Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» பாந்தவ்கார்

பாந்தவ்கார் -  புலிகளை காதலுடன் சந்தியுங்கள்!

16

`பாந்தவ்கார்' அரிய வகை வெள்ளை புலிகளின் உண்மையான இருப்பிடமாக  நம்பப்படுகிறது. வரலாற்றுப் பதிவுகளின் படி ரேவா மகாராஜாக்களின் வேட்டை தளமாக பாந்தவ்கார் இருந்தது. இங்குள்ள  பழைய கோட்டை இதற்கு சான்றாக இருக்கிறது. அது இன்றும், இந்த காட்டுப் பகுதியில் ஆதிக்கம் செலுத்துகின்றது. இந்த இடத்தை தேசிய பூங்காவாக அறிவிப்பதற்கு முன்பிருந்தே இது வேட்டையாளர்களின் சொர்க்கபுரியாக இருந்தது. ஆனால், அந்த அரசகாலத்திய மகிழ்ச்சி என்பது மலையேறி விட்டது.  இந்திய அரசு வேட்டையாளர்களிடம் இருந்து புலிகளை காப்பாற்ற மேற்கொண்ட முயற்சியின் காரணமாக புலிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. 

இயற்கையின் மத்தியில்!

ஒரு பரந்த பல்லுயிர் பெருக்கத்தின்  காரணமாக, பாந்தவ்கார் 1968-ஆம் ஆண்டு தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டது. இந்த இடம் இந்தியாவில் உள்ள புகழ் பெற்ற புலிகள் சரணாலயங்களில் ஒன்றாகும்.

மேலும் இந்தியாவிலேயே இங்குதான் அதிகமாக புலிகள் வசிக்கின்றன. இங்கு புலிகளை தவிர பல அரிய வகை வன விலங்குகளான சிறுத்தைப்புலிகள், மான் போன்றவை பெரும் எண்ணிக்கையில் இருக்கின்றன.

பாந்தவ்கார் தேசிய பூங்காவில் 250 வகையிலான பறவைகளும், 37 வகையிலான பாலூட்டிகளும், 80 வகையிலான  பட்டாம்பூச்சிகள்  மற்றும் பல வகையிலான ஊர்வனவும் இருக்கின்றன.

இதைத்தவிர இந்த பூங்காவில் சால், தோபின், சாலை, சாஜா மற்றும் பலவகையிலான தாவரங்கள் உள்ளன.  இப்பகுதியில் காணப்படும் பலவகையிலான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களே பாந்தவ்கார் சுற்றுலாவில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

அவற்றுள் இங்கே சுற்றி வரும் பெரிய காட்டு பூனைகளான புலியைப் பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியாது. நீங்கள் குறைந்த பட்சமாக மூன்று பகல் மற்றும் இரவுகள் செலவு செய்தால் மட்டுமே இங்குள்ள இயற்கைக்கு நெருக்கமாக இருந்து  கம்பீரமான புலிகள் மற்றும் பிற விலங்குகளை பார்த்து அனுபவிக்க முடியும்.

பள்ளத்தாக்குகள் மற்றும் அவைகளுக்கு அப்பால்...

ஒவ்வொரு சுற்றுலா பயணியும் பாந்தவ்கார் கோட்டை மற்றும் விந்தியா மலையின் அழகான பள்ளத்தாக்கை கண்டிப்பாக மறக்க முடியாது. இந்த இடம் முழுவதும் ஒன்றுக்குள் ஒன்று புதைந்த பள்ளத்தாக்குகளால்  நிரம்பி உள்ளது.

அந்த பள்ளத்தாக்குகள் அழகிய புல் வெளியில் முடிவடைகின்றன. அந்த புல் வெளிகளை உள்ளுர் மக்கள் `பொஹெர' என அழைக்கின்றனர். இங்கு `டாலா'  என்கிற இடம் உள்ளது.

இதுவே இங்கு உயரம் குறைந்த ஆழமான இடமாக கருதப்படுகிறது.  பாந்தவ்கார் தேசிய பூங்கா மத்திய பிரதேச மாநிலத்தின் மிகப் புகழ் பெற்ற சுற்றுலா தளமாகும். பாந்தவ்கார் தேசிய பூங்கா, பாந்தவ்கார் சுற்றுலாவில் மிக  முக்கியமானது. 

மத்திய பிரதேச மாநிலம் ஒன்பது தேசிய பூங்காக்கள் மற்றும் இருபத்தைந்து சரணாலயங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. எனவே இதை புலிகளின் மாநிலம் என அழப்பதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை.

இங்கு அதிக எண்ணிக்கையில் புலிகள் உள்ளன. பாந்தவ்கார் சுற்றுலாவில் மிக அழகிய இடங்களான  பாந்தவ்கார் ஹில், பாந்தவ்கார் பண்டைய குகை, தலா கிராமம், கிளைம்பர்ஸ் பாயிண்ட், கார்புரி  அணை, சேஷ் செய்யா மற்றும் கோரடிமோன் நீர்வீழ்ச்சிகள் போான்ற இடங்கள் உள்ளன. பாக்ஹெல்  அருங்காட்சியகத்தில் பழங்காலத்திய பொருட்கள் காட்சிக்கு வைக்க்கப்பட்டுள்ளன.

பாந்தவ்காரின் புகழ்பெற்ற உணவுகள்

மத்திய பிரதேச வரலாற்றில்  பாரசீக மற்றும் இந்துஸ்தானி கலாச்சாரத்திற்கு என்றுமே இடம் உண்டு. அது இங்கு பறிமாறப்படும் உணவு வகைகளில் வெளிப்படுகிறது.

நீங்கள் அவர்களின் `புஹுத்தி கி கீஸ்', `மாவா-பாடி' தந்தூரி வகைகள், மற்றும் `க்ஹொப்ரபாக்' போன்ற உணவு வகைகளை சுவைக்காமல் இருந்தால் உங்களுடைய சுற்றுலா முழுமையடையாது.

பாந்தவ்காருக்கு எவ்வாறு செல்வது?

பாந்தவ்காரை  விமானம், ரயில் மற்றும் சாலை மூலம் எளிதில் அடையலாம்.  இந்த இடத்திற்கு அருகில் உள்ள விமான நிலையம், மற்றும்  ரயில் நிலையம் ஜபல்பூர் ஆகும். பாந்தவ்காரை பார்க்க  அக்டோபர் முதல் மார்ச் வரையிலான கால கட்டமே சிறந்தது.

பாந்தவ்கார் சிறப்பு

பாந்தவ்கார் வானிலை

சிறந்த காலநிலை பாந்தவ்கார்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது பாந்தவ்கார்

  • சாலை வழியாக
    பாந்தவ்கார் சாலை மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. தனியார் மற்றும் அரசுக்கு சொந்தமான பேருந்துகள் மத்திய பிரதேசத்தின் பிற முக்கிய நகரங்களில் இருந்து பாந்தவ்கார்க்கு இயக்கப்படுகின்றன. இந்த சரணாலயத்திற்கு செல்ல அருகில் உள்ள நகரங்களில் இருந்து ஜீப்புகள் மற்றும் SUV கள் வாடகைக்கு கிடைக்கின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    பாந்தவ்காருக்கு அருகில் கட்னி ரயில் நிலையம் சுமார் 97 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது. கட்னி சந்திப்பிற்கு புது தில்லி, வதோதரா, மும்பை, ஹவுரா, பெங்களூரு மற்றும் சென்னை மற்றும் இந்தியாவின் பிற முக்கிய இடத்திலிருந்து ரயில் இணைப்புகள் உள்ளன. இங்கிருந்து பாந்தவ்கார் செல்ல தனியார் மற்றும் அரசு பேருந்துகள் எளிதாக கிடைக்கின்றன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    பாந்தவ்காருக்கு அருகிலுள்ள விமான நிலையம் ஜபல்பூர் விமான நிலையம் ஆகும். இதற்கு மும்பை, இந்தூர் மற்றும் புது தில்லியிலிருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன. பாந்தவ்கார் ஜபல்பூரில் இருந்து 169 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து, பாந்தவ்கார் செல்ல பேருந்துகள் மற்றும் டாக்சிகள் கிடைக்கின்றன. நீங்கள் தனியாருக்கு சொந்தமான சார்ட்டர் விமானத்தின் மூலம் உமாரியாவில் இருந்து பாந்தவ்கார் தேசிய பூங்காவை அடைய முடியும்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue