» »இந்தியாவின் "நயாகரா" என்று அழைக்கப்படும் நீர் வீழ்ச்சி எங்கிருக்கு தெரியுமா?

இந்தியாவின் "நயாகரா" என்று அழைக்கப்படும் நீர் வீழ்ச்சி எங்கிருக்கு தெரியுமா?

Posted By: Bala Karthik

இயற்கை தந்த சலுகையான நீர்வீழ்ச்சியின் அழகை காண்பது என்பது கண்கொள்ளா காட்சியை நமக்கு தருகிறது. இயற்கையின் சக்தி மற்றும் பெருமையை உணரும் ஒருவர், நீர்வீழ்ச்சியிலிருந்து விழும் நீரின் அழகையும் ரசிக்கக்கூடும். நீர்வீழ்ச்சியின் பின்புலத்தில் நின்று அதன் அழகை ரசித்திட உண்மையான இயற்கை வரமாக அது அமைகிறது.

நம்முடைய பள்ளி பருவத்திலிருந்து நாம் கற்ற வார்த்தையாக, சித்ரகூட் நீர்வீழ்ச்சியை 'இந்தியாவின் நையகரா நீர்வீழ்ச்சி' என்றும் அழைக்கிறோம். தற்போது, இந்த இடத்தில் அப்படி என்ன தான் சிறப்பாக இருக்கிறது என்பதை நாம் தெரிந்துக்கொள்வதோடு பெருந்தன்மைமிக்க மற்றும் அழகிய நீர்வீழ்ச்சியாக இது உலகிலேயே எத்தகைய சிறப்புடன் இருக்கிறது என்பதையும் நாம் தெரிந்துக்கொள்ளலாம்.

இந்தியாவின் நயாகரா

இந்தியாவின் நயாகரா

சட்டீஸ்காரின் பஸ்டார் மாவட்டத்தில் இது காணப்பட, சித்ரகூட் நீர்வீழ்ச்சியின் இயற்கை அழகால் நம் மனமானது கொள்ளைப்போகிறது. 95 அடி உயரத்தில் இது காணப்பட, 985 அடி பரவலாகவும் காணப்படுவதோடு, பெருமைமிக்க நையகரா நீர்வீழ்ச்சியின் மூன்றின் ஒரு பங்குடனும் காணப்படுகிறது. இத்தகைய காரணத்தால், இந்தியாவின் பரவலான நீர்வீழ்ச்சியாக இது இருக்கிறது. இதன் தூரத்திலிருந்து, இந்த நீர்வீழ்ச்சியானது பார்ப்பதற்கு கனவைப் போல் தோன்றிட, வைத்த கண்களை எடுக்க முடியாமலும் மனமானது தவிக்கிறது.

ASIM CHAUDHURI

சித்ரகூட் நீர்வீழ்ச்சியை நாம் காண சிறந்த நேரங்கள்:

சித்ரகூட் நீர்வீழ்ச்சியை நாம் காண சிறந்த நேரங்கள்:

பருவமழைக்காலமான ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில், இந்த பெருமைமிக்க சித்ரகூட் நீர்வீழ்ச்சியை நாம் காண சிறந்த நேரமாக அமைகிறது. சில சமயங்களில், மழைக்குப்பிறகு, அழகிய வானவில்லையும் நீங்கள் காண, அது ஓடிக்கொண்டிருக்கும் மூடுபனி வானத்தில் காணப்படுவதை பார்க்க, அது நம் பயணத்தின் சிறப்பை உணர்த்துகிறது.

PC: Ksh85

குளிர்காலம்

குளிர்காலம்


குளிர்காலமான நவம்பர் முதல் ஜனவரி வரையிலான மாதங்கள் நீர்வீழ்ச்சியை காண சிறந்து காணப்பட, சிக்கலற்ற பயணமாகவும் அமைந்திடக்கூடும். இந்த கால நிலையானது குளுமையுடன் காணப்பட, சிறந்ததாகவும் அமைகிறது.

PC: Moulina kumar

இந்த நீர்வீழ்ச்சியை பற்றிய அனைத்து தகவல்களும்:

இந்த நீர்வீழ்ச்சியை பற்றிய அனைத்து தகவல்களும்:

சித்ரகூட் நீர்வீழ்ச்சியை ‘சித்ரக்கோட்டே அல்லது சித்ரகோட் நீர்வீழ்ச்சி' என்றும் நாம் அழைக்க, 38 கிலோமீட்டர் தொலைவில் மேற்கிலிருந்து ஜகதால்பூர் நகரத்திலிருந்தும், தலை நகரமான ராய்ப்பூரிலிருந்து 276 கிலோமீட்டர் தொலைவிலும் காணப்படுகிறது. இது இந்திராவதி நதியை நோக்கி ஓட, இதன் பிறப்பிடமாக ஒடிஸா அமைந்து, மேற்கில் பாய்ந்து சித்ரகூட்டில் விழுவதோடு,பின்னர் ஆந்திர பிரதேசத்தில் நுழைந்து, கோதாவரி நதியை இறுதியில் சேர்கிறது. இந்த நதியை பல நீர் மின் நிலைய வேலைகளுக்கு பயன்படுத்துகின்றனர்.

காங்கெர் பள்ளத்தாக்கு

காங்கெர் பள்ளத்தாக்கு

காங்கெர் பள்ளத்தாக்கு தேசிய பூங்காவில் இது காணப்பட, சித்ரகூட்டிலிருந்து ஒரு சில கிலோமீட்டர் தொலைவில் திராத்கார்ஹ் நீர்வீழ்ச்சியும் காணப்படுகிறது. விடுமுறை காலங்களில், இந்த வீழ்ச்சியானது பல சிறிய நீரோடைகளில் பரவ, ஹார்ஸ் ஷூ வடிவம் நோக்கியும் பிரிந்து பாய்கிறது. இருப்பினும், பருவமழைக்காலங்களில், இந்த வளைந்து நெளிந்து ஓடும் ஓடையானது பாறை வழியாகவும் பாய்ந்து, மழைவீழ்ச்சியினால் இணைந்து வேகமாக ஓடி அனைத்து விதமான பெருமையையும் சேர்க்கிறது.

 சிவபெருமான் சன்னதி

சிவபெருமான் சன்னதி


இந்த நீர்வீழ்ச்சிக்கு கீழே, ஒரு குட்டை காணப்பட அதன் ஆற்றங்கரையில் சிவபெருமான் சன்னதியும் அமைந்திருக்கிறது. இயற்கையிலே குகையாக உருவாகிட, இந்த குகைகளின் தொகுப்பை பார்வதி குகைகள் எனவும் நாம் அழைக்கிறோம். படகுக்காரர்கள் வீழ்ச்சியின் அருகில் காணப்பட, அவர்களின் உதவியுடன் வீழ்ச்சிக்கு கீழே நாம் செல்வதோடு, வேகமாக பாய்ந்து ஓடும் நீரினையும் ரசிக்கிறோம். இருப்பினும், குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களை இந்த வீழ்ச்சிக்கு அருகாமையில் அழைத்து செல்வதனை தவிர்ப்பது மிகவும் நல்லதாகும். ஆம், நீரின் விசையானது மிகவும் அதீத தாக்கத்துடன் காணப்படக்கூடும்.

சித்ரகூட் நீர்வீழ்ச்சியை நாம் அடைவது எப்படி?

சித்ரகூட் நீர்வீழ்ச்சியை நாம் அடைவது எப்படி?

விமானம் மூலமாக செல்வது: சித்ரகூட் நீர்வீழ்ச்சியினை 285 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராய்ப்பூர் விமான நிலையம் மூலமாகவோ அல்லது 340 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விசாகப்பட்டின விமான நிலையம் மூலமாகவோ நம்மால் அடைய முடிகிறது. இந்த இரு விமான நிலையங்களும், இந்தியாவின் முக்கிய நகரங்களான பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா, புது தில்லி என பல நகரங்களுடன் நல்லதொரு முறையில் இணைந்தே காணப்படுகிறது.

பயணம்

பயணம்

இரயில் மூலமாக செல்வது: ஜகதால்பூர் நகரத்தில் இரயில் நிலையம் காணப்பட, கொல்கத்தா, விசாகப்பட்டினம், புவனேஷ்வர் என பல இடங்களுடன் இணைந்தே காணப்படுகிறது. வழக்கமாக, இந்த நீர்வீழ்ச்சியிலிருந்து 38 கிலோமீட்டர் தொலைவில் ஜகதால்பூர் காணப்பட, டாக்சிகளின் மூலமாக வழக்கமான பயணத்தை நாம் எளிதாக தொடரலாம்.

சாலை மூலமாக செல்ல

சாலை மூலமாக செல்ல

ஜகதால்பூர் சிறிய நகரமாக காணப்பட, சட்டீஸ்கரில் மிகவும் பிரசித்திபெற்றதாகவும் விளங்குகிறது. அதனால், மாநிலத்தின் தலை நகரமான ராய்ப்பூருடன் நன்றாக இணைக்கப்பட்டிருக்க, மாநிலத்தின் மற்ற சாலைகளும் சிறந்து காணப்படுகிறது. மாநில அரசு பேருந்துகள், ஜான்சி, அலஹாபாத், கான்பூர் என பல இடங்களுக்கும் காணப்பட, அவை மூலமாக நீர் வீழ்ச்சியை அடையவோ அல்லது ஜகதால்பூர் வரை உங்களால் செல்லவோ முடிகிறது.

Meethi Biswas

Read more about: travel falls

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்