» »சென்னைகாரங்களே... இனி நீங்களும் சாகசம் செய்யலாம் புரியலயா இத படிங்க

சென்னைகாரங்களே... இனி நீங்களும் சாகசம் செய்யலாம் புரியலயா இத படிங்க

Posted By: Udhaya

நீங்களும் பியர்கிரில்ஸ் போல சாகசங்கள் செய்யவேண்டுமா? உங்கள் மனத்திடம் அதிகரிக்க சுற்றுலா செல்ல விரும்புகிறீர்களா? நம்ம சென்னைக்கு அருகிலேயே சாகசத் தளங்கள் இருக்கிறது தெரியுமா? 

அடுக்கடுக்கா எத்தனை கேள்விகள் என்கிறீர்களா. சரி வழக்கம்போல எத்தனை நாளுக்குத்தான் சராசரி சுற்றுலாவுக்கு செல்கிறோம். வாருங்கள் ஒரு வித்தியாசமான உங்கள் நாடி நரம்புகளை புடைத்தெறிக்கும் வகையில் ஒரு அருமையான சுற்றுலா செல்வோம். 

மேன் வெர்சஸ் வைல்டு... இது நம்ம சென்னைக்கு மிக அருகிலேயே.. 

rn

ஸ்கூபா டைவிங்

ஸ்கூபா டைவிங் செய்ய நீங்கள் அந்தமான்தான் போகவேண்டும் என்றில்லை. நம்ம ஊருக்கு அருகிலேயே இடம் இருக்கிறதே.

நீருக்குள் இறங்கி ஒரு புத்தம்புதிய அனுபவத்தை பெற நீங்கள் உடனே கிளம்புங்கள். கர்நாடக மாநிலத்துக்கு.

முருதேஷ்வரா

முருதேஷ்வரா

கர்நாடக மாநிலம் முருதேஷ்வரா ஸ்கூபா டைவிங் செய்ய விரும்புபவர்களுக்கு அரிய வாய்ப்பை வழங்குகிறது.

சென்னையிலிருந்து 844 கிமீ தொலைவிலுள்ள இந்த முருதேஷ்வரா உங்களை மட்டுமல்லாது உங்கள் குழந்தைகளையும் குதூகலப்படுத்தும்.

பாறையேற்றம்

மலையேற்றம் என்பது பலர் விரும்பும் பயிற்சி என்றாலும், பாறையேற்ற பயிற்சியை அதிகம்பேர் விரும்பவதில்லை. அது இயற்கையில் சிறந்த ஒரு பொழுதுபோக்கானதாகவும், சாகச உணர்வை தரும் ஒரு விளையாட்டாகும்.

ராமநகரம்

ராமநகரம்

மலையேறுபவர்களின் விருப்பமான இடமான ராமநகரம் சென்னைக்கு அருகிலேயே உள்ளது. உங்கள் தசைகளை வலிமையாக்கி, உங்கள் மன அழுத்தத்தைப் போக்க நீங்கள் செல்லவேண்டிய இடம் இதுதான்.

சென்னையிலிருந்து 389 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த ராமநகரம். மேலும் கர்நாடக மாநிலத்தின் பாதாமி குகை பகுதிகளிலும் ராக் கிளைம்பிங் எனப்படும் பாறையேற்ற பயிற்சி அளிக்கப்படுகிறது.

rn

நீர்ச்சறுக்கு

நீர்ச்சறுக்கு விளையாட்டுகள் ஏதோ ஒரு அயல்நாட்டில் விளையாடப்படுவது என்று சொன்னீர்களேயானால் நீங்கள் விவரம் அறியாதவர் என்றுதான் பொருள்.

கர்நாடக மாநிலத்தின் பீமேஸ்வரி , குடகு, காராவார் முதலிய இடங்களில் நீர்ச்சறுக்கு போட்டிகள் அதற்கான பயிற்சிகள் முறையாக வழங்கப்படுகின்றன.

 குடகு

குடகு

சென்னையிலிருந்து 10 மணி நேரத் தொலைவில் அமைந்துள்ளது கூர்க் என்படும் குடகு மலைப்பகுதி.. உங்கள் கனவை செயல்படுத்தும் வகையில் படகில் சென்று சாகசத்தை அனுபவியுங்கள்.

rnrnrn

மின்னல் வேக பைக் சாகசங்கள்


புழுதி பறக்க நான்கு சக்கர பைக்குகளில் பறந்து செல்லும் வீரர்களை தொலைக்காட்சிகளில் கண்டிருப்பீர்கள். அதை நேரில் செயல்படுத்த பெங்களூரு வாருங்கள். அதிகபட்சம் 6 மணி நேரம்தான் ஆகும்.

பெங்களூரு

பெங்களூரு

பைக் சாகசங்கள் செய்ய நம்ம ஊருக்கு அருகேயுள்ள சோலே குன்றுகள், ஹார்ஸ்லி குன்றுகள், குந்தி பெட்டா மற்றும் ஸ்கந்தகிரி முதலிய இடங்களுக்கு செல்லலாம்.

மிகவும் பாதுகாப்பான ஒரு முடிவு என்றால் அது சார்ஜாப்பூர் சாலைதான். இங்கு மிகவும் பாதுகாப்பான முறையில் பைக்கிங் கற்று தருகிறார்கள்.

rnrnrn

கேம்பிங் எனப்படும் குடிலில் தங்குவது

சுற்றுலா செல்வதில் மிக முக்கியமாக அனைவரும் விரும்புவது கேம்பிங் மற்றும் கேங்ஹபஃயர் தான். ஆனால் அதற்கான சிறந்த இடங்களை பற்றி நாம் அந்த அளவுக்கு அறிந்திருக்கவில்லை.

பீமேஸ்வரி

பீமேஸ்வரி

சென்னையிலிருந்து 438 கிமீ தொலைவிலேயே இந்த கேம்ப் உள்ளது. ஓசூரிலிருந்து 1 மணி நேரத்துக்குள்ளாக சென்று வந்துவிடலாம்.

காட்டில் ஒரு சபாரி

காட்டில் சபாரி செல்வதென்பது பலருக்கு அலாதி பிரியம். அதாவது அவர்கள் வனவிலங்குகள் வாழும் பகுதிக்குள் சென்று புகைப்படங்கள் எடுத்துவிட்டு திரும்புவது என்பதெல்லாம் அருமையான சாகசமாக கருதுவார்கள்.

பன்னார்கட்டா

பன்னார்கட்டா

பெங்களூரு அருகிலுள்ள பன்னார்கட்டா விலங்கியல் பூங்கா, பந்திப்பூர் விலங்கியல் பூங்கா என பல இடங்களில் இந்த சபாரி நம்மால் செய்யமுடியும்.

rn

உயரக் கட்டப்பட்டிருக்கும் கயிற்றில் பயணிப்பது


ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் கயிற்றில் பயணிப்பது போன்ற சாகசங்கள் பியர்ல் கிரில்ஸ் மாதிரி அனுபவம் கிடைக்க நினைப்பவர்கள் ராம் நகர் மற்றும் பீமேஸ்வரி போன்ற இடங்களுக்கு செல்லலாம்.

சிறப்பான சுற்றுலாவுடன், அதிரும் சாகசங்களையும் செய்துவிட்டு வரலாம்.

பாராசைலிங்

வானத்தில் பறப்பது என்பது யாருக்குதான் புடிக்காது. அட இப்ப இந்தியாவுலயும், அதுலயும் நம்ம சென்னைக்கு அருகிலேயும் இந்த பாராசைலிங் பயிற்சி கொடுக்குறாங்க தெரியுமா?

அதுலயும் இரண்டு வகை இருக்குது.. ஒன்னு கார்ல வேகமா போயி பறக்குறது,.. இன்னொன்னு படகுல பறக்குறது. ரெண்டுமே நல்ல திரில் அனுபவம்தான். ஹஸ்கொட்டே லேக் பெட் எனப்படும் இடம் பெங்களூரு அருகே அமைந்துள்ளது. அங்குதான் இந்த பயிற்சி தரப்படுகிறது.

rn

சோர்பிங் எனப்படும் பலூனில் உருளுதல்

பலூன்களில் உருளுவது ஒரு சிறந்த விளையாட்டாகும். ஆனால் அடி பட்டால் அவ்வளவுதான் என்று பயப்படும் கோழையா நீங்கள். இல்லை தானே வாங்க பெங்களூரு அருகே அமைந்துள்ள சில பூங்காக்களில் இந்த விளையாட்டு நடைபெறுகிறது. ஆனால் விவரம் அறிந்துவிட்டு வருவது சிறந்தது.

மலைகளில் சைக்கிளிங் பயிற்சி

சைக்கிளிங் செல்வது ஜாலியான விசயம்தான். ஆனால் அதே நேரத்தில் மலை இடுக்குகளில் சென்று, குறுகிய பாதைகளில் சைக்கிள் ஓட்டுவதெல்லாம் சாகசத்தின் உச்சம். இதோ இந்த வீடியோவ பாருங்க

rn

மூங்கில் குழல் படகில்பயணிப்பது

இந்த படகு பயணம் மிகவும் அழகாக இருக்கும். மிகவும் மகிழ்ச்சியாக உங்கள் மனம்விரும்பும் நபருடன் படகினை மகிழுங்கள்.

Read more about: travel