Search
  • Follow NativePlanet
Share
» »கடன்மேல கடனா..? டோன்ட் வொரி... ருணம் போக்கும் கடவுளுக்கு ஒரு பூஜைய போடுங்க...

கடன்மேல கடனா..? டோன்ட் வொரி... ருணம் போக்கும் கடவுளுக்கு ஒரு பூஜைய போடுங்க...

கிரெடிட் கார்டு, வீட்டுலோனு, காரு லோனுன்னு சம்பாதிக்குற காசு எங்க போகுதுன்னே தெரியல. மாசம் ஆச்சுன்னா கழுத்த நெரிக்குற கடன் வேற. இப்படிப்பட்ட நெருக்கடியில இருந்து எப்படி தப்பிக்குறதுன்னு தெரியலையா ?

PC : Durai.velumani

நல்ல வேலை, மாதம் ஆயிரம் இரண்டாயிரம் சம்பளம், இனிமையான குடும்பம்... இப்படித்தான் நம் பெற்றோர்கள் செழிப்பா வாழ்ந்தாங்க. ஆனா இப்ப அப்படியா இருக்கு. பல ஆயிரம் முதல் லட்சக் கணக்கில் சம்பளம், வீடு, கார் என சகல வசதிகள் வந்தாலும் கூடவே கடன் தொல்லையும் நம்மை தொற்றிக் கொண்டுதானே உள்ளது. கிரெடிட் கார்டு, வீட்டுலோனு, காரு லோனுன்னு சம்பாதிக்குற காசு எங்க போகுதுன்னே தெரியல. மாசம் ஆச்சுன்னா கழுத்த நெரிக்குற கடன் வேற. இப்படிப்பட்ட நெருக்கடியில இருந்து எப்படி தப்பிக்குறதுன்னு தெரியலையா ?

கடன் தொல்லை

கடன் தொல்லை

PC : Nvvchar

உள்நாட்டு வேலையோ, வெளிநாட்டு வேலையோ, இல்ல சுயதோழிலோ எந்த காரியத்தை தொட்டாலும் கடன். வரது என்னமோ 10 ஆயிரமா இருந்தாலும், வெளிய போறது 20 ஆயிரத்த தாண்டுது. அன்றாட தேவைக்கு வழி இல்லாவிட்டாலும், ஆடம்பரத் தேவைக்காக பல ஆயிரம் செலவு செய்யுறத குறைச்சுக்க நீங்க முயற்சித்தாலும் முடியவில்லையா ?. டோன்ட் வொரிங்க, ஒரு முறை இந்தக் கோவிலுக்கு போய் வேண்டிட்டு வாங்க.

என்னதான் பன்னலாம் ?

என்னதான் பன்னலாம் ?

PC : Sailko

வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாம சிரமப்படுவோரும், கொடுத்த கடனைத் திரும்பப் பெற முடியாம திண்டாடிவருவோரும் ருணம் போக்கும் கணபதிய வழிபட்டா போதுங்க. மனமுருகி நாம் செய்யும் வேண்டுதலை ஏற்கும் அந்த விஷேச கணபதி கடன் சுமையால் ஏற்பட்டுள்ள வலியை நீக்கி உடன் உறுதுணையா நிற்பார் என்பது தொன்நம்பிக்கை.

எங்கெல்லாம் இருக்கார் ?

எங்கெல்லாம் இருக்கார் ?

PC : Sai DHananjayan Babu

மயிலாடுதுறை, வாரணாசி, பிள்ளையார்பட்டி, சிருங்கேரி சாரதா பீடம் உள்ளிட்ட திருத்தலங்களில் தோரண கணேசர் அமர்ந்துள்ளார். கடன் தீர்க்கும் கணபதி வழிபாடு மனிதர்களாகப் பிறந்தவர்கள் தேவகடன், பித்ருகடன், மானுடக் கடன்களைத் தீர்ப்பதில் கவனத்துடன் இருக்க வேண்டும். மானுட கடனைத் தீர்க்கக் கணபதி வழிபாடு ஏற்றது. ருணம் என்ற கடனைத் தீர்க்காதுவிட்டால் நம் மனமும், வாழும் காலமும் ரணமாகிவிடக்கூடும். இரு தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படுத்தாமல் நலம் தரவல்லது இந்த கணபதி வழிபாடு.

ஜாதகக் கடன்

ஜாதகக் கடன்

PC : Zachariel

கடன், நோய், எதிரி உள்ளிட்டவை ஒருவரின் ஜாதகத்தில் ஆறாவது இடத்தில் உள்ளதாக கருதப்படுகிறது. அவ்வகையில் ஆறு வாரங்கள் அல்லது சதுர்த்தி தினங்களில் கடன் தீர்க்கும் கணபதியை வேண்டி சிறப்பு வழிபாடு செய்ய வேண்டும். இவ்வாறு ஆறுமுறை வழிபடுவதால் படிப்படியாகக் கடன்சுமை குறைந்து மகிழ்ச்சி அடையலாம்.

மயிலாடுதுறை சோழீசுவரர் கோவில்

மயிலாடுதுறை சோழீசுவரர் கோவில்

PC : Ssriram mt

நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள சிவன் கோவிலே சோழீசுவரர் கோவில். விநாயகர், முருகன், சூரியன், சந்திரன், பிரம்மா, தட்சிணாமூர்த்தி ஆகியோர் இக்கோவிலில் அருள்பாலிக்கின்றனர். சிவன் இங்கு பிரதான மூலவர் என்றாலும் இங்குள்ள விநாயகர் சன்னதியும் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது. கடன் சுமையால் பாதிக்கப்பட்டுள்ளோர் இந்த ருணவிநாயகர் சன்னதிக்கு வந்து வழிபடுவதன் மூலம் சுமை நீங்கும் என்பது தொன்நம்பிக்கை.

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?

PC : Amol.Gaitonde

சென்னையில் இருந்து சுமார் 270 கிலோ மீட்டர் தொலைவுள்ள மயிலாடுதுறைக்கு செல்ல எக்மோரில் இருந்து சென்னை எக்மோர் திருச்சி, செங்கோட்டை எக்ஸ்பிரஸ், ராமேஷ்வரம் எக்ஸ்பிரஸ், மதுரை எக்ஸ்பிரஸ் என ஏராளமான ரயில் சேவைகள் உள்ளன. அல்லது தனி வாகனம் மூலம் செல்லத் திட்டமிட்டால் சென்னை- பாண்டிச்சேரி- கடலூர்- சிதம்பரம்- மயிலாடுதுறை என கடற்கரை சாலை வழியாக ஓர் இன்பச் சுற்றுலாவே செல்லலாம்.

ருணம் போக்கும் ருண விமோசகர்

ருணம் போக்கும் ருண விமோசகர்

PC : Nsmohan

கும்பகோணத்தில் அடுத்து திருவாரூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது திருச்சேறை உடையார் கோவில். இங்கு தனி சந்நதியில் ருண விமோச்கராய் காட்சியளிக்கிறார் சிவபெருமான். இந்தத் திருத்தலம் கடன் நிவர்த்தி செய்யும் தலமாக சுற்றுவட்டாறத்தினரால் போற்றப்படுகிறது. பிரதோஷ நாட்களில் சற்று அதிகமாகவே இக்கோவிலில் பக்கதர்கள் காணப்படுவர்.

கடன் தீர்க்கும் சனைச்சர பகவான்

கடன் தீர்க்கும் சனைச்சர பகவான்

PC : பா.ஜம்புலிங்கம்

கடனிலிருந்து விடுபட தொடர்ந்து சனைஸ்வர பகவானை வழிபடுவது அவசியம். தொடர் கடனில் சிக்கித் தவிப்போர் திருநள்ளாறு, சனிசிங்கனாபூர், சென்னை பொழிச்சலூரில் உள்ள வடதிருநள்ளாறு உள்ளிட்ட தலங்களில் ஒன்றுக்கு சென்று வழிபட வேண்டும். சென்னையில் உள்ள நவக்கிரகக் கோவில்களுள் பல்லாவரத்தை அடுத்துள்ள பொழிச்சலூரில் உள்ள அகஸ்தீஸ்வரர் கோவில் சனிபகவான் அம்சத்துக்குரிய கோவிலாக விளங்குவது குறிப்பிடத்தக்கது.

எவ்வாறு செல்லலாம் ?

எவ்வாறு செல்லலாம் ?

Map

சென்னையில் இருந்து சுமார் 302 கிலோ மீட்டர் தோலைவில், மயிலாடுதுறைக்கு அருகில் அமைந்துள்ளது திருநள்ளாறு. மயிலாடுதுறையில் இங்கு வர இருந்து கழனிவாசல், கீரனூர், நெடுங்காடு வழியாக 34 கிலோ முட்டர் பயணம் செய்ய வேண்டும். இதன் இடைப்பட்ட தூரத்திலும், கீரனூர் மாரியம்மன், சிவலோகநாதல், பெருமாள் கோவில் என பல ஆன்மீகத் தலங்கள் உள்ளது.

பிள்ளையார்பட்டி

பிள்ளையார்பட்டி

PC : Sai DHananjayan Babu

பிள்ளையார்பட்டி புகழுக்கு காரணமான குடைவரைக் கோவில் உள்ள கற்பக விநாயகரை கார்த்திகை, சதுர்த்தி, பிரதோஷம் உள்ளிட்ட விஷேச நாட்களில் வழிபட்டு வர தீராதக் கடனும் தீரும் என்பது தொன்நம்பிக்கை. இந்தக் கோவிலில் விநாயகர் கோபுரத்திற்கு எதிரே வெளிப் பிரகாரத்தின் வட திசையில் அமைந்துள்ள திருக்குளத்தில் நீராடி வருவதன் மூலம் பிணி, தோஷங்களும் நீங்கும்.

தோரண கணபதி ஆலயம், சிருங்கேரி

தோரண கணபதி ஆலயம், சிருங்கேரி

PC : wikipedia

சிருங்கேரி தோரண கணபதி ஆலயம் அவசியம் தரிசிக்க வேண்டிய ஆலயங்களுள் ஒன்றாகும். இங்கு கணபதி வரபிரசித்தி மற்றும் ஷீப்ர வரப்ரசித்தி ரூபத்தில் தரிசனமளிக்கின்றார். செவ்வாய் மற்றும் சதுர்த்தி தினங்களில் சிறப்பு பூஜைகள் நடப்பதால் அன்றைய தினங்களில் செல்வது சிறந்தது.

More News

    Read more about: travel
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+