Search
  • Follow NativePlanet
Share
» »கோவளம் கடற்கரையில் மண்ணோடு மண்ணாக மூழ்கடிக்கப்பட்ட வரலாறு!

கோவளம் கடற்கரையில் மண்ணோடு மண்ணாக மூழ்கடிக்கப்பட்ட வரலாறு!

தமிழ்நாட்டின் பிரபலமான மீன்பிடி கிராமமான கோவளம், கடற்கரையை நேசிப்பவர்களுக்கு அற்புதமான அனுபவத்தை அளிக்கக்கூடிய சுற்றுலாத் தலம். இந்த ஸ்தலம் சென்னைக்கு அருகாமையில் இருப்பதால் வார இறுதியை குடும்பத்துடன்

By Udhaya

தமிழ்நாட்டின் பிரபலமான மீன்பிடி கிராமமான கோவளம், கடற்கரையை நேசிப்பவர்களுக்கு அற்புதமான அனுபவத்தை அளிக்கக்கூடிய சுற்றுலாத் தலம். இந்த ஸ்தலம் சென்னைக்கு அருகாமையில் இருப்பதால் வார இறுதியை குடும்பத்துடன் சந்தோஷமாக கழிப்பதற்காக ஏராளமான சென்னை வாசிகள் கோவளத்திற்கு வருகின்றனர். கோவளத்தில் உள்ள டச்சு கோட்டையானது சுற்றுலா விடுதியாக மாற்றப்பட்டு வருடந்தோறும் நிறைய சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. இது 'தாஜ் பிஷர்மேன் கோவ்' என்று அழைக்க்படுகிறது. இதைப் பற்றியும், அழிக்கப்பட்ட வரலாறு பற்றியும், அதனுடன் இங்குள்ள சுற்றுலா அம்சங்கள் பற்றியும் இந்த பகுதியில் காண்போம்.

தவற விட்டுவிடக் கூடாது

தவற விட்டுவிடக் கூடாது

இளைப்பாறுவதற்க்கும் நல்ல முறையில் நேரத்ததை செலவு செய்வதற்க்கும் ஏற்ற இடம் இது. கோவளத்தில் 5ம் நூற்றாண்டு முதல் 8ம் நூற்றாண்டை சேர்ந்த பல்லவ பேரசரர்களால் கட்டப்பட்ட கோயில்களை சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக தவற விட்டுவிடக் கூடாது. இந்த கோவில்கள் முன்னாள் தென் இந்திய பேரரசுகளின் வளமான பண்பாட்டு பாரம்பரியத்தை வெளிப்படுத்துகின்றன. இந்த கடற்கரை கோவில்கள் இந்த பிராந்தியத்தில் கோவளத்தின் சுற்றுலாவிற்கு மதிப்பு கூட்டி வருகின்றன.

Kmanoj

பாய்மர படகு போட்டி

பாய்மர படகு போட்டி

பல்வேறு நீர் விளையாட்டுகளை கோவளத்தில் தெரிவு செய்ய முடியும். இந்தியாவில் பாய்மர படகு போட்டிக்கான ஒரே இடம் கோவளம் என்பது குறிப்பிடத்தக்கது. வங்காள விரிகுடாவிற்கு இணையாக செல்லும் ஒரு கால்வாய் கோவளத்தை நிலப்பகுதியில் இருந்து பிரிக்கின்றது. இந்த பிராந்தியத்தின் மற்ற முக்கிய இடங்கள் கோவளம் கடற்கரை, கத்தோலிக்க தேவாலயம், டச்சு கோட்டை, முத்துக்காடு காயல் நீர் முதலியன. தமிழக கடற்கரை பகுதியில் காணப்படும் அதே வெப்பம் மற்றும் ஈரப்பதம் நிறைந்த கால நிலையானது இங்கும் காணப்படுகின்றது.

VinodJ .

 சுற்றி பார்க்க சிறந்த நேரம்

சுற்றி பார்க்க சிறந்த நேரம்

கோடைகாலத்தில் இங்கு பயணம் செய்வதை தவிர்ப்பது நல்லது ஏனென்றால் அப்போது வெப்ப நிலையானது 38 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும். இங்கு சுற்றி பார்க்க சிறந்த நேரம் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலம். இது கோவளத்தின் குளிர்காலமாகும். சென்னை, பாண்டிச்சேரி மற்றும் தரங்கம்பாடி அருகில் அமைந்துள்ள கோவளம், தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் சாலை வழியாக எளிதில் அடையும் வகையில் உள்ளது.

Vijayaraghavan Rajendran

 முத்துக்காடு காயல் நீர்

முத்துக்காடு காயல் நீர்


முத்துக்காடு காயல் நீர் பல நீர் விளையாட்டுகளுக்கு பேர்போன ஒரு இடமாகும். நீர்ச்சறுக்குதல், பாய்மர சறுக்கு போன்ற நீர் விளையாட்டுகளில் ஒருவர் தன்னால் இயன்ற அளவு தன்னை ஈடுபடுத்திகொள்ள முடியும்.

yjenith

இயற்கையின் புகலிடம்

இயற்கையின் புகலிடம்

முத்துக்காடு சென்னையில் இருந்து 28 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். கோவளம் செல்லும் போது இந்த இடத்தை தவற விடக்கூடாது. கோவளத்தில் உள்ள முத்துக்காடு, நகரத்தில் இருந்து சற்று தொலைவில் இருந்தாலும், மாசு பற்றிய கவலை இல்லாமல் இயற்கையின் புகலிடமாக அமைந்துள்ளது.

Ashwin Kumar

 பாய்மர படகு போட்டி

பாய்மர படகு போட்டி


  • தமிழ் நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தினால் நன்றாக பராமரிக்கப்பட்டு சுற்றுலா நடவடிக்கைகள் கட்டுப்படுத்துப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தின் போது, பாய்மர படகு போட்டி முத்துக்காட்டில் நடைபெறுகிறது.

    இது ஒவ்வொரு ஆண்டும் கணிசமான அளவு பார்வையாளர்களை முத்துக்காடு காயல் நீருக்கு ஈர்க்கிறது. இந்த பகுதியானது பல்வேறுபட்ட தாவர மற்றும் விலங்கின வகைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. மேலும் பசுமை மூலப்பொருட்களும், மாசற்ற பரந்த நீர் பரப்பையும் கொண்டுள்ளது.

    Destination8infinity

     கத்தோலிக்க திருச்சபை

    கத்தோலிக்க திருச்சபை

    கத்தோலிக்க திருச்சபை, கோவளத்தின் ஒரு மிக பிரபலமான இடம், இது காலனித்துவ ஆட்சியின் ஆரம்ப நாட்களில் கட்டப்பட்டது. மாறிவரும் காலத்தில் இது ஒரு சகிப்புத்தன்மையின் சின்னமாக இன்று உள்ளது. இந்த தேவாலயமானது இந்தியாவின் காலனித்துவ ஆட்சியின் ஆரம்ப நாட்களை கண்டிருக்கின்றது மற்றும் அதன் வரலாற்று போக்கில் நடந்த பல முக்கிய நிகழ்வுகளுக்கு சாட்சியாக இருந்து வருகிறது.

    Mathen Payyappilly

    சுற்றுலா ஆர்வலர்கள்

    சுற்றுலா ஆர்வலர்கள்


    பக்தர்கள் கூட்டம் ஆண்டு முழுவதும் எல்லா நேரங்களிலும் தேவாலயத்துக்கு வந்து செல்கின்றனர். இந்த தேவாலயத்தின் உயர்ந்த கட்டமைப்பானது இந்த கிராமத்தின் ஒரு முக்கியமான மைல்கல்லாக உள்ளது. மேலும் கோவளம் வழியாக செல்லக்கூடிய சுற்றுலா ஆர்வலர்களுக்கு தெளிவாக தெரியக்கூடிய ஒரு நினைவு சின்னமாக அமைந்துள்ளது.

    Destination8infinity

    டச்சு கோட்டை

    டச்சு கோட்டை

    டச்சு கோட்டை கோவளத்தின் மற்றொரு முக்கியமான கண்கவர் இடம். இது வரலாற்று காதலர்களின் ஆர்வத்தை தூண்டக்கூடியது. கடற்கரையில் அமைந்துள்ள இந்த கோட்டையானது குடியேற்றத்தின் பாதுகாப்புக்கான ஒரு முக்கிய தலமாக டச்சு கிழக்கிந்திய கம்பெனியால் கட்டப்பட்டது. இந்த வரலாற்று நினைவு சின்னத்தை கட்டிய பெருமை டச்சு அரசாங்கத்தை சாரும் என்றாலும் அவர்கள் கோவளத்தை விட்டு சென்ற பின் இது பல்வேறு குடியேற்றங்களுக்கு புகலிடமாக இருந்துள்ளது.

    புகழ்

    புகழ்

    இதனுடைய புகழ் மங்கி விட்டது என்றாலும் கூட கடந்த காலத்தின் பெருமையை பறைசாற்றும் விதமாக அது இன்னும் நின்று கொண்டு, ஆண்டுதோறும் கோவளத்திற்கு வரும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்து கொண்டிருக்கிறது. இந்த கோட்டைக்கு அருகாமையில் கடலோர குடில்கள், தங்குமிடங்கள் ஆகியவை காணப்படுகின்றன. சாலை வழியாக எளிதில் இந்த கோட்டைக்கு செல்ல முடியும். கோவளத்தில் இருக்கும் பட்சத்தில் இந்த கோட்டையை சென்றடைவது என்பது மிகவும் கடினமாக காரியம் அல்ல.

    Ashwin Kumar

More News

    Read more about: chennai travel beaches
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+