» »மகாராஷ்டிராவின் மாத்தேரான் பகுதியில் உள்ள ஒன் ட்ரீ ஹில் நோக்கி ஒரு ரயில் பயணம்!!

மகாராஷ்டிராவின் மாத்தேரான் பகுதியில் உள்ள ஒன் ட்ரீ ஹில் நோக்கி ஒரு ரயில் பயணம்!!

Written By: Balakarthik Balasubramanian

மாத்தேரான் எனும் இடம், உச்சி நுகர்ந்துப் பார்த்து நம்மை வியப்பில் ஆழ்த்தும் ஒரு மலைப்பகுதியாக மும்பை மாநகரில் காணப்படும் பிரசித்திப்பெற்ற ஒன்றாகும். இந்த மலை வாசஸ்தலம் மும்பையிலிருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் காணப்படுகிறது. இப்பொழுது, மாத்தேரான் மலைப் பகுதியில் உள்ள மலை ஏறுவதற்கு ஏதுவான இடங்களைப் பற்றி நாம் தெரிந்துக்கொள்வோமா!

வெளிநாட்டவர் மத்தியில் பிரபலமான சுற்றுலாத் தலங்கள்!


ஒரு வாரத்தின் இறுதியில் எனக்குள்ளே ஏற்பட்டதொரு மாற்றம் அது! ஆம், எங்காவது ஒரு புதிய இடத்திற்கு சென்று என் மனதினை வியப்பில் ஆழ்த்த நினைத்த தருணம் அது! என் 30 வயதினுள் அடி எடுத்துவைக்க நான் தயாராக, எனக்குள் ஏற்பட்ட அந்த ஒரு மாற்றம் பற்றி என்னால் வருணிக்க கூட இயலாது. காரணம், என்னுள் ஏற்பட்ட அந்த மாற்றம், என் பயத்தினை ஒதுக்கி புதியதோர் உணர்வினைத் தர, நான் இதுவரை என் வாழ்வில் காணாத ஒரு இடத்தினைக் காண ஆசைக்கொண்டேன்.

உலக கட்டிடக்கலைக்கே சவால் விடும் 10 கோடி கிலோ கோயில் மர்மங்கள்

ஆச்சரியம்

ஆச்சரியம்

என்னுடையக் கனவில் அன்று, அந்த உச்சிப் பகுதியில் நின்று நான் வானத்தை நோக்க, எனக்குள்ளே ஒரு புதுவித ஆனந்தம் ஏற்பட்டது. எட்ட முடியாதத் தூரத்திலே இவ்வளவு ஆச்சரியம் நமக்கு என்றால், எட்டக்கூடிய தூரத்தில் உள்ளப் பூமியில் என்னென்ன ஆச்சரியம் காண இருப்போமோ என எண்ணி நான் பூமியைப் பார்க்க, நான் நின்றுக்கொண்டிருந்த உயரத்தினை எண்ணி ஒரு நிமிடம் தூக்கி வாரிப்போட்டது. என் இதழ்களிலிருந்து வார்த்தை வரும்முன்பே, இதயம் பயத்தினைத் தேடி வேகமாக ஓடியது.
பம்பரமாக மாறிய என் தலைகள் சுற்றத் தொடங்கியது. என் வீட்டு மாடியின் உச்சத்தில் மட்டுமே நின்று இதுவரை ரசித்த என் கால்கள், இவ்வளவு உயரத்தில் ஏறியதே இல்லையே எனப் பயம்கொண்டு தவித்தாலும், இறங்க மனமற்றுத் தவித்து போனது என்றே அந்தக் கனவினை பற்றி சொல்ல வேண்டும்.

நம் வாழ்க்கையும் இப்படித்தானே! உயரத்தினை தேடி நாம் ஏற, ஏற ஆபத்துக்களும் அனுதினமும் நம்மை அனுகிக்கொண்டே இருக்குமல்லவா. அதற்காகப் பயந்துவிட முடியுமா என்ன! என்னுடைய ஒருத் தோழன், கடந்த வாரம் சென்ற ஒரு மலை அனுபவத்தினைப் பற்றி என்னிடம் பகிர்ந்துக் கொள்ள நான் கண்டக் கனவினை நினைவாக்க என் மனம் ஆசைக்கொண்டது. அதனால் என் சகத்தோழர்களுடன் இணைந்து மகாராஷ்டிராவில் இருக்கும் மாத்தேரானுக்குச் செல்ல ஒருத் திட்டம் ஒன்றினைத் தயார் செய்தேன்.

Udaykumar PR

மாத்தேரானைப் பற்றி…

மாத்தேரானைப் பற்றி…

மும்பையிலிருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் ஒரு மலைப்பகுதி தான் மாத்தேரான் ஆகும். இந்த மலைப்பகுதி கடல் பகுதியிலிருந்து 2625 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த மலைப்பகுதி, ஆங்கிலேயரால், கோடைக்காலத்து வெப்பத்தினை வெளியேற்றுவதற்காக உருவாக்கப்பட்ட ஒன்றாகும். மாத்தேரானில் பார்ப்பதற்கு ஏதுவான இடங்களின் பட்டியலில் சுமார் 38 இடங்கள் இடம்பெற்றுள்ளது. அவற்றுள் ஒன்று தான் இந்த "ஒன் ட்ரீ ஹில்" ஆகும். இந்த இடம் சாகசங்களின் சரணாலயமாக மட்டுமல்லாமல் இங்கு மலையேறுபவர்களுக்கு விருப்பமான இடங்களும் நிறையவே காணப்படுகிறது.

நாங்கள் அனைவரும் கொஞ்ச நேரத்திற்கு, எங்களுடைய கால் மற்றும் கைகளுக்கு ஓய்வு தர விரும்பி, இரயில் பயணத்தினை தேர்வு செய்தோம். ஆம், எங்கள் மலை ஏறும் பயணத்திற்கு ஆற்றல் என்பது அவசியம் என்பதனைப் புரிந்துக்கொண்ட அனைவரும் ஒத்துழைக்க, இரயில் ஏறிப் புறப்பட்டோம்.

மும்பையிலிருந்துக் காலை 8 மணிக்குப் புறப்பட்ட நாங்கள் கர்ஜத் விரைவு இரயில் போக்குவரத்தில் எங்கள் இனிமையான பயணத்தைத் தொடர்ந்தோம். அந்த இரயில் பயணத்தில் எங்கள் மனம் தாளம் போட இறுதியாக நேரல் இரயில் நிலையத்தினை அடைந்தோம்.

Deepak Patil

 இடத்திற்கு ஏற்ப நாம் எடுத்துச் செல்ல வேண்டியப் பொருட்கள்:

இடத்திற்கு ஏற்ப நாம் எடுத்துச் செல்ல வேண்டியப் பொருட்கள்:

நேரலிருந்து ஒருப் பொம்மை ரயில், அதாவது குறுகியப் பாதையின் வழியாகப் புறப்பட்டு மாத்தேரானை அடைந்தோம். இரயில் செல்லும் வழியில் நாங்கள் கண்டக் கண்ணுக்கு இனிமையானக் காட்சிகளும் மலையின் ஏற்றங்களும் நாங்கள் எடுத்ததொரு இரயில் பயணத்தின் முடிவினை சரி என்று உணர்த்தி எங்கள் மனதினைச் சீராக்கி சென்றது.
மாத்தேரானைப் பார்ப்பதற்கு ஏதுவான ஒருக் காலநிலை:
அக்டோபர் முதல் மே வரையிலானக் காலங்கள் இந்த மாத்தேரானைப் பார்ப்பதற்கு ஏதுவாக அமைந்து நம் மனதினை ஆரவாரம் செய்கிறது. ஆம், இந்த வானிலை மாற்றங்களால் மலையினை ஏறும் நம் மனமும் வெளிப்புறக் காட்சிகளை ரசிக்கும் நம் கண்களும் குளிர்ச்சியாகவே காணப்படுகிறது.

இடத்திற்கு ஏற்ப நாம் எடுத்துச் செல்ல வேண்டியப் பொருட்கள்:

நாம் மலை ஏறும் பொழுது அத்தியவாசியப் பொருட்களாக சிலவற்றினை வாங்கிக் கொண்டுச் செல்வது மிகவும் அவசியமாகிறது. செயற்கை ஒளி விளக்கு எனப்படும் டார்ச் லைட், தண்ணீர், திகைப்பூட்டும் ஒளித் தரக்கூடிய ஒன்று, தொப்பி, சிற்றுண்டிகள், முதலுதவிக்கு முன்னுதாரணமாக விளங்கும் பேண்ட் எய்ட், மலையை ஏறப் பயன்படும் காலணி ஷூ வகைகள், என பட்டியலின் உயரம் மலையின் உயரத்திற்கு ஏற்ப உயர்ந்துக்கொண்டே செல்கிறது. மலையிலிருந்து நாம் ரசிக்கும் காட்சிகளை மனதில் தேக்கிவைத்துக்கொள்ள சிரமம் ஏற்படுமானால், அந்த அழகியக் காட்சிகளை நினைவுப்பரிசாக மாற்ற நமக்கு புகைப்படக்கருவியும் தேவைப்படுகிற்து என்றேக் கூறவேண்டும்.

Kartik Mistry

அந்த மலையேற்றப் பகுதி:

அந்த மலையேற்றப் பகுதி:

நாம் அம்பேத்வாடி எனப்படும் மலையின் அடிப் பகுதியினை அடைய, அங்கே உள்ளூர் வாசிகளான மழைவாழ் மக்களைக் காணமுடிகிறது. அவர்களுக்கு நாம் ஒரு நிறுவனக் கட்டணத் தொகையினை செலுத்த, அவர்கள் நம்மை அழைத்துக்கொண்டு அந்த அழகு மிகுந்த இடங்களை சுற்றிக் காண்பிக்கின்றனர். இந்தப் பகுதியினைப் பற்றிய பொதுவானத் தகவலை தெரிந்த ஒருவர் என்னுடன் இருந்தால், என் மனதில் இருக்கும் அச்சங்களை நீக்கிக்கொள்வதற்கு வசதியாக இருக்குமே என எனக்கு தோன்ற, நான் அந்தப் பகுதியில் ஏறத்தயாரானேன். அந்த வழிக்காட்டியாளர்கள் என் கையில் ஒரு நீண்டக் குச்சியினைத் தர, அந்தக் குச்சியின் உதவியுடன் மேல்நோக்கி நான் ஏறத்தொடங்கினேன். ஆம், நான் மலையில் ஏறத்தொடங்கியபொழுது மணி காலை 10 ஆனது.

அந்த ஏற்றத்தின் பத்து நிமிடப் பயணத்திற்குப் பிறகு, பீடபூமியில் நாங்கள் காலடி எடுத்து வைக்க, அந்த இடத்தின் அழகினைக் கொண்டு சென்ற புகைப்படக்கருவியின் உதவியுடன் பதிவு செய்துக்கொண்டோம். இவற்றுள் ஆச்சரியம் என்னவென்றால், "ஒன் ட்ரீ ஹில்" பகுதியினை நம்மால் கிராமத்தின் அடிப்பகுதியிலிருந்துப் பார்க்க முடிகிறது என்றாலும், அதன் பிறகு இந்த பீடப்பூமியின் நடுப்பகுதியினை நாம் அடையும் வரை, நம் கண்களுக்கு இந்தப் பகுதித் தென்படுவதில்லை.

அந்தப் பகுதியில் காணப்படும் பயிர்கள் பற்றின பலச் சுவாரஸ்யமான உண்மைகளை, வழிக்காட்டியாளர்கள் நமக்கு வழங்க, இயற்கையின் அழகினைக் கண்டு நம் மனம் ஒரு நிமிடம் வியப்புடனேப் பார்க்கிறது. பரந்து விரிந்துக் காணப்படும் மார்ப் அணை, மூன்றுப் பக்கங்களிலும் சூழ்ந்து நம் மனதினை ஆள்கிறது. அவ்வாறு நாங்கள் கண்டுச் செல்ல, திடிரென தெற்குப் பகுதியின் ஓரத்தில் முடிந்த மார்ப் அணையிலிருந்து சென்றத் தண்ணீர் மீண்டும் திரும்ப, இந்த உலகமே ஒரு நொடியில் முடிந்தது போன்ற ஒரு ஏக்கம் தான் நம் மனதில் பிறக்கிறது. அந்த இடத்தில் மேற்கில் காணப்படும் இர்சால்கத் மற்றும் ப்ரபால்கத்தின் அழகு நம்மை வெகுவாக கவர்கிறது.

ஒருவர் வீரத்தின் பெருமையை, அவர் அழிந்தாலும் இந்த உலகம் போற்றும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ஒரு இடமான "சிவாஜி படிகளை" நம்மால் இங்குக் கண்டு வியக்க முடிகிறது. ஆம், சத்ரபதி சிவாஜியின் சோதனைப் பயணத்தின் போது அவர் குதிரையின் மேல் ஏறி சவாரி சென்று இந்த மாத்தேரானை அடைந்தார் என்றும் ஒரு வரலாறு உண்டு. அதனாலே, இந்த இடம் அவ்வாறு அழைக்கப்படுகிறது என்றும் கூறுவர். நாம் 1 மணி நேரம் 30 நிமிடங்கள் ஏறும் இந்தப் பயணத்தின் வாயிலாகக் காட்டுப்பகுதியினை நம்மால் அடைய முடிகிறது. அங்குக் காணப்பட்ட அடர்த்தியான மரங்களின் நடுவில் காணப்படும் சூரியனின் கதிரொளிகள் என் கண்களை ஆச்சரியத்தின் எல்லைக்கே அழைத்துச் சென்றது. ஆம், மரங்களுக்கு எவ்வளவு தான் கருணை மனம்! இவ்வளவு அடர்ந்து, காட்டினை ஆட்சிச் செய்தபோதும் சூரியக் கதிர்களின் முன்பு மட்டும் எவ்வளவு கருணை என அந்த ஆசிர்வதிக்கப்பட்ட ஒளியினை நான் அன்னாந்துப் பார்த்து நடந்தேன்.

Arne Hückelheim

 சுமார் 30 நிமிடங்கள்

சுமார் 30 நிமிடங்கள்

அந்தக் காட்டினை மட்டும் தான் மரங்கள் ஆட்சி செய்தது என நினைத்து நான் நடக்க, தற்காலிகப் பயணத்தினை தொடர்ந்த, என் மனதினையும், அமைதியாலும், குளிர்ந்தக் காற்றினாலும் ஆட்சி செய்து என்னை வியக்க வைத்தது. அந்த ஈடுஇணையற்றப் பாதையின் அகலம் விரிந்துக் காணப்பட, இறுதியில் அந்தக் காட்டிற்கு இணையாகக் காணப்பட்ட மாத்தேரான் சுவரினை அடைய நமக்கு சுமார் 30 நிமிடங்கள் தேவைப்பட்டது. அந்த வழியின் முடிவில், ஒரு சிறியக் கணேஷ ஆலயம் ஒன்று நம் கண்களுக்கு திறந்த நிலையில் காட்சித் தருகிறது. அந்தக் கோயிலின் உள்ளே நாம் செல்ல ஏதுவாக பாறைகளால் அமைக்கப்பட்டப் படிகள், மேல் நோக்கி உயர்ந்து நம்மை அழைத்து செல்கிறது. இத்துடன் அந்தக் காட்டின் எல்லைப்பகுதியும் முடிந்து நம்மை அடுத்த ஆச்சரியத்தினை நோக்கி இட்டுச் செல்கிறது.

நம் வழிக்காட்டியாளர்களின் வாய் சொல்லுக்கு இணங்க, இடது புறம் நாம் திரும்ப, வலதுப் பக்கமாக ஒன் ட்ரீ ஹில் நமக்குக் காட்சி அளிக்கிறது. மாத்தேரான் வலதுப் பக்கத்தில் ஒரு பெருஞ்சுவர் எங்களை நோக்கி உயர்ந்து நிற்க, அதன் அழகினை நாங்கள் அன்னாந்து தான் பார்த்தோம். மேலும், அந்த வழி "V" வடிவில் மேல் நோக்கி இரண்டுப் பகுதிகளுக்கும் நடுவில் செல்ல, ஒருக் கயிற்றினால் அந்த இரண்டுப் புள்ளிகளையும் இணைக்கும் பகுதியினை கண்டு பிரமித்துப் போனோம். அங்கு சாகச நிறுவனங்களால் நிறுவப்படிருந்த ஒருக் கடப்பு எங்கள் பார்வைக்கு தென்பட்டது.

இறுதியாக மதியம் 12.45 மணி அளவில் ஒன் ட்ரீ ஹில்லின் உச்சிப்பகுதியினை நாங்கள் அடைந்தோம். அந்தப் பகுதியில் காணப்பட்ட ஒற்றை மரத்தின் மூலம் அனைத்துப் பகுதிகளையும் எங்களால் காணமுடிந்தது. அது ஒரு இடம் என நாங்கள் நினைக்க, எங்கள் யூகத்தினை மாற்றி மனதினை ஆச்சரியத்தால் வருடியது. அங்குக் காணப்பட்ட பச்சை பசேல் என்னும் மலைகளும், நீலத்தால் வண்ணம் தீட்டப்பட்ட வானத்தின் அழகும் எங்கள் பார்வையினை மெய்மறக்க செய்து புது உலகிற்கு அழைத்தது. இங்கு நாங்கள் உணர்ந்த ஒரு உணர்வினை விவரிக்க வார்த்தை அற்று கண்கள் அகன்று நிற்க, வீட்டில் இருந்துக் கொண்டு சென்ற மதிய உணவினைப் பகிர்ந்து உண்டோம். அதன் பிறகு, எங்கள் வழிக்காட்டியாளர்களுடன் இணைந்து நாங்கள் பாட்டுப்பாடி விளையாடப் புதியதோர் உணர்வினைக் கொண்டு மகிழ்ந்தோம்.

நான் கண்ட அந்த ஒன் ட்ரீ ஹில், என் அட்ரெனலினை அதிகம் சுரக்கவைத்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியது என்றேக் கூறவேண்டும். நாங்கள் சென்றுத் திரும்பிய அந்த இனிமையானதொருப் பயணத்தின் முடிவில் அடுத்ததோர் பயணம் எப்பொழுது என என் சகத் தோழர்கள் என்னிடம் கேட்க, இந்த இயற்கை அழகினை ரசித்த அனைவரது மனமும், ஓரே கேள்வியினைக் கேட்கும் அளவிற்கு நாம் ஒன்றுப்பட்டுவிட்டோமே என நினைத்து என் மனம் அவர்களை பார்த்து சிரித்தது என்று கூறும்பொழுது என் மனமும் துள்ளிக் குதித்து, அதுவும் எப்பொழுது அடுத்த பயணம் செல்வாய் என என் மூளையைப் பார்த்து கேட்கிறது.

KarthikMistry

Read more about: travel, temple