Search
  • Follow NativePlanet
Share
» »சமஸ்கிருதம் பேசும் உலகின் கடைசி கிராமம் எங்குள்ளது தெரியுமா?

சமஸ்கிருதம் பேசும் உலகின் கடைசி கிராமம் எங்குள்ளது தெரியுமா?

சமஸ்கிருதம், தமிழுக்கு இணையான வரலாறு கொண்ட மொழி. எனினும் அது பேச்சுவழக்கில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. சிலர் இதனை கடவுள் மொழி என்கின்றனர். கோயில்களில் கடவுளுக்கு இந்த மொழியில் தான் அர்ச்சனை செய்கின்றனர். இப்படிபட்ட மொழி வழக்கில் இல்லை பேச யாருமில்லை என நீங்கள் நினைத்திருந்தால், இதை கொஞ்சம் படிங்க.

கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்தில் மகிழ்ந்து விரிந்து ஆர்ப்பாட்டமின்றி ஓடுகிறது துங்கபத்ரா என்ற நதி. அதன் கரையில் அமைந்திருக்கிறது மத்தூர். ஷிமோகா மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கிராமம்தான் உலகின் கடைசி சமஸ்கிருதம் பேசும் ஊராக உள்ளது தெரியவந்துள்ளது.

ஆம். இந்த கிராமத்தின் பேச்சு மொழி சமஸ்கிருதம். தமிழில் சமக்கிருதம் எனும் அழைக்கப்படும் இம்மொழி வழக்கொழிந்துவிட்டதாகவும், கோயில்களில் பூசைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது என்றும் நம் பலர் கூற கேட்டிருப்போம்.

ஆனால் இன்றும் இந்த கிராமத்தில் பேச்சு மொழியாக சமஸ்கிருதம் உள்ளது சிறப்பாக கருதப்படுகிறது.

சரி. இனி அந்த ஊரைப் பற்றியும் ஊரின் சுற்றுவட்டாரத்திலுள்ள சுற்றுலாத் தளங்கள் பற்றியும் பார்க்கலாம்.

தோண்ட தோண்ட வெளிவரும் அதிசயங்கள்... துப்பாக்கி பீரங்கி ஆலைகள்... திருவிதாங்கூரின் மர்மங்கள்

எப்படி சாத்தியம்

எப்படி சாத்தியம்

ஆரம்பகாலத்தில் இக்கிராமத்தில் வேதம் ஓதுபவர்கள் அதிகமாக இருந்தபோதிலும் சமஸ்கிருத பேச்சு வழக்கில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. அவர்கள் கொங்கனி எனும் ஒரு மொழியைத் தான் பேசி வந்தனர்.

சமஸ்கிருத பாரதி எனும் அமைப்பு ஒன்று அனைவருக்கும் சமஸ்கிருத மொழியை கற்றுத்தருகிறது.

Pc: Ashwatham

இலவச பயிற்சி

இலவச பயிற்சி

பெங்களூருவில் 1981ஆம் ஆண்டு சமஸ்கிருத பேச்சு பயிற்சி பெரிய அளவில் தொடங்கியது. தினமும் குறிப்பிட்ட நேரம் பேச்சுப்பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. இது இளைஞர்களிடையே நல்லவரவேற்பு பெற்றதாக கூறப்படுகிறது.

PC: Sbhar

இதை எப்படி செய்கிறார்கள்

இதை எப்படி செய்கிறார்கள்

மக்கள் மத்தியில் சமஸ்கிருத மொழியை வளர்க்க சமஸ்கிருத பாரதி அமைப்பினர், கிராம மக்களின் சமையல் அறை, பூஜை அறை, படுக்கை அறை, தோட்டம், டி.வி, ஃப்ரிட்ஜ், விளக்கு என்று வீட்டுக்குள்ளே இருக்கும் இடங்கள் மற்றும் பொருட்களின் பெயர்களை சமஸ்கிருதத்தில் அச்சிட்டு ஸ்டிக்கர்களாக்கி, அவற்றை வீட்டில் ஒட்டி வைக்கச் சொல்லி வினியோகிக்கிறார்களாம். அந்த வார்த்தைகளைத் தங்கள் உரையாடல் களின்போது பயன்படுத்துகிறார்கள். பள்ளி மாணவர்களுக்கு சமஸ் கிருதத்தில் போட்டிகள் நடத்தி, பரிசுகள் அளித்து ஊக்குவிக்கிறார்கள்.

wiki

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்


சமஸ்கிருதம் பேசும் இந்த ஊரின் அருகில் பல்வேறு சுற்றுலாத் தளங்கள் உள்ளன. நீங்கள் கண்டுகளிக்கும்வகையில் உள்ள அந்த சுற்றுலாத் தளங்களின் விவரங்களை காண்போம்.

ஜோக் அருவி

ஜோக் அருவி

கம்பீரமும், பேரழகும் ஒருங்கே வாய்க்கப்பெற்ற இயற்கையின் பெருமிதப் படைப்பாய் விளங்குகிறது ஜோக் நீர்வீழ்ச்சி. ஷராவதி நதியிலிருந்து உற்பத்தி ஆகும் ஜோக் நீர்வீழ்ச்சி ராஜா, ராணி, ராக்கெட், ரோவர் என்று நான்கு வேறுபட்ட பகுதிகளை கொண்டது.

ஜோக் நீர்வீழ்ச்சி தங்கு தடையின்றி பாறைகளிலும், குன்றுகளிலும் வழிந்து ஓடி 830 அடி உயரத்திலிருந்து கீழே கொட்டும் அந்த கவின் மிகு காட்சியை காண உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பயணிகள் ஆண்டுதோறும் இங்கு வருவர்.

PC: Kiran Sagara

கோடச்சத்ரி

கோடச்சத்ரி

கடல் மட்டத்திலிருந்து 1343 மீட்டர் உயரத்தில் உள்ள கொடசத்ரி மலைப்பிரதேசம் இந்தியாவின் புகழ் பெற்ற கோயில்களில் ஒன்றான கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலைக் கொண்டுள்ளது. அடர்ந்த காட்டின் நடுவே அமைந்துள்ள கொடசத்ரி மலைச்சிகரத்தை உள்ளடக்கிய இந்த ஸ்தலம் கர்நாடக மாநிலத்தின் ஷிமோகா மாவட்டத்தில் மூகாம்பிகா தேசிய வனப்பகுதியில் அமைந்துள்ளது.

PC: Magentic Manifestations

https://en.wikipedia.org/wiki/Kodachadri#/media/File:Kodachadri.JPG

குண்டாத்ரி

குண்டாத்ரி

ஷிமோகா மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சிமலைகளில் அமைந்துள்ள இவ்வனப்பகுதி 2000 வருடங்கள் பழமையான வரலாறுகளை உள்ளடக்கியது. இங்கு 17ம் நூற்றாண்டு ஜெயின் கோயிலும், அதன் அருகாமையிலமைந்துள்ள இரு குளங்களும் காண்பவர் கண்ணுக்கு இனிமையான உணர்வுகளை தரவல்லது.

Pc:Manjeshpv

கேளடி

கேளடி

விசயநகரப் பேரரசு காலத்தில் கேளடி நாயக்கர்கள் முதலில் கேளடியை தலைமையிடமாகக் கொண்டு ஆண்டனர். இவ்வூரில் கேளடி நாயக்கர்கள் இராமேசுவரர் சிவன் கோயிலைக் கட்டினர். இங்குள்ள ராமேசுவரர் கோயில் மிகவும் பழமையானதாகும்.

PC: Dineshkannambadi

ஷிவப்பா நாயக்க கோட்டை

ஷிவப்பா நாயக்க கோட்டை

கேளடியை ஆண்ட மன்னர்கள் பின்னாள்களில் நகராவைத் தங்கள் தலைநகராகத் தேர்ந்தெடுத்தனர். அங்கு வாழ்ந்தபோது பல்வேறு கோட்டைகளையும், கோயில்களையும் கட்டினர். இதில் ஒன்றுதான் ஷிவப்பா நாயக்க கோட்டை.

PC: Vedamurthy J

Read more about: travel village

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more