Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவில் இருக்கும் இங்கிலாந்து ராஜ அரண்மனைக்கு செல்வோம் வாருங்கள்

இந்தியாவில் இருக்கும் இங்கிலாந்து ராஜ அரண்மனைக்கு செல்வோம் வாருங்கள்

இந்தியாவை வெள்ளைக்காரர்கள் ஆட்சி செய்த இருநூறு வருடங்களில் இந்திய திருநாட்டின் முகமே முற்றிலுமாக மாறிப்போனது என சொல்லலாம். 1800களில் தொடங்கி 1947ஆம் ஆண்டு அவர்கள் ஆட்சி முடிவுக்கு வந்த நூற்றைம்பது ஆண்டுகளில் இந்தியாவின் கலாச்சாரம், மக்களின் வாழ்க்கை முறை போன்றவை அனைத்தும் முற்றிலுமாக மாறிப்போனது.

அவர்களின் ஆட்சி காலத்தில் இந்தியாவெங்கும் இங்கிலாந்தில் இருப்பது போன்ற பிரிட்டிஷ் கலையம்சம் பொருந்திய கட்டிடங்களை நிறுவிசென்றுள்ளனர். அவை ஒவ்வொன்றுக்கும் பின்னால் பல சுவாரஸ்யமான காரணங்கள் போதிந்திருகின்றன. அப்படி ஆங்கிலேயர்கள் இந்தியாவில் கட்டிய கட்டிடங்களிலேயே மிக பிரமாண்டமானதாக, பேரழகு நிறைந்ததாக இருக்கிறது விக்டோரியா நினைவு அரண்மனை. அதனை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

விக்டோரியா நினைவு மாளிகை :

விக்டோரியா நினைவு மாளிகை :

1837-1901 வரை இங்கிலாந்து நாட்டின் அரசியாக இருந்த ராணி விக்டோரியா என்பவரின் நினைவாக கொல்கத்தா நகரில் உள்ள ஹூக்லி நதிக்கரையில் கட்டப்பட்டிருக்கிறது விக்டோரியா நினைவு மாளிகை.

Ajay Goyal

விக்டோரியா நினைவு மாளிகை :

விக்டோரியா நினைவு மாளிகை :

விக்டோரியா ராணி மறைந்து ஐந்து ஆண்டுகள் கழித்து 1906ஆம் ஆண்டு கட்டிடப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு பதினேழு ஆண்டுகள் கழித்து 1921இல் தான்இந்த அரண்மனைக்கான கட்டிமுடிக்கப்பட்டிருக்கிறது.

Arindam Mitra

விக்டோரியா நினைவு மாளிகை :

விக்டோரியா நினைவு மாளிகை :

இந்தியாவில் இருக்கும் பளிங்கு கல்லினால் கட்டப்பட்ட மிகப்பெரிய கட்டிடங்களில் ஒன்றான இந்த மாளிகை இப்போது மத்திய கலாச்சார அமைச்சகத்தினால் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

দেবর্ষি রায়

விக்டோரியா நினைவு மாளிகை :

விக்டோரியா நினைவு மாளிகை :

மறைந்த விக்டோரியா ராணியின் புகழை பறைசாற்றும் விதமாக இந்தியாவில் அப்போதைய பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் தலைநகரான கொல்கத்தாவில் பிரமாண்டமான மாளிகை ஒன்றை நிர்மாணிக்க வேண்டும் என்ற யோசனையை 1901 ஆம் ஆண்டு அப்போதைய இந்தியாவின் வைஸ்ராய் 'ஜார்ஜ் கர்சன்' என்பவர் முன்மொழிந்தார்.

Srijan Kundu

விக்டோரியா நினைவு மாளிகை :

விக்டோரியா நினைவு மாளிகை :

பின்னர் 1906ஆம் ஆண்டு வேல்ஸ் நாட்டு இளவரசரால் விக்டோரியா மாளிகைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதன் கட்டுமானப்பணிகள் நடந்துகொண்டிருக்கும் போதே ஐந்தாம் ஜார்ஜ் மன்னரால் நிர்வாக வசதியை கருத்தில் கொண்டு இந்தியாவின் தலைநகர் கொல்கத்தாவில் இருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டது.

Damien Roué

விக்டோரியா நினைவு மாளிகை :

விக்டோரியா நினைவு மாளிகை :

இந்த அரண்மனைக்கான கட்டுமான செலவுகளை சமாளிக்க அப்போது இந்தியாவெங்கும் இருந்த ராஜ்ஜியங்களிடம் இருந்து பெரும் தொகைகளை வைஸ்ராய் ஜார்ஜ் கர்சன் நன்கொடையாக பெற்றிருக்கிறார்.

முழுக்க முழுக்க பளிங்கு கல்லினால் இந்த அரண்மனையை கட்டி முடிக்க நூறு வருடங்களுக்கு முன்பே ஒரு கோடியே ஐந்து லட்சம் ருபாய் செலவாகியிருக்கிறது.

Vishaka Jayakumar

விக்டோரியா நினைவு மாளிகை :

விக்டோரியா நினைவு மாளிகை :

338அடி நீளமும், 184 அடி உயரமும் கொண்ட இந்த கட்டிடத்தை 'ராயல் இன்ஸ்டிட்யூட் ஆப் பிரிட்டிஷ் ஆர்கிடெக்ட்' என்ற அமைப்பின் தலைவரான 'வில்லியம் எமர்சன்' என்பவர் வடிவமைத்திருக்கிறார்.

McKay Savage

விக்டோரியா நினைவு மாளிகை :

விக்டோரியா நினைவு மாளிகை :

ராஜஸ்தானில் உள்ள மக்ரானா என்ற இடத்தில் கிடைக்கும் வெள்ளை பளிங்கு கற்களை கொண்டே இந்த அரண்மனை கட்டப்பட்டிருக்கிறது. இந்தியாவின் கட்டிடக்கலை அற்புதமான தாஜ்மஹாலும் இதே கல்லினால் தான் கட்டப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Srijan Kundu

விக்டோரியா நினைவு மாளிகை :

விக்டோரியா நினைவு மாளிகை :

இந்த அரண்மனையின் முன்பாக ரெடேஸ் டெல் மற்றும் டேவிட் பிரைன் என்பவர்களால் வடிவமைக்கப்பட்ட 64 ஏக்கர் பரப்பளவிலான மிகப்பெரிய தோட்டம் ஒன்றும் அமைந்திருக்கிறது.

இதன் நடுவே மறைந்த பிரிட்டிஷ் மகாராணி விக்டோரியா தனது அரியாசனத்தில் அமர்ந்திருப்பது போன்ற சிலை ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது.

Debasish Ghosh.

விக்டோரியா நினைவு மாளிகை :

விக்டோரியா நினைவு மாளிகை :

இந்த அரண்மனை வளாகத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் விக்டோரியா ராணி மற்றும் பிற பிரிட்டிஷ் அரச குடும்பத்தை சேர்ந்தவர்களுடைய அரிய புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

Abhijit Kar Gupta

விக்டோரியா நினைவு மாளிகை :

விக்டோரியா நினைவு மாளிகை :

அரண்மனையின் முன்புள்ள தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள விக்டோரியா மகாராணியின் சிலை.

விக்டோரியா நினைவு மாளிகை :

விக்டோரியா நினைவு மாளிகை :

இந்த மாளிகையின் கட்டுமான பணிகளின் போது எடுக்கப்பட்ட அரியதொரு பழைய புகைப்படம்.

விக்டோரியா நினைவு மாளிகை :

விக்டோரியா நினைவு மாளிகை :

21 தோட்ட கலைஞர்களால் அழகு குன்றாமல் பராமரிக்கபப்டும் அரண்மனை தோட்டம்.

விக்டோரியா நினைவு மாளிகை :

விக்டோரியா நினைவு மாளிகை :

அரண்மனையின் உள்ளே செயல்பட்டுவரும் அருங்காட்சியகத்தின் புகைப்படம்.

விக்டோரியா நினைவு மாளிகை :

விக்டோரியா நினைவு மாளிகை :

விக்டோரியா நினைவு மாளிகை இருக்கும் கொல்கத்தா நகரை பற்றிய பல பயனுள்ள தகவல்களை தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள் .

Read more about: kolkata historic places palace
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X