Search
  • Follow NativePlanet
Share
» »வனப் பகுதிக்குள் முதல் முறையாக செல்ல போகிறீர்களா? இந்த 9 விஷயங்களை தெரிந்து கொள்ள மறந்துடாதீங்க

வனப் பகுதிக்குள் முதல் முறையாக செல்ல போகிறீர்களா? இந்த 9 விஷயங்களை தெரிந்து கொள்ள மறந்துடாதீங்க

இந்தியாவில் உள்ள வனப்பகுதிகளுக்குள் சென்று சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்வதற்கு இந்திய வனத்துறை சார்பில் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. ஆனால் இப்படி பயணம் செய்வதற்கு சில விதிமுறைகளும் உண்டு. இந்தியாவில் உள்ள வனப் பகுதிகளுக்குள் முதல் முறையாக நீங்கள் பயணம் செய்ய போகிறீர்கள் என்றால், அதற்கு மிக முக்கியமான 9 விஷயங்களை நீங்கள் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். என்ன அந்த 9 விஷயங்கள்? வாங்க தெரிந்து கொள்ளலாம்.

Leopard

வனப்பகுதி பயணத்திற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய 9 விஷயங்கள் :

* தேசிய பூங்காக்களுக்குள் தினசரி வனச் சவாரி செல்வதற்கு குறிப்பிட்ட பார்வையாளர்களுக்கு மட்டுமே தேசிய பூங்கா நிர்வாகம் அனுமதி அளிக்கிறது. எனவே வனப்பகுதிக்குள் பயணம் செய்பவதற்கு முன் முன்பதிவு செய்திருக்க வேண்டும். இறத்கான முறைகளில் உரிய விபரங்களை அளித்து, முன்பதிவு செய்த பிறகு வனப் பகுதிக்குள் பயணம் செய்து வனவிலங்குகளை கண்டு ரசிக்கலாம்.

* பார்வையிட ஏற்ற காலம்: வனவிலங்கு பூங்காக்களில் உள்ள வனவிலங்குகளை காட்டுக்குள் சென்று காண்பதற்கு அக்டோபர் முதல் ஜூன் மாதம் வரை உகந்த காலமாகும். பருவமழை காலங்களில் வனச்சரகத்தில் உள்ள வனவிலங்குகளை காண்பது மிகவும் அரிதாகும். எனவே பருவமழை காலங்களில் காட்டு பயணம் செல்வதை தவிர்ப்பது நல்லது. நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு வனவிலங்கு பூங்காக்கள் தனித்துவமான வனவிலங்குகளை உள்ளடக்கியதாகும். எனவே இதன் விவரங்களை தெரிந்த பின் பூங்காக்களை காண சுற்றுலா செல்லலாம்.

Tiger

* ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ரத்னம்பூர் தேசிய பூங்காவில் புலிகளும், கர்நாடக மாநிலத்தில் உள்ள பந்திப்பூர் தேசிய பூங்காவில் யானைகளும் பிரபலமாகும். வனவிலங்கு தேசிய பூங்காவில் உள்ள வனவிலங்குகளை காண்பதற்கு குளிர்ந்த காலை வேளையில் பழுப்பு மற்றும் பச்சை நிற ஆடைகள் மற்றும் தொப்பி அணிந்து செல்வது நல்லது. மேலும் ஒரு பைனாகுலர் எடுத்துக் கொண்டால் வனவிலங்குகளை நாம் எளிதாகவும் நன்றாகவும் பார்க்க முடியும்.

* விதிகளை பின்பற்றுதல் - வனவிலங்கு தேசிய பூங்காவிற்கு செல்லும்போது அங்கு உள்ள விதிகளை நாம் கண்டிப்பாக கடைபிடித்தல் வேண்டும். குறிப்பாக குப்பைகளை கொட்டுதல், புகைப்பிடித்தல் அல்லது வனவிலங்குகளுக்கு உணவளித்தல் போன்றவற்றை நாம் தவிர்த்தல் வேண்டும். தேசிய பூங்காவில் உள்ள வனவிலங்குகளை காண்பதற்கு என ஒதுக்கப்பட்ட இடங்களில் இருந்து பாதுகாப்பாக விலங்குகளை கண்டு மகிழ வேண்டும்.

Wildlife

* பொறுமையும் அமைதியும் - வனவிலங்குகளை காண்பதற்கு நாம் பொறுமையாகவும், அமைதியாகவும் காத்திருக்க வேண்டும். வனவிலங்குகள் அமைதியான சூழலில் தான் வெளியே அதிகமாக காணப்படும். வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நாம் கண்டு மகிழலாம்.

* அத்தியாவசியமான பொருட்கள் கொண்டு செல்லுதல் - சன் ஸ்கிரீன், தண்ணீர், ஸ்நாக்ஸ் மற்றும் முதலுதவி பெட்டி போன்றவற்றை எடுத்துச் செல்லலாம். நமது மொபைல் போன்களை சைலன்ட் செய்வதன் மூலம் வனவிலங்குகளுக்கு இடையூறு செய்யாமல் இருக்கலாம்.

* வழிகாட்டி: வனவிலங்கு பூங்காக்களில் பயணம் செல்லும் பொழுது வனவிலங்குகளின் நடத்தை மற்றும் சரணாலயத்தைப் பற்றிய முழுமையான விவரம் பற்றி தெரிந்து கொள்வது நல்லது. வனவிலங்குகளை காண்பதற்கு ஏற்ற இடங்களை நன்கு தெரிந்த அனுபவம் வாய்ந்த வனச்சரக வழிகாட்டி உடன் சென்றால் காட்டு பயணத்தை நாம் முழுமையாக ரசிக்கலாம்.

* வனவிலங்குகளை மதித்தல்: வனச் சரணாலயத்தில் உள்ள விலங்குகளிடமிருந்து பாதுகாப்பான தூரத்தில் இருந்திட வேண்டும். அவற்றைப் பார்த்து சத்தமிடுதல், அல்லது திடீர் அசைவுகள் செய்தல் போன்ற செயல்களை செய்வது நமக்கு ஆபத்தை ஏற்படுத்தும். எனவே வனவிலங்குகளுக்கு இடையூறு செய்யாமல் இருப்பது நல்லது.

* திட்டமிடுதல்: ஒரு நாளில் பல்வேறு தேசிய பூங்காக்களுக்கு சென்று காட்டு பயணம் செய்து விலங்குகளை கண்டு ரசிப்பதற்கு சரியான திட்டமிடுதல் அவசியம். முன்பதிவு வசதிகள் செய்வது கொள்வதன் மூலம் பல்வேறு வனவிலங்குகளையும் அதன் குணாதிசயங்களையும் கண்டு ரசிப்பதால் புதுவிதமான அனுபவங்களை நமக்கு கொடுக்கும்.

More News

    Read more about: forest wildlife
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+