Search
  • Follow NativePlanet
Share
» »திருச்செந்தூர் முருகன் கோயில் பற்றி நீங்கள் அதிகம் அறிந்திராத தகவல்கள்

திருச்செந்தூர் முருகன் கோயில் பற்றி நீங்கள் அதிகம் அறிந்திராத தகவல்கள்

By Staff

அறுபடை வீடுகள் எனப்படும் முருகப்பெருமானின் சிறப்புக்குரிய கோயில்கள் தமிழகத்தில் பழனி, திருச்செந்தூர், திருத்தணி, சுவாமிமலை, திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை என ஆறு ஊர்களில் அமைந்திருக்கின்றன. இவ்வாறு கோயில்களில் ஐந்து கோயில்கள் மலை மீது அமைந்திருக்க திருச்செந்தூர் மட்டும் கடற்கரையை ஒட்டி அமையப்பெற்ற சிறப்பை கொண்டிருக்கிறது.

இந்த குகையில் தான் விநாயகரின் மனித தலை இருக்காம்!

படையெடுத்துச்செல்லும் தளபதி தனது வீரர்களுடன் தங்கும் இடம் தான் படைவீடு ஆகும். அப்படி சூரபத்திரனை வதைக்க முருகப்பெருமானுடன் அவரது தளபதி வீரபாகு மற்றும் படைவீரர்கள் தங்கியிருந்த படைவீடு தான் திருச்செந்தூர் ஆகும். அப்படிப்பட்ட பெருஞ்சிறப்புக்குரிய திருச்செந்தூர் சுப்பரமணிய சுவாமி கோயிலை பற்றி அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

ரஜினிகாந்த் செல்லும் குகையின் இந்த ரகசியம் உங்களுக்கு தெரியுமா?

தல சிறப்புகள்:

தல சிறப்புகள்:

சூரபத்திரன் என்ற அரக்கனை முருகப்பெருமான் ஐப்பசி மாதம்வளர்பிறை சஷ்டியன்று தனது வைர வேல் கொண்டு வதைத்து வெற்றிகொண்டார்.

இது நிகழ்ந்த இடமே திருச்செந்தூர் ஆகும். எனவே தான் ஒவ்வொரு வருடமும்கந்தசஷ்டி விழாவன்று 'சூரா சம்காரம்' எங்கே வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.

Ancient Temples in Tamilnadu

தல சிறப்புகள்:

தல சிறப்புகள்:

திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா வெகு சிறப்பாக கொண்டாட வேறொரு காரணம் ஒன்றும் சொல்லப்படுகிறது. சில முனிவர்கள் உலக நன்மைக்காக புத்திரன் ஒருவன் வேண்டுமென்று கருதி ஐப்பசி மாத அமாவாசையன்று துவங்கி, ஆறு நாட்கள்யாகத்தை நடத்தியிருக்கின்றனர்.

அந்த ஆறு நாட்களும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்து வெளியானதாகவும் அந்த ஆறும் இணைந்தவனே ஆறுமுகன் எனப்படும் முருகன் ஆவார். எனவே முருகன் திருச்செந்தூரில் ஜனித்த தினமே கந்தசஷ்டி விழாவாக கொண்டாடப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது.

Ancient Temples in Tamilnadu

எங்கே அமைந்திருக்கிறது?

எங்கே அமைந்திருக்கிறது?

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் சென்னையில் இருந்து 600கி.மீ தொலைவில் தூத்துக்குடி மாவட்டத்தில் மன்னார் வளைகுடாவை ஒட்டியா கடற்கரையில் அமைந்துள்ளது.

சிலப்பதிகார குறிப்புகள் படி இக்கோயில் 2000 ஆண்டுகள் பழமையானதாக சொல்லப்படுகிறது. இவ்விடம் முன்னர் 'திருச்சீரலைவாய்' என்றலைக்கப்பட்டதாம்.

Ancient Temples in Tamilnadu

பெயர்க்காரணம்:

பெயர்க்காரணம்:

சூரபத்திரனை வெற்றிகொண்டதால் இங்கே கோயில் கொண்ட முருகப்பெருமான் 'செயந்திநாதர்' என்று விளிக்கப்பட்டதாகவும் அதுவே பின்னாளில் மருவி 'செந்தில்நாதர்' என்று மருவியதாம். அதுபோலவே இவ்வூரும் 'திருசெயந்திபுரம்' என்பதிலிருந்து திருச்செந்தூர் என்றானதாக சொல்லப்படுகிறது.

Ancient Temples in Tamilnadu

கோயில் அமைப்பு:

கோயில் அமைப்பு:

முன்னுரையில் சொன்னது போலவே அறுபடை வீடுகளில் மலைமீது அமைந்திராத கோயில் இது மட்டுமே. திருச்செந்தூர் கோயிலின் ராஜகோபுரம் ஒன்பது அடுக்குகளை கொண்டு 150 அடி உயரமுடையதாகும்.

Ancient Temples in Tamilnadu

கோயில் அமைப்பு:

கோயில் அமைப்பு:

இங்கே முருகன் இடது கையில் தாமரை மலருடன் ஜடாமுடி கொண்டு சிவயோகி போல காட்சிதருகிறார். முருகனின் சிலைக்கு பின்னால் இடதுபுற சுவரில் போரில் வெற்றிபெற்றுவந்த முருகன் பூசை செய்ததாக சொல்லப்படும் லிங்கம் ஒன்று இருக்கிறது. அதற்கு முதலில் பூசை செய்தபிறகே முருகனுக்கு பூசை செய்யப்படுகிறது.

மேலும் முருகன் சந்நிதிக்கு வலப்புறத்தில் "பஞ்சலிங்க' சன்னதி ஒன்றும் இருக்கிறது.மூலவர் முருகரின் இடதுபுறம் உள்ள சிறு வாயில் வழியே உள்ளே நுழைந்து சுற்றி வலது புறம் வந்து பாதாள பஞ்சலிங்க தரிசனம் செய்ய வாரநாட்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

Ancient Temples in Tamilnadu

கோயில் திறந்திருக்கும் நேரம் மற்றும் பூசை முறை:

கோயில் திறந்திருக்கும் நேரம் மற்றும் பூசை முறை:

திருச்செந்தூர் முருகன் கோயில் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கிறது. திருச்செந்தூரில் முருகனுக்கு தினமும் 9 கால பூஜை நடைபெறுகிறது.

சிறுபருப்பு பொங்கல், கஞ்சி, தோசை, அப்பம், நெய் சாதம், ஊறுகாய், சர்க்கரை கலந்து பொரி, அதிரசம், தேன்குழல், அப்பம், வேக வைத்த பாசிப்பருப்பு, வெல்லம் கலந்த உருண்டை பலவிதமானநைவேத்தியங்கள் செந்தில்நாதருக்கு படைக்கப்படுகிறது.

Ancient Temples in Tamilnadu

கங்கை பூசை:

கங்கை பூசை:

தினமும் மதியம் உச்சிகால பூசை முடிந்தபிறகுஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துக்கொண்டு மேள, தாளத்துடன் சென்று கடலில் கரைக்கின்றனர். இந்த சடங்கே 'கங்கை பூஜை' எனப்படுகிறது.

Ancient Temples in Tamilnadu

மஞ்சள் நீராட்டு:

மஞ்சள் நீராட்டு:

திருமணத்திற்கு முன்பு கன்னிப்பெண்கள் தங்கள் முறைப்பையனுக்கு மஞ்சள் நீரூற்றி மகிழ்வர். கந்தசஷ்டி விழாவின் கடைசி நாளன்று தனது மனைவிதெய்வானையுடன் வருகையில் தங்கள் ஊரில் தெய்வானையை திருமணம் செய்துகொண்டதற்காகவும் போரில் வெற்றிவாகை சூடிவந்த முருகனின் உக்கிரத்தை குறைக்கும் விதமாகவும் முருகன் மீது பக்தர்கள் மஞ்சள் நீரூற்றி விளையாடுகின்றனர்.

Ancient Temples in Tamilnadu

இரண்டு முருகன்:

இரண்டு முருகன்:

சூரபத்திரனை வதைத்து திரும்பிய முருகன் சுப்பிரமணியராக நான்கு கரங்களுடன் சிவபூஜை செய்தபடி ஜடாமுடியுடன் தவக்கோலத்தில் இருக்கிறார். சுப்பிரமணியரின் தவம் கலைந்துவிடக்கூடாது என்பதற்காக அவருக்கு பிரகாரம் கிடையாது. இவருக்கான பிரதான உற்சவர் சண்முகர், தெற்கு நோக்கி தனி சன்னதியில் இருக்கிறார்.

மூலவருக்குரிய பூஜை மற்றும் மரியாதைகள் சன்முகருக்கே செய்யப்படுகிறது.

Ancient Temples in Tamilnadu

தீபாவளிக்கு புத்தாடை:

தீபாவளிக்கு புத்தாடை:

தீபாவளிக்கு மக்கள் அனைவரும் புத்தாடை அணித்து கொண்டாடுவது வழக்கம்.திருச்செந்தூர் கோயிலிலும் அனைத்து சுவாமிகளுக்கும் தீபாவளியன்று புத்தாடை அணிவிக்கப்படுகிறது.

தனது மகளான தெய்வானையை முருகன் மணமுடித்திருப்பதால் மருமகனுக்கு இந்திரன் புத்தாடை எடுத்துத்தருவதாக நம்பப்படுகிறது.

Ancient Temples in Tamilnadu

திருவிழாக்கள்:

திருவிழாக்கள்:

பங்குனி உத்திரம், திருகார்த்திகை, வைகாசி விசாகம், கந்த சஷ்டி என மற்ற முருகன் கோயில்களில் கொண்டாடப்படுவது போலவே இங்கும் வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது.

ஆனால் திருச்செந்தூரில் கந்தசஷ்டி முதல் ஆறுநாட்கள் சஷ்டி விரதம், சூரசம்ஹாரம், ஏழாம் நாளில் முருகன், தெய்வானை திருக்கல்யாணம், அடுத்த 5 நாட்கள், சுவாமி திருக்கல்யாண கோலத்தில் ஊஞ்சல் சேவை என இவ்விழா 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

Sa.balamurugan

பயண வழிகாட்டி:

பயண வழிகாட்டி:

திருச்செந்தூர் முருகன் கோயிலை பற்றிய மேலும் பல தகவல்களை தமிழின் ஒரே பயண இணையதளமான தமிழ் பயண வழிகாட்டியில் அறிந்துகொள்ளுங்கள்.

இந்த இடங்கள்ல காதல் புரபோஸ் பண்ணா கண்டிப்பா சக்ஸஸ்தான்! தெரியுமா?

இந்தியாவுல இருந்துட்டு இதுகூட தெரியலனா நாமெல்லாம் ஆன்டி இன்டியன்ஸ்தான்!

ராஜராஜ சோழனின் தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் அதிசயங்கள் தெரியுமா?

இந்த ஊருக்கு மட்டும் அப்படி என்ன வரம்... தினமும் மழை பெய்யுதாம்...

இந்த குகையில் தான் விநாயகரின் மனித தலை இருக்காம்!

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more