Search
  • Follow NativePlanet
Share
» »லட்சத்தீவு பக்கம் போனா இந்த இடத்த மட்டும் பாக்காம வந்துடாதீங்கப்பூ...

லட்சத்தீவு பக்கம் போனா இந்த இடத்த மட்டும் பாக்காம வந்துடாதீங்கப்பூ...

பெரும்பாலான சுற்றுலாப்பயணிகளின் அபிப்ராயப்படி, இந்த பங்காரம் தீவு தேனிலவு தம்பதியர்களுக்காகவே விசேஷமாக உருவாக்கப்பட்டதுபோல் காட்சியளிப்பதாக சொல்லப்படுகிறது. அது மட்டுமல்லாமல் லக்ஷ்வதீப் பகுதியின் மற்ற

By Udhaya

பெரும்பாலான சுற்றுலாப்பயணிகளின் அபிப்ராயப்படி, இந்த பங்காரம் தீவு தேனிலவு தம்பதியர்களுக்காகவே விசேஷமாக உருவாக்கப்பட்டதுபோல் காட்சியளிப்பதாக சொல்லப்படுகிறது. அது மட்டுமல்லாமல் லக்ஷ்வதீப் பகுதியின் மற்ற தீவுகளில் இல்லாத ஏராளமான அம்சங்கள் இந்த தீவில் நிறைந்துள்ளன. விமான நிலையம் அமைந்திருக்கும் அகத்தி தீவுக்கு அருகிலேயே இந்த பங்காரம் தீவு அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இங்க ஒரு டிரிப் போயிட்டு வரலாமா?

தங்கும் வீடுகள்

தங்கும் வீடுகள்

நல்ல வசதிகளை கொண்டிருக்கும் 60 சொகுசு தங்கும் வீடுகள் இந்த தீவில் அமைக்கப்பட்டுள்ளன. கடற்கரைக்கு அருகிலேயே இந்த தங்கும் வீடுகள் அமைந்துள்ளதால் நம் விருப்பம்போல் சில நாட்களுக்கு தங்கி சுற்றுலாவை ஆனந்தமாக அனுபவிக்கலாம். இந்த தங்கும் வீடுகளுக்கென்றே பிரத்யேக உணவு விடுதியும் இணைக்கப்பட்டிருப்பதால் வேண்டிய உள்ளூர் உணவு வகைகளை தருவித்து ருசி பார்க்கவும் வசதியாக உள்ளது.

Lenish Namath

 ஸ்கூபா டைவிங்

ஸ்கூபா டைவிங்

பங்காரம் தீவில் பலவித கடல் வாழ் உயிரினங்களோடு நிலப்பகுதி உயிரினங்களும் பயணிகளை வசீகரிக்கின்றன. பலவகை மீன்கள், கிளிகள், முள்ளம்பன்றி, பலவகைப்பறவைகள் ஆகியவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை. இந்த தீவுப்பகுதியில் ஸ்கூபா டைவிங் மற்றும் ஸ்நார்க்கெலிங் போன்ற கடல் மூழ்கு நீச்சலில் ஈடுபட்டு நீருக்கடியில் உள்ள பலவிதமான உயிரினங்கள் மற்றும் பவளப்பாறை அமைப்புகளை பார்த்து ரசிக்கலாம்.

Soljaguar

சாகச நீர் மூழ்கிகள்

சாகச நீர் மூழ்கிகள்

அனுபவம் உள்ள சாகச நீர் மூழ்கிகள் முதல், அனுவம் இல்லாத - ‘டைவிங்' என்றால் என்னவென்றே தெரியாத - புதியவர்கள் வரை யாவருக்கும் ஏற்ற கடற்பகுதிகள் இங்கு வசதியாக அமைந்துள்ளன. கடற்கரைக்காட்சிகள் அலுக்க தொடங்கினால் இந்த தீவுப்பகுதியில் 120 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தென்னந்தோப்பில் இயற்கையை ரசித்தபடியே உலாப்போகலாம்.

Ggerdel

ஐலேண்ட் ரிசார்ட்

ஐலேண்ட் ரிசார்ட்


BIS என்று அழைக்கப்படும் ‘பங்காரம் ஐலேண்ட் ரிசார்ட்' விடுதி இங்கு கடற்கரையிலேயே தொங்கு ஊஞ்சல், குடில்கள் மற்றும் வெயிற்குடைகள் போன்றவற்றை அமைத்துள்ளது. பிடித்த புத்தகத்தோடு அமர்ந்துவிட்டால் உல்லாசமாகவும் பொழுதைக்கழிக்கலாம் அல்லது உங்களின் முக்கியமான அலுவல்களிலும் ஈடுபடலாம். அது சினிமா திரைக்கதை எழுதுவதாக இருந்தாலும் சரி, சுயசரிதை எழுதுவதாக இருந்தாலும் சரி.

The.chhayachitrakar

மதுவுக்கு அனுமதி

மதுவுக்கு அனுமதி

எல்லாவற்றுக்கும் மேலாக லக்ஷ்வதீப் பகுதியில் மதுவுக்கு அனுமதி வழங்கப்படும் ஒரே தீவு இந்த பங்காரம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆயினும் அளவுக்கு மிஞ்சாத நிதானத்துடன் இது போன்ற சந்தோஷங்களில் பயணிகள் ஈடுபடுவது சிறந்தது. ஏனெனில் தீவுப்பகுதியின் தூய்மை மற்றும் சிக்கல் அல்லாத சூழலை பேணிக்காப்பதில் தீவு நிர்வாகம் மிகுந்த அக்கறை காட்டுகிறது.

The.chhayachitrakar

அகத்தி தீவு

அகத்தி தீவு

பங்காரம் தீவுக்கு விஜயம் செய்வது மிக எளிதாகவே உள்ளது. அகத்தி தீவுக்கு விமானத்தில் சென்று அங்கிருந்து படகு மூலம் இந்த பங்காரம் தீவினை வந்தடையலாம். கொச்சியிலிருந்து பங்காரம் தீவுக்கு நேரடி சொகுசு படகு சேவைகளும் இயக்கப்படுகின்றன. அகத்தியிலிருந்து பங்காரம் தீவுக்கு ஹெலிகாப்டர் சேவையும் உள்ளது.

Rupankar Mahanta

Read more about: travel island india
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X