Search
  • Follow NativePlanet
Share
» »பெங்களூருக்கு அருகே இப்படி ஒரு இடமா! இவ்ளோ நாள் தெரியாமபோச்சே!

பெங்களூருக்கு அருகே இப்படி ஒரு இடமா! இவ்ளோ நாள் தெரியாமபோச்சே!

By Bala Latha

ஒரு விரைவான மலையேற்றப் பயணத்தில் அந்தர் கங்கேவுக்கு பயணம் செய்து அவ்விடத்தின் அழகை முழுமையாக சுற்றிப் பாருங்கள்

ஜென்ம நட்சத்திரம்... இன்று நீங்க போக வேண்டிய கோவில் இதுதான்!

ஒரு பயண இலக்கை சென்றடைவதற்கு பல வழிகள் உள்ளன - சாலை வழிப் பயணம், ரயில் வண்டிப் பயணம், மலையேற்றம், சாகச விளையாட்டுகள் மற்றும் பல. ஆனால் ஒரு பயண இலக்கு இவற்றில் சில அல்லது அனைத்து வழிகளையும் கொண்ட இணைந்த ஒரு சேர்க்கையாக வருவது எப்போதாவது கிடைக்கும் ஒரு வாய்ப்பாகும்.

உலக கட்டிடக்கலைக்கே சவால் விடும் 10 கோடி கிலோ கோயில் மர்மங்கள்

அத்தகைய ஒரு வாய்ப்பு ஒரு சோம்பலான வார இறுதியில், செய்வதற்கு மதிப்புடையதாக எந்த வேலையுமில்லை என்றபோது என் மடியில் வந்து விழுந்தது: அப்போது நானும் எனது நண்பர்களும் அந்த இடத்திலேயே உடனுக்குடன் ஒரு சுற்றுலா செல்லலாம் என்று திட்டமிட்டோம். மேலும் அந்தர் கங்கேவை பயண இலக்காகத் தேர்ந்தெடுத்தோம்.

அந்தர் கங்கே

அந்தர் கங்கே


அந்தர் கங்கே கோலாரிலுள்ள ஸதஷூருங்கா மலைத் தொடரில் அமைந்துள்ளது. கன்னடாவில் அந்தர் கங்கே என்பதன் இலக்கிய அர்த்தம், "உள்ளார்ந்த ஆழத்திலிருந்து வரும் கங்கை நதி" என்பதாகும். பெங்களூருவிலிருந்து சுமார் 70 கிலோ மீட்டர் மற்றும் கோலார் நகரத்திலிருந்து 2 மைல் தொலைவில் உள்ளது.

இந்த இடத்தின் நட்சத்திர ஈர்ப்பு மலையுச்சியில் அமைந்துள்ள குளத்துடன் கூடிய ஒரு கோயிலாகும். இந்தக் குளத்தில் பசவத்தின் (கல்லில் செய்த காளை) வாயிலிருந்து தொடர்ச்சியாக நீர் பிரவாகம் வந்துகொண்டே இருக்கும். ஆனால் அந்த நீரின் மூலாதாரம் எதுவென்று தெரியவில்லை. புராணங்கள் அந்த நீரின் தொடக்கமானது கடவுள் சிவனின் தலையிலிருந்து வருவதாகக் கூறுகின்றன.

நமது தொடக்கப் புள்ளியிலிருந்து உள்ள குறுகிய தூரமானது நம்மை நான்கு சக்கர வாகனங்களின் வரையறுக்கப்பட்ட எல்லைகளைவிட ஒரு இரு சக்கர வாகனப் பயணத்தைத் தேர்ந்தெடுக்கச் செய்கிறது.


நாட்டையே உலுக்கிய ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயிலின் கருவறை மர்மங்கள் ... திடுக்கிடும் புதிய தகவல்

அந்தர் கங்கேவிற்கு பயணம் செய்ய சிறந்த மாதம்

அந்தர் கங்கேவிற்கு பயணம் செய்ய சிறந்த மாதம்

:

இந்த இடத்திற்கு வருகைத் தர மார்ச் மாதம் சிறந்த காலமாகும். ஏனென்றால் அப்போது வானிலை வெதுவெப்பான காற்றுடன் மனதிற்கினியதாக இருக்கும். ஒரு இரு சக்கர வாகனப் பயணம் மற்றும் மலையேற்றத்திற்கு தயாராகும் போது எப்போதும் முன் ஜாக்கிரதையாக அத்தியாவசப் பொருட்களான தண்ணீர் கேன், டார்ச், முதலுதிவிக்காக பேண்ட் ஏய்டு, கடினமான மலைக் காற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள குல்லா / தொப்பி போன்றவற்றை உடன் எடுத்துச் செல்வது விவேகமான செயலாகும்.

சாலைப் பயணம்

கோடைக் காலத்தில் சூரிய உதயம் காலையில் முன்னதாகவே ஏற்படுவதால் மற்றும் தீவிரமான பகல் நேர வெப்பநிலையில் வண்டி ஓட்டுதல் முற்றிலும் உடலில் நீரிழப்பை ஏற்படுத்தி மற்றும் உடலை சோர்வடையச் செய்து விடும் என்பதால் நாங்கள் எங்கள் பயணத்தை விடிவதற்கு முன்பாகவே எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக அதிகாலையில் 4:30 மணிக்கே தொடங்கினோம்.

நாங்கள் கோலாரை நோக்கி தேசிய நெடுஞ்சாலை4 வழியில் பயணம் மேற்கொண்டோம். ஒரு ஒற்றை ஏற்ற இறக்கம் கூட இல்லாமல் இருந்தது: நான் இதுவரை செய்த சாலைப் பயணங்கள் எதனுடனும் இந்த சாலை ஒப்பிட முடியாதது.

எங்களைத் தளர்த்திக் கொள்ள 1 முதல் 2 இடைவெளிகளை எடுத்தப் பின்பு காலை 7 மணிக்கு நாங்கள் கோலாரை அடைந்தோம். நகரத்திற்குள் நுழைந்தப் பிறகு ஒரு இடது பக்க திருப்பம் நம்மை அந்தர் கங்கே குகைகளை நோக்கி அழைத்துச் செல்கிறது.


பாகுபலி 2 இடங்களை நேரில் பாக்கணுமா? அதுவும் பட ரிலீஸுக்கு முன்னே.. இங்க வாங்க!

 கோவிலைப் பற்றிய விவரங்கள்:

கோவிலைப் பற்றிய விவரங்கள்:

கோவிலுக்குச் செல்ல சுமார் 350 படிக்கட்டுகள் உள்ளன. இரு பக்கங்களிலும் மரங்கள் மற்றும் பசுமையான செடிக் கொடிகளால் சூழப்பட்டுள்ள படிக்கட்டுகள் ஒரு ரம்மியமான மேலே ஏறும் அனுபவத்தைத் தருகின்றது. மலை உச்சிக்குச் செல்லும் நமது பாதையில், நமது சக மலையேற்றப் பயணிகள் வண்ணமயமான வண்ணத்துப்பூச்சிகளை புகைப்படம் எடுப்பதைக் கண்டோம். இந்த இடம் பல்வேறு வண்ணத்துப் பூச்சி இனங்களின் வசிப்பிடம் என்று அவர்கள் எங்களிடம் சொன்னார்கள்.

கோயிலின் சுற்றுச் சுவரை நெருங்கும்போது சுற்றிலும் நிறைய குரங்குகள் துள்ளிக் குதித்து ஓடிக்கொண்டிருந்ததைக் கண்டோம். குரங்குகளின் கவனத்தைக் கவராமல் இருப்பதற்கு எப்போதும் சாப்பிடக் கூடிய பொருட்களை மறைத்து வைத்திருப்பது சிறந்ததாகும்.

கோயிலின் சுற்றுப் புறங்களைச் சுற்றிப்பார்த்தப் பிறகு இறுதியாக பசவா சிலையுடன் கூடிய குளத்தைப் பார்த்ததும் நாங்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டோம். அந்த கற்சிலை காளையின் வாயிலிருந்து தண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது. உண்மையில் இதுபோன்ற ஒரு மர்மமான ஒன்றை காண்பது புதிராக இருந்தது. பயணிகளில் சிலர் அந்தத் தண்ணீரை அது பல நோய்களைக் குணப்படுத்தும் என்ற நம்பிக்கையுடன் பாட்டில்களில் நிறைத்து எடுத்துச் சென்றார்கள்.

'தல' ரசிகர்களே! அவரைப் பற்றிய இந்த விசயம் தெரியுமா?

குகைகளுக்கு ஒரு மலையேற்றப் பயணம்

குகைகளுக்கு ஒரு மலையேற்றப் பயணம்

கோவிலைச் சுற்றிப் பார்த்த பிறகு நாங்கள் எங்கள் மலையேற்றப் பயணத்தை கோவிலின் வலது பின்புற வழியாக தொடங்கினோம். மலையேற்றப் பாதை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் இரண்டு பக்கங்களிலும் வழவழப்பான கற்பாறைகளால் பாதுகாக்கப்பட்டுள்ளது. நாங்கள் மேலும் மலையேற்றத்தைத் தொடர்ந்த போது சில இடங்களில் கற்பாறைகளால் பாதுகாப்ப அரண் அமைக்கப்பட்டு பச்சை பசேல் என்று தாவரங்களால் சூழப்பட்டு பாறைகளில் படிக்கட்டுகள் செதுக்கப்பட்டு இருந்த அந்த காட்சிகள் கவர்ந்து இழுக்கும் வண்ணம் இருந்தன.

நாங்கள் உள்ளூர் சிறுவர்கள் அளித்த வழிகாட்டுதலை ஏற்றோம். நாங்கள் அவர்களிடம் குகையை நோக்கிச் செல்லும் வழிகாட்டுதல்களைப் பெற்று அந்த திசையில் நடக்கத் தொடங்கினோம். அந்த இடத்தை ஒருமுறை அடைந்த பிறகு அங்கே நிறைய புகைப்படம் எடுக்கும் வாய்ப்பு கிடைத்ததால் குகைகளின் புற சுற்று வழிகளைச் சுற்றி வந்தோம். சிறிது நீரிழப்பு ஏற்பட்டது போல உணர்ந்ததால், தண்ணீர் கேன்களும் பிஸ்கட் மற்றும் கேக் பொட்டலங்களும் கைக்கு வந்தன.

குற்றாலத்தில் குதூகலிக்க இத்தனை விசயம் இருக்கா?

சிறிது நேர ஓய்வுக்கு பிறகு

சிறிது நேர ஓய்வுக்கு பிறகு

சிறிது நேர ஓய்வுக்கு பிறகு, மலை உச்சியின் சமமான பகுதிக்கு செல்ல எங்கள் சக மலையேற்றப் பயணிகளை பின்தொடர்ந்தோம். இந்த உயரமான மலையின் உச்சியில் ஏழு கிராமங்கள் இருக்கின்றன. மேற்கொண்டு வழிகாட்டுதல்களின் மூலம் நாங்கள் ஒரு மசூதியை அடைந்தோம் மற்றும் அங்கே எங்கள் தண்ணீர் கேன்களை நிறைத்துக் கொண்டோம். எங்களுக்கு ஆச்சரியமூட்டும் வகையில் மசூதிக்கு பின்னால் உள்ள வழி மலை உச்சியை அடைய மிகவும் நெருக்கமான வழியைக் கண்டோம். அங்கிருந்து நாங்கள் 15 நிமிடங்களில் மலையுச்சியை அடைந்தோம்!

மற்ற சிகரங்களைப் போல அல்லாமல், இது சமமாகவும் கிடைமட்டமாகவும் இருந்தது. ஆனால் அந்த காட்சிகள் அபாரமாகவும் அத்தனைக் கடின உழைப்பிற்கும் மதிப்புடையதாக்குவதாகவும் இருந்தது. உச்சியிலிருந்து பார்க்கும் தேசிய நெடுஞ்சாலை4 இன் காட்சிகள் கண்களைக் கவர்ந்திழுக்கும்படியாக இருந்தது.

அப்போது சூரியன் சூடேறத் தொடங்கியதால் நாங்கள் மலையிலிருந்து .இறங்க முடிவெடுத்தோம். சாகசங்களைப் பார்ப்பதற்காக நாங்கள் இங்கு வந்தோம். ஆனால் நாங்கள் கேட்டதை விட அதிகமாக கிடைக்கப் பெற்றோம். ஒரே நாளில் ஒரு கோயில் மற்றும் ஒரு மசூதிக்கு பயணம் செய்தது, எங்களுக்கு நல்லிணக்கத்தை மட்டுமின்றி எங்களை ஆன்மீக ரீதியாகவும் மெருகேற்றியது. எனவே இந்த பயணம் எதிர்பாராத விதமாக ஒரு உள்ளார்ந்த பயணமாக ஆனது. இந்த ஆசிர்வதிக்கப்பட்ட இடத்தின் மூலாதாரம் எது என்பது இதுவரை தெரியவில்லை!

பத்திரிகையாளர் மரியாதை: திலக் பன்தாரி.

தமிழின் வயது எவ்வளவு தெரியுமா? இதை படிங்க

Read more about: travel

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more