Search
  • Follow NativePlanet
Share
» »காதலர்களை வசீகரிக்கும் சென்னைக் கோட்டை! என்ன சிறப்பு தெரியுமா ?

காதலர்களை வசீகரிக்கும் சென்னைக் கோட்டை! என்ன சிறப்பு தெரியுமா ?

சென்னை அருகே வங்காள விரிகுடாக் கடற்கரையை ஒட்டி தனிமைப்படுத்தப்பட்ட ஆலம்பரைக் கோட்டை. இக்கோட்டையின் சிறப்பு, வரலாறு, எப்படிச் செல்வது என தெரிந்து கொள்வோம் வாங்க.

சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டை தெரியும். அதுவும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பரபரப்பான கோட்டை. காதலர்களை வசீகரிக்கும் கோட்டையெல்லாம் சென்னையில் எங்க பாஸ் இருக்கு ?. இப்படியெல்லாம் நினைக்குற உங்களுக்காகவே காத்திட்டுருக்கு சென்னையில் வங்காள விரிகுடாக் கடற்கரையை ஒட்டி தனிமைப்படுத்தப்பட்ட ஆலம்பரைக் கோட்டை. இக்கோட்டையின் சிறப்பு, வரலாறு, எப்படிச் செல்வது என தெரிந்து கொள்வோம் வாங்க.

எங்கே உள்ளது ?

எங்கே உள்ளது ?


சென்னை மாநகரில் இருந்து 111 கிலோ மீட்டர் தொலைவில் மரக்காணத்திற்கு முன்னதாக கடற்கரை சாலையிலிருந்து 3 கிலோ மீட்டர் கடலை நோக்கி பயணித்தால் தீவுபோல காட்சியகிகும் மணற்திட்டுப் பகுதியில் அமைந்துள்ளது ஆலம்பரைக் கோட்டை. சிதிலமடைந்த இதன் கட்டமைப்பும், வங்காளவிரிகுடாவின் பிரம்மாண்டக் காட்சியும் வார இறுதி நாள் சுற்றுலாவிற்கு ஏற்ற தலமாக உள்ளது.

Senthilmohan

ஆலம்பரைக் கோட்டை

ஆலம்பரைக் கோட்டை


கி.பி 18ம் நூற்றாண்டில் முகலாயர்களால் கட்டப்பட்டதாக கருதப்படும் இக்கோட்டை கி.பி 1750-ல் ஆங்கிலேயரை எதிர்க்க உதவிய பிரெஞ்சு தளபதி டியூப்ள்ஸ்க்கு, சுபேதார் முசாபர்ஜங் அரசர் பரிசளித்துள்ளார். கி.பி. 1760 ஆம் ஆண்டு பிரெஞ்சுப் படையினை வெற்றிக் கொண்ட ஆங்கிலேய படை இக்கோட்டையினை தன்வசம் கொண்டுவந்ததோடு முற்றிலுமாக சித்துவிட்டது.

Djoemanoj

இடைக்கழி நாடு

இடைக்கழி நாடு


ஆலம்பரைக் கோட்டை முன்னொரு காலத்தில் பரபரப்பு மிக்க துறைமுகமாக செயல்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது. சங்ககால இலக்கியமான சிறுபாணாற்றுப் படையின் மூலம் இப்பகுதி இடைக்கழி நாடு என பெயர் பெற்றிருப்பதையும் அறிய முடிகிறது.

SUPindia

கோட்டையின் கட்டமைப்பு

கோட்டையின் கட்டமைப்பு


முழுவதும் செங்கற்களால் மற்றும் சுண்ணாம்புக் கலவையால் கட்டப்பட்டுள்ள இக்கோட்டை ஆங்கிலேயர் படையின் தாக்குதலுக்கு முன்பு வரை கம்பீரத் தோற்றம் கொண்டதாகவே இருந்துள்ளது. கடலின் பேரலையினாலும், இயற்கைப் பெரிடராலும் சேதமடையாதவாறு இக்கோட்டை கட்டப்பட்டுள்ளது. சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட இக்கோட்டை ஆங்கிலேயர்களின் தாக்குதலுக்குப் பிறகு தற்போது சிதைந்த நிலையில் காட்சியளிக்கிறது.

Djoemanoj

காசி விஸ்வநாதர் ஆலயம்

காசி விஸ்வநாதர் ஆலயம்


ஆலம்பரைக் கோட்டையின் கட்டுப்பாட்டில் அப்போதே ஓர் நாணயச் சாலையும் இணைக்கப்பட்டுள்ளது. இச்சாலையின் அருகிலேயே கடப்பாக்கம் காசி விஸ்வநாதர் கோவிலும், ஓரு குளமும் உள்ளது. அதுமட்டுமின்றி காசிக்கு பயணிக்கும் பக்தர்கள் ஓய்வுக்கு இங்கே தங்கிச் செல்வதற்கு வசதியாக ஒரு சத்திரமும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Senthilmohan

சுனாமி நகரம்

சுனாமி நகரம்


கோட்டையின் இடதுபுறத்தில் உள்ள சுற்றுச்சுவர் கடல் அலைகள் மோதி தற்போது செங்கல் குவியலாக காட்சியளிக்கிறது. மேலும், கோட்டைக்குச் செல்லும் வழியிலும், அருகிலும் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் தனித்துவிடப்பட்ட திகில் தீவுபோல உள்ளது.

Djoemanoj

காதலர்களுக்காக...

காதலர்களுக்காக...


தனுசின் திருவிளையாடல் படத்தில் வரும் விழிகளில் விழிகளில் விழுந்து விட்டால் பாடல் எடுக்கப்பட்ட இடம் தெரியுமா ?. அது இக்கோட்டை தான். காதலியுடன், அல்லது வார இறுதி நாட்களில் நண்பர்களுடன் சிறியதாக சிற்றுலா செல்ல விரும்புவோர் தாராளமாக ஆலம்பரைக் கோட்டைக்கு சென்று வரலாம்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X