Search
  • Follow NativePlanet
Share
» »ஜெயா மரணத்தைத் தொடர்ந்து ஓபிஎஸ்? அதிரடி சரவெடி

ஜெயா மரணத்தைத் தொடர்ந்து ஓபிஎஸ்? அதிரடி சரவெடி

ஒரு சூப்பர்மேனைப் போல் பாவித்து தமிழகம் ஓபிஎஸ்ஸை கொண்டாடி வருகிறது. ஓ. பன்னீர்செல்வம் அவர்தான் ஓபிஎஸ்.. இதுவரை நம்மில் பலருக்கு அவரது குரல் எப்படி இருக்கும் என்று கூட தெரியாமல் இருந்திருக்கலாம். அரசியல் நோக்கர்கள் தவிர, மற்றவர்களால் அதிகம் அறியப்படாதவராக இருந்த பன்னீர் செல்வம் ஒரே இரவில் இந்தியாவுக்கே தெரியும் அளவுக்கு உயர்ந்துவிட்டார்.

முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவுக்கு பின்னர் அதிமுகவில் அதிகம் பேரால் மதிக்கப்பட்டவர், ஜெயாவின் நம்பிக்கைக்குரியவரான ஓபிஎஸ்.

ஜெயா மறைவுக்கு பிறகு, அதிமுக எந்த நிலைக்கு ஆகும் என்ற நிலையிருக்கையில் அவர் உயிர் பிரிந்த அந்த நாளிலேயே அவசர அவசரமாக முதலமைச்சரானார் ஓபிஎஸ்.

ஆனால், கட்சியின் பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் சசிகலா. ஓபிஎஸ் கூட இதனை வரவேற்றுள்ளார். அதன்பிறகு சசிகலா முதலமைச்சர் ஆகவேண்டும் என்ற நிலையில் பன்னீர் செல்வம் தனது பதவியைத் துறந்தார்.

இதன்பிறகு நடைபெற்ற சட்டசபை உறுப்பினர்கள் கூட்டத்தில் சசிகலா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க கோரலாம் என்றிருக்கையில், ஆளுநர் தமிழகம் வரவில்லை என்று காலதாமதம் ஆனது.

இந்நிலையில்தான், முதல்வர் ஓபிஎஸ் சென்னை மெரினாவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமாதியில் தியானத்தில் ஈடுபட்டார். மீடியாக்களின் பார்வை அவரது பக்கம் திரும்பிய நிலையில், தான் கட்டாயப்படுத்தப்பட்டு ராஜினாமா செய்யவைக்கப்பட்டதாகவும், மக்கள், தொண்டர்கள் விரும்பினால் திரும்ப முதல்வராக இருப்பதாகவும் அதிரடி பேட்டி கொடுத்தார்.

ஜெயா மறைவுக்கு பிறகு, ஓபிஎஸ் சென்ற இடங்கள் பற்றி இப்பதிவில் காணலாம்...

ராஜாஜி ஹால், சென்னை

ராஜாஜி ஹால், சென்னை


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தவுடன் அவரது உடல் சென்னை ராஜாஜி ஹாலில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஓபிஎஸ் உள்பட அனைத்து அதிமுகவினரும் அங்குதான் அன்று முழுவதும் இருந்தனர்.

அதிமுக அலுவலகம்

அதிமுக அலுவலகம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தது தெரிந்தது அவசர அவசரமாக அதிமுக அலுவலகத்தில் கூடி புதிய முதல்வராக ஓபிஎஸ்ஸை தேர்ந்தெடுத்தனர் அதிமுகவினர்.

தலைமைச் செயலகம்

தலைமைச் செயலகம்

புதிய முதல்வர் ஓபிஎஸ் தமது பணிகளை திறம்பட செய்து வந்தார். எதிர்க்கட்சிகளுடன் நல்ல முறையில் அணுகி ஆட்சி நடத்தினார். ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோருடன் சந்திப்புக்களும் நடைபெற்றன.

எதிர்க்கட்சிகளுடன் மிக இணக்கமான அணுகுமுறையை கையாண்டார் ஓபிஎஸ்

டெல்லி

டெல்லி

ஜல்லிக்கட்டு போராட்டம் வீறுகொண்டு எழவே, உடனடியாக டெல்லி சென்று பிரதமரை சந்தித்தார். பிரதமரும் ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும். ஆனால் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் தலையிட முடியாது என்று கைவிரித்தது.

அத்துடன் தமிழக அரசே சட்டம் இயற்றலாம் என்றும் ஆலோசனை தெரிவித்தது.

அலங்காநல்லூர்

அலங்காநல்லூர்

அவசர சட்டம் இயற்றிய கையோடு ஓபிஎஸ் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை துவக்கி வைக்க செல்ல, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் எதிர்ப்பு காட்ட மீண்டும் சென்னை திரும்பினார் ஓபிஎஸ்

மெரினா கடற்கரை காமராசர் சாலை

மெரினா கடற்கரை காமராசர் சாலை


வரலாற்றிலேயே முதல் முறையாக குடியரசு தினத்தில் கொடியேற்றும் தமிழக முதல்வர் எனும் பெயரைப் பெற்றார் ஓபிஎஸ். அதிமுக தலைமை யை வைத்துவிட்டு தன் மனைவியுடன் மேடையேறினார் ஓபிஎஸ். இதுவே நல்ல துணிச்சலாக பார்க்கப்பட்டது

போயஸ்கார்டன்

போயஸ்கார்டன்

கடந்த இரு நாட்களுக்கு முன் போயஸ்காடன் சென்றதாகவும், அங்கு வாக்குவாதம் நடந்ததாகவும் இதனால் ராஜினாமா செய்து வந்ததாகவும் பல்வேறு செய்திகள் வெளிவந்தன. ஆனால் ஒருமனதாக சசிகலாவை சட்டசபைத் தலைவராக தேர்ந்தெடுப்பதாக அதிமுக கூறியது.

மெரினா

மெரினா


பிப்ரவரி 7ம் தேதி முன்னிரவு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அதிமுக முன்னாள் பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் சமாதியில் சில நிமிடங்கள் தியானம் இருந்தார். அதன் பின்னர்தான் ஓபிஎஸ் புதிய பன்னீர்செல்வமாக மாறி அதகளப்படுத்திவிட்டார்.

Read more about: travel

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more