Search
  • Follow NativePlanet
Share
» »பெங்களூர் - சிரவணபெலகொலா : வரலாற்று பயணம் போகலாமா?

பெங்களூர் - சிரவணபெலகொலா : வரலாற்று பயணம் போகலாமா?

பெங்களூருவிலிருந்து 143 கிமீ தூரத்தில் அமைந்துள்ள சிரவணபெலகொலா எனும் ஊருக்கு வரலாற்றைத் தேடி இந்த பயணம் தொடங்குகிறது. அதிகபட்சம் 3 மணி நேரத்துக்குள் சென்றடைந்துவிடலாம் என்பதால் காலை 8 மணிக்கு பெங்களூர

By Udhaya

பெங்களூருவிலிருந்து 143 கிமீ தூரத்தில் அமைந்துள்ள சிரவணபெலகொலா எனும் ஊருக்கு வரலாற்றைத் தேடி இந்த பயணம் தொடங்குகிறது. அதிகபட்சம் 3 மணி நேரத்துக்குள் சென்றடைந்துவிடலாம் என்பதால் காலை 8 மணிக்கு பெங்களூருவிலிருந்து கிளம்புகிறோம். இந்த பதிவில், பேருந்து, ரயில் மூலமாக எப்படி இந்த இடத்தை அடையலாம், மேலும் இந்த இடத்தில் என்ன என்ன இடங்கள் பார்க்கமுடியும், எப்படி நம் சுற்றுலாவை திட்டமிடுவது என்பன குறித்து தெரிந்துகொள்வோம்.

 ரயில்கள் மூலம்

ரயில்கள் மூலம்

பெங்களூரு ரயில் நிலையங்களில் ஒன்றான யஸ்வந்த்பூரிலிருந்து ஏழு ரயில்கள் அடுத்தடுத்து இயக்கப்படுகின்றன.

யஸ்வந்த்பூர் - காரவார் விரைவு வண்டி

கோமதேஸ்வரா விரைவு வண்டி

சோலாபூர் - ஹாசன் விரைவு வண்டி

யஸ்வந்த்பூர் - மைசூர் விரைவு வண்டி

யஸ்வந்த்பூர் - ஹாசன் விரைவு வண்டி

கண்ணூர் விரைவு வண்டி

கார்வார் விரைவு வண்டி

ஆகியவை இந்த இடத்துக்கு இயக்கப்படும் வண்டிகள் ஆகும்.

Ananth H V

பேருந்துகள் மற்றும் சுயவாகனம்

பேருந்துகள் மற்றும் சுயவாகனம்

ஒருவேளை நீங்கள் சுய வாகனத்தில் பயணிக்க முடிவெடுத்துவிட்டால், இரண்டு வழித்தடங்களில் பயணிக்கலாம்.

1. பெங்களூர் - குடிமரணஹல்லி - எடியூர் - பெல்லூர் கிராஸ் - ஹிரிசேவ் - சால்யா - சிரவணபெலகொலா

2 பெங்களூர் - ராமநகரா - மாண்டியா - ஸ்ரீரங்கப்பட்டிணா - மேலுகொட்டே - சிரவணபெலகொலா

BHARATH S M

 கோமதேஸ்வரர் சிலை

கோமதேஸ்வரர் சிலை

சிரவணபெலகொலா நகரத்துக்குள் நுழைவதற்கு முன்பே பயணிகள் 17.5 அடி உயரத்தில் உயர்ந்து நிற்கும் கோமதேஸ்வரர் சிலையை பார்க்க முடியும். 978ம் ஆண்டில் எழுப்பப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட சிலையானது ஒரு காலத்தில் சிரவணபெலகொலா நகரம் பிரசித்தமான ஜைன திருத்தலமாக விளங்கியிருப்பதற்கான ஆதாரமாக திகழ்கிறது.

Anks.manuja

 வெள்ளைத்தடாக முனிவர்

வெள்ளைத்தடாக முனிவர்

சிலைகளும் கல்வெட்டுக்குறிப்புகளும் சிரவணபெலகொலா எனும் சொல்லுக்கு ‘வெள்ளைத்தடாக முனிவர்' என்று பொருள் சொல்லலாம். இந்த சிலை உலகத்திலேயே மிகப்பெரிய ஒற்றைக்கல் சிற்பமாக புகழ்பெற்றுள்ளது. இந்த சிலை தவிர சிரவணபெலகொலா நகரம் பல வரலாற்று காட்சிகளுக்குள் பயணிகளை அழைத்துச்செல்லும்படியான சின்னங்களையும் கொண்டுள்ளது.

Abhinav 0076 -

 ராஜ்ய பரிபாலனம்

ராஜ்ய பரிபாலனம்

சந்திரகுப்த மௌரிய மன்னர் பல ஆண்டுகள் போரில் ஈடுபட்டும் ராஜ்ய பரிபாலனம் செய்தும் மனம் வெறுத்து இறுதியில் மனச்சாந்தியையும் அமைதியையும் நாடி இந்த சிரவணபெலகொலா ஸ்தலத்தில் வாழ்ந்ததாக அறியப்படுகிறது. தென்னிந்தியாவில் ஜைனம் தழைத்தோங்குவதற்கு அவரின் பங்கு முக்கியமாக சொல்லப்படுகிறது.

Arpa Ghosh

கல்வெட்டு குறிப்புகள்

கல்வெட்டு குறிப்புகள்

சிரவணபெலகொலா பல வரலாற்று ஆசிரியர்கள் மற்றும் நிபுணர்களையும் அதிக அளவில் ஈர்க்கிறது. இங்கு 600 - 1830 ம் ஆண்டுகள் வரையிலான கல்வெட்டுக்குறிப்புகள் ஏராளம் காணப்படுகின்றன. கங்க, ஹொய்சள மற்றும் உடையார் ராஜ வம்சங்களை பற்றிய சுமார் 800 கல்வெட்டு குறிப்புகள் இங்கு காணக்கிடைக்கின்றன. இந்த புராதன வரலாற்று ஆவணங்கள் நமக்கு அக்கால இந்திய நாகரிகம் ஆட்சி மற்றும் இதர தகவல்களை அளிக்கின்றன.

Dineshkannambadi

 பேருந்து நிலையம்

பேருந்து நிலையம்

சிரவணபெலகொலாவுக்கு அருகில் சன்னராயப்பட்டணா பேருந்து நிலையம் அமைந்துள்ளது. சன்னராயப்பட்டணாவுக்கு செல்வதற்கு பெங்களூர் மற்றும் மைசூரிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. அங்கிருந்து உள்ளூர் போக்குவரத்து மூலம் இந்த வரலாற்று சுற்றுலாஸ்தலத்தை சுற்றிப்பார்க்கலாம்.

Suyog.nagare

More News

    Read more about: travel temple
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+