Search
  • Follow NativePlanet
Share

ஆலப்புழா – கீழைத்தேசத்து வெனிஸ் நகரம்

77

‘ஆலெப்பி’ என்ற பெயரால் தற்சமயம் அறியப்படும் ‘ஆலப்புழா’ உப்பங்கழிப் பகுதியானது ஓய்வுக்கும் ஏகாந்தத்துக்கும் பெயர் பெற்ற இடமாகும். ‘கீழைத்தேசத்து வெனிஸ் நகரம்’ என்று இது அழைக்கப்படுகிறது என்று சொன்னாலே போதும், ஆஹா! என்ற உணர்வு நம் மனதின் நிச்சயம் தோன்றாமல் இருக்காது.

ஆலப்புழாவின் மனம் மயக்க வைக்கும் உப்பங்கழி நீர்த்தேக்கங்களும், ஓடைகளுக்கு நடுவே வீற்றிருக்கும் ரம்மியமான பசுமை போர்த்திய சோலைகளும் நம்மை மெய்மறக்கச் செய்து நம் உணர்வுகளை எங்கோ இழுத்து செல்கின்றன.

கேரளா மாநிலத்திலேயே முதல் முதலாக திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட நகரம் என்ற சிறப்பையும் இது கொண்டுள்ளது. ஆலப்புழாவில் ஓடைகள் மூலமாக இயக்கப்படும் நீர்வழிப்போக்குவரத்து வசதிகளில் பயணம் செய்வது உங்கள் வாழ்விலேயே மறக்க முடியாத அனுபவமாக பதிந்து விடும் என்பதை – நீங்கள் இங்கு விஜயம் செய்து திரும்பும்போது புரிந்துகொண்டு புன்னகை செய்வீர்கள்.

ஒரு ஏகாந்தமான விடுமுறையை திட்டமிட்டு ஆலப்புழாவிற்கு விஜயம் செய்து, உப்பங்கழி இயற்கைக்காட்சிகள், படகுப்பயணங்கள் மற்றும் இயற்கை எழிலை ரசித்து திரும்புவது நிச்சயம் உங்களுக்கு புத்துணர்வூட்டும் சுற்றுலா அனுபவமாக இருக்கும். பளபளப்பான கடற்கரைகள், சாந்தம் தவழும் ஏரிகள் ஆகியவற்றுடன் மெய்மறக்க வைக்கும் படகு வீடு பயணங்கள் ஆகியவையும் இங்கு உங்களுக்காக காத்திருக்கின்றன.

இலக்கை நோக்கி துடுப்புகளின் இசைப்பு – ஆலப்பி படகுப்போட்டி திருவிழா!

நீர்த்தேக்கம் என்றிருந்தால் படகுகளும், படகுகள் இருந்தால் போட்டியும் இல்லாமல் போகுமா!? வருடாவருடம் ‘ஆலெப்பி’யில் நேரு கோப்பை படகுப் போட்டியானது ஒரு திருவிழா போன்று விமரிசையாக நடத்தப்படுகிறது.

கேரளா மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வரும் பல படகுச் சங்கங்கள் இதில் கலந்து கொள்கின்றன. வெற்றிக்கோப்பை வழங்கும் பழக்கம் ஒருமுறை இந்த போட்டியை ரசித்த ஜவஹர்லால் நேரு அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது.

படகுப் போட்டியாளார்களின் திறன், நுட்பம் ஆகியவற்றில் மனதைப் பறிகொடுத்த நேருஜி அவர்கள் படகுக் கலைஞர்களின் முயற்சிக்கு ஒரு பரிசுக்கோப்பையை அளிப்பது அவசியம் என்று முடிவு செய்துள்ளார்.

தற்போது 60 வருடத்தை எட்டிவிட்ட இந்த படகுப்போட்டி இன்றும் அதே உற்சாகம் மற்றும் கொண்டாட்டத்துடன் நடத்தப்படுகிறது. ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையன்று இந்த படகுப்போட்டி நடத்தப்படுகிறது.மற்ற நாட்களில் நிசப்தம் நிலவும் ‘ஆலெப்பி’ நீர்த்தேக்கமானது இப்போட்டியின்போது பரபரப்பாக மாறுவதுடன் நகரமும் ஒரு திருவிழாக்கோலத்தை பூண்டுவிடுவது குறிப்பிடத்தக்கது.

ஜுன், ஜுலை மழைக்காலம் முடிந்தபின்னர் நடத்தப்படும் இந்த படகுப்போட்டி நிகழ்ச்சியின்போது ‘ஆலெப்பி’ சுற்றுலாத்தலத்துக்கு பயணம் மேற்கொள்வது மிகவும் உகந்ததாகும்.

ஒரு முழுமையான ஆன்மீக அனுபவம்

எங்கு திரும்பினாலும் இயற்கை எழிலுடனும், இதமான சூழலுடனும் காட்சியளிக்கும் ‘ஆலெப்பி’யில் கால் வைத்தவுடனேயே உங்கள் மனம் லேசாகி, உடலாலும் புத்துணர்வடைவீர்கள் என்றாலும், மனதை மேலும் சுத்திகரிக்க ஆலய தரிசனங்களும் உங்களுக்கு வேண்டுமெனில், தெய்வீகம் தவழும் கோயில்களும் இங்கு அதிகம் உள்ளன.

அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணா கோயில், முல்லக்கல் ராஜேஷ்வரி கோயில், செட்டிகுளங்கரா பகவதி கோயில், மன்னாரசாலா ஸ்ரீ நாகராஜா கோயில் போன்ற பிரசித்தமான கோயில்கள் தவிர்த்து எடத்துவா சர்ச், செயிண்ட் ஆண்ட்ரூஸ் சர்ச், செயிண்ட் செபாஸ்டியன் சர்ச் ஆகிய கிறிஸ்துவ தேவாலயங்களும் இங்கு அமைந்துள்ளன.

தென்னிந்தியாவில் கிறிஸ்துவத்தை பரப்புவதற்காக பயணம் மேற்கொண்ட செயிண்ட் தாமஸ் மதகுரு ஆலப்புழாவுக்கும் விஜயம் செய்ததாக கூறப்படுகிறது. புத்த மதமும் கேரளாவில் அக்காலத்தில் பின்பற்றப்பட்டிருக்கிறது. புத்தரின் காலத்திலேயே பௌத்தம் இங்கு அறிமுகமாகிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இன்றைக்கு பௌத்த மத அடையாளங்கள் என்று பெரிதாக ஏதும் மிச்சம் இல்லாவிட்டாலும், கருமாடி குட்டன் என்றழைக்கப்படும் புராதன புத்தர் சிலை ஒன்று ஆலெப்பி நகரத்தில் கவனமாக பாதுகாக்கப்படுகிறது.

இயற்கையின் எழிலும் பொழிலும் நிறைந்து வழியும் ஸ்தலங்கள்

ஆலெப்பி நகர்ப்பகுதியில் முக்கியமாக பார்க்க வேண்டிய ஒரு சுற்றுலா அம்சம் பத்திரமண்ணல் எனும் இடமாகும். ஒரு சிறிய தீவுப்பகுதியான இதில் சொல்லப்படுவதைவிடவும் ஏராளமான சுவராசியங்கள் நிறைந்து காணப்படுகின்றன.

குறிப்பாக, அழிந்து வரும் பல அரிய வகை பறவைகளை இங்கு பார்க்கலாம். மற்ற கேரளப்பகுதிகளில் கிடைத்த அனுபவங்களை எல்லாம் மிஞ்சும்படியான இயற்கை தரிசனம் இங்கு கிட்டும் என்றே சொல்லலாம். வேம்பநாட் ஏரிப்பகுதியில் மூழ்கிக்கிடக்கும் இந்தத்தீவுப்பகுதியிலிருந்து ஆலெப்பி பிரதேசத்தின் இயற்கை வனப்பை நன்கு ரசிக்க முடிகிறது.

இது மட்டுமல்லாமல், ‘கேரளாவின் அரிசிக்கிண்ணம்’என்றழைக்கப்படுகிற குட்டநாட் பகுதியின் நெல்வயல்களுக்கும் பயணிகள் சென்று பார்க்கலாம். கடவுளின் சொந்த தேசம் எனப்படும் கேரளாவின் நிஜமான சௌந்தர்யம் அதன் கிராமப்பகுதிகளில் தவழ்வதால், அருகிலுள்ள பண்ணைகள் மற்றும் விசாலமான நெல்வயல்கள் போன்றவற்றுக்கு விஜயம் செய்து ரசிப்பது விடுமுறைச்சுற்றுலாவை இன்னும் பரவசமான அனுபவமாக மாற்றும்.

புராணக்கதைகள், நம்பிக்கைகள் மற்றும் ஐதீகங்கள்

ராஜ பரம்பரைகளோடு தொடர்புடைய வரலாற்றுக்கதைகள் மற்றும் சுவாரசியமான தலபுராணங்களில் உங்களுக்கு ஆர்வம் இருப்பின் அவற்றுக்கும் இப்பகுதியில் பஞ்சமில்லை.

பாண்டவர் பாறை மற்றும் கிருஷ்ணாபுரம் அரண்மனை ஆகியவை இங்குள்ள புராணிகப்பின்னணி கொண்ட தலங்களாகும். பெயரிலேயே பொதிந்துள்ள குறிப்புக்கேற்ப, பாண்டவர் பாறையானது மஹாபாரத பாண்டவரோடு தொடர்பைக் கொண்டுள்ளது.

வனவாசத்தின்போது பாண்டவர்கள் இங்குள்ள குகை ஒன்றில் வசித்திருந்ததாக நம்பிக்கைகள் நிலவுகின்றன. புராணிகக்கதைகளில் நம்பிக்கை உண்டோ இல்லையோ இந்த பாறை ஸ்தலத்திற்கு செய்து இச்சூழலை ரசிப்பது சிறந்தது. இது தவிர, கிருஷ்ணாபுரம் அரண்மனையும் ஒரு முக்கியமான வரலாற்றுப்பின்னணி கொண்ட அம்சமாகும்.

இது திருவாங்கூர் மஹாராஜாவான அனிழம் திருநாள் மார்த்தாண்ட வர்மா வசித்த மாளிகையாகும். 18ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த பாரம்பரிய மாளிகையில் பின்னாளில் பல ராஜ வம்சத்தினரால் பலவிதமான புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. தற்போது கேரள தொல்லியல் துறையால் இந்த பாரம்பரிய மாளிகை பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது.

ஆலெப்பி’ நகருக்கு எப்போது, எப்படி விஜயம் செய்யலாம்?

நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான இடைப்பட்ட பருவத்தில் எப்போது வேண்டுமானாலும் ஆலெப்பி’ நகருக்கு விஜயம் செய்யலாம். தங்கள் விருப்பம் மற்றும் பொருளாதார சக்திக்கேற்றபடி, ரயில் அல்லது பேருந்து அல்லது விமான மார்க்கமாக பயணிகள் ஆலெப்பி’ நகருக்கு விஜயம் செய்யலாம்.

விமானம் மூலம் கொச்சி விமானநிலையத்தை அடைந்து அங்கிருந்து ஆலெப்பி வரலாம். எல்லா முக்கிய அண்டை மாநில நகரங்களிலிருந்தும் நேரடி ரயில் சேவைகளும்,பேருந்து சேவைகளும் ஆலெப்பி’ நகருக்கு இயக்கப்படுவது ஒரு விசேஷமான அம்சமாகும். தேசிய நெடுஞ்சாலை ‘எண்: 47’ ஆலெப்பி வழியே செல்வதால் சாலை வசதிகள் மற்றும் பேருந்து இணைப்புகளுக்கும் எந்த குறையுமில்லை.

ஆலப்புழா சிறப்பு

ஆலப்புழா வானிலை

சிறந்த காலநிலை ஆலப்புழா

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது ஆலப்புழா

  • சாலை வழியாக
    ‘ஆலெப்பி’ நகரமானது இந்தியாவின் எல்லா நகரங்களுடனும் சாலை மார்க்கமாக நன்கு இணைக்கப்பட்டுள்ளது. பெங்களூர், திருவனந்தபுரம், மும்பை, கோயம்புத்தூர், கண்ணூர், கோழிக்கோடு, கொச்சி போன்ற நகரங்களிலிருந்து பேருந்துகள் மூலம் ‘ஆலெப்பி’யை அடையலாம். இருப்பினும் பஸ் பயணக் கட்டணங்கள் மிக அதிகமானவை என்பதுடன், பயணம் சௌகரியமாக இருக்கும் என்றும் சொல்ல முடியாது.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    இந்தியாவின் எல்லா முக்கிய நகரங்களுக்கும் ‘ஆலெப்பி நகரம்’ ரயில் சேவைகளைக்கொண்டுள்ளது. இங்கிருந்து சென்னை, மும்பை, பெங்களூரு போன்ற பெருநகரங்களுக்கு தினசரி ரயில் சேவைகள் உள்ளன. சென்னை மற்றும் பெங்களூரிலிருந்து 12 மணி நேரத்திலும், மும்பையிலிருந்து 36 மணி நேரத்திலும் ரயில் மூலம் ஆலெப்பி’ நகரத்தை அடையலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    ஆலெப்பி’ நகரில் விமான நிலையம் இல்லை. இங்கிருந்து 84 கி.மீ தூரத்தில் கொச்சி சர்வதேச விமான நிலையமும், 150 கி.மீ தூரத்தில் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையமும் அமைந்துள்ளன. கேரளாவின் முக்கிய விமான நிலையங்களான இவை இரண்டும் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளைக் கொண்டுள்ளன. விமான நிலையங்களிலிருந்து ‘ஆலெப்பி நகரம்’ வருவதற்கு டாக்சி வசதிகளும் பேருந்து வசதிகளும் நிறைய உள்ளன.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 Mar,Fri
Check Out
30 Mar,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat