளர்ந்திருப்போம். 90ஸ் கிட்ஸ்களுக்கு பிறகு வந்த 2000ஸ் கிட்ஸ்களுக்கு அந்த பாக்கியங்கள் குறைவாகத்தான் இருந்திருக்கும். எந்திரங்கள் நம்மை ஆக்கிரமிக்காத காலம் அது. இந்தியாவே டிஜிட்டல் ஆகிவிட்டபிறகு, கதைகளும் கட்டுரைகளும் டிஜிட்டல்மயம்தானே. ஆனால் இருபத்தைந்து வருடங்களுக்கு முன் அப்படி இல்லை. ஒவ்வொரு இரவும் பாட்டியின் கதை கேட்டு உறங்கச் செல்லும் மிகவும் வெள்ளந்தியான 90ஸ் கிட்ஸ்கள் வாழ்ந்த காலம்.

கடகம் டூ அடுத்த மூனு ராசிக்காரங்களுக்கு புத்தாண்டில் காத்திருக்கும் 'ஜாக்பாட்'.! #AstrologyTemple2

கதை என்றால் வெறும் ராஜா ராணி கதைகளல்ல.. பேய் கதை.. கேட்போரை நடுநடுங்கச்செய்யும் பேய்களின் கதை.. ஆனால் அது கதை மட்டுமல்ல.... நிஜத்தில் அப்படி பலர் பேயைக் கண்டதாக சாட்சிகள் இருக்கின்றன. அப்படி நான் கேட்டறிந்த கதைகளைப் பற்றிய உண்மையை அறிய இப்போது பாங்கார்க் வரை செல்லவிருக்கிறோம். மனது வலிமை குறைந்தவர்கள் இந்த கட்டுரையை படிக்கவேண்டாமென்பது தாழ்மையான கருத்து. பான்கார்க் கோட்டை..... அமானுஷ்யத்தின் ஒட்டுமொத்த உருவம் அது....

எங்குள்ளது

எங்குள்ளது

மான் சிங்க் எனப்படும் ராஜாவால் 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாங்கார்க் கோட்டை, ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ளது. ஆரவல்லிமலைத்தொடரின் அருகில் ஆல்வார் மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த இடம். டெல்லியிலிருந்து 235கிமீ தொலைவில் அமைந்துள்ளது. நீங்கள் எவ்வளவு பெரிய தைரியசாலி என்பதை இந்த கோட்டைக்குள் உங்களை அழைத்துச் சென்றால் கண்டுபிடித்துவிடலாம். மற்றபடி இது மிகச்சிறந்த சுற்றுலாத் தளமாக விளங்கிவருகிறது.
Abhironi1

 நரம்புகள் புடைத்தெழும் வரலாறு

நரம்புகள் புடைத்தெழும் வரலாறு

1631ம் ஆண்டு ராஜா மதோ சிங்கிற்காக இந்த கோட்டை கட்டப்பட்டது. இது ஜெய்ப்பூரிலிருந்து 40கிமீ தொலைவில் அமைந்துள்ளது. நூற்றாண்டுகாலமாக இந்த கோட்டையில் நிறைய பேய்கள் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இங்கு செல்பவர்கள் பலர் இரவு நேரங்களில் மர்மமான முறையில் இறந்து பின் பேயாக சுற்றிவருகின்றனர் என்பது இங்குள்ள பகுதி மக்களின் நீண்ட நாள் பேச்சு.

Himanshu Yogi

அரசே ஒப்புக்கொண்ட உண்மை பேய்கள்

அரசே ஒப்புக்கொண்ட உண்மை பேய்கள்

என்ன அரசே ஒப்புக்கொண்டதா என்று கேட்கிறீர்களா? உண்மைதான்... இந்த கோட்டைக்கு சூரியன் மறைந்த பிறகு செல்ல அனுமதி இல்லை. இது அரசாங்க உத்தரவாகும். ஏற்கனவே இரவு நேரங்களில் சென்ற பலர் கொல்லப்பட்டிருப்பதாகவும் அவர்கள் பேய்களாக நடமாடுவதாகவும் கூறப்படுவதால் மக்கள் இங்கு செல்ல பயப்படுகின்றனர். அதே நேரத்தில் அரசாங்கமும் இங்கு செல்ல தடை விதித்திருப்பது இங்கு பேய்கள் இருப்பதை ஒப்புக்கொள்கிறது என்று தானே அர்த்தம். இங்கு உண்மையில் சென்று வந்த சிலர் மாலை 5 மணிக்கெல்லாம் பேய் நடமாட்டம் இருப்பதாக கூறுகின்றனர்.

Rakami Art Studio

பேய் நடமாட்டத்துக்கான ஆதாரம்

பேய் நடமாட்டத்துக்கான ஆதாரம்

இந்த தலைப்பை படித்தவுடன் உங்களுக்குள் ஒரு கியூரியாசிட்டி பிறந்திருக்கும். என்ன பேய் வந்ததற்கான ஆதாரம் இருக்கிறதா என்று.. சிலர் இதை நம்பப்போவதில்லை. ஏனெனில் அவர்களுக்கு அதன் மேல் நம்பிக்கை இல்லை. ஆனால் ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள் இந்த கோட்டைக்குள் சென்ற நான்கு நபர்கள்தான் அதற்கு சாட்சி.

ஆம்.. நான்கு பேர் பந்தயம் கட்டி இந்த கோட்டைக்குள் சென்றிருக்கிறார்கள். அவர்கள் ஒருவர்தான் இந்த கோட்டையிலிருந்து திரும்பி வந்திருக்கிறார். அவருக்கும் பேச்சு இல்லை. ஆனால் அவரோ இந்த கோட்டையில் பேய் இல்லை என்பதுபோல் கூறியுள்ளார். மற்ற மூவருக்கும் என்ன ஆனதென்பது தெரியவில்லை. கொஞ்ச நாள்களில் அவரும் இறந்துவிட்டதாக அறியப்படுகிறது. இதுகுறித்து எந்தவிதமான தகவலும் வெளியில் சொல்லக்கூடாது என்பது பேயின் நிபந்தனை என்றும் அதை கூறியதால் பேய் அவரைக் கொன்றதாகவும் சிலர் கதை பரப்பி விடுகின்றனர். ஆனால் இறந்த மற்ற மூவரின் உடல்கள் இந்த கோட்டையில் இல்லை...

Nidhi Chaudhry

பாங்கார்க் கோட்டை அருகில் கோயில்கள்

பாங்கார்க் கோட்டை அருகில் கோயில்கள்

இந்த கோட்டையைச் சுற்றி ஹனுமான் கோயில், மங்களாதேவி கோயில், கிருஷ்ண கேசவ் கோயில், சோமேஸ்வரர் கோயில் என நான்கு திசைகளிலும் கோயில்கள் இருக்கின்றன. இவைதான் பேய்களிலிருந்து மக்களை காக்கின்றன என்பது உள்ளூர் நம்பிக்கை. ஆனால் இதை உடைக்க நினைத்து இரவு நேரங்களில் கோட்டைக்குள் சென்றவர்கள் திரும்பி வராதது மிகவும் ஆச்சர்யமான அதிர்ச்சிதான். கோயிலுக்குள் சென்றுவிட்டுதான் கோட்டைக்கு செல்கிறார்கள். கடவுளின் அனுக்கிரகம் நம்மீது இருப்பதாக அவர்கள் ஒவ்வொருவரும் நம்பிக்கொண்டு உள் செல்கின்றனர். Vivek Moyal

கூரையில்லா மண்டபங்கள்

கூரையில்லா மண்டபங்கள்

இந்த கோட்டையினுள் இருக்கும் எந்தவொரு கட்டிடத்துக்கும் கூரை கிடையாது. இது எப்படி சாத்தியம் என்பது பலரது வினாவாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. எப்போதாவது இங்குள்ள மக்கள் கூரை அமைத்தால், அதுவும் எரிந்துவிடுமாம். இதற்காக மக்களில் சிலர் காவலுக்கு இருந்தும் பலனில்லை. அதிக காற்று வீசி கூரையை பிய்த்துக்கொண்டு செல்கிறது என்கிறார்கள் அவர்கள். இவையனைத்தையும் கேட்பவர்கள் இது நிச்சயம் மக்களை முட்டாளாக்கும் எண்ணம் என்று கருதலாம். சிலர் இயற்கையாக நடந்தவற்றை ஏன் அமானுஷ்யம் என்கிறார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். எனினும் உள்ளூர் மக்கள் இன்றுவரை பயப்பட்டுக்கொண்டே இருக்கின்றனர். தைரியம் இருந்தா நீங்களும் ஒரு எட்டு போய்ட்டு வாங்களேன்..

Nidhi Chaudhry

ரத்னாவதியின் கதை

ரத்னாவதியின் கதை


மந்திரவாதியும் மகாராணி ரத்னாவதியும் என்பது இந்த கோட்டையின் பின் மறைந்திருக்கும் மர்மக் கதையாகும். இந்த கோட்டைக்கு வந்த மந்திரவாதி ஒருவன் கோட்டையில் இருந்த ராணி மீது காதல் கொண்டு, அவரை அடைய நினைத்தானாம். ராணியின் முடியை எடுத்து அவருக்கு வசியம் செய்தானாம் அந்த மந்திரவாதி. இதை தெரிந்துகொண்ட ராணி ரத்னாவதி மந்திர வசியம் செய்த கல்லில் எண்ணெய்யை ஊற்றிவிட்டாராம். இதனால் மந்திரம் திரும்பி மந்திரவாதியையே கொன்றுவிட்டது. அந்த மந்திரவாதி சாகும்முன்பு சாபம் இட்டு சென்றானாம் இந்த மண் அப்படியே நாசமாக போகட்டும் என்று. இதை அடிப்படையாக வைத்துதான் அருந்ததி படம் கூட எடுக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

Parth.rkt

குரு பாலுநாத்தின் சமாதி

குரு பாலுநாத்தின் சமாதி

இந்த இடத்தில்தான குரு பாலுநாத்தின் சமாதி உள்ளது. இவரது சமாதி மீது நிழல் படக்கூடாது என்று சத்தியம் செய்திருந்ததாகவும், அதன்படி நடக்காமல் அவரது சமாதியில் நிழல் விழுந்தததால் அந்த பூமியே நாசமாக போனதாக கூறப்படுகிறது.

Aabhas

வெளிநாட்டவர்கள் மிரளும் பூமி

வெளிநாட்டவர்கள் மிரளும் பூமி

இந்தியாவில் எத்தனையோ இடங்களுக்கு வெளிநாட்டிலிருந்து சுற்றுலா பயணிகள் வருகை தந்தாலும், இந்த இடத்துக்கு வருவதை அவர்கள் விரும்புவதில்லை. அதே நேரத்தில் இந்த கோட்டைக்கு வர விரும்பும் வெளிநாட்டு பயணிகள் சிறப்பு அனுமதி வாங்கவேண்டும். அவர்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக நம்பப்படுவதால் இப்படி ஒரு ஏற்பாடு. இதற்காக இந்திய அரசு சட்டமே உள்ளதாக தெரிகிறது. .

Arpita Roy08

கட்டிடக்கலை

கட்டிடக்கலை

இந்த மாதிரியான கதைகளை புறந்தள்ளிவிட்டுப் பார்த்தால் இந்த கோட்டையின் கட்டிடக்கலையைப் பற்றி பேசிக்கொண்டே இருக்கலாம். மேற்புறமிருந்து பார்க்கும்போது கலையின் அழகு அப்படி இருக்கும். இது இந்தியாவிலேயே மிக முக்கியமான அமானுஷ்ய கோட்டை என்றாலும், கட்டிடக்கலைக்கும் பெயர்பெற்றதாக இருக்கிறது.

மலைக்கு மேலயும் இல்லாம அடிவாரத்துலயும் இல்லாம நடு சென்டர்ல இப்படி ஒரு அதிசய கோயில்

காவிரி மட்டுமல்ல பெங்களூர் தமிழர்களுக்கு இதுவும்தான் முக்கியம்..!

Read more about: travel rajasthan delhi

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்