» »நம்ம சென்னையிலிருந்து கோகர்னாவுக்கு ஒரு ஸ்மார்ட் டிரிப் போலாமா?

நம்ம சென்னையிலிருந்து கோகர்னாவுக்கு ஒரு ஸ்மார்ட் டிரிப் போலாமா?

Written By: Vinubala Jagasirpiyan

மெரினாவிலிருந்து ஓம் கடற்கரைக்கு:

சென்னையிலிருந்து கோகர்ணா செல்லும் வழியில் பல அழகான இடங்கள் உள்ளன, இதனால் இந்த பயணத்தில் நீங்கள் பல அற்புதங்களை ஆராயலாம். கண் கவரும் மெரினா வாழ்நாளில் ஒரு முறையாவது கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம் தான்.உலகின் இரண்டாம் பெரிய கடற்கரையின் அருகாமையில் இருப்பதே ஒரு வித சந்தோஷத்தை அளிக்கிறது. சென்னையில் இருக்கும் நாட்களை நான் மெரினாவில் இருக்கும் கண்கவர் மணல் மற்றும் தாராள சூரிய ஒளியில் கழித்துக்கொண்டு இருந்தேன். ஆனால், இது அனைத்திற்கும் ஒரு தற்காலிக முடிவுவந்துவிட்டது. என் அடுத்து பயணத்திருக்காக கோகர்ணாவை நியமித்துள்ளேன். கோகர்ணா, கர்நாடகாவில் உள்ள ஒரு சிறிய நகரம்.

கோகர்ணாவிர்க்கு ஒரு பயணம்:

அழகிய நகரமான கோகர்ணாவில் பல கோயில்கள்,கடற்கரைகள் மற்றும் கோட்டைகள் உள்ளன. சாகசம்,இயற்கை மற்றும் அமைதியான சூழலை நாடுபவர்களுக்கு இது ஒரு அருமையான இலக்கு. அதனால் மெரினாவிற்கு இணையாக கோகர்ணா இருக்கும் என்று நம்புகின்றேன். இந்த பயணத்தை மேற்கொள்ள என் வசம் ஐந்து நாட்கள் உள்ளன. எனது பயணத்தின் ஆரம்பத்தில் இது மிக சுவாரசியமாக முடியும் என்று நான் எதிர் பார்க்கவில்லை. சில அன்னியர்களை நண்பர்களாக்கினேன் நல்ல விருந்தோம்பல் மற்றும் நல்ல உணவை அனுபவித்தேன். இதோ இந்த பயணத்தின் தொடக்கத்திலிருந்து இறுதி வரை உங்களுக்காக!

தொடக்கம்: சென்னை.

இலக்கு: கோகர்ணா

கோகர்ணாவை அடைவது எப்படி:

கோகர்ணாவை அடைவது எப்படி:

விமானம் வாயிலாக செல்வதாக இருந்தால், கோவாவில் உள்ள தபோலின் விமான நிலையத்திற்கு செல்லலாம், ஏனெனில் கோகர்ணாவில் விமான நிலையம் கிடையாது. கோவாவிலிருந்து 140கிமி பயணித்தால் கோகர்ணாவை அடையாளம். இதுவே ரெயிலில் பயணமென்றால் அங்கோலா ரயில் நிலையத்தை வந்து சேர்ந்தால், அங்கிருக்கு சுமார் 20கிமி தொலைவில் தான் கோகர்ணா உள்ளது. சென்னையிலிருந்து கோகர்ணா 834கிமி, பல பேருந்து வசதிகள் உள்ளன. காரில் பயணிக்க விரும்புவர்களுக்கு ஒரு அற்புதமான பயணம் காத்துகொண்டு இருக்கிறது என்றே கூறலாம்.

எந்த பாதையைத் தேர்ந்தெடுப்பது?

எந்த பாதையைத் தேர்ந்தெடுப்பது?

இங்கு குறிப்பிட்டுள்ள பாதைகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்வு செய்துகொள்ளலாம்.

பாதை 1: சென்னை - பெங்களூரு - தும்கூர் - தாவணகெரே - கோகர்ணா (NH 48)

பாதை 2: சென்னை - புதுச்சேரி - ஓசூர் - பெங்களூர் - தாவணகெரே - கோகர்ணா (NH 48)

நான் முதல் பாதையை தேர்வு செய்தேன். எனக்கு 14 மணி நேரமானது கோகர்ணாவை அடைய. நீண்ட தூரம் என்றாலும் இந்த பயணம் மிகவும் மகிழ்ச்சியயை அளித்தது. ஏனென்றால் பிடித்த இடத்தில் நின்று இயற்கையை ரசிக்கவும் நினைத்த நேரத்தில் ஓய்வெடுக்கவும் என்னால் முடிந்தது. இரண்டாம் பாதையில் பயணம் செய்ய 16 மணி நேரம் 45 நிமிடங்கள் ஆகும் என்ற தகவலையும் பதிவு செய்ய விரும்புகிறேன். கோகர்ணாவை முழுமையாக ஆராய இரண்டு முதல் மூன்று நாட்கள் ஆகும். இலக்கை நோக்கி பயணம் செய்யும் வழியில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடமாக தாவணகெரே விளங்குகிறது .

தாவணகெரேயில் செய்ய வேண்டிய ஐந்து விஷயங்கள்:

தாவணகெரேயில் செய்ய வேண்டிய ஐந்து விஷயங்கள்:


தாவணகெரேயில் சுற்றி பார்ப்பதிலிருந்து அந்த ஊர் உணவுகளை ரசிப்பதுவரை, செய்ய பல விஷயங்கள் உள்ளது. இந்த இடத்தின் முக்கியமான ஈர்ப்பு ஸ்ரீ ஆஞ்சிநேயர் சுவாமி கோயில். இந்த கோயில் ஸ்ரீ ஆஞ்சிநேயர் பகவானுக்காக எழுப்பப்பட்டது. இவர் ராமனுக்கு, சீதையை ராவணனிடம் இருந்து மீட்க உதவி செய்தவர் என்று புராணங்கள் கூறுகின்றது. ஹரிஹரேஸ்வர கோயில் தாவணகெரேயிலிருந்து சற்று தூரத்தில் இருக்கும் கோயில். இங்கே வணங்கப்படும் சிலை, சிவன் மற்றும் விஷ்ணு ஒருங்கிணைந்த திருஉருவமாகும். 1224கிபியில் கட்டப்பட்ட இந்த கோயில் ஹொய்சளா கட்டிட கலையின் பெரிய எடுத்துக்காட்டாக திகழப்படுகிறது.

PC: wikimedia.org

தாவணகெரே அருகில் உள்ள உச்சங்கிதுர்கா கோட்டை:

தாவணகெரே அருகில் உள்ள உச்சங்கிதுர்கா கோட்டை:

  • இரண்டு கோயில்களுமே தனித்துவம்மிக்கதாக இருந்தது.இந்த பிரம்மாண்டமான கட்டிட கலைகளையம் தெய்வீக தன்மையும் ரசித்த கொண்டிருந்த எனக்கு, நான் வெகு நேரமாக சாப்பிடவில்லை என்பது நினைவுக்கு வந்தது.
  • ஊர் மக்களின் பரிந்துரையை கேட்டு, நான் மஹிளா ஸமாஜா காம்ப்ளக்ஸ், பராவசி மந்திர சாலை, சாகர் ஹோட்டலில் இருந்து வெண்ணை தோசையை சுவைக்க முடிவு செய்தேன். சற்று நேரத்தில் தோசை எனது மேசை மேல் தன்னை சுவைக்க காத்துகொண்டு இருந்தது. என் வாழ்நாளில் நான் சுவைத்த மிக மொறுமொறுப்பான மற்றும் சுவையான தோசை இது தான்.
  • ராம் அண்ட் கோ என கூறப்படும் கூட்டுறவுக்கும் ஒரு பயணம் செய்தேன், துரித உணவுகளுக்கு பேர்போன இந்த இடத்தில் மிளகாய் பஜ்ஜியின் சுவை என்னால் மறக்கவே முடியாதது. தாவணகெரேயில் இருந்த கிளம்ப மனமில்லாமல் விடைபெற்றேன். அடுத்த இலக்கான சிர்சிக்கு புறப்பட்டேன். மேற்கு தொடர்ச்சி மலையின் இதைய பகுதியில் அமைத்திருக்கும் சிர்சி, தாவணகெரேயில் இருந்து சுமார் 145கிமி இருக்கும்.
  • இந்த மலை பகுதி, அடர்ந்த காடுகளால் சூழப்பட்டது. மலை உச்சிக்கு பயணித்து இயற்கை வளம்பெற்ற இந்த இடத்தை ரசித்தேன். அமைதியான இடம், நட்பு வளர்க்கும் மக்கள் இந்த இடத்தில ரசிக்க வேண்டியவை பல உள்ளன. மாநில நெடுஞ்சாலையில், 1600கிபியில் உருவாக்கப்பட்ட மாறிக்காம்பிகை கோயில், இங்கே வரும் பயணிகள் பார்க்க வேண்டிய ஒரு இடம். தேவி மாறிக்காம்பிகைக்காக எழுப்பப்பட்ட இந்த கோயில் பிரபலமான ஒன்றாகும். இங்கே அமைந்திருக்கும் பிரமிப்பூட்டும் சித்திரங்களும் ஓவியங்களும் வரலாற்றை பேசுகின்றது.


PC: wikimedia.org

யானா குகை பற்றி அறிவோம்:

யானா குகை பற்றி அறிவோம்:

தேவி மாறிக்காம்பிகையை வணங்கியபின் என் பயணம் சிர்சியில் இருக்கும் யானா குகையை நோக்கி தொடர்த்தது. இது அடிப்படையில் அடர்ந்த காட்டின் நடுவே அமைந்துள்ள ஒரு பாறையின் உருவாக்கம் தான். இங்கே இயற்கை பசுமைகளுடன் நீர்வீழ்ச்சி மற்றும் மலை ஏறுதல் என பல சுவாரசியங்கள் நிரம்பி உள்ளது.

கோகர்ணா மற்றும் விபூதி நீர்வெழுச்சிக்கு சென்ற பின், பிரகதி ஹோம் ஸ்டெயில் தஞ்சம் அடைந்தேன். உள்ளுர் உணவுகளை ரசித்தேன், இங்கே தான் உண்மையான ஹவ்யகா ருசியை சுவைக்க முடிந்தது. இறுதி இலக்காண கோகர்ணாவை நோக்கி என் பயணம் தொடர்கிறது, கோகர்ணா என்றல் " பசுவின் காது" என்று பொருள். சிவன் பசுவின் காதுகளில் இருந்து தான் வெளிவந்தார் என்று ஒரு நம்பிக்கை கோகர்ணாவில் உள்ளது.

இங்கே ஐந்து முக்கிய கடற்கரைகள் உள்ளன கோகர்ணா கடற்கரை, பாரடைஸ் கடற்கரை, ஓம் கடற்கரை, குட்லே கடற்கரை மற்றும் ஹாப் மூன் கடற்கரை. எனினும் ஓம் கடற்கரையில் தான் சுட்டுறுலா பயணிகளின் வருகை அதிகம் உள்ளது. சிறப்பான உணவு, தங்கும் விடுதி, சாகச விளையாட்டுகள் என சுற்றுலா வாசிகளை ஈர்க்கிறது இவ்விடம். மற்ற சுற்றுலா இடங்களாக மகாபலேஸ்வரா கோயில், மகாகணபதி கோயில், முருதேஸ்வரா கோயில் மற்றும் மிர்ஜான் கோட்டை.


PC: wikimedia.org

கோகர்ணாவில் தங்கும் விடுதி:

கோகர்ணாவில் தங்கும் விடுதி:

இங்கே பல ஓய்வு விடுதிகள் உள்ளன. நான் பரசுராம் டெம்பிள் சாலையில் உள்ள ஹரி பிரியா ரெசிடெண்சியில் தங்கினேன். இங்கு சீரான அறைகள் மற்றும் நல்ல வசதிகள் உள்ளன,தொந்தரவற்ற இடமாகவும் இருந்தது. எனது அறையில் இருந்த பால்கனியில் இருந்து மனம் மயக்கும் கட்சியும் காண முடிந்தது.

கோகர்ணாவில் வாங்கவேண்டியவை:

கோகர்ணாவில் வாங்கவேண்டியவை:

கோகர்ணாவில் சுவாரசியமான பொருட்கள் பல உள்ளன. ஆடைகள், வெண்கல சிலைகள், வீட்டு அலங்கார பொருட்கள், மசாலா, பாசிமணி நகைகள் போன்ற பலவகையான பொருட்கள் இங்கே முக்கிய வீதிகளில் இருக்கும் கடைகளில் கிடைக்கின்றன, இதனால் பல சுற்றுலா வாசிகள் இங்கே ஈர்க்க படுகின்றன. பேரம் பேசுவதை விரும்புவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.

தொடர்ந்து இணைந்திருங்கள்! நன்றி

Read more about: travel beach

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்