Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவில் பயணம் செய்ய தேவையான அடிப்படை ஹிந்தி வார்த்தைகள்!

இந்தியாவில் பயணம் செய்ய தேவையான அடிப்படை ஹிந்தி வார்த்தைகள்!

By

இந்தியாவை சேர்ந்த பிளாக் எழுத்தாளரான ஷாலு ஷர்மா (www.shalusharma.com) என்பவர் சமீபத்தில் 'இந்தியாவில் பயணிக்க அவசியமான ஹிந்தி வார்த்தைகள்' ("Essential Words and Phrases for Travellers to India") என்ற புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த புத்தகம் அடிக்கடி இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்பவர்களுக்கு பயன்தரும் விதத்தில் அமைந்திருக்கிறது.

நீங்கள் ஆங்கிலம் பேசக்கூடியவர்களாக இருக்கலாம், ஆனால் அது இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் செல்லுபடியாகாது. உதாரணமாக நீங்கள் மும்பை செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள் அங்கு டேக்ஸி டிரைவர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் பொன்றவர்களிடம் ஹிந்தியில்தான் பேச முடியும்.

அப்படி உங்களுக்கு ஹிந்தி தெரியாதபட்சத்தில் அவர்களுடன் சரியாக தொடர்புகொள்ள முடியாது என்பதோடு உங்களை அவர்கள் ஏமாற்றவும் வாய்ப்பு இருக்கிறது.

எனவே பயணிக்க தேவையான அடிப்படை ஹிந்தி வார்த்தைகள், சொற்றொடர்கள், வாக்கியங்கள் போன்றவற்றை அறிந்துவைத்துக்கொள்வது மிகவும் அவசியம்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஹிந்தி மொழி பேசப்படுவதோடு 60% இந்திய மக்கள் ஹிந்தி பேசக்கூடியவர்களாக இருக்கிறார்கள். அதிலும் டெல்லி, உத்தர பிரதேசம், ஜார்கண்ட், பீகார், ஹரியானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ஹிமாச்சல பிரதேசம், ராஜாதான் உள்ளிட்ட மாநிலங்களில் ஹிந்தி பிரதான மொழியாக இருந்து வருகிறது.

இந்தியாவில் பயணம் செய்ய தேவையான அடிப்படை ஹிந்தி வார்த்தைகள்!

அதுமட்டுமல்லாமல் மேற்கு வங்கம் (வங்காளம்), குஜராத் (குஜராத்தி), பஞ்சாப் (பஞ்சாபி), ஒடிசா (ஒரியா), மகாராஷ்டிரா (மராத்தி) போன்ற மாநிலங்களிலும், மற்ற வடகிழக்கு மாநிலங்களிலும் ஹிந்தி பிரதான மொழி இல்லையென்றாலும் பெரும்பாலும் அனைவரும் ஹிந்தி தெரிந்தவர்களாக இருப்பதால் ஹிந்தி மொழியை வைத்து இந்த இடங்களிலும் சமாளித்துக் கொள்ள முடியும்.

அதேபோல தென்னிந்திய மாநிலங்களான ஆந்திரா மற்றும் கர்நாடகாவுக்கு செல்கிறீர்கள் என்றால் தெலுங்கு அல்லது கன்னடம் தெரிந்திருக்கவேண்டும் என்பது அவசியமல்ல.

இந்த மாநிலங்களிலும் முக்கால்வாசி மக்கள் ஹிந்தி தெரிந்தவர்களாகவே இருப்பதால் உங்களுக்கு ஹிந்தி தெரிந்திரிந்தால் போதும் டேக்ஸி மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களிடமும் பேசமுடியும்.

ஆனால் நம் தமிழ்நாட்டில் ஹிந்தி தெரிந்தோர் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் சமீப காலங்களில் ஹிந்தி மொழியை கற்க வேண்டும் என்ற ஆர்வம் பலரிடம் அதிகரித்துள்ளது.

அந்த வகையில் 'இந்தியாவில் பயணிக்க அவசியமான ஹிந்தி வார்த்தைகள்' என்ற இந்த புத்தகம் உங்களுக்கு பயனுள்ளதாகவும், அடிப்படை ஹிந்தி படமாகவும் இருக்கும்.

சில அடிப்படை ஹிந்தி வார்த்தைகள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்கள்!

வணக்கம் - நமஸ்தே அல்லது பிரனாம்

வணக்கம் கான் - நமஸ்தே கான் ஜி

நான் - மே

நான் சென்னையை சேர்ந்தவன் - மே சென்னை சே ஹும்

என்னுடையது - மேரா

இது என்னுடையது - யே மேரா ஹே

உங்களுடையது - ஆப்கா

இது உங்களுடையதா? - கியா யே ஆப்கா ஹே?

யார் - கௌன்

நீங்கள் யார்? - ஆப் கௌன் ஹே?

ஆடைகள் - கப்டா

என் ஆடைகள் எங்கே? - மேரா கப்டா கஹா ஹே?

தேனீர் - சாய்

எனக்கு ஒரு கப் தேனீர் வேண்டும் - முஜ்ஜே ஏக் கப் சாய் சாஹியே

நீர் - பாணி

எனக்கு ஒரு பாட்டில் தண்ணீர் வேண்டும் - முஜ்ஜே ஏக் பாட்டில் பாணி சாஹியே

உணவு - கானா

உணவு தாருங்கள் - முஜ்ஜே கானா தோ

நீங்கள் ஆங்கிலம் பேசுவீர்களா? - கியா ஆப் இங்கிலீஷ் போல்தே ஹே?

மெதுவாக பேசுங்கள் - தீரே போலியே

எப்படி இருக்கிறீர்கள்? - ஆப் கைசே ஹே

நான் நலம் - மே டீக் ஹூம்

உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி - ஆப் சே மில்கர் குஷி ஹூய்

உங்கள் பெயர் என்ன? - ஆப் கா நாம் கியா ஹே

என் பெயர் வசந்த் - மேரா நாம் வசந்த் ஹே

நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? - ஆப் கஹா சே ஹே

ரயில் நிலையம் எங்கே இருக்கிறது? - ரயில்வே ஸ்டேஷன் கஹா ஹே

பேருந்து நிலையம் எங்கே இருக்கிறது? - ஸ்டாண்ட் கஹா ஹே

நீங்கள் எனக்கொரு உதவி செய்ய முடியுமா? - கியா ஆப் மேரி மதத் கரேங்கே

இது என்ன? - யே கியா ஹே?

நான் இதை வாங்க விரும்பிகிறேன் - முஜே யே கரித்னா ஹே

இது எவ்வளவு? - யே கித்னே கா ஹே?

விலையை குறையுங்கள் (பேரம் பசுவது) - தாம் கம் கீஜியே

ஆம் - ஹா

இல்லை - நஹி

தயவு செய்து - க்ருப்யா

நன்றி - தன்யவாத்

ஷாலு ஷர்மா எழுதியுள்ள இந்த 60 பக்க புத்தகம் ஹிந்தி மொழிக்கு ஒரு அறிமுகம் என்றுதான் சொல்லவேண்டும். எனவே நீங்கள் ஹிந்தியை மேற்கொண்டு இலக்கணம் ஆகியவற்றுடன் கற்க விரும்பினால் வேறு ஏதேனும் புத்தகத்தை தேடிப் படிக்கலாம் அல்லது ஹிந்தி வகுப்பில் சேர்ந்து பயிலலாம்.

எனினும் இந்த புத்தகத்தில் ஹோட்டல்கள், ஏர்போர்ட், டிக்கட் கவுண்டர்கள், கடைகள், உணவகங்கள், காவல் நிலையம், தேனீர் கடைகள் போன்ற இடங்களில் புழங்கப்படும் அத்தியாவசியமான ஹிந்தி வார்த்தைகள் குறித்தும், அந்த இடங்களில் எப்படி உரையாடவேண்டும் என்பது பற்றியும் எளிமையான விளக்கங்கள், வார்த்தைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இது உங்களுக்கு பயணம் செய்யும்போது கண்டிப்பாக மிக்க பயனுள்ளதாக இருக்கும்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X