Search
  • Follow NativePlanet
Share
» »குற்றாலத்துக்கு பக்கத்துலயே ஒரு அட்டகாசமான ஏரி! தேடிப்போலாமா?

குற்றாலத்துக்கு பக்கத்துலயே ஒரு அட்டகாசமான ஏரி! தேடிப்போலாமா?

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாக உருவெடுத்துள்ள இடம் இந்த தேன்மலா ஆகும். தேன் நிரம்பிய மலை என்பதை பெயரிலிருந்தே புரிந்துகொள்ள முடியும். திருவனந்தபுரத்திலிருந்து 70 கி.மீ த

By Udhaya

வணக்கம் தமிழ் நேட்டிவ் பிளானட் வாசகர்களே. நமது தளத்தில் உங்களுக்கு தெரிந்திராத, மிகவும் அழகழகான, ஆச்சர்யங்கள் நிறைந்த பல இடங்களை ஒவ்வொரு கட்டுரையிலும் தந்து வருகிறோம். உங்களுக்கு பிடித்த இடங்களைப் பற்றியும், அடுத்ததாக நீங்கள் சுற்றுலா செல்ல திட்டமிடும் இடங்களைப் பற்றியும் நமது தளத்தின் வாயிலாக நீங்கள் எளிதில் அறிந்துகொள்வீர்கள் என நம்புகிறோம். அப்படித்தான் உங்களுக்கு தெரிந்திராத இடங்களைப் பற்றியும் இதே தளத்தில் நாங்கள் தந்துகொண்டு வருகிறோம். அப்படி ஒரு தொகுப்புதான் இந்த தேடிப்போலாமா? இன்று நாம் தேடிப் போக இருப்பது குற்றாலத்துக்கு பக்கத்தில் இருக்கும் ஒரு சூப்பரான நீர்த்தேக்கம். இந்த நீர்த்தேக்கத்த பத்தி பாக்கறதுக்கு முன்னாடி இந்த பக்கத்தில் மேல் பகுதியில் இருக்கும் பெல் பட்டனைத் தட்டி, இந்த தளத்திலிருந்து தொடர் அப்டேட்டுகளை பெறுங்கள். மேலும் நமது முகநூல் பக்கத்திலும் பின்தொடருங்கள். ஏதேனும் சுற்றுலாத் தொடர்பான சந்தேகங்களுக்கு முகநூல் பக்கத்தின் உள்டப்பியைத் தொடர்புகொள்ளுங்கள். தமிழ் நேட்டிவ் பிளானட்

குற்றாலம் பயணம்

குற்றாலம் பயணம்


சென்னையிலிருந்து கிட்டத்தட்ட 13 மணி நேர பயண தொலைவில் அமைந்துள்ளது இந்த குற்றாலம் எனும் குளு குளு பகுதி. இது திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை ஓரத்தில் ஒய்யாரமாக வீற்றிருக்கிறது. இங்கு அருகாமையிலேயே பல சுற்றுலாத் தளங்கள் காணப்படுகின்றன. ஆனால் நாம் இப்போது செல்லவிருப்பது இந்த குற்றாலத்துக்கு அருகில் கேரள தமிழக எல்லையில் அமைந்திருக்கும் ஒரு நீர்த்தேக்கத்துக்கு.

 சென்னையிலிருந்து எப்படி செல்வது?

சென்னையிலிருந்து எப்படி செல்வது?

சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு நிறைய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் அன்றாட ரயில்களும் இங்கு இயக்கப்படுகின்றன. இது தவிர தனியார் பேருந்துகளிலும் திருநெல்வேலிக்கு சென்னையிலிருந்து பயணிக்கமுடியும்.

ரயில்கள்

குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் காலையில் சென்னையிலிருந்து கிளம்பி இரவு 8 மணிக்கு திருநெல்வேலியை வந்தடைகிறது. மேலும் மதிய வேளைகளில் நாகர்கோயில் எக்ஸ்பிரஸ், சென்னை - நாகர்கோயில் எக்ஸ்பிரஸ், என நான்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர திருச்செந்தூர் எக்ஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

விமானம்

சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு வர வேண்டும் என்றால் மதுரை அல்லது திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு வரவேண்டும். சில சமயங்களில் தூத்துக்குடி விமான நிலையத்துக்கும் பயணிக்கலாம்.

குற்றாலத்திலிருந்து தேன்மலை

குற்றாலத்திலிருந்து தேன்மலை


தேன்மலை என்று தமிழில் அழைத்தாலும், இதை பெரும்பாலான கேரளத்தவர்கள் தென்மலா என்றே அழைக்கின்றனர். இது பொதுவாக கேரளமாநிலத்திலிருந்து செல்லும் வகையில் அமைந்திருந்தாலும், குற்றாலத்திலிருந்தும் இந்த பகுதிக்கு பயணிக்கமுடியும். இதைத்தான் இந்த தேடிப்போலாமா பகுதியில் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

குற்றாலத்திலிருந்து மாநில நெடுஞ்சாலை எண் 40 வழியாக பயணித்துக்கொண்டிருந்தால், பிறநூர் எனும் இடத்தில் தேசிய நெடுஞ்சாலை 744 வந்து இணையும். அங்கிருந்து பயணித்தால் கிட்டத்தட்ட அரை மணி நேரத்தில் தேன்மலையை நீங்கள் அடையலாம்.

 தேன்மலை

தேன்மலை

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாக உருவெடுத்துள்ள இடம் இந்த தேன்மலா ஆகும். தேன் நிரம்பிய மலை என்பதை பெயரிலிருந்தே புரிந்துகொள்ள முடியும். திருவனந்தபுரத்திலிருந்து 70 கி.மீ தூரத்தில் இந்த தேன்மலா அமைந்துள்ளது. இந்தியாவிலேயே முதன்முதலாக ‘சூழலியல் சுற்றுலாத்திட்டம்' (இயற்கை சுற்றுலா வளாகம்) இப்பகுதியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேன்மலா நகரம் பலவிதமான அற்புத மூலிகைத்தாவரங்களுக்கும் தேனுக்கும் புகழ் பெற்று விளங்குகிறது.

Haravinth rajan

ஐந்து மண்டலங்கள்

ஐந்து மண்டலங்கள்

‘சூழலியல்' சுற்றுலாத்திட்டத்தின் அடிப்படையாக இப்பகுதி 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. கலாச்சார மண்டலம், சாகசப்பொழுதுபோக்கு மண்டலம், பொழுதுபோக்கு மண்டலம், மான்கள் மறுவாழ்வு மண்டலம் மற்றும் படகுச்சவாரி மண்டலம் என்பவையே அவை. பல ஏக்கர்களில் விரிந்திருக்கும் பசுமை மாறாக்காடுகளை கொண்டிருக்கும் இந்த இயற்கை சுற்றுலா வளாகம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகளை ஈர்த்து வருகிறது. இந்த ‘சூழலியல்' சுற்றுலாத்திட்ட வளாகத்தில் பல அரிய வகை தாவரங்கள் மற்றும் உயிரினங்கள் நிரம்பியுள்ளன.

Haravinth rajan

 பாலருவி நீர்வீழ்ச்சி

பாலருவி நீர்வீழ்ச்சி

மலைப்பாங்கான அமைப்பை கொண்டுள்ள இந்த சுற்றுலாத்தலத்தில் படகுச்சவாரி, கயிற்றுப்பாலம், மலையேற்றம், சிகரமேற்றம், சைக்கிள் பயணம் மற்றும் இசை நீரூற்று போன்ற ஏராளமான சுற்றுலா அம்சங்கள் நிறைந்துள்ளன. இயற்கை ரசிகர்கள் விரும்பக்கூடிய சொர்க்கபூமி தேன்மலா சுற்றுலாத்தலத்தின் ஒரு முக்கியமான சிறப்பம்சமாக கல்லடா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஒரு அணை அமைந்துள்ளது. மேலும் பாலருவி நீர்வீழ்ச்சி எனும் ஒரு பிக்னிக் ஸ்தலமும் இங்கு அருகிலேயே உள்ளது.

Akhilan

 தேனிலவுப்பயணிகள்

தேனிலவுப்பயணிகள்

இது தேனிலவுப்பயணிகள் மத்தியில் பிரசித்தமாக உள்ளது. பலவிதமான மான் இனங்கள் வசிக்கும் மான் பூங்காவும் அவசியம் பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு அம்சமாகும். இந்த பூங்காவில் கட்டப்பட்டிருக்கும் மரவீடுகள் ஒரு அற்புதமான சுற்றுலா அனுபவத்தை தர காத்திருக்கின்றன. நட்சத்திரவனம் எனும் தோட்டப்பண்ணை, ஆரியங்காவு சாஸ்தா கோயில், குளத்துப்புழா சாஸ்தா கோயில் மற்றும் மரத்தொங்கு பாலம் போன்றவை தேன்மலா சுற்றுலாத்தலத்தை சுற்றுலா ரசிகர்களுக்கு பிடித்த இடம் எனும் புகழை பெற்றுத்தந்துள்ளன.

பாலருவி நீர்வீழ்ச்சி

பாலருவி நீர்வீழ்ச்சி


கேரளா - தமிழ்நாடு எல்லைப்பகுதியில் உள்ள இந்த பாலருவி நீர்வீழ்ச்சி தேன்மலா சுற்றுலாத்தலத்தின் மற்றொரு முக்கியமான அம்சமாகும். பால் வழிந்து ஊற்றுவதுபோல் நுரையுடன் நீர் வழிவதால் இதற்கு பாலருவி என்று பொருத்தமாக பெயரிடப்பட்டுள்ளது. நுரைத்துக்கொண்டு ஓடிவரும் சிற்றோடைகள், வெள்ளிக்கம்பி போல் விழும் அருவிகள் என்று இந்த நீர்வீழ்ச்சிப்பிரதேசம் பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும் அம்சங்களை கொண்டுள்ளது. 300 அடி உயரம் உள்ள இந்த நீர்வீழ்ச்சியை நோக்கிய இயற்கைப்பயணம் மேற்கொள்வதற்கு உதவியாக உள்ளூர் காட்டுச்சுற்றுலா வழிகாட்டிகள் உள்ளனர். பயண உபகரணங்கள் மற்றும் பாதை வரைபடங்கள் போன்றவற்றையும் இங்குள்ள வனத்துறை கிளை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

Akhilsunnithan

ஆர்யங்காவு

ஆர்யங்காவு

ஆர்யங்காவு அல்லது மேற்குத்தொடர்ச்சி மலை பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் இந்த திருத்தலம் கொல்லம் மாவட்டத்திலிருந்து கிழக்கே 73 கி.மீ தூரத்தில் உள்ளது. தேன்மலாவை ஒட்டியே உள்ள இந்த ஆர்யங்காவு எனும் கிராமம் கொல்லம் மாவட்டத்தின் முக்கிய ஆன்மீக திருத்தலங்களில் ஒன்றாக பெயர் பெற்று விளங்குகிறது. ஆர்யங்காவு பகுதியின் பிரதான விசேஷம் இங்குள்ள பாலருவி எனும் நீர்வீழ்ச்சியாகும். மதர் ஆஃப் லேடி சர்ச், செயிண்ட் மேரி ரோமன் கத்தோலிக்க சர்ச் மற்றும் செயிண்ட் மலங்கரா கத்தோலிக்க சர்ச் போன்ற தேவாலயங்களும் இதர ஆன்மீக அம்சங்களாக இங்கு பிரசித்தி பெற்றுள்ளன. ஐயப்பன் குடிகொண்டிருக்கும் ஆர்யங்காவு சாஸ்தா கோயில் அதன் ஆன்மீக முக்கியத்துவத்துக்காக மட்டுமன்றி உன்னதமான கோயில் வடிவமைப்பிற்காகவும் புகழ்பெற்று விளங்குகிறது. மண்டலபூஜையின்போது இக்கோயிலில் ஆயிரக்கணக்காண பக்தர்கள் திரண்டு வந்து ஐயப்பனை வணங்குகின்றனர்.

Anoop menon

சூழலியல் சுற்றுலா திட்டம்

சூழலியல் சுற்றுலா திட்டம்

சூழலியல் சுற்றுலா திட்டம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த இயற்கை சுற்றுலா வளாகமானது இந்தியாவிலேயே முதன் முதலாக அமைக்கப்பட்ட ஒன்றாகும். இந்த வனப்பகுதியின் தனித்தன்மையான இயற்கையமைப்பு, தாவர செழிப்பு மற்றும் காட்டுயிர் அம்சங்களுக்காக இப்படி ஒரு அந்தஸ்து இந்த பகுதிக்கு கிடைத்துள்ளது. இந்த இயற்கை சுற்றுலா வளாகமானது 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றும் ஒவ்வொரு குறிப்பிட்ட சுற்றுலா அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. இவற்றில் இயற்கை ரசிகர்கள் மற்றும் அதிதீவிர சாகச விரும்பிகள் போன்ற அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்துள்ளன. இந்த இயற்கை சுற்றுலா வளாகத்தின் கலாச்சார மண்டலத்தில் ஒரு திறந்தவெளி அரங்கு, உள்ளூர் பெண்களால் நடத்தப்படும் அங்காடிகள் மற்றும் ஒரு இசை நீரூற்று போன்றவை அமைந்துள்ளன. சாகசச்சுற்றுலா மண்டலமானது காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கப்படுகிறது.


Yercaud-elango

Read more about: travel tour thenmala
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X