Search
  • Follow NativePlanet
Share
» »பாந்தவ்கார் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது

பாந்தவ்கார் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது

பாந்தவ்கார்' அரிய வகை வெள்ளை புலிகளின் உண்மையான இருப்பிடமாக நம்பப்படுகிறது. வரலாற்றுப் பதிவுகளின் படி ரேவா மகாராஜாக்களின் வேட்டை தளமாக பாந்தவ்கார் இருந்தது. இங்குள்ள பழைய கோட்டை இதற்கு சான்றாக இருக்கிறது. அது இன்றும், இந்த காட்டுப் பகுதியில் ஆதிக்கம் செலுத்துகின்றது. இந்த இடத்தை தேசிய பூங்காவாக அறிவிப்பதற்கு முன்பிருந்தே இது வேட்டையாளர்களின் சொர்க்கபுரியாக இருந்தது. ஆனால், அந்த அரசகாலத்திய மகிழ்ச்சி என்பது மலையேறி விட்டது. இந்திய அரசு வேட்டையாளர்களிடம் இருந்து புலிகளை காப்பாற்ற மேற்கொண்ட முயற்சியின் காரணமாக புலிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.

இயற்கையின் அழகில்

இயற்கையின் அழகில்

ஒரு பரந்த பல்லுயிர் பெருக்கத்தின் காரணமாக, பாந்தவ்கார் 1968-ஆம் ஆண்டு தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டது. இந்த இடம் இந்தியாவில் உள்ள புகழ் பெற்ற புலிகள் சரணாலயங்களில் ஒன்றாகும். மேலும் இந்தியாவிலேயே இங்குதான் அதிகமாக புலிகள் வசிக்கின்றன. இங்கு புலிகளை தவிர பல அரிய வகை வன விலங்குகளான சிறுத்தைப்புலிகள், மான் போன்றவை பெரும் எண்ணிக்கையில் இருக்கின்றன.

Prithwiraj Dhang

என்னெல்லாம் இருக்கு

என்னெல்லாம் இருக்கு

பாந்தவ்கார் தேசிய பூங்காவில் 250 வகையிலான பறவைகளும், 37 வகையிலான பாலூட்டிகளும், 80 வகையிலான பட்டாம்பூச்சிகள் மற்றும் பல வகையிலான ஊர்வனவும் இருக்கின்றன. இதைத்தவிர இந்த பூங்காவில் சால், தோபின், சாலை, சாஜா மற்றும் பலவகையிலான தாவரங்கள் உள்ளன. இப்பகுதியில் காணப்படும் பலவகையிலான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களே பாந்தவ்கார் சுற்றுலாவில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவற்றுள் இங்கே சுற்றி வரும் பெரிய காட்டு பூனைகளான புலியைப் பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியாது.

Swaroop Singha Roy

கொஞ்சம் காத்திருங்க

கொஞ்சம் காத்திருங்க


நீங்கள் குறைந்த பட்சமாக மூன்று பகல் மற்றும் இரவுகள் செலவு செய்தால் மட்டுமே இங்குள்ள இயற்கைக்கு நெருக்கமாக இருந்து கம்பீரமான புலிகள் மற்றும் பிற விலங்குகளை பார்த்து அனுபவிக்க முடியும்.

பள்ளத்தாக்குகள் மற்றும் அவைகளுக்கு அப்பால்... ஒவ்வொரு சுற்றுலா பயணியும் பாந்தவ்கார் கோட்டை மற்றும் விந்தியா மலையின் அழகான பள்ளத்தாக்கை கண்டிப்பாக மறக்க முடியாது. இந்த இடம் முழுவதும் ஒன்றுக்குள் ஒன்று புதைந்த பள்ளத்தாக்குகளால் நிரம்பி உள்ளது. அந்த பள்ளத்தாக்குகள் அழகிய புல் வெளியில் முடிவடைகின்றன. அந்த புல் வெளிகளை உள்ளுர் மக்கள் `பொஹெர' என அழைக்கின்றனர். இங்கு `டாலா' என்கிற இடம் உள்ளது. இதுவே இங்கு உயரம் குறைந்த ஆழமான இடமாக கருதப்படுகிறது.

Ntnduaphotos

பாந்தவ்கார் தேசிய பூங்கா

பாந்தவ்கார் தேசிய பூங்கா


பாந்தவ்கார் தேசிய பூங்கா மத்திய பிரதேச மாநிலத்தின் மிகப் புகழ் பெற்ற சுற்றுலா தளமாகும். பாந்தவ்கார் தேசிய பூங்கா, பாந்தவ்கார் சுற்றுலாவில் மிக முக்கியமானது. மத்திய பிரதேச மாநிலம் ஒன்பது தேசிய பூங்காக்கள் மற்றும் இருபத்தைந்து சரணாலயங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. எனவே இதை புலிகளின் மாநிலம் என அழப்பதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. இங்கு அதிக எண்ணிக்கையில் புலிகள் உள்ளன. பாந்தவ்கார் சுற்றுலாவில் மிக அழகிய இடங்களான பாந்தவ்கார் ஹில், பாந்தவ்கார் பண்டைய குகை, தலா கிராமம், கிளைம்பர்ஸ் பாயிண்ட், கார்புரி அணை, சேஷ் செய்யா மற்றும் கோரடிமோன் நீர்வீழ்ச்சிகள் போன்ற இடங்கள் உள்ளன.


Milindganeshjoshi

அருங்காட்சியகம்

அருங்காட்சியகம்

பாக்ஹெல் அருங்காட்சியகத்தில் பழங்காலத்திய பொருட்கள் காட்சிக்கு வைக்க்கப்பட்டுள்ளன. பாந்தவ்காரின் புகழ்பெற்ற உணவுகள் மத்திய பிரதேச வரலாற்றில் பாரசீக மற்றும் இந்துஸ்தானி கலாச்சாரத்திற்கு என்றுமே இடம் உண்டு. அது இங்கு பறிமாறப்படும் உணவு வகைகளில் வெளிப்படுகிறது. நீங்கள் அவர்களின் `புஹுத்தி கி கீஸ்', `மாவா-பாடி' தந்தூரி வகைகள், மற்றும் `க்ஹொப்ரபாக்' போன்ற உணவு வகைகளை சுவைக்காமல் இருந்தால் உங்களுடைய சுற்றுலா முழுமையடையாது.

பாந்தவ்காருக்கு எப்படி செல்வது?

பாந்தவ்காரை விமானம், ரயில் மற்றும் சாலை மூலம் எளிதில் அடையலாம். இந்த இடத்திற்கு அருகில் உள்ள விமான நிலையம், மற்றும் ரயில் நிலையம் ஜபல்பூர் ஆகும். பாந்தவ்காரை பார்க்க அக்டோபர் முதல் மார்ச் வரையிலான கால கட்டமே சிறந்தது.

Francesco Veronesi

Read more about: madhya pradesh
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X