Search
  • Follow NativePlanet
Share
» »ஸ்மார்ட் போனும், சுற்றுலாவும்... இதெல்லாம் உங்களுக்கு நடந்திருக்கா ?

ஸ்மார்ட் போனும், சுற்றுலாவும்... இதெல்லாம் உங்களுக்கு நடந்திருக்கா ?

எங்க திரும்பினாலும் போட்டோ, உடனுக்குடன் பரிமாற்றம் என நம்மில் ஒருவனாக இருக்கும் இந்த கைபேசியை சுற்றுலாவின் போது எப்படியெல்லாம் பராமரிக்கலாம் என பார்க்கலாம் வாங்க.

என்ன இது ?, சுற்றலாவிற்கான தலத்தில் மொழில்நுட்பம் சப்ந்தமா ஏதோ வருகிறதே என யோசிக்க வேண்டாம். மொபைல் போன் இல்லாம பக்கத்துல இருக்குற கடைக்கே நாம் செல்வதில்லை, இதில் சுற்றுலா எல்லாம் செல்வதாக இருந்தால் சும்மாவா ?. வீட்டில் துணிகளை எடுத்துவைத்து, காலணி அணிவதில் துவங்கி தெரு முனைக்கு ஒரு முறை போட்டோ எடுத்து சமூக வளைதலத்தில் வெளியிட்டால் தானே சுற்றுலா செல்வதற்கான முழுத் திருப்தியை அடைகிறோம். எங்க திரும்பினாலும் போட்டோ, உடனுக்குடன் பரிமாற்றம் என நம்மில் ஒருவனாக இருக்கும் இந்த கைபேசியை சுற்றுலாவின் போது எப்படியெல்லாம் பராமரிக்கலாம், என்னவெல்லாம் செய்யலாம், செய்யக்கூடாது என அறிந்துகொள்ள சில டிப்ஸ்.

கையடக்கம்

கையடக்கம்

முன்னவெல்லாம் நாம் எங்கையாவது சுற்றுலா செல்வதாக இருந்தால் பிரத்யேக கேமிரா ஒன்றையும் கூடவே எடுத்துச் செல்ல வேண்டும். ஆனால், இன்று அப்படியா, கைக்கு அடக்கமாக, அதுவும் கைபேசியிலேயே வந்துள்ள விதவிதமான கேமிராக்களைக் கொண்டு எத்தனை புகைப்படங்கள் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். அதோடு அது நன்றாக இல்லையென்றால் உடனே அழித்துவிடலாம்.

இங்க கொஞ்சம் பாரேன்..!

இங்க கொஞ்சம் பாரேன்..!


எல்லா நண்பர்கள் அணியிலும் தனித்த ஒரு கேரக்டர் இருக்கும். எப்ப பார்த்தாலும் செல்போனை பயண்படுத்திக் கொண்டு அதிலேயே மூழ்கிவிடுவர். உடன் வருவோர் என்னதான் பேச்சுக் கொடுத்தாலும் எதையும் கண்டுக்காமல் போனில் மட்டுமே கடலை போடுவது. என்றாவது ஒருமுறை திட்டமிட்டு செல்லும் இதுபோன்ற சுற்றுலாவில் முடிந்த வரை தனிப்பட்ட விசயங்களுக்காக போனை பயண்படுத்துவதை தவிர்த்துவிடுங்கள்.

சார்ஜர்

சார்ஜர்

செல்போனை மட்டும் நினைவாக எடுத்துக் கொண்டால் போதுமா ?. மறக்காமல் அதற்கான சார்ஜரையும் எடுத்துச் செல்லுங்கள். ஏனென்றால் பயணத்தின் போது அடிக்கடி எடுக்கப்படும் புகைப்படம் உள்ளிட்டவற்றால் எளிதில் சார்ஜர் தீர்ந்துவிடும். பின், அழகிய பல புகைப்படங்களை எடுக்கமுடியாமலேயே போய்விடும்.

விளையாடும் போது

விளையாடும் போது


சுற்றுலாத் தலங்களில் நாம் ஓடியாடி விளையாடுவதை வளக்கமாக் கொண்டிருப்போம். நீர்நிலைகளுக்கு சுற்றுலா சென்றுவிட்டால் ஒருபடி மேலே தான். அதுபோன்ற சமயங்களில் உங்களின் மொபைல் போனை பாதுகாப்பான பையில் வைத்துவிட்டு செல்லுங்கள். அல்லது கடல், ஆறு உள்ளிட்ட ஆழமான நீர்நிலைகளில் உங்களது கைபேசியை நினைவாக விட்டு வர வேண்டியிருக்கும்.

கவனம் தேவை

கவனம் தேவை


நம்மில் பலருக்கு வனப்பகுதியில் விலங்குகளைப் பார்த்தவுடனேயே ஒருவித பூரிப்பு ஏற்பட்டு விடும். கூடவே வரும் ஆர்வக்கோலாரில் ஏதாவது செய்து விபரீதத்தை விலைக்கு வாங்கி விடுவோம். வனப்பகுதியோ, சரணாலயமோ... விலங்குகளைப் பார்த்தால் கொஞ்சம் பாதுகாப்பாகவே புகைப்படங்களை எடுங்கள். இல்லையென்றால் விலங்குகளால் உங்கள் கைபேசிக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் ஆபத்து வரக்கூடும்.

சுற்றுலாத் தலத்தில் தொழில்நுட்பம்

சுற்றுலாத் தலத்தில் தொழில்நுட்பம்


மலைப் பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்லத் திட்டமிட்டால் கைபேசியை உடன் எடுத்துச் செல்வது உண்மையில் மிகப் பெரிய நல்லது தான். கைபேசியில் உள்ள ஜிபிஎஸ் வசதியையும் ஆன் செய்து வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் மலைப் பிரதேசம் உள்ளிட்ட பகுதியில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் உடனடியாக இந்த தொழில்நுட்பம் மூலம் எளிதில் உங்களை கண்காணிக்க முடியும். மேலும், மொபைல் போன் தொலைந்துவிட்டால் கூட இதன் மூலம் கண்டறிய முடியும்.

தேவையின்றி வேண்டாம்

தேவையின்றி வேண்டாம்


சுற்றுலா செல்வதே இயற்கையை ரசித்தபடி, நண்பர்களுடனோ, குடும்பத்தினருடனோ நேரத்தை அழகாக செலவிடத் தான். ஆனால், அப்போதும் கையில் போனை வைத்துக் கொண்டு, விளையாடுவது, அலுவலக விசயமாக முழு நேரத்தை அதில் செலவிடுவதை தவிர்த்து விடுங்கள்.

இதையும் சேமியுங்கள்

இதையும் சேமியுங்கள்


பெரும்பாலும், பயணம் என்றே இருக்கும் சுற்றுலாவில் நினைத்த இடத்தில் சார்ஜர் போடுவது என்பது நிகழாத காரியம். எனவே முடிந்த வரை அளவான புகைப்படங்களை எடுத்துவிட்டு கைபேசி சார்ஜரை சேமியுங்கள். மேலும், கையில் எடுத்துச் செல்லக்கூடிய வகையிலான சிறிய மின்சேமிப்பு கருவியையும் உடனேயே வைத்துக் கொள்ளுங்கள்.

பாதுகாப்பு முக்கியம்

பாதுகாப்பு முக்கியம்


சமீப காலமாக செல்பி மோகத்தால் ஏற்பட்ட விபரீதங்கள் அதிகம். அதனைக் கருத்தில் கொண்டு உணரமான இடங்கள், அருவிகள் உள்ளிட்ட பகுதிகளில் செல்பி எடுத்துச் கொள்வதை தவிருங்கள். இல்லையென்றால் முதலில் பாதுகாப்பை உறுதி செய்துவிட்டு பின் புகைப்படம் எடுங்கள். ஏனென்றால், அந்த புகைப்படம் உங்களின் கடைசி புகைப்படமாகிவிடக் கூடாது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X