Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஆலப்புழா » ஈர்க்கும் இடங்கள் » முல்லக்கல் ராஜேஷ்வரி கோயில்

முல்லக்கல் ராஜேஷ்வரி கோயில், ஆலப்புழா

77

ஆலெப்பி’ நகரின் மையப்பகுதியிலேயே இந்த முல்லக்கல் ராஜேஷ்வரி கோயில் அமைந்துள்ளது. துர்க்காதேவியின் அவதார வடிவமான ராஜேஷ்வரி தெய்வத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள இக்கோயில் கண்கவரும் சாந்த மயமான தோற்றத்துடன் காட்சியளிக்கிறது.

தேவநாராயண செம்பகேசரி எனும் ராஜாவால், பாரம்பரியமான கேரளக்கோயில் மரபுப்படி இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. இப்பகுதியில் நடைபெற்ற பல போர்களின் காரணமாக இந்த கோயில் விக்கிரகங்கள் பலமுறை இடம்பெயர வேண்டிய சூழல் ஏற்பட்டதால், அவற்றை நிரந்தரமாக பிரதிஷ்டை செய்து அதைச்சுற்றி இப்போதுள்ள இந்த கோயில் அமைப்பை அவர் நிர்மாணித்ததாக தலவரலாறு கூறுகிறது.

மூலவிக்கிரகங்களுக்கு மேலே கூரைவிமானம் எதுவுமே இல்லாமல் காட்சியளிப்பது ஆன்மிக தத்துவத்தை உணர்த்துவதாகவும் உள்ளது. எல்லையற்ற அண்டவெளியே தெய்வீகம் எனும் கருத்தை இது எதிரொலிப்பது போன்று பக்தர்கள் உணர்கின்றனர்.

துர்க்காதேவிக்கான வழக்கமான சடங்குகளும், திருவிழாக்களும் இந்த கோயிலில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. அவற்றில் நவராத்திரி, மஹாநவமி, விஜயதசமி, தைப்பூசக்காவடி போன்றவை குறிப்பிடத்தக்கவை.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
21 Aug,Fri
Return On
22 Aug,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
21 Aug,Fri
Check Out
22 Aug,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
21 Aug,Fri
Return On
22 Aug,Sat