» »தேவாரப் பாடல்பெற்ற கடைசி சிவாலயம் இப்ப எப்படி இருக்கு தெரியுமா ?!

தேவாரப் பாடல்பெற்ற கடைசி சிவாலயம் இப்ப எப்படி இருக்கு தெரியுமா ?!

Written By: Sabarish

தமிழகத்தில் ஏராளமான சிவன் கோவில்கள் காணப்பட்டாலும் 274 கோவில்கள் மட்டுமே பாடல் பெற்ற சிவதலங்கள் என்ற சிறப்பைப் பெற்றிருக்கின்றன.அப்படி சிறப்பு பெற்ற கோயில்கள் மிகவும் சக்தி வாய்ந்ததாகவும், உலகப் புகழ் பெற்றதாகவும் விளங்குகின்றன. தேவார மூவர் என்று போற்றப்படும் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் காலமாகிய 7, 8 மற்றும் 9-ம் நூற்றாண்டுகளில் இயற்றப்பட்ட தேவாரத்தில் இந்தக் கோவில்களைக் குறித்தும், கோவில்களில் குடி கொண்டுள்ள சிவபெருமானைக் குறித்தும் கூறப்பட்டுள்ளது. பாடல் பெற்ற சிவதலங்கள் என்று கூறப்படும் இந்தக் கோவில்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவை. அத்தனை பழம் பெருமை வாய்ந்த இந்தக் கோவில்கள் தனிச்சிறப்பு பெற்றதில் ஆச்சரியமில்லை. இதில், தேவாரப் பாடல் பெற்ற கடைசி சிவாலயம் தற்போது எங்கே, எப்படி இருக்கு என தெரியுமா ?

எங்கே உள்ளது ?

எங்கே உள்ளது ?


விழுப்புரம் மாவட்டம், சேமங்கலத்தை அடுத்துள்ள கிளியனூரில் அமைந்துள்ளது இந்த தேவாரப் பாடல் பெற்ற கடைசி அகஸ்தீஸ்வரர் திருக்கோவில். விழுப்புரத்தில் இருந்து கொடத்தூர் வழியாக சுமார் 48 கிலோ மீட்டர் பயணித்தால் இக்கோவிலை அடையலாம். அல்லது, அரியூர் வழியாக தமிழ்நாடு, பாண்டிச்சேரி நெடுஞ்சாலையில் 52 கிலோ மீட்டர் கடந்தும் இத்தலத்திற்கு செல்லலாம். திண்டிவனத்தில் இருந்து இக்கோவில் சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

Dineshkannambadi

சிறப்பு

சிறப்பு

அகத்தியர் வழிபட்டதால் அகஸ்தீஸ்வரர் என அழைக்கப்படும் இக்கோவிலில் சுயம்பு மூர்த்தியாகக் காட்சியளிக்கும் சிவன் மேற்கு நோக்கியும், அம்மாள் அகிலாண்டேஸ்வரி கிழக்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர். சோழர்களால் கட்டப்பட்ட இத்திருத்தலமே தேவாரப் பாடல்பெற்ற கடைசி சிவனாலயம் என்பது தனிச்சிறப்பு.

Akash.nakka

திருவிழா

திருவிழா

மகா சிவராத்திரி, மார்கழி, சதுர்த்தி உள்ளிட்ட சிவபெருமாளுக்கு உகந்த தினங்களில் சிறப்பு பூஜைகளுடன் திருவிழா கொண்டாடப்படுகிறது. மேலும், வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபடப்படுகிறது.

பா.ஜம்புலிங்கம்

நடைதிறப்பு

நடைதிறப்பு


கிளியனூர் அகஸ்தீஸ்வரர் கோவில் நடை காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறக்கப்பட்டிருக்கும்.

பா.ஜம்புலிங்கம்

தல அமைப்பு

தல அமைப்பு


சுமார் மூன்று ஏக்கர் பரப்பளவில் காணப்படும் இக்கோவிலில் தென்புறக் கருவறைச் சுவரில் உள்ள கல்வெட்டில் சோழ மன்னனின் பெயர் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. மதுரை பரகேசரி வர்மன் முதல் பராந்தகன் காலத்தில் இக்கோவில் கருங்கல் கோவிலாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

Dineshkannambadi

வழிபாடு

வழிபாடு

நீண்ட வருடம் தடைபடும் திருமணம், குழந்தை பாக்கியமின்மை உள்ளவர்கள் இக்கோவிலில் திங்கட்கிழமை தோறும் வழிபடுவதன் மூலம் வேண்டியது கிடைக்கும். மேலும், தொடர் வயிற்று வழியால் அவதியுற்று வருவோர் சன்னதியில் உள்ள அகிலாண்டேஸ்வரி அம்மனுக்குப் பாலாபிஷேகம் செய்ய வயிற்று வழி பூரண குணமாகும் என்பது நம்பிக்கை.

பா.ஜம்புலிங்கம்

நேர்த்திக்கடன்

நேர்த்திக்கடன்


அகஸ்தீஸ்வரர் மற்றும் அகிலாண்டேஸ்வரி ஆகியோருக்கு அபிஷேகம் செய்து, பட்டாடை அணிவித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றப்படுகிறது.

MADHURANTHAKAN JAGADEESAN

தலவரலாறு

தலவரலாறு


தற்போது சிறிய கிராமமாக உள்ள கிளியனூர் 6 மற்றும் 7 ஆம் நூற்றாண்டுகளில் மிகப்பெரிய செல்வங்களைக் கொண்டு, விவசாயத்தில் செழித்து விலங்கியதற்கான கல்வெட்டுக்கள் இங்கே காணப்படுகின்றன. சோழர் காலத்தில் தோன்றிய கிள்ளியநல்லூர் என்ற பெயரே பிற்காலத்தில் கிளியனூர் என்றாகியது. கிள்ளி என்றால் சோழர்களைக் குறிக்கும் சொல்லாகும். திருஞானசம்பந்தர் காலத்தில் மண் கோவிலாக இருந்த இத்தலம் பின் சோழநாட்டை ஆட்சி செய்த மன்னரால் கற்கோவிலாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

Joshri

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


விழுப்புரத்தில் இருந்து சென்னை தேனி நெடுஞ்சாலையில் குறிஞ்சிபாடி அடைந்து, அங்கிருந்து திருக்கன்னூர் சாலையில் காட்டேறிகுப்பம், சேமங்கலம் வழியாக சுமார் 48 கிலோ மீட்டர் பயணித்தால் இந்த அகஸ்தீஸ்வரர் திருக்கோவிலை எளிதில் அடையலாம். திண்டிவனத்தில் இருந்து 19 கிலோ மீட்டர் தொலைவிலும், பாண்டிச்சேரியில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவிலும் கிளியனூர் சிவன் கோவில் அமைந்துள்ளது.

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்