Search
  • Follow NativePlanet
Share
» »26/11 மும்பையின் இந்த இடங்களெல்லாம் நினைவிருக்குதா? - ஒரு சின்ன ரிவைண்ட்

26/11 மும்பையின் இந்த இடங்களெல்லாம் நினைவிருக்குதா? - ஒரு சின்ன ரிவைண்ட்

By Staff

26/11 மும்பையில் தீவிரவாதிகள் புகுந்து இந்தியாவையே மிரட்டிய நாள். அதன் நினைவு தினம் இன்று. அன்று மும்பை மட்டுமல்ல நாடே அச்சம் கொண்டிருந்தது. அதன் நினைவு தினத்தில் இன்றைய மும்பையின் இடங்களைச் சுற்றி பார்க்கலாம்.

மும்பை, நவீன இந்தியாவின் இதயத்துடிப்பாக இயங்கும் நகரம். உலகின் மிகப்பெரிய பணக்காரரின் பல அடுக்குமாடி வீடும், உலகின் மிகப்பெரிய சேரிப்பகுதியும் இங்கே அடுத்தடுத்து அமைந்திருகின்றன. அதி வேகமாக நடந்துவரும் நகரமயமாக்கல் மும்பை நகரை ஒரு கலாசார கேந்திரமாக மாற்றியிருக்கிறது.

நாட்டின் எல்லா மூலைகளில் இருந்தும் இங்கு வந்து வசிக்கும் மக்களை நாம் பார்க்கலாம். பல்வேறு இன, மத, பொருளாதார வேறுபாடுகளை கடந்து முன் எப்போதும் இல்லாத அளவு வண்ணமயமாக வாழ்கையை கொண்டாடிடும் மும்பை நகரில் 24 மணிநேரத்தில் என்னவெல்லாம் செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

அதிகாலையில் பந்த்ரா பந்ஸ்டாண்டில் ஜாக்கிங் :

அதிகாலையில் பந்த்ரா பந்ஸ்டாண்டில் ஜாக்கிங் :

பரபரப்பான வாழ்க்கை வாழ்ந்திடும் மும்பைவாசிகளுக்கு புத்துணர்வை அளிக்கும் ஒரு விஷயம் என்றால் அது அதிகாலையில் அரபிக் கடலோரத்தில் ஆனந்தமாக நடைபயிற்சி செய்வதும், ஜாக்கிங் போவதும் தான்.

Photo: Mayur Thakare

அதிகாலையில் பந்த்ரா பந்ஸ்டாண்டில் ஜாக்கிங் :

அதிகாலையில் பந்த்ரா பந்ஸ்டாண்டில் ஜாக்கிங் :

நீங்கள் மும்பை சென்றால் கட்டாயம் அதிகாலையில் மேற்கு மும்பையில் அமைந்திருக்கும் பந்த்ரா நகரில் உள்ள பந்த்ரா பந்ஸ்டாண்ட் என்னும் ஒரு கிலோ மீட்டர் நீள நடைபாதையில் அரபிக்கடலின் பின் இருந்து சூரியன் உதயமாகும் அற்புத காட்சியை ரசித்தபடியே ஜாக்கிங் அல்லது நடைபயிற்சி செய்யுங்கள்.

Photo: Zia Gheewalla

அதிகாலையில் பந்த்ரா பந்ஸ்டாண்டில் ஜாக்கிங் :

அதிகாலையில் பந்த்ரா பந்ஸ்டாண்டில் ஜாக்கிங் :

மேலும் இந்த பந்த்ரா பந்ஸ்டாண்டில் மவுண்ட் மேரி சர்ச், ஹாலிவுட்டில் 'வாக் ஆப் பேம்' இருப்பதை போல பாலிவுட் நட்சத்திரங்களின் சிலைகள்,அவர்களின் கையெழுத்து உள்ள 100 வெண்கல தட்டிகள் பதிக்கப்பட்ட 'வாக் ஆப் ஸ்டார்ஸ்' நடை பாதை, பந்த்ரா கோட்டை, காதேஸ்வரி தேவி கோயில் போன்ற சுற்றுலாத்தலங்களும் இருக்கின்றன.

மவுண்ட் மேரி சர்ச்.

Photo: Rakesh Krishna Kumar

அதிகாலையில் பந்த்ரா பந்ஸ்டாண்டில் ஜாக்கிங் :

அதிகாலையில் பந்த்ரா பந்ஸ்டாண்டில் ஜாக்கிங் :

நடைபயிற்சி முடித்த கையோடு இந்த இடங்களுக்கும் சென்று சுற்றிப்பார்க்கலாம். இந்த பந்த்ரா பந்ஸ்டாண்ட் பகுதியை பற்றிய மேலதிக தகவல்களையும், அதற்கு அருகில் இருக்கும் ஹோட்டல்கள் பற்றிய விவரங்களையும் No.1 தமிழ் பயண இணையதளமான தமிழ் நேடிவ் பிளேனட்டில் அறிந்து கொள்ளுங்கள்.

பந்த்ரா கோட்டை.

Photo: Nicholas

அதிகாலையில் பந்த்ரா பந்ஸ்டாண்டில் ஜாக்கிங் :

அதிகாலையில் பந்த்ரா பந்ஸ்டாண்டில் ஜாக்கிங் :

பந்த்ரா கோட்டையில் நின்றபடி அரபிக்கடலின் அழகை ரசிக்கும் மக்கள்.

Photo: Nicholas

கேண்டிஸ் உணவகத்தில் சூப்பரான காலை உணவு :

கேண்டிஸ் உணவகத்தில் சூப்பரான காலை உணவு :

பந்த்ராவுக்கு வந்துவிட்டு 'கேண்டிஸ்' உணவகத்துக்கு சென்று சாப்பிடாமல் போவது, ஆக்ராவுக்கு சுற்றுலா சென்றுவிட்டு தாஜ் மஹாலை பார்க்காமல் வருவதற்கு சமம். பந்த்ரா பகுதியில் இருக்கும் மிக சிறந்த உணவகமாக சொல்லப்படும் இங்கு வெளிநாட்டு உணவு வகைகளான பர்கர்கள் முதல் சுடச்சுட சிக்கன் பிரியாணி வரை அனைத்து வகை உணவுகளும் பரிமாறப்படுகின்றன.

Photo: Satish Krishnamurthy

கேண்டிஸ் உணவகத்தில் சூப்பரான காலை உணவு :

கேண்டிஸ் உணவகத்தில் சூப்பரான காலை உணவு :

கேண்டிஸ் உணவகத்தில் பரிமாறப்படும் சுவையான மற்றும் ஆரோக்கியமான சாலட் உணவு.

Photo: Kaushal Karkhanis

சோர் பஜார் :

சோர் பஜார் :

ஷாப்பிங் செய்திட பிடிக்குமென்றால் ஒரு 10 மணி வாக்கில் தெற்கு மும்பையில் உள்ள சோர் பஜாருக்கு சென்றிடுங்கள். இந்தியாவின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றான இந்த சோர் பஜாரில் கிடைக்காத பொருட்களே இல்லை என்று சொல்லலாம். அதிலும் குறிப்பாக பழங்கால பொருட்கள் மற்றும் கைவினைப்பொருட்கள் மிக குறைந்த விலையில் கிடைகின்றன. மும்பைக்கு சுற்றுலா வந்ததன் நினைவாக இங்கே ஏதேனும் வாங்கிச்செல்லுங்கள்.

நெரிசல் மிகுந்து காணப்படும் சோர் பஜார் வீதி.

Photo: Eric Parker

சோர் பஜார் :

சோர் பஜார் :

கொட்டிக்கிடக்கும் எலக்ரிக் சாமான்கள்.

Photo: Eric Parker

சோர் பஜார் :

சோர் பஜார் :

கலைப்பொருட்களை ஆர்வத்துடன் பார்வையிடும் சுற்றுலாப்பயணி ஒருவர்.

Photo: A Vahanvati

சோர் பஜார் :

சோர் பஜார் :

சோர் பஜாரில் கிடைத்த பழங்கால கத்தி.

Photo: Ben Lepley

கேட் வே ஆப் இந்தியாவில் ஒரு செல்பி கிளிக்கிடுங்கள் :

கேட் வே ஆப் இந்தியாவில் ஒரு செல்பி கிளிக்கிடுங்கள் :

மும்பை என்று சொன்னதும் உங்களுக்கு என்ன நினைவுக்கு வருகிறது என்று யாரிடமாவது கேட்டால் அவரின் பதில் 'கேட் வே ஆப் இந்தியா' என்பதாகத்தான் இருக்கும். அந்த அளவுக்கு மும்பையின் அடையாளமாக மாறிப்போன இந்த இடத்திற்கு சென்று செல்பி கிளிக்காவிட்டால் அது குற்றத்தினும் குற்றமல்லவா ?.

Photo: Anil Wadghule

கேட் வே ஆப் இந்தியாவில் ஒரு செல்பி கிளிக்கிடுங்கள் :

கேட் வே ஆப் இந்தியாவில் ஒரு செல்பி கிளிக்கிடுங்கள் :

நூற்றாண்டு பழமைமிக்க தாஜ் ஹோட்டலுக்கு அருகில் கம்பீரமாக காட்சி தரும் இந்தியாவின் நுழைவு வாயில்.

Photo: Himanshu Sarpotdar

கேட் வே ஆப் இந்தியாவில் ஒரு செல்பி கிளிக்கிடுங்கள் :

கேட் வே ஆப் இந்தியாவில் ஒரு செல்பி கிளிக்கிடுங்கள் :

அந்தி மங்கும் வேலையில் இந்தியாவின் நுழைவு வாயில்.

Photo: Rahul Bulbule

வேல்ஸ் அரசரின் அருங்காட்சியகத்திற்கு செல்லாம் :

வேல்ஸ் அரசரின் அருங்காட்சியகத்திற்கு செல்லாம் :

கேட் வே ஆப் இந்தியாவிற்கு மிக அருகிலேயே அமைந்திருக்கிறது 'சத்ரபதி சிவாஜி மகாராஜ்' அருங்காட்சியம். இது வேல்ஸ் நாட்டு இளவரசரின் இந்திய வருகையை ஒட்டி கட்டப்பட்டதால் இன்றும் 'பிரின்ஸ் வேல்ஸ் மியுசியம்' என்றே அழைக்கப்படுகிறது.

Photo: Frederick Noronha fredericknoronha1@gmail.com

வேல்ஸ் அரசரின் அருங்காட்சியகத்திற்கு செல்லாம் :

வேல்ஸ் அரசரின் அருங்காட்சியகத்திற்கு செல்லாம் :

அருங்காட்சியகத்தில் இருக்கும் பழங்கால இந்திய சிற்பம்.

Photo: Frederick Noronha fredericknoronha1@gmail.com

வேல்ஸ் அரசரின் அருங்காட்சியகத்திற்கு செல்லாம் :

வேல்ஸ் அரசரின் அருங்காட்சியகத்திற்கு செல்லாம் :

ஆரிய படையெடுப்பை சித்தரிக்கும் ஒரு கல்வெட்டு.

Photo: Justin Gaurav Murgai

ஜுஹு சவ்பாட்டி :

ஜுஹு சவ்பாட்டி :

இப்போதெல்லாம் நம்ம ஊர்களில் திரும்பிய பக்கமெல்லாம் பேல் பூரிக்கடைகளையும், பாணி பூரி கடைகளையும் பார்க்க முடிகிறது.மும்பையை இந்த வகை மாலைநேர உணவுகள் எல்லாவற்றுக்கும் பிறப்பிடம் என்றே சொல்லலாம். அதிலும் ஜுஹு கடற்கரையில் மாலைநேரத்தில் காலாற நடந்தபடி இந்த உணவுகளை சுவைப்பது உங்களையும் ஒரு 'மும்பைகர்'ஆக நினைக்க தூண்டும். ஜுஹு கடற்கரை எங்கே இருக்கிறது, அதனை எப்படி அடைவது போன்ற விவரங்களை No.1 தமிழ் பயண இணையதளமான தமிழ் நேடிவ் பிளானட்டில் அறிந்து கொள்ளுங்கள்.

Photo: Rajarshi MITRA

ஜுஹு சவ்பாட்டி :

ஜுஹு சவ்பாட்டி :

மாலை நேரத்தில் அற்புதமாக காட்சியளிக்கும் ஜுஹு பீச்.

Photo: Michael Kohli

ஜுஹு சவ்பாட்டி :

ஜுஹு சவ்பாட்டி :

இங்கு கிடைக்கும் சுவையான பேல் பூரி.

Photo: Rakesh

மெரைன் டிரைவில் இரவு நேர கார் பயணம் :

மெரைன் டிரைவில் இரவு நேர கார் பயணம் :

மும்பைக்கு வந்துவிட்டு மெரைன் டிரைவில் பயணம் செய்யாமல் திரும்பவே கூடாது. வாகன நெரிசல் குறைந்த பின் இரவு நேரத்தில் கடற்கரையை ஒட்டி அமைந்திருக்கும் இந்த சாலையில் பயணம் செய்வது அவ்வளவு இனிமையாக இருக்கும்.

Photo: Omkar Todarmal

மெரைன் டிரைவில் இரவு நேர கார் பயணம் :

மெரைன் டிரைவில் இரவு நேர கார் பயணம் :

இந்த மெரைன் டிரைவ் சாலையை ஒட்டியே வான்கடே கிரிக்கெட் மைதானம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Photo: Satrajit Basu

கெம்ஸ் கார்னர்

கெம்ஸ் கார்னர்

மும்பையின் அழகிய கெம்ஸ் கார்னர் இது

all images below are taken from

PC: wikimedia.org

வார்டன் ரோடு மும்பை

வார்டன் ரோடு மும்பை

மும்பையின் சிறந்த பகுதிகளில் ஒன்றான வார்டன் ரோடு

 ஜிந்தல் மேன்சன்

ஜிந்தல் மேன்சன்

மும்பையின் அழகிய புகைப்படங்கள்

ஆன்டிலியா டவர்

ஆன்டிலியா டவர்

மும்பையின் அழகிய புகைப்படங்கள்

மலபார் ஹில்ஸ்

மலபார் ஹில்ஸ்

மும்பையின் அழகிய புகைப்படங்கள்

சைபி மருத்துவமனை

சைபி மருத்துவமனை

மும்பையின் அழகிய புகைப்படங்கள்

மரைன் டிரைவ்

மரைன் டிரைவ்

மும்பையின் அழகிய புகைப்படங்கள்

 நுழைவு வாயில்

நுழைவு வாயில்

மும்பையின் அழகிய புகைப்படங்கள்

அழகிய மும்பை

அழகிய மும்பை

மும்பையின் அழகிய புகைப்படங்கள்

 மும்பை யுனிவர்சிட்டி

மும்பை யுனிவர்சிட்டி

மும்பையின் அழகிய புகைப்படங்கள்

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more