» »அடையார் பாலத்தின் ஃப்ளாஷ்பேக்!

அடையார் பாலத்தின் ஃப்ளாஷ்பேக்!

Written By: Staff

போகாத ஊருக்கு வழிசொல்லாத என்று தமிழில் சொல்வார்கள்; அது போல ஓர் இடத்திற்குத்தான் இன்று செல்லப்போகிறோம்.

Adyar_Bridge

Photo Courtesy : Planemad

அடையார் உடைந்த பாலம் :

எலியட்ஸ் கடற்கரையிலிருந்து இரண்டு கி.மீ இந்தப் பாலம். செல்லும் வழியெங்கும் சேறு, குப்பைகள், சரியான சாலை வேறு கிடையாது. இதையெல்லாம் தாண்டி சென்றால் இந்தப் பாலத்தை அடையலாம். பகல் நேரத்தில் இளைஞர்கள் செல்ஃபி எடுக்க வருவார்கள். இருட்டும் முன் ஓடிவிடுவாரக்ள்; பேய் பயம் தான். இரவு நேரத்தில் ஒலங்கள் கேட்பதாக இங்கு வந்தவர்கள் சொல்கிறார்கள். பல படங்களில் இந்த இடம் வந்திருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம்.

Bridge

Photo Courtesy : Planemad

இந்தப் பாலம் கட்டப்பட்ட ஆண்டு 1967. அடையாறையும் அதையொட்டியிருக்கும் ஸ்ரீனிவாசபுரம் மீனவர் பகுதியையும் இணைத்தது அன்று. மீனவர்கள் தங்களின் வாகன‌ங்களை இந்த பாலத்தின் வழியாகத்தான் எடுத்துச் செல்வார்கள். இந்த குறுகிய பாலத்தில் நான்கு சக்கர வண்டிகள்கூட வரும்; ஆனால் ஒரு நேரத்தில் ஒன்றுதான் வரமுடியும்.அன்று அடையாறு மாசுபடாமல் இருந்ததன் விளைவு பலர், மீன் பிடிக்க இந்த பாலத்திற்கு வந்தனர். ப்ரான் வகைகள், நண்டுகள் நிறைய இருந்தன. இதெல்லாம் 1977 வரைதான். பாலம் உடைந்து போனது.

மீன் பிடித்தொழில் நலிந்து பலர் துறைமுகத்திற்கு வேலை தேட போயினர். அதன் பிறகு இந்தப் பாலம் ஒரு நினைவு சின்னமாய் மாறி விட்டது. சினிமா படப்பிடிப்புகளுக்கு இன்று அடையார் பாலம் ஒரு முக்கிய இடம் - குறிப்பாக வாலி, ஆயுத எழுத்து.

சூரிய உதயம், அஸ்தமனம் இதைக் காண்பதற்கு மிக ஏற்ற இடம் இந்தப் பாலம். சுற்றியிருக்கும் பெரிய பெரிய கட்டுமானங்கள் புகைப்படம் எடுப்பதற்காகவே பல புகைப்பட ப்ரியர்கள் வருகின்றனர்.

Map

இதைத்தவிர இந்த சுற்றுப்புரத்தில் பார்ப்பதற்கு பெசன்ட் நகர் கடற்கரை, அஷ்டலட்சுமி கோவில், அன்னை வேளாங்கண்ணி ஆலயம் ஆகியன இருக்கின்றன.

Read more about: adyar broken bridge chennai

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்