Search
  • Follow NativePlanet
Share
» »'விண்ணைத்தாண்டி வருவாயா' ஜெஸ்ஸி ஊருக்கு போகலாம் வாங்க...

'விண்ணைத்தாண்டி வருவாயா' ஜெஸ்ஸி ஊருக்கு போகலாம் வாங்க...

'விண்ணைத்தாண்டி வருவாயா' தமிழில் எடுக்கப்பட்ட அற்புதமான காதல் திரைப்படங்களில் ஒன்று. ஒரு ஆச்சாரமான மலையாளி கிறிஸ்துவ பெண்ணுக்கும், ஹிந்து தமிழ் பையனுக்கும் நடக்கும் காதலையும், சூழ்நிலைகள் அவர்களுக்கு பரிசளிக்கும் வலியையும் அழகியலோடு பதிவு செய்திருப்பார் இயக்குனர் கெளதம் மேனன். அந்த திரைப்படத்தில் கேரளாவின் பேரழகு நிறைந்த சுற்றுலாத்தலமான ஆலப்புழாவை காட்சிப்படுத்தியிருக்கும் விதம் வர்ணிக்க முடியாத ஒன்று. அந்த ஊருக்கு மறக்க முடியாத சுற்றுலா ஒன்று செல்லலாம் வாருங்கள்.

Makemytrip.comஇல் இலவச கூப்பன்களை பெற்று 40% வரை தள்ளுபடி பெற்றிடுங்கள்

ஆலப்புழா:

ஆலப்புழா:

'கடவுளின் சொந்த நாடு' என்று அழைக்கப்படும் கேரளாவின் ஆறாவது பெரிய நகரமான ஆலப்புழா அங்கிருக்கும் உப்பங்கழி நீரோடைகளுக்கு புகழ் பெற்று விளங்குகிறது. இந்த நீரோடைகளின் காரணமாக இங்கு படகு வீடுகள் முக்கிய சுற்றுலா ஈர்ப்பாக திகழ்கிறது.

படகு வீடுகள்:

படகு வீடுகள்:

வழக்கமாக நாம் சுற்றுலா சென்றால் ஹோட்டல்களில் தங்குவோம். ஆனால் ஆலப்புழாவில் நாம் தாங்கும் இடமே மிக வித்தியாசமான சுற்றுலாத்தலமாக இருப்பது சிறப்பு. ஆம், ஆலப்புழாவை சுற்றிபார்க்க படகு வீடுகள் தான் சிறந்த தேர்வாகும். இந்த படகு வீடுகளில் ஐந்து நட்சத்திர விடுதிகளில் இருப்பதற்கு இணையான வசதிகள் இருக்கின்றன.

கொஞ்சம் கொஞ்சல்:

கொஞ்சம் கொஞ்சல்:

உங்கள் காதல் கணவருடனோ மனைவியுடனோ தேனிலவு செல்லவோ அல்லது தனிமையை ரசிக்க எங்கேனும் சுற்றுலா செல்லலாமா என விரும்பினால் ஆலப்புழா மிகச்சிறந்த இடம். மேலே சொன்னது போல படகில் மிதந்தபடியே அற்புதமான இயற்கை கட்சிகளை ரசித்தபடி கொஞ்சல் மொழி பேசுவதை விடவும் வேறென்ன இன்பம் இருந்து விடப்போகிறது.

சுவையான உணவுகள் :

சுவையான உணவுகள் :

வேம்பநாடு ஏரியில் கிடைக்கும் சுவையான கரி மீன்களை சுவைத்தபடி இடைஞ்சல்கள் இன்றி தனிமையில் சில பொழுதுகளை களித்திட இந்த படகு வீடுகள் அற்புதமான தேர்வு.

Photo:e900

வேம்பநாடு - பாம்பு படகுகளின் ஏரி:

வேம்பநாடு - பாம்பு படகுகளின் ஏரி:

ஆலப்புழா மாவட்டத்தில் இருக்கும் வேம்பநாடு ஏரி இந்தியாவிலேயே மிக நீளமான ஏரி என்ற சிறப்புக்குரியது. இந்த ஏரி ஆலப்புழா, கொச்சி மற்றும் கொல்லம் மாவட்டங்களின் வழியாக பாய்ந்தாலும் இதன் பெரும்பகுதி ஆலப்புழா மாவட்டத்தில் தான் இருக்கிறது.

Photo:Vibin JK

வேம்பநாடு - பாம்பு படகுகளின் ஏரி:

வேம்பநாடு - பாம்பு படகுகளின் ஏரி:

பாம்பு படகு போட்டி:

இந்த வேம்பநாடு ஏரியில் ஒவ்வொரு வருடமும் ஓணம் பண்டிகை சமயத்தில் பாம்பு படகு போட்டி கோலாகலமாக நடக்கிறது. வேம்பநாடு ஏரியின் ஒரு பகுதியான புன்னமடா ஏரியில் நடக்கும் இப்போட்டியில் நீளமான படகுகளில் நூற்றுக்கணக்கான வீரர்களில் ஒரே நேரத்தில் துடுப்பு போடுவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

Photo:Arun Sinha

ஆலப்புழா பீச்:

ஆலப்புழா பீச்:

அரபிக்கடலை ஒட்டி அமைந்திருப்பதால் கேரளாவில் அற்புதமான கடற்கரைகள் நிறையவே உண்டு. அந்தி சாயும் வெளியில் சூரியன் வர்ணஜாலம் நிகழ்த்தும் கடற்கரைகளில் ஒன்றான, இன்னும் சற்றும் மாசுபடாத இடம் தான் ஆலப்புழா கடற்க்கரை. ஆலப்புழாவில் நாம் நிச்சயம் செல்ல வேண்டிய இடங்களில் இந்த கடற்கரையும் ஒன்றாகும்.

Photo:Vishnu Nair

 கலங்கரை விளக்கு:

கலங்கரை விளக்கு:

ஆலப்புழா பீச்சை ஒட்டியே கலங்கரை விளக்கு ஒன்றும் அமைந்திருக்கிறது. இந்தியாவில் இருக்கும் மிக பழமையான கலங்கரை விளக்கான இது 1862ஆம் ஆண்டு கட்டப்பட்டிருக்கிறது. தினமும் சுற்றுலாப்பயணிகள் மதியம் மூன்று மணியில் இருந்து நான்கு முப்பது மணிவரை இதனுள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த கலங்கரை விளக்கின் மேல் நின்று ஆலப்புழா கடற்கரையின் மொத்த அழகையும் பார்த்து ரசிக்கலாம்.

Photo:Dr. Ajay Balachandran

 குமரகம் பறவைகள் சரணாலயம்:

குமரகம் பறவைகள் சரணாலயம்:

பசுமை ததும்பும் குமரகத்தில் விதவிதமான பறவைகளும், தாவர வகைகளும், நன்னீர் ஏரியில் சுவையான மீன்களும் உள்ளன. இங்குள்ள குமரகம் பறவைகள் சரணாலயத்திற்கு வருடம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இருந்தும் புலம்பெயர்ந்து பறவைகள் வருகின்றன.

Photo:Travelling Slacker

 குமரகம் பறவைகள் சரணாலயம்:

குமரகம் பறவைகள் சரணாலயம்:

ஆலப்புழாவை எப்படி அடைவது என்பது பற்றிய தகவல்களை இங்கே அறிந்து கொள்ளுங்கள்.

ஆலப்புழாவில் உள்ள ஹோட்டல்களை பற்றிய விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

Read more about: alleppey vembanadu kerala
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X