» »பாண்டியர்களின் படைப்பு உலகை ஆட்டிப்படைக்கும் 'ரெடி' விநாயகர் எங்கே தெரியுமா?

பாண்டியர்களின் படைப்பு உலகை ஆட்டிப்படைக்கும் 'ரெடி' விநாயகர் எங்கே தெரியுமா?

Written By: Udhaya

உலகையே தமிழர்கள் ஆண்டார்கள் என்றால் மறுப்பீர்களா என்ன? சேர, சோழ, பாண்டியர்களுடன் பல்லவ அரசர்களும் உலகையே கிட்டத்தட்ட தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். கம்போடியாவில் கட்டிய கோயிலும், இமயத்தில் நாட்டிய கொடியும், பர்மா தாண்டி தாய்லாந்து வரை செய்த வணிகமும் தமிழர்களின் பெயரைச் சொல்லும். இன்னும் சில படிகள் மேலே சென்று ஆராய்ந்தால் அமெரிக்காவிலும் ஆப்பிரிக்காவிலும் தமிழர்களின் சந்ததிகளை கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளனர்.

அப்படிபட்ட தமிழ் மன்னர்களுள் பாண்டியர்கள் ஒரு குறிப்பிட்ட நூற்றாண்டுகள் உலகை பிரம்மிப்பாக்கினர். அவர்களின் கட்டிடக்கலையும், போர்கலையும், மருத்துவம், வணிகம் என பரந்துவிரிந்த அறிவாற்றல் மும்பையில் கண்டெடுக்கப்பட்ட கணபதி சிலையும் பேசுகிறது. இந்த கணபதி கோயிலின் கதை விந்தையானது மட்டுமல்ல, நம்மை திகைப்படைய செய்வதும் கூட.

வாங்க பாக்கலாம்.

 ஆச்சர்யங்கள் நிறைந்த கணபதி

ஆச்சர்யங்கள் நிறைந்த கணபதி

ரெடி கிராமம் வழியாக 1976-ஆம் ஆண்டு ஏப்ரல் 18-ஆம் தேதி அன்று தன்னுடைய சுமையுந்தில் சென்றுகொண்டிருந்த சதானந் நாகேஷ் கம்பாலி என்ற ஓட்டுனர் ஓய்வு எடுப்பதற்காக ரெடியில் வண்டியை நிறுத்திவிட்டு அதனுள்ளே உறங்கிக்கொண்டு இருந்திருக்கிறார்.

PrasadhBaapaa

 கனவில் வந்த கணபதி

கனவில் வந்த கணபதி


அப்போது அவர் கனவில் தெய்வ வடிவாய் தோன்றிய கணபதி பெருமான், ரெடியின் ஒவ்வொரு பகுதியையும் தோண்டிப் பார்த்து தன் சிலையை கண்டேடுக்குமாறு கூறியிருக்கிறார்.

Sankalpkanyalkar

 மண்ணில் கிடந்த சிலை

மண்ணில் கிடந்த சிலை

அந்த கனவை பூரணமாக நம்பிய தீவிர கணபதி பக்தரான சதானந் கம்பாலி, ரெடியை சேர்ந்த பனி ஆட்களை வைத்துக்கொண்டு தோண்டிப் பார்த்ததில், கடற்கரை ஓரமாக ஒரு விநாயகர் சிலை கிடைத்திருக்கிறது.
அதுவே தற்போதுள்ள ரெடி கணபதி கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் கணபதி சிலை. இந்த சிலை 6 அடி உயரமும், 4 அடி அகலமும் கொண்டது.

Sankalpkanyalkar

 பாண்டியர்கள் காலத்து

பாண்டியர்கள் காலத்து

அதன் பிறகு தொல் பொருள் ஆராய்சியாளர்கள் செய்த ஆய்வில் இந்த விநாயகர் சிலை பாண்டிய மன்னர்கள் காலத்தை சேர்ந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சில நாட்களில் விநாயகரின் வாகனமான மூஞ்சூறும் ரெடி கணபதி கோயிலின் அருகாமை பகுதிகளிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டது.

Sankalpkanyalkar

 புகழ்பெற்று விளங்கும் கோயில்

புகழ்பெற்று விளங்கும் கோயில்

இந்த கோயிலில் ஆண்டு தோறும் நடக்கும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கும், சங்கடஹர சதுர்த்திக்கும் ஏராளமான பக்தர்கள் ரெடி கணபதி கோயிலுக்கு வருவர்.

Nilesh2 str

 சுற்றுலாத் தளம்

சுற்றுலாத் தளம்

இந்த கோயில் மட்டுமில்லாமல் இந்த கிராமமே ஒரு சுற்றுலாத் தளமாகும். இயற்கையாக அமைந்த கடற்கரை சுற்றுலாவுக்கான அம்சங்களை தந்துள்ளது.

Nilesh2 str

 முந்திரிகளும் தென்னைகளும்

முந்திரிகளும் தென்னைகளும்

ரெடி என்று அழைக்கப்படும் ரெடிப்பட்டணம், பிரம்மாண்டமான அரபிக்கடலின் ஓரத்தில், எண்ணிலடங்கா முந்திரி மரங்களும், உயரமான தென்னை மரங்களும் சூழ பூலோக சொர்கமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.

Nilesh2 str

 துறைமுகம்

துறைமுகம்

மகாராஷ்டிராவின் சிந்துதுர்க் மாவட்டத்தில், வெங்குர்ல தாலுக்கா பகுதியில் அமைந்திருக்கும் ரெடி கிராமம், முன்னொரு காலத்தில் அப்பகுதியின் முக்கியமான துறைமுகமாக இருந்து வந்தது .

Nilesh2 str

 தொன்மையான நினைவுச் சின்னங்கள்

தொன்மையான நினைவுச் சின்னங்கள்


இதன் கால் படாத கன்னிக் கடற்கரையின் காரணமாகவும், யஸ்வந்த்காட் கோட்டை போன்ற தொன்மையான நினைவுச் சின்னங்களுக்காகவும் ரெடி கிராமம் இன்று புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது.

Nilesh2 str

 எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

ரெடியிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் சவந்த்வாடி ரயில் நிலையம் உள்ளது. இந்தியாவின் அனைத்து நகரங்களுடனும் சவந்த்வாடி ரயில் நிலையம் இணைக்கப்பட்டிருப்பதால் பயணிகள் சுலபமாக ரெடி வந்தடையலாம்.

Nilesh2 str

Read more about: travel, temple, beach