Search
  • Follow NativePlanet
Share
» »சென்னையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டைனோசர் திருவிழா – நேரம், தேதி, இடம் மற்றும் கட்டணம்

சென்னையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டைனோசர் திருவிழா – நேரம், தேதி, இடம் மற்றும் கட்டணம்

இந்த கோடை விடுமுறையில் உங்கள் குழந்தைகளுடன் செல்ல ஒரு அற்புதமான புதிய இடத்தைத் தேடுகிறீர்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்குத்தான்! நீங்கள் ஏராளமான பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் அருங்காட்சியகங்களுக்கு ஏற்கனவே சென்று வந்து விட்டீர்களா? கவலையே வேண்டாம். சென்னையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டைனோசர் திருவிழாவிற்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

டைனோசர் திருவிழாவின் சிறப்பம்சம்

சென்னையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டைனோசர் திருவிழா – நேரம், தேதி, இடம் மற்றும் கட்டணம்
Photo Credit:

டைனோசர் ஃபெஸ்டிவல் இந்தியா ஜூன் 10 முதல் ஜூன் 19 வரை சென்னையில் வரலாற்றுக்கு முந்தைய விலங்குகளின் வாழ்க்கை அளவிலான பிரதிகளைக் காண்பிக்கும் பத்து நாள் கண்காட்சியை ஏற்பாடு செய்கிறது. டெல்லியில் கிடைத்த மாபெரும் வெற்றிக்கு பிறகு, இந்த திருவிழா சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

7 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் வாழ்ந்த ஸ்கை-ஸ்க்ரேப்பர் அனிமேட்ரானிக் டைனோசர் இனங்களான ஐசிசரஸ், ராஜசரஸ், ப்ருஹத்காயோசொரஸ், பிராச்சியோசொரஸ், டைரனோசொரஸ் ரெக்ஸ், ட்ரைசெராடாப் மற்றும் பலவற்றின் பிரதிகளை இங்கே கண்டு களிக்கலாம்.

குழந்தைகளுக்கு இங்கே என்ன உள்ளது

டைனோசர் திருவிழாவின் முக்கிய பங்கேற்பாளர்கள் நம் செல்லக் குழந்தைகள் தான். இங்கே காணப்படும் புதைபடிவ அகழ்வாராய்ச்சி, ஜம்பிங் கோட்டைகள் மற்றும் வரலாற்றுக்கு முந்தைய ராட்சத உயிரினங்களுடன் எடுக்கக்கூடிய புகைப்பட அமர்வுகள் என அனைத்திலும் குழந்தைகள் குதூகலமாக ஈடுபட்டு கேளிக்கை காண்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

நிகழ்ச்சி நடைபெறும் இடம் மற்றும் தேதி

இந்த தனித்துவமான டைனோசர் கண்காட்சி சென்னை சென்டரில் ஜூன் 10 முதல் 19 வரை மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வரலாற்றுக்கு முந்திய காலத்து உயிரினங்களின் பற்கள் மற்றும் அவை கண் சிமிட்டுவதை பார்க்கவும், வால்களை அசைப்பதையும் பார்க்கவும், அவற்றின் கம்பீரமான கர்ஜனையைக் கேட்கவும் இங்கே வருகைத் தரலாம்.

சென்னையில் டைனோசர் திருவிழாவிற்கான டிக்கெட் விலைகள்

குழந்தைகளுக்கு 710 ரூபாய், மூத்த குடிமக்களுக்கு 890 ரூபாய், பெரியவர்களுக்கு 1070 ரூபாய், 4 நபர்கள் கொண்ட குடும்பத்திற்கு 2950 ரூபாய், 8 நபர்கள் கொண்ட குழுவிற்கு 5310 ரூபாய், 2௦ நபர்கள் அடங்கிய குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் குழுவிற்கு 10330 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இக்கட்டணமே வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சற்று அதிகமாக வசூலிக்கப்படுகிறது. சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு வெள்ளி மற்றும் திங்கள் கிழமைகளில் நுழைவு இலவசமாகும்

நீங்கள் ஜுராசிக் பார்க் திரைப்படங்களின் ரசிகராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, இந்த தனித்துவமான திருவிழாவை நீங்கள் எப்படியும் விரும்பப் போகிறீர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே, இக்கண்காட்சிக்கு உங்கள் குடும்பம், குழந்தைகள் மற்றும் நண்பர்களுடன் சென்று வாருங்கள்!

    Read more about: chenni tamilnadu
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X