» »கொடைக்கானலில் உங்களுக்கு தெரியாமலும் சில அற்புத இடங்கள் இருக்கின்றன தெரியுமா?

கொடைக்கானலில் உங்களுக்கு தெரியாமலும் சில அற்புத இடங்கள் இருக்கின்றன தெரியுமா?

Posted By: Staff

தென்னிந்தியாவின் காஷ்மீர் என்று அழைக்காப்டும் கொடைக்கானல் சுற்றுலாப் பயணிகளின் மனதை என்றுமே குளிரவைக்க தவறியதில்லை.

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொடைக்கானல், கடல் மட்டத்திலிருந்து 2133 மீட்டர் உயரத்தில் உள்ளது.

நீலகிரியைப் போலவே 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் கொடைக்கானலில் பிரபலம். இந்த குறிஞ்சி மலர்கள் கடைசியாக 2006-ஆம் ஆண்டு கொடைக்கானலில் பூத்தன.

இந்திய எல்லையில் சண்டை மட்டுமா நடக்குது? இது பத்திலாம் தெரிஞ்சிக்காம இருக்கீங்களே!

வரலாறு

வரலாறு

கி.பி.1821 ல் லெப்டினன்ட் பி.எஸ்.வார்டு என்பவர் இப்பகுதியை நில ஆய்வு செய்து, இந்தியாவில் அரசு பணியில் இருந்த ஆங்கிலேயர்கள் வசிக்க ஏற்ற இடம் என கருதினார். அதன் பிறகு 1845-ஆம் ஆண்டு இங்கு பங்களாக்கள் அமைக்கப்பட்டு, போக்குவரத்திற்கு போதிய வசதியில்லாததால் குதிரையிலே சவாரி செய்து மலைக்கு வந்து தங்கினர். பின் படிப்படியாக 1914-ஆம் ஆண்டில் தான் முழுமையான சாலைவசதிகள் உருவாக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் காலத்தில் வசதி படைத்தவர்கள் மட்டும் அனுபவித்து வந்த கோடை வாசஸ்தலம் தற்போது அனைவரும் சென்று வரும் சுற்றுலா இடமாக மாறியுள்ளது.

இதைமட்டும் திறந்தால் ஒரே இரவில் உலக கோடிஸ்வரன் நீங்கள்தான் தெரியுமா?

படம் : Challiyan

பெயர்க்காரணம்

பெயர்க்காரணம்

"கானகத்தின் கொடை" அல்லது "காடுகளின் பரிசு" என்பது கொடைக்கானலின் தமிழ் அர்த்தம் ஆகும். அதேநேரம் கோடை என்ற வார்த்தைக்கு நான்கு அர்த்தங்கள் உள்ளதால், கொடைக்கானல் என்பதற்கு நான்கு விதமான பொருளை எடுத்துக் கொள்ளலாம். அவைகள் "வனத்தின் முடிவு", "படர்க்கொடி அடங்கிய காடு", "கோடைக்காலத்து காடு" மற்றும் "காடுகளின் பரிசு" என்பன.

இந்த கோடையில் மனைவி (அ) காதலியுடன் செல்ல ஏற்ற 'அந்த' இடங்கள்!

படம் : M.arunprasad

சுற்றுலாத் தலங்கள்

சுற்றுலாத் தலங்கள்

கோக்கர்ஸ் வாக், பியர் ஷோலா நீர்வீழ்ச்சி, பிரையண்ட் பூங்கா, கொடைக்கானல் ஏரி, தற்கொலை முனை, செண்பகனூர் அருங்காட்சியம், கொடைக்கானல் அறிவியல் வானாய்வகம், தூண் பாறைகள், குணா குகைகள், வெள்ளி நீர்வீழ்ச்சி, டால்பின் நோஸ் பாறை, குறிஞ்சி ஆண்டவர் கோயில், பேரிஜம் ஏரி ஆகியவை கொடைக்கானல் வரும்போது நீங்கள் தவறாமல் பார்க்க வேண்டிய சுற்றுலாத் தலங்களாகும்.

மனதை கொள்ளைகொள்ளும் 50 அரண்மனைகள்!!!

படம் : Thangaraj Kumaravel

தூண்பாறை, கொடைக்கானல்

தூண்பாறை, கொடைக்கானல்

கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் தூண்பாறை அமைந்துள்ளது. 400 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த தூண்களின் உச்சியில் இருந்து பார்த்தால் இயற்கை வனப்புடைய நிலங்களைக் கண்டு மகிழலாம். தூண் போன்ற வடிவமைப்பை கொண்டதால் இப்பெயர் பெற்ற இந்தத் தூண்களுக்குள்ள இடுக்குகள் மிகவும் ஆழமானது. எனவே இது மிக ஆபத்தான இடமாக கருதப்படுகிறது.

உலகின் 2-வது மிகப்பெரிய வில்லணை

படம் : Dhanil K

கோடை ஏரி

கோடை ஏரி

கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து அரை கி.மீ. தொலைவில், 60 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கோடை ஏரி ஒரு விண்மீனின் வடிவத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் செயற்கை ஏரியாகும். இந்த ஏரியில் படகுப்பயணம் செய்வது ஒரு இனிமையான அனுபவம்.

படம் : Aruna

பியர் ஷோலா நீர்வீழ்ச்சி

பியர் ஷோலா நீர்வீழ்ச்சி

கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ. தூரத்தில் பியர் ஷோலா நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த அருவியை வந்தடைய கூறிய நடைபாதையில் ஏறிச் செல்ல வேண்டும். இங்கு முன்னாட்களில் கரடிகள் தண்ணீர் அருந்த வந்த காரணத்தால் 'பியர்' ஷோலா நீர்வீழ்ச்சி என்று அறியப்படுகிறது.

பிரையண்ட் பூங்கா

பிரையண்ட் பூங்கா

கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து அரை கி.மீ தொலைவிலேயே பிரையண்ட் பூங்கா அமையப்பெற்றுள்ளது. இப்பூங்காவில் பல வகையான குறுஞ்செடிகள், மரங்கள் மற்றும் கள்ளிச்செடிகள் வளர்க்கப்படுகின்றன. உச்ச பருவத்தின் போது வண்ணமயமான பூக்கள் இங்கு பூத்துக் குலுங்கும். 1857-லிருந்து இங்கு ஒரு யூக்கலிப்டஸ் மரம் ஒன்று உள்ளது. அதே போல் பழமை வாய்ந்த போதி மரம் ஒன்றும் இங்கு காணப்படுகிறது. இவையிரண்டும் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை கவரும் அம்சங்களாகும்.

படம் : Aruna

பைசன் வெல்ஸ்

பைசன் வெல்ஸ்

டிரெக்கிங் செல்வதற்கு, பறவைகள் மற்றும் விலங்குகளை கண்டு ரசிக்க ஏற்ற இடமாக பைசன் வெல்ஸ் பகுதி அறியப்படுகிறது. இந்திய காட்டெருமை, நீலகிரி குரங்குகள் மற்றும் மலபார் ராட்சஸ அணில்கள் ஆகியவை இங்கே அதிகம் காணப்படுகின்றன. இந்த ஸ்தலத்தை ஜீப் மூலமாக சுற்றிப் பார்க்கும் வசதி இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

படம் : Vijay S

பேரிஜம் ஏரி

பேரிஜம் ஏரி

பேரிஜம் ஏரி கொடைக்கானலிலிருந்து 20 கி.மீ. தொலைவில் காட்டுக்குள் அமைந்திருப்பதால் உள்ளே செல்ல உரிய அனுமதி பெற வேண்டும். காலை 9 மணி முதல் மதியம் 3.30 மணி வரையே உள்ளே செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. இங்கு காட்டுப் பகுதியினுள்ளிருந்து காட்டெருமைகள், சிறுத்தைகள் போன்ற மிருகங்கள் ஏரியில் தண்ணீர் பருக அவ்வபோது வந்து செல்லும். உங்களுக்கு யோகம் இருந்தால் இவைகளை காண நேரிடலாம். மேலும் நெருப்பு கோபுரம், அமைதி பள்ளத்தாக்கு மற்றும் மருத்துவக் காடு ஆகிய தலங்கள் இந்த ஏரியின் அருகில் அமைந்திருக்கும் அழகிய சுற்றுலாத் தலங்கள் ஆகும்.

கோக்கர்ஸ் வாக்

கோக்கர்ஸ் வாக்

கோடை ஏரியிலிருந்து 1 கி.மீ தொலைவில் கோக்கர்ஸ் வாக் ஸ்தலம் அமைந்துள்ளது. இந்த இடம் மிக நீளமான வளைந்த பாதைகளோடு ஆங்காங்கே அழகிய மரங்கள் மற்றும் பூக்களுடன் காட்சி அளிக்கிறது. இங்கே உள்ள ஒரு தொலைநோக்கியின் மூலம் பள்ளத்தாக்கின் அழகையும், மலைக்கு இறக்கத்தில் அமைந்துள்ள நகரங்களையும் பரிபூரணமாக கண்டு களிக்கலாம்.

தற்கொலை முனை

தற்கொலை முனை

கோடை ஏரியிலிருந்து 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ள தற்கொலை முனை பள்ளத்தாக்கு 5000 அடி ஆழம் கொண்டது. இந்த தற்கொலை முனையின் உச்சிக்கு படிகள் வழியாக ஏறிச் செல்ல வேண்டும் என்பதுடன், உச்சியிலிருந்து வைகை அணையை முழுவதுமாக கண்டு ரசிக்க முடியும். இங்கு சுற்றித் திரியும் ஏரளமான குரங்குகள் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும். அதோடு போகிற வழியில் இரண்டு பக்கமும் கடைகள் சூழ்ந்திருக்கும். காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரையே இவ்விடத்தை பார்க்க உகுந்த நேரம்.

படம் : Parthan

குறிஞ்சி ஆண்டவர் கோயில்

குறிஞ்சி ஆண்டவர் கோயில்

கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் குறிஞ்சி ஆண்டவர் கோயில் அமைந்துள்ளது. 12 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் அறிய வகை பூவான குறிஞ்சி பூக்கள் இந்த இடத்தில் பூத்துக் குலுங்குவதால் இந்த ஆலயத்தின் இறைவனான முருகக்கடவுள் குறிஞ்சி ஆண்டவர் என்றே அழைக்கப்படுகிறார்.

படம் : Aruna

டால்ஃபின் மூக்கு சிகரம்

டால்ஃபின் மூக்கு சிகரம்

கொடைக்கானல் வரும் பயணிகள் கண்டிப்பாக டால்ஃபின் மூக்கு சிகரத்தை தவறவிட்டுவிடக்கூடாது. இந்த உயரத்திலிருந்து கீழே தெரியும் பள்ளத்தாக்கின் பயங்கர அழகு நம்மை கிறங்கடித்துவிடும்.

படம் : Marcus334

சூசைட் பாயிண்டிலிருந்து...

சூசைட் பாயிண்டிலிருந்து...

சூசைட் பாயிண்ட் என்று அழைக்கப்படும் பச்சைப் பள்ளத்தாக்கிலிருந்து தெரியும் அட்டகாசமான காட்சி.

படம் : Ramkumar

பைன் மரக்காடுகள்

பைன் மரக்காடுகள்

கொடைக்கானலின் பேரழகுக்கு எடுத்துக்காட்டாக இந்த பைன் மரக்காடுகளைச் சொல்லலாம்.

படம் : Parthan

கொடைக்கானல் - டால்ஃபின் மூக்கு - வல்லகவி - கும்பக்கரை

கொடைக்கானல் - டால்ஃபின் மூக்கு - வல்லகவி - கும்பக்கரை

கொடைக்கானலிலிருந்து கும்பக்கரை வரை மொத்தம் 8 கி.மீ நீளத்துக்கு இந்த மலையேற்றப் பாதை நீண்டு செல்கிறது. இந்தப் பாதையில் மலையேற்றம் செய்வதற்கு குறைந்தது 6 மணி நேரமாவது ஆகும். இப்பாதையில் திடீர் திடீரென செங்குத்து பாறைகள் தென்படுவதொடு திடீரென மலை கீழிறங்கியும் செல்லும். எனவே இந்தப் பாதையில் மலையேற்றத்தில் ஈடுபடுவது சற்று கடினமான காரியம். இதற்கு மலையேற்றத்தில் ஈடுபடுபவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பது அவசியம்.

குணா குகைகள்

குணா குகைகள்

கமல்ஹாசன் நடித்து வெளியான குணா என்ற தமிழ் படம் இந்த குகைகளில் படம்பிடிப்பட்டதிலிருந்து குணா குகைகள் என்று இது பிரபலமாக அறியப்படுகிறது.

படம் : sowrirajan s

படித்தளச் சாகுபடி

படித்தளச் சாகுபடி

கொடைக்கானலில் மேற்கொள்ளப்படும் படித்தளச் சாகுபடியின் கண்கொள்ளாக்காட்சி.

படம் : Ramkumar

வில்பட்டி

வில்பட்டி

கொடைக்கானலுக்கு வடக்கே மலை இறங்கினால் வில்பட்டி என்று அழைக்கப்படும் இந்த அழகிய கிராமம் அமைந்துள்ளது.

படம் : Ganylivz

பழனி மலைத்தொடர்

பழனி மலைத்தொடர்

மேற்கு தொடர்ச்சியின் ஒரு பகுதியாக அறியப்படும் இந்த பழனி மலைத்தொடரில்தான் கொடைக்கானல் மலைவாசஸ்தலம் அமைந்துள்ளது.

படம் : cprogrammer

லா சலேத் தேவாலயம்

லா சலேத் தேவாலயம்

கொடைக்கானலில் உள்ள லா சலேத் தேவாலயம்.

படம் : Marcus334

தேர்த் திருவிழா

தேர்த் திருவிழா

கொடைக்கானல் லா சலேத் மாதா ஆலய தேர் பவனி.

படம் : Paulosraja

டெலிஸ்கோப் ஹவுஸ்

டெலிஸ்கோப் ஹவுஸ்

ஒட்டுமொத்த கொடைக்கானலின் வனப்பையும் சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசிப்பதற்காக இந்த டெலிஸ்கோப் ஹவுஸ் (தொலைநோக்கி இல்லம்) அமைக்கப்பட்டுள்ளது.

படம் : Challiyan

செயின்ட் பீட்டர்ஸ் சர்ச் செல்லும் வழி

செயின்ட் பீட்டர்ஸ் சர்ச் செல்லும் வழி

கொடைக்கானலின் மற்றொரு முக்கியமான கிறிஸ்தவ தேவாலயமான செயின்ட் பீட்டர்ஸ் சர்ச் செல்லும் வழி.

படம் : Justinmanohar

தனிமையும், அழகும்!

தனிமையும், அழகும்!

கொடைக்கானலின் பைசன் வெல்ஸ் பகுதியில் பசுமைக்கு மத்தியில் தனிமையின் ஏகாந்தத்தை சுமந்து நிற்கும் வீடு!

படம் : Vijay S

எங்கள் வசிப்பிடம்!

எங்கள் வசிப்பிடம்!

கொடைக்கானல் மலைப்பகுதியில் அதிகமாக காணப்படும் குரங்குகள் தங்களின் வசிப்பிடம் தேடி வந்த பயணி ஒருவரின் கேமராவுக்கு கொடுக்கும் அமைதியான போஸ்!!!

படம் : Aruna
http://commons.wikimedia.org/wiki/File:Monkey3.JPG

சூரிய அஸ்த்தமனம்

சூரிய அஸ்த்தமனம்

கொடைக்கானல் மலைப்பகுதியில் காணப்படும் அற்புதமான காட்சி சூரிய அஸ்த்தமனம்.

படம் : Vijay S

கூக்கல் ஏரி

கூக்கல் ஏரி

பைசன் வெல்ஸ் பகுதியிலிருந்து 20 நிமிடம் நடந்து சென்றால் கூக்கல் ஏரி என்ற இந்த அழகிய ஏரியை அடையலாம்.

படம் : Vijay S

முக்குளிப்பான்

முக்குளிப்பான்

கூக்கல் ஏரியில் உல்லாசமாக நீந்தித் திளைக்கும் முக்குளிப்பான் எனப்படும் சிறிய நீர்முழ்கு பறவை வகை.

படம் : Challiyil Eswaramangalath Vipin

படகு குழாம்

படகு குழாம்

கோடை ஏரியில் அமைந்துள்ள படகு குழாம்.

படம் : Thamizhpparithi Maari

கொடைக்கானல் கோல்ஃப் கிளப்

கொடைக்கானல் கோல்ஃப் கிளப்

கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் கோல்ஃப் விளையாட்டில் ஈடுபட விரும்பினால் இந்த கோல்ஃப் கிளப்புக்கு வரலாம்.

படம் : Marcus334

கேரட்டுகள்

கேரட்டுகள்

கொடைக்கானல் வரும் பயணிகள் மலை வீதிகளில் விற்கப்படும் கேரட்டுகளை ருசிக்கத் தவறக்கூடாது.

படம் : Challiyan

முதுமக்கள் தாழி

முதுமக்கள் தாழி

கொடைக்கானல் மலைப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி.

படம் : Challiyan

வானியல் ஆய்வு மையம்

வானியல் ஆய்வு மையம்

கொடைக்கானலில் அமைக்கப்பட்டுள்ள வானியல் ஆய்வு மையம்.

படம் : Marcus334

யூக்கலிப்டஸ் காடுகள்

யூக்கலிப்டஸ் காடுகள்

கொடைக்கானல் மலைப்பகுதியில் காணப்படும் யூக்கலிப்டஸ் காடுகள்.

படம் : Aarthi Ramamurthy

பனிமூட்டத்தின் நடுவே!

பனிமூட்டத்தின் நடுவே!

கொடைக்கானல் மலைக்கு செல்லும் வழி பனித்திரையால் மூடப்பட்டு ஓவியம் போல காட்சியளிக்கிறது.

படம் : Prakash Kumar R

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்